சுவிற்சர்லாந்தின் மத்தியிலிருந்து ஜெனிவா வழியூடாக பிரான்ஸைக் குறுக்கறுத்து அத்திலாந்திக் கடலோரத்தில் ஸ்பெயினின் சன் செபஸ்ரியான் நகருக்கு , சுமார் 1300 கிலோமீற்றர்கள் என்றும் சென்று சேர 13 மணித்தியாலங்களென்றும் நவி காட்டினாலும் வழிநெடுக சுச்சா சிச்சா முச்சா மற்றும் கபே கோலா தே இவற்றோடு கொண்டுபோன புளிச்சாதம் என 17 மணித்தியாலங்கள் எடுத்தது. அன்றிரவு ரைட் சகோதரர்கள் கனவில் வந்து எங்கட மூஞ்சையப்பாத்தா என்ன வேலை வெட்டியில்லாத கேனைப்பயல்கள் என எழுதியிருக்கா என்றுவிட்டுப் போனார்கள்.
சுவிற்சர்லாந்தில் வதிகிற [...]
Written on August 31, 2009 | Posted in
குறிப்புகள் |
12 Comments
மெழுகுதிரியை ஊதி அணைக்கிறதையும், கேக் வெட்டுறதையும், அடுத்தடுத்து பத்துப்பேர் வீடியோகமெராவை முறைச்சுக் கொண்டு நிற்கிறதையும் பாக்க எரிச்சல் எரிச்சலா வந்தது. பக்கத்தில மடியில ஒரு குழந்தையை வைச்சுக் கொண்டிருந்தவ, தான் சிங்கப்பூரில இருந்து எடுப்பிச்ச நெக்லஸைப் பத்தி வலு தீவிரமாக என்ர மனைவியோடை கதைச்சுக் கொண்டிருந்தா. அவவின்ர இன்னொரு குழந்தை இந்த ஹாலுக்குள்ளைதான் எங்கேயோ விளையாடிக்கொண்டிருக்குதாம். மனுசன் அங்காலை பார்ட்டியில நிற்கிறாராம். அங்கை வந்த பெரும்பாலான ஆண்கள் பார்ட்டியில தான் நிப்பினம் எண்டதை ஊகித்துக் கொண்டேன். எனக்கும் [...]
Written on August 26, 2009 | Posted in
சிறுகதைகள் |
35 Comments
தமிழ்மணம் ஐந்தாவது ஆண்டு நிறைவையொட்டி அதன் நிறுவனர் காசி இந்தவாரம் நட்சத்திரமாகத்திகழ்கிறார். நட்சத்திரப்பதிவுக்கான தேவையாக அவர் சிலருக்கு ஐந்து கேள்விகளை அனுப்பிப் பதில்களைக் கோரியிருந்தார். எனக்குக் கிடைத்த கேள்விக்கொத்திற்கான பதில்களை அனுப்பியிருந்தேன். தற்போது திட்டம் மாற்றப்பட்டு அவரவர் தங்கள் தங்கள் தளங்களிலேயே அவற்றை வெளியிடச்சொல்லி ஓலை வந்திருக்கிறது. ஜிமெயிலின் அடி ஆழங்களில் தேடிக்கொண்டிருந்த போது அவரிடமிருந்து வந்த ஓலை கொண்டுபோன பதில்களையும் கொண்டுவந்தது. இனி கேள்விகள் பதில்கள்..
1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று
எண்ணுகிறீர்களா? [...]
Written on August 26, 2009 | Posted in
பத்திகள் |
2 Comments
ரமில் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ் என்று ரீவிக்குள்ளே நின்று நெஞ்சை முன்னுக்குத் தள்ளித்தள்ளிக் கத்திய இளம்பெடியனை எங்கேயோ கண்டதாக அகதித்தஞ்ச விசாரணை தமிழ் மொழிபெயர்ப்பாளர் குமாரசூரியர் விரலைத் தலையில் தேய்ச்சுக்கொண்டே யோசித்தார். இளம்பெடியன் சேட்டில் புலியை வைத்திருந்தான். தொப்பியில் புலியை வைத்திருந்தான். மிதமான குளிரைத்தாங்கும் சால்வையிலும் புலிதான் படுத்திருந்தது. கன்னங்களில் கறுத்தக் கோடிழுத்திருந்தவனும் குஞ்சுத் தாடியும் சொக்கிலேற்றுக்கும் குங்குமக் கலருக்கும் இடைப்பட்டை கலரில் தலைமயிரின் முன்பக்கத்தைக் கொஞ்சம் வைத்திருந்தவனுமாகிய இளம்பெடியனை குமாரசூரியர் தன் நினைவுக்குள் [...]
