கேளுங்க.. கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க..

உங்களுக்கு வேலையற்ற நேரம் இருக்கிறதா..? இருந்தால் இந்த அலட்டலைக் கேளுங்கோ.. சென்னையில் உள்ள எனது நண்பர் சோமிதரனும் நானும் வலைப்பதிவுக்காக அலட்டியதன் ஒலிப்பதிவு இது. இலங்கைத் தமிழ் நல்ல தமிழ் சென்னைத் தமிழ் ஊடகத் தமிழ் என்பவை பற்றி பலதும் பத்துமான உரையாடல். வழமை போலவே ஆயத்தங்கள் ஏதுமின்றி வழ வழா கொழ கொழா என்று கதைத்துவிட்டு பிறகு நேரக் கணக்கிற்கும் விசயக் கணக்கிற்கும் ஏற்ப வெட்டியதும் கொத்தியதும் போக மிச்சத்தை உங்கள் செவிகளுக்கு கொண்டு வந்திருக்கிறோம். [...]

ஒரு வழியாய் முடித்தாயிற்று

நிறைய நாளாக எனக்கே எனக்காக ஒரு Audio player செய்ய வேண்டும் என்ற ஆசை இன்று ஒரு 50 வீதம் நிறைவுக்கு வருகிறது என நினைக்கிறேன். வழமையாகக் குரல்ப் பதிவுகள் போடும் போது Real player பயன்படுத்துவது தான் வழமை. ஆனால் அது பலரைச் சென்றடைவதற்கான வாய்ப்பு இல்லையென்பதனால் வேறேதாவது Players பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில் Flash இல் முயற்சி செய்யத் தொடங்கினேன். இணையத்தில் விழுந்து எழும்பிப் புரண்டு நிமிர்ந்ததில் கிடைத்த துணுக்கு அறிவினைக் கொண்டு Flash [...]

பழைய இரும்புக்கு பழம் வாங்கியிருக்கிறியளா?

கானா பிரபா மாம்பழங்கள் பற்றி எழுதிய போது நினைத்திருந்த பதிவு இது.பின்னர் மலைநாடான் பாலைப் பழங்கள் (பால்ப் பழம் என்றால் யார் கேட்கப் போறாங்க..?) பற்றியெழுத அவரின் வழி சிநேகிதியும் அம்பிரலாங்காய் குறித்து எழுதியாயிற்று.
இது என் முறை. எல்லாருக்கும் ஒவ்வொரு பழங்கள் பிடித்தது போலவே எனக்கு நிறையப் பிடித்தது ஐஸ்பழங்கள். (தமிழ்நாட்டில் இதனை குச்சி ஐஸ் என்பர்). 50 சதம் விற்றுக் கொண்டிருந்த போது அறிமுகமானது இந்தப் பழம். மத்தியானத்துக்கும் பின்னேரத்துக்கும் இடைப்பட்ட நேரங்களில் சைக்கிளில் மணியடித்துக் [...]

22 ம் திகதியும் 25ம் திகதியும்

பனி விழும் இரவு

நேற்றைய இரவில் இருந்து இங்கு பனிப் பொழிந்து கொண்டிருக்கிறது. அதிகாலை 6 மணிக்கு புகையிரத நிலையத்திற்கு செல்ல கால்கள் புதையப் புதைய நடக்க வேண்டியிருந்தது. முதல் முறை.. அதனால் ஒரு வித கிளர்ச்சி.. நாளாக நாளாக அலுப்பினையும் எரிச்சலையும் தருவது உறுதி. படங்களின் மேல் கிளிக்குக..
wweeeeee
wweeeeee

படங்களில் நோண்டுதல்

சில்லென்ற தண்ணீரும் அழகிய மாலையும் அதோ தூரத்தில் பனி மலையும் இன்னும் ஒரு மொட்டை மரமும் வீடும். படங்களில் மேல் கிளிக்குக.
wweeeeee
wweeeeee

எனக்கெண்டொரு றேடியோ

தடங்கலுக்கு வருந்துகிறேன். சொதப்பிட்டுது. சரி வந்தது தான் வந்தியள். பக்கத்தில இருக்கிற என்ர பாடலை கேட்டுப் போங்கோ. அதுவும் புது றேடியோத்தான்.

உலக வலைப் பதிவுகளில் முதல் முறையாக

கொஞ்ச நாளுக்கு முன்னாலை வசந்தன் தன்ர வலைப்பதிவின்ர ரண்டாம் ஆண்டு நிறைவுக்காக ஏதாவது செய்ய இருக்கிறதாகவும் என்ன செய்யலாம் எண்டும் கேட்டார். வழமையா குரல் பதிவுகள் தான் அவரின்ர விசேசமான பதிவுகள். அதனாலை ஒரு குரல் பதிவைப் போடும் எண்டு சொன்னன். சரியெண்டு அவரும் அதைப்பற்றிக் கதைச்சக் கொண்டிருக்கும் போது இதை ஒரு கலந்துரையாடல் குரல்ப்பதிவாப் போடலாமே எண்டு நான் தான் அவருக்குச் சொன்னன்.
ஏற்கனவே வானொலிக்காக சிலரைச் செவ்வி கண்டு அதனை நேரடியாக கணணியில் ஒலிப்பதிவு [...]

பசுத்தோல் போர்த்திய புலிகளோ?

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்றான வட்டுக்கோட்டையில் ஊரடங்கு நேரத்தில் நடமாடிய இரண்டு பசுமாடுகளை இராணுவத்தினர் சுட்டுக் கொன்று விட்டார்கள் – சோமிதரன் (சந்தோசம் தானே மச்சான்..)ஆனந்த விகடன், 10.01.07படம் – திரு கிளிநொச்சியிலிருந்து

ஜெருசேலம்

கூடி மகிழ்ந்திட்ட கோவில் வயல் வெளியாவும் இவர் இழந்தாரே – நேற்றுப்பாடி மகிழ்ந்திட்ட ஊரைத் திறந்துமேபோகும் திசையறியாரே..-புதுவை இரத்தினதுரை-

படங்கள்: திரு – கிளிநொச்சி

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231