ஆனந்தன் அண்ணா, நேற்றும் உங்களை நினைத்தேன்

ஆனந்தன் அண்ணை.. உங்களை நான் கடைசியாக் கண்ட போது நீங்கள் வழமைக்கு மாறாக அமைதியா இருந்தீங்கள். அப்பிடியொரு அமைதியில உங்களை நான் அதற்கு முதல் பார்த்ததே இல்லை. எப்பவும் சிரிப்பும் கும்மாளமுமா இருக்கும் நீங்கள் அண்டைக்கு ஏன் அப்பிடி இருந்தீர்கள்? அதுவும் ஆர்மோனியப் பெட்டியை நீங்கள் வாசிக்க, நாங்கள் பாட, வீடே கலகலக்கும். சில வேளை நீங்களே பாடிக்கொண்டு ஆர்மோனியம் வாசிப்பீர்கள். ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது என குரலை உயர்த்திப் பாடுவது அவ்வளவு நல்லாயிருக்காது [...]

அந்த ஐந்து பேரையும் யாருக்காவது தெரியுமா..?

இன்று ஒருவருடன் நமது இளம் பராயத்து நினைவுகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்த போது இது பற்றிய பேச்செழுந்தது. அதாவது நமது இளம்பராயத்து பாடப் புத்தகங்களில் இடம் பெற்ற சுவையான சுவாரசியமான கதைகளை இப்போதும் நம்மால் நினைவு கொள்ள முடிகிறதா என கொஞ்சம் முயற்சித்துப் பார்த்தோம். குறிப்பாக தமிழ் ஆங்கில பாடப்புத்தகங்களில் இவ்வாறான நிறையக் கதைகள் இருந்தன. கதைகள் மட்டுமல்லாமல் பாடல்களும் கூட.
இதனைப் படித்துக் கொண்டிருக்கும் யாருக்காவது Muru என்பவரைத் தெரியுமா? ஆரம்ப ஆங்கில பாடப் புத்தகத்தில் I [...]

வெட்கம்

கடந்து சென்ற வாகனமொன்று முழுப்புழுதியையும் கெனடி மீது வாரியிறைத்துவிட்டுப் போனது. எவ்வளவுதான் ஒதுங்கி நின்றாலும் போகிற வருகிற வாகனங்கள் கிளப்புகிற செம்புழுதி உடல் முழுவதும் படியத்தான் செய்கிறது.
தெருவில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. அது அப்பிடியேதான் குண்டும் குழியுமாக கிடந்தது.
கெனடியைச் சிலர் ஆச்சரியமாக பார்த்துப் போனார்கள்.
‘நடை உடைகளில் நான் இந்த இடத்துக்கு புதியவனாக தெரியக்கூடும்’ என அவன் நினைத்துக் கொண்டான்.
‘சங்கக்கடை கடந்தாச்சு இன்னும் கொஞ்சத்தூரம் தான்..’ சுமந்து வந்த பையை அடுத்த தோளுக்கு மாற்றி நடையில் வேகமெடுத்து [...]

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • http://tinyurl.com/ylg4h62 திரிசாவா இது..?
  • விதாவ படம் முடிந்தபிறகு பக்கத்திலிருந்தவர் சொன்னது.. அமெரிக்ககாரன் அமெரிக்ககாரன்தான்.. சினிமாகாரன் சினிமாகாரன்தான் :)
  • ஆதவன் மார்ச் 2010 emagazine http://www.aathavanonline.com/?page_id=1220
  • எங்களை சகமாணவரும் சரி சில ஆசிரியரும் சரி IDP students என்று பிரிச்சு பேசிகினம்.. அது சரியான கவலையாயிருக்கிறது - ஒரு மாணவி - மணற்காடு

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231