நரகாசுரனுக்கு வீரவணக்கங்கள்!

5000 ஆண்டுகளுக்கு முன் திராவிட மண்ணுக்கு மேய்ப்போராக வந்த ஆரியர் திராவிட மண்ணைப் பறிப்பதற்காய் தொடர்ச்சியாகப் போரிட்டனர். போரிட்ட வேளை எதிர்த்த திராவிட தலைவர்களை அசுரராயும் தம்மை தேவர்களாயும் சித்தரித்தனர். தம் தலைவர்களை தெய்வங்களாக்கினர். அவற்றை கதைகளாகவும் புராணங்களாகவும் உருவாக்கினர். திராவிடருக்கு கொம்பு கடவாய்ப்பல் பெருத்த உடம்பு எல்லாம் பொருத்தி வேண்டாத உருவங்கள் ஆக்கினர். தம் அடி வருடிய திராவிடரை குரங்குகளாக்கினர். மதத்தால் முழு இந்தியாவையும் ஒருமைப் படுத்திய ஆரியர், பிராமண குலத்தவரால் இக் கதைகள் எல்லா [...]

யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995

1995 , ஒக்ரோபர்,30
மிகச்சரியாக இன்றைக்கு பத்து வருடங்களின் முன்..
அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள்.
யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் [...]

இவர் யாருங்கோ..?

அண்மையில் யாழ்ப்பாணம் போய் வந்தபோது எடுத்த படங்களின் தொகுப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் சிக்கியது இந்தப் படம்! யாழ்ப்பாணம் கோட்டையை அண்மித்தாக -பழைய சுப்ரமணிய பூங்காவிற்கு முன்பாக – இந்த சிலை இருக்கின்றது. யாரென்று தெரியவில்லை. யாருக்காவது தெரியுமா..?
பாருங்கள்.. யுத்தத்தின் வடுக்களை தன்னால் முடிந்தளவு தாங்கி வைத்திருக்கின்றார்.

தமிழில கதைக்கிறது எப்பிடி

கொழும்பில தனியார் வானொலிகள் வந்த போது அவையெல்லாம் எங்களைப் போன்றவர்களுக்கு பெரிய கனவாக இருந்தது. எனக்கு தெரிஞ்ச என்ரை நண்பர் ஒருவர் றேடியோவில சேருவதற்காக மட்டக்களப்பில இருந்து கொழும்பு வந்து தங்கியிருந்ததாக நான் நக்கல் அடிப்பன். நல்ல வேளை அவருக்கு அது கை கூடாத படியால் இன்று பல துறைகளில் பிரகாசிக்கின்றார்.
நான் கூட கொழும்பில் ஏதாவது வானொலிகளுக்கு ஒருநாளாவது போய் என்ரை குரலை காட்ட முடியுமா என்று யோசித்திருக்கிறேன். இப்படியெல்லாம் நான் நினைச்சதுக்கு அறிவிப்பாளர்களை எங்காவது கண்டால் [...]

காதலைப் பற்றிக் கதைக்கப் போறன்

அதென்ன திடீரென்று காதலைப்பற்றிக் கதைக்க வேணும் எண்டு யாரும் கேட்கக்கூடாது. என்ரை பழைய பதிவொண்டில எங்கேயோ ஒரு தடவை காதலுக்கான உடனடிக்காரணங்களில அழகும் ஒண்டு எண்டு சொன்னதுக்காக அப்ப கொழும்பிலயும் இப்ப சிங்கப்பூரிலும் இருக்கின்ற கீது காரசாரமா ஒரு பதில் எழுதியிருந்தவ. (அதில என்னை யோசிக்க வைச்ச ஒரு விசயம் என்னெண்டால் அவவின்ரை பதிவில இருந்த சயந்தன் உம்மட்டை இருந்து இதை நான் எதிர்பாக்க வில்லை எண்டது தான். ) அவவின்ரை பதிவுக்கு என்ரை பதிலை ஒரு [...]

கடவுள் ஒருவன் தான்!

ஹி ஹி.. இது ஒண்ணும் மதப் பதிவு இல்லைங்க!இண்டைக்கு பின்னேரம் போல வகுப்பாலை ரெயினிலை வந்து கொண்டிருந்தன். அடுத்ததோ அதுக்கடுத்ததோ ஒரு ஸ்ரேசனில ஒரு வயசான வெள்ளைக்கார அம்மா வந்து எனக்கு பக்கத்தில இருந்தா. நான் ஒரு பண்பாட்டுக்கு சிரிச்சு வணக்கம் சொல்லிப்போட்டு பக்கத்தில கிடந்த ஓசிப்பேப்பரை எடுத்து படங்கள் பாக்க தொடங்கினன். முக்கியமா எந்தக் கடையிலாவது எந்தச் சாமானாவது மலிவாப் போட்டிருக்கோ எண்டு பாக்கிறது தான் என்ரை வேலை.
பக்கத்தில இரந்த மனிசி ஒரு சின்ன சாப்பாட்டுப் [...]

காலமும் கதைகளும்

காலம் 1
மீண்டும் இடம் மாறிப் பூத்தது பூ
அவளோடு அதிகம் பேசச் சொல்லும் மனசு. அதை அடக்கும் புத்தி!
‘வழியாதே! கௌரவமாய் இரு”
அவளைப் பார்க்கும் கணங்களில் மனசு மட்டும் பற்றி எரிய மெல்லிய புன்முறுவலோடு சேர்த்து வணக்கம் உதிர்க்கும் உதடு.
தேவைக் கேற்ப பேசினானேயாயினும் சில சமயங்களில் அத் தேவைகளும் திணிக்கப் பட்டனவாயிருந்தன அவள் அறியாமல்!
அவளும் பேசுகிறாள் தன் தேவைக் கேற்ப, அவையும் திணிக்கப் பட்ட தேவைகளோ என்று எண்ணுகையில் அங்கே நிகழிகிறது முதல்த் தவறு!
‘எல்லோரும் இருக்க ஏன் என்னிடம் மட்டும்”!! [...]

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231