பெரியண்ணன் டிசே தனது பதிவொன்றில் சுஜித்-ஜீ பற்றி எழுதியிருந்தார். சுஜித்-ஜீ யாரென கேட்பவர்களுக்காக டிசேயின் வார்த்தைகளை இங்கே கடன்பெற்றுத் தருகிறேன்.
இந்த இளங்கலைஞர், தமிழ்ப்பாடல்களை Rap, R&B போன்ற தளங்களுக்கு நகர்த்த முயற்சித்துக்கொண்டிருக்கின்றார். முதலாவது ஆல்பம், Singles, இரண்டாவது ஆல்பமான சிலோன் (Ceylon) இந்த வருடம் நடுப்பகுதில் வர இருக்கிறது. தானே பாடல்கள எழுதி, பாடவும் செய்கின்ற சுஜித்தின் பாடல்கள், ராப் பாடல்களிலும், தமிழ் ரீமிக்ஸ்களிலும் கரைந்துபோகின்ற என்னைப் போன்றவர்களுக்கு பிடிக்காமற்போகாதுதானே. அநேக ராப் பாடல்களில் (கானாப் பாடல்களைப் [...]
Written on February 23, 2006 | Posted in
பத்திகள் |
14 Comments
நீங்கள் திரிஷா ஜாதகக் காரரா..? அல்லது நயன்தரா ஜாதக காரரா..? உங்களுக்குரிய இந்த அண்டிற்கான பலாபலன்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா..? சரி.. கீழே வீடியோவில் ஜோதிட சிகாமணி ஜோதிகா சாமி காத்திருக்கிறார். கெட்டு தெரிந்து கொள்ளுங்கோ..
இதுவும் கனடாவில் ஒளிபரப்பானதென்று தான் நினைக்கிறேன். அவர்களுக்கு நன்றி. இதுவும் டிசேக்காகத் தான்! டிசே.. நீங்கள் என்ன ராசி?
Written on February 15, 2006 | Posted in
பத்திகள் |
3 Comments
இதுக்கு முதலில ஒரு குறும் படம் ஏற்றியிருந்தனான். ஆனால் அதுக்கு பதில் எழுதின டி சே அதில ஒரு பொம்பிளைப் பிள்ளையளும் நடிக்க வில்லையாம். அதனாலை என்னை மண்டையில போடுற அளவுக்கு போயிட்டுது ஆள்.
அதனாலை பொம்பிளைப் பிள்ளயள் நடிச்ச இந்த படத்தை அவருக்கு போட்டுக் காட்டுறன்.. அதுவும் கனடாவில தான் எடுத்திருக்கு.. ஒரு வேளை அவர் பார்த்திருக்கவும் கூடும்.. எண்டாலும் பாக்கட்டும்.. சரி மற்றாக்களும் பாருங்கோ..
Written on February 13, 2006 | Posted in
பத்திகள் |
11 Comments
இஞ்சை சிட்னியில அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில இடம் பெற்ற நடன நிகழ்ச்சிக்கான வீடியோ முன்னோட்டம் ஒன்றினை நான் தயாரித்திருந்தன். இது அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பதாக பார்வையாளர்களுக்கு திரையில் காட்டப்பட்டு பின்னர் வீடியோவின் தொடர்ச்சியாக மேடையில் நடனம் ஆரம்பமானது..
இது ஒரு குட்டிப் படம் எண்டதால இதை குறும்படம் எண்டு சொல்லலாம் தானே.. இந்தக் குறும்படத்தின்ரை இயக்குனரும் படத்தொகுப்பும் நான் தான்.. இப்ப பதிவேற்றியிருக்கிற இந்த வீடியோ எந்த அளவிற்கு எல்லாருக்கும் தெரியும் எண்டு எனக்கு [...]
Written on February 12, 2006 | Posted in
பத்திகள் |
5 Comments
ஆட்லறி
நெடுந்தூர எறிகணை
குண்டு வீச்சு விமானங்களுக்கு அடுத்த படியாக சனம் கிலியடைஞ்சு போயிருந்த உயிர் கொல்லும் ஆயுதம்.
விமானக் குண்டு வீச்சுக்களின் போது எங்கு வருகிறது? எங்கு வீசப் போகிறது என்பதனை தெரிந்து கொள்ள முடிகிறது.
எறிகணை வீச்சுக்கள் எங்கு விழப் போகிறன என்பது எவருக்கும் தெரியாது. உண்மையில் அதனை எறிந்தவர்களுக்கு கூட அது தெரியாது. எறிகணைகள் விழுந்ததன் பின்பே இறந்தவர்கள் நீங்கலாக மற்றவர்களால் அது விழுந்த இடம் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த ஆட்லறிகள் எனக்கு நினைவு தெரிய முன்னமே [...]
Written on February 10, 2006 | Posted in
பத்திகள் |
7 Comments
யுத்த காலத்தில் நடந்தவையாயினும் சில சம்பவங்கள் சுவாரசியமாயும் நகைச்சுவையாயும் அமைந்து விடுகின்றன. அவ்வாறான நான் அனுபவித்த அல்லது கேட்ட சில சம்பவங்களை அடுத்தடுத்து தரமுடியும் என்று நம்புகின்றேன்
இலங்கை அரசு தன்னுடைய ஆயுத வளத்தை காலத்திற்கு காலம் நவீனப்படுத்த அப்பாவிகளாகிய பொது மக்களும் தங்களுடைய காப்புக்களை நவீனப்படுத்தி கொண்டு வந்தார்கள்.
ஆரம்பத்தில் துப்பாக்கி வேட்டுக்கள் மற்றும் சாதாரண குண்டு வீச்சுக்களின் போது வீடுகளின் சீமெந்து சுவர்களே போதுமாயிருந்ததாம். எங்கள் வீட்டு சமையறை கட்டப்பட்ட போது பாதுகாப்பினை மனதில் வைத்தே மிகத் [...]
Written on February 8, 2006 | Posted in
பத்திகள் |
7 Comments
அந்த ஆச்சி கிட்டடியில சாகப்போற மாதிரி, எனக்கு தெரியேல்லை. ஆனாலும் அம்மா சொன்னா. “நீ அடுத்த முறைக்கு வரேக்கை மனுசி இருக்குதோ இல்லையோ தெரியாது. எதுக்கும் ஒருக்கா போய்ப்பாத்திட்டு வா.”
பரவாயில்லை. மனுசி திடகாத்திரமாத்தான் இருந்தது. என்னைக் கண்டவுடனை அடையாளம் கண்டுகொண்டிச்சு.
“வாப்பு. என்னப்பு சரியா இளைச்சு போட்டாய்? சரியான சாப்பாடு இல்லைப்போல?” நான் மெல்லிசா சிரிச்சு வைச்சன். “எப்பிடி இருக்கிறியள்” எண்டு கேட்டன்.
“முந்தி மாதிரி ஓடியாடி வேலையள் செய்ய முடியேல்லை. எண்டாலும் பரவாயில்லை. ஏதோ இருக்கிறன். கடவுள் எப்ப [...]
Written on February 1, 2006 | Posted in
பத்திகள் |
2 Comments