Written on August 25, 2009 | Posted in
Featured |
11 Comments
எனக்குச் சின்ன வயசில இருந்தே ஒரு வலைப்பதிவர் மாநாட்டில கலந்து கொள்ளவேணுமென்று நிரம்ப ஆசை. ஆனா அது ஒருக்காலும் நிறைவேறியதில்லை. ஒருதடவை சிட்னி ரயிலுக்குள்ளை ஸ்ரேயா என்ற பழைய பதிவரை (இப்பவும் எழுதுகிறாவா என தட்டிப்பார்க்க பஞ்சியாக இருக்கிறது.) சந்திச்சுக் கதைத்ததுதான் அதிகபட்சமாக நான் கலந்துகொண்ட நீளமான வலைப்பதிவர் மாநாடாயிருக்கும். அதிலும் அப்ப கோடைகாலமென்றபடியால நான் அடிக்கடி பராக்குப்பார்த்ததாக அவர் குற்றமும் சாட்டியிருந்தார். அதை விட மெல்பேணில் ஜோய் மகேஸ்வரனின் நிகழ்வு ஒன்றில் இடைவேளையில் வசந்தனை சந்தித்துக் [...]
Written on August 23, 2009 | Posted in
குறிப்புகள் |
14 Comments
வடலி வெளியீடுகளான கருணாகரனின் பலிஆடு கவிதை நூல் த.அகிலனின் மரணத்தின் வாசனை ஆகிய இரு நூல்களுக்கான வெளியீட்டு நிகழ்வு வரும் வெள்ளி 28 ஓகஸ்ட் மாலை 6 மணிக்கு கனடாவில் நடைபெற இருக்கிறது. மேலதிக விபரங்கள் கீழே..
Written on August 22, 2009 | Posted in
புத்தகங்கள் |
Leave a comment
இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இலங்கை அரசுகள் தமிழர் மீதான அடக்கு முறைகளையும் தமிழரை புறக்கணிக்கும் நடவடிக்கைகளையும் புரிந்து வந்தது. சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்திய பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம் மற்றும் அதை தொடர்நத பல ஒப்பந்தங்கள் மூலம் இந்தியத் தமிழர்களை நாடு கடத்தியது. இச்செயல் இலங்கையில் இனச் சதவீதத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. மேலும் மகாவலி, கல்லோயா போன்றத் குடியேற்றத் திட்டங்களின் மூலம் வட கிழக்கிந் தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களைவர்களைக் குடியேற்றியதன் [...]
Written on August 12, 2009 | Posted in
ஒலியுரையாடல் |
Leave a comment
பிளான் பண்ணி ஒருவனை பிரண்ட் ஆக்க முடியுமென நீங்கள் நினைக்கிறீர்களா? காதலிக்கவே முடிகிறது. நட்பென்ன நட்பென்று சப் என்று முடித்துவிடாதீர்கள். என்னையும் கொஞ்சம் பில்டப் கொடுக்க அனுமதியுங்கள். ஏனெனில் நான் பிளான் பண்ணியே ஒருவனைத் தோழனாக்கினேன். தோழன் என விளிப்பதற்கும் ஒரு காரணமுண்டு. ஏனெனில் அது புரட்சிகரமாயிருந்தது. இவ்வளவும் சொன்னபிறகு என்ன பிளான் என்றதைச் சொல்லத்தான் வெட்கமாக் கிடக்கிறது. பம்மிக்கொண்டு கடந்து போகலாம். பரவாயில்லை. புரட்சிகளும் வெட்கங்களும் என்றுவிட்ட பிறகு உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிளானுகள் தோன்றலாம். [...]
Written on August 11, 2009 | Posted in
நினைவுகள் |
5 Comments
இலங்கையின் ஆரம்பகால வானொலி தொலைக்காட்சி கலைஞரான கே. எஸ் பாலச்சந்திரன் அவர்களின் கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது.
ஈழத்தின் வடபகுதிக் கடலோரக்கிராமங்களின் கதைகளைப்பேசும் இந் நாவல் என்னளவில் ஒரு விதத்தில் வேறுபட்டு நிற்கிறது. எனது தலைமுறைக்குத் தெரிந்த கடல் தனியே உப்பும் நீரும் நிறைந்ததல்ல. அது குண்டுகளையும் ரத்தங்களையும் ஓலங்களையும் தன்னத்தே வைத்திருந்தது. கடல் அப்படித்தான் அறிமுகமானது. அப்படித்தான் பழகியது.
இந்த நாவல் இப்போதைய தலைமுறைக்குத் தெரிந்திராத ஒரு கடலை கதை முழுதும் [...]
Written on August 5, 2009 | Posted in
குறிப்புகள்,
புத்தகங்கள் |
Leave a comment
2004 நவம்பர் 23, அமைதிபேச்சுக்காலம். புலிகள் மீளவும் யுத்தத்தை ஆரம்பிக்கவேண்டுமென்கின்ற ஆசைகள் புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்த காலம். ஐந்து நாளில் வரப்போகின்ற மாவீரர் தின உரையில் தலைவர் யுத்தநிறுத்தத்தில் இருந்து விலகுகிறோம் என அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்த காலம். அன்று எழுதிய பதிவு இது. ஒரு புலம்பெயர்ந்தவனாக யுத்தத்தை தீர்மானிக்கும் சக்தியாக நானும் புலம்பெயர்ந்தவர்களும் இருக்க முடியாது என்பதில் அன்றும் சரி இன்றும்சரி நான் தெளிவுடன் இருந்ததை மீளவும் எனக்கு நினைவு படுத்துகிறது இப்பதிவு. இந்த [...]
Written on August 4, 2009 | Posted in
குறிப்புகள் |
Leave a comment