துண்டிக்கப்பட்ட தலையொன்றின் புன்னகை

உண்ணாவிரத மேடையோரம்
அமைக்கப் பட்டிருந்தது
ஓட்டுச் சாவடி
பசித்திருந்த மனிதர்களின்
அணைப்பிலிருந்தன
செத்துப் போன குழந்தைகள்.
பந்தல் அலங்காரச் சேலைகளில்
தெறித்திருந்தன
ரத்தங்களும் தசைகளும்..
நிவாரண நிதியில்
வாங்கிக் குவிக்கப்பட்ட
சவப் பெட்டிகளுக்கு
போதாதிருந்தன
பிணங்கள்.
ரத்தம் சொட்டும்
உடைந்த கையொன்றை
முடிவிடத்தில்
பற்றியிருந்தது மனிதச் சங்கிலி
புள்ளடியினிடத்தில்
இரு எலும்புகளைக் கண்டதாய்
மிரண்டவரின்
ஆட்காட்டி விரலில் தெளிக்கப்பட்டது
ரத்தம்.
முப்பத்தாறு மைல்களுக்கப்பால்
மூளை சிதிறித் தனித்திருந்த
தலையொன்றின்
கடைவாயில் வழிந்து கொண்டிருந்தது
ஒரு புன்னகை
March-11-2009

உயிர்கள் எரிகிற நெருப்பு

“உவனொரு இந்தியாக்காரன். சிறிலங்கன் தமிழ் என்று பொய் சொல்லி அகதித் தஞ்சம் கேட்டிருக்கிறான். ” என்று பூலோகத்தார் காட்டிய பெடியன் எங்களைக் கடந்துபோய்க் கொண்டிருந்தான். அவனைப்பார்த்தால் புதுசு போலத்தான் இருந்தது. ஒன்றிரண்டு தடவைகள் எங்களைப் பார்க்கவும் செய்தான். அவன் பார்த்தபோதெல்லாம் பூலோகத்தார் உம் என்று முறைச்சுப்பார்த்தார். அவர் சொன்னால் சரியாகத்தானிருக்கும். பிபிசி என்றும் வீரகேசரி என்றும் விடுப்பு டொட் கொம் என்றும் முதுகுக்குப்பின்னால் கூப்பிடப்படுகிற பூலோகத்தார் இந்தமாதிரிக் கதைகளை விரல் நுனியில் வைத்திருப்பார். அதை அகப்படுகிற நாலைஞ்சு [...]

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231