பிச்சை வேண்டாம் நாயைப்பிடியுங்கள்!

எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. பிரபாகரனது கண் புருவம் நெற்றி தாடையென விலாவாரியாக பிரித்து மேய்ந்த போஸ்ட்மார்ட்ட கட்டுரைகள் முதல் ஆறுமாதத்திற்கு முன்னாலாவாது புலிகள் பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருந்தால் இப்போது ஈழம் என்னும் சுயாட்சி மாகாணமாவது கிடைத்திருக்குமென்ற `அலுக்கோசு´த்தனமான எழுத்துக்கள் வரை பார்த்தாயிற்று. மேலும் எழுதுவதற்கு என்ன உண்டு..?
வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். இந்தப்போர் ஏன் தோல்வியுற்றதென ஒரு மூன்றாம் தரப்பாக நின்று ஆராயமுடியாத மனத்தடை எனக்கு உண்டு. எனக்குமட்டுமல்ல என் சிந்தனையையொட்டிய பல புலம்பெயர்ந்தவர்களுக்கு உண்டு. ஒவ்வொரு தடவையும் வவுனியாவின் காட்டு [...]

இந்தியா,பிணந் தின்னி நாடென பிள்ளைக்கு சொல்லி வளர்ப்பதைத் தவிர

கடந்த ஏப்ரல் திங்கட்கிழமை , 20ம் திகதி. அதிகாலை. வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரமளவில் மக்கள் இரவோடிரவாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புகுவதற்காக சிங்கள ராணுவ முன்னரண்களை அணுகியிருந்தனர். காலைக்குப் பிறகு அவர்களை உள்ளெடுப்பதாகச் சொல்லியிருந்த இராணுவம் விடியல் நேரத்தில் மீளவும் அவர்களை பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் சென்று விடுமாறு திரத்தியது. அல்லோலகல்லோலப்பட்ட மக்கள் மீளவும் திரும்ப அவர்களுக்கு பின்னாலேயே கனகர ஆயுதங்களோடு இராணுவம் முன்னேறியது.
ராணுவம் புலிகளை எதிர்கொள்ளவும் தொடங்கியது சண்டை. இடையில் ஆயிரக்கணக்கான மக்கள் [...]

கையறு நிலையுற்ற ஓர் இரவு

சிறிதும் பெரிதுமாய் மண்மூடைகள்
சிதைந்து கிடக்கின்றன.
தெருவெங்கும்
வனமெங்கும்
பதுங்கு குழி வாயில்களிலும்
கடற்கரைக் கொட்டில்களிலும்
சிதறிக் கிடக்கின்றன
அவை.
அடுக்கி வைத்த
மண் மூடைகளின் பின்னே
குறி பார்க்கின்றன
துப்பாக்கிகள்.
முன்னேயும் தான்!
சூடுகளிலும் பொஸ்பரஸ் எரிவுகளிலும்
க்ளஸ்ரர் குண்டுகளிலும்
மண்மூடைகள்
வயிறு பிழந்து விழுகின்றன.
புதிய மண்மூடைகளை அடுக்குகிறார்கள்
யாரோ
உள்ளிருக்கும் மண்
சொரியும் மூடையொன்றில்
கண்களும் கால்களும்
முளைத்ததைக் கண்டேன்.
என் கண்கள் குருடாகின..
0 0 0
நீண்டு
கடலில் இறங்குகிறது
எஞ்சியிருந்த ஒற்றைத் தெரு.
எதிர்த் திசையில்
வரிசையுற்று நிற்கின்றன
மரணங்கள்,
ஒன்றன் பின் ஒன்றாக..
மரணங்கள்
குழந்தைகளை ஏந்தியிருந்தன.
சிறுவர்களை அணைத்திருந்தன.
மரணங்கள் எழுதப்பட்ட தாள்களின்
ஓரத்தில் குத்தப் படுகிறது முத்திரை.
அவலமும் வீரமுமென..
தாள்களும்
மரணத்தின் புகைப் படங்களும்
பட்டங்கள் போலேறி
செயற்கைக் கோளில் புகுந்ததை
பொஸ்பரஸ் வெளிச்சத்தில்
சிறுவர்கள் [...]

போய் வருக என் தாய்நிலமே!

UK central college இப்படித் தான் சொல்லுவோம். ஆனால் மத்திய கல்லூரி அல்ல. வெறும் மகா வித்தியாலயம் தான். UK மகா வித்தியாலயம். உடையார் கட்டு மகா வித்தியாலயம். பரந்தன் முல்லைத்தீவு வழியில் விசுவமடுவிற்கு அடுத்ததாக சில கட்டடங்கள் சில கொட்டில்கள் சில மர நிழல்கள் இவைதான் அப்பாடசாலையில் மொத்தமான கட்டுமானங்கள். அப்போது 1996
நான்கைந்து பாடசாலை அனுபங்கள் எனக்கு உண்டு. எல்லாமுமே மூன்று வருடங்களுக்கு மேற்படாதவை. அது ஓடிக் கொண்டிருப்பவருக்கான பொதுவிதி.
ஆனாலும் என்னவோ பள்ளிக் காலம் [...]

நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப் பட்டிருக்கிறோம்

நாங்கள் எதற்கு
சாட்சிகளாக்கப்
பட்டிருக்கிறோம்
அல்லது
எதற்காக
சாட்சிகளாயிருக்கிறோம்..
எனக்கெதுவும்
புரியவில்லை.
பகலையும் இரவையும்
கண்டு
அஞ்சும் என்
கண்களை
என்ன செய்வேன்..?
000
ஆசிரியர், வெளிச்சம் சஞ்சிகை, கலை பண்பாட்டுக் கழகம், கோப்பாயோ கொக்குவிலோ என முகவரியிட்டு பதின்ம வயதுகளில் நான் எழுதிய எந்த ஆக்கமும் வெளிச்சம் இதழில் வந்ததில்லை. பதினைந்துகளில் நின்றிருந்த வயதது. அதற்குரிய சந்தேகங்களோடு உவங்கள் தெரிஞ்சாட்கள் எழுதினாத்தான் போடுவாங்கள் போல என நம்பினேன். வெளிச்சம் ஆசிரியரைத் தெரிந்து கொள்ள வேண்டும். பழகிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனால் அதில் மெனக்கெட முடியாதளவிற்கு இடப்பெயர்வுகளும் ஓட்டங்களும் அடுத்த ஆண்டுகளில் நிறைந்து விட்டிருந்ததனால்.. [...]

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • Could not connect to Twitter

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231