ஊர் நினைவில் ஒரு வீடு – சிட்னியில்

சிட்னியில் penrith (என்று தான் நினைக்கிறேன்..) போகிற வழியில் தெரிந்த ஒருவர் இருந்தார். மிக அண்மையில் அந்த இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தார். நகர்ப்புறத்தில் இருந்து மிக அதிகமாக விலகிய ஒரு காடு சார்ந்த ஒரு சூழலில் அவர் வீடு இருந்தது.
ஒரேஞ் தோட்டம் செய்வதற்கு ஏதுவான இடமாம். அவரது காணிக்குள்ளேயே நிறைய ஒரேஞ் (என்று தான் நினைக்கிறேன்..) மரங்கள் காய்த்துக் குலுங்கின.. தவிர வீட்டைச் சுற்றி கோழிகள் அங்குமிங்கும் ஓடித்திரிந்தன.. அவற்றுக்கு முற்றத்தில் அரிசி வீசிக் கிடந்தது.
இரண்டோ மூன்று [...]

இது எங்க பாடல்!

கத்தரித்தோட்டத்து மத்தியில கழுத்தறுத்து விட்டது. இதுக்கு முதலில போட்ட பாட்டு நினைச்ச நேரங்களில மட்டும் தான் வேலை செய்யுது. அதனால வன்னியன்ரை உதவியோடை இந்தப்பாட்டை அவரின்ரை தளத்தில திரும்பவும் போடுறன். கூடவே போனசா இன்னும் ஒரு பாட்டும் போடுறன். அதையும் கேளுங்கோ!! அந்தப்பாட்டுக்கு சும்மா அவசரத்துக்கு வரிகள் எழுதினது.. ஒரு பரீட்சாத்த முயற்சியாக.. மற்றும் படி அதில இசை நுணுக்கங்களை தேடாதேங்கோ.. தேடினாலும் கிடைக்காது.
கத்தரித்தோட்டத்தின் மத்தியிலே..
நெருப்பெரிந்த நிலமாய்…

கத்தரித் தோட்டத்து மத்தியிலே..

சென்ற முறை இலங்கை சென்ற போது வசந்தன் திரும்பத் திரும்ப சொன்ன விசயத்தினை நான் நிறைவேற்றாமல் வந்தேன். அது சில சிறுவர் பாடல்களை ஒலிப்பதிவு செய்து வருதல். குறிப்பாக அவர் கத்தரித்தோட்டத்து மத்தியிலே பாடலை கண்டிப்பாக ஒலிப்பதிவு செய்து வரும்படி சொல்லியிருந்தார்.
சென்ற வாரம் சிட்னி சென்ற போது எப்பிடியாவது அந்தப்பாடலை ஒலிப்பதிவு செய்ய சொல்லியிருந்தார். இம்முறை அவரது விருப்பத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற நோக்கில்… இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்திருக்கிறேன்.
இந்தப்பாடலுக்கு தனியாக இசையமைக்கப்பட்டது. சிட்னியில் எனது [...]

சிட்னியில் இருந்து..

வணக்கம்! சிட்னியில் நடந்து முடிந்த மாநாடு, மெல்பேண் வலைப்பதிவாளர்கள் சார்பில் வானொலியில் செய்த நிகழ்ச்சிகள், சில சிறுவர் பாடல் ஒலிப்பதிவுகள் என சிட்னிப்பயணம் போய்க்கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் மெல்பேண் திரும்பியவுடன் எழுத இருக்கிறேன்.
நாளை வானொலியில் வலைப்பதிவுகள் குறித்த ஒரு அறிமுகம் வழங்கப் போறன்.. சும்மா கத்தரிக்காய் கறி வைக்கிறது எப்பிடியெண்டு கத்தாமல் பிரியோசனமா ஏதாவது பண்ணும் என வசந்தன் கத்தியதன் விளைவு அது!!
இப்போதைக்கு இன்று சிட்னியில் எடுத்த இரண்டு படங்கள்… மீதி வரும்!!!

நான் வளர்கிறேனே! மம்மி

உங்கள் எல்லாருக்கும் இண்டைக்கு நான் வளந்த படங்கள் காட்டப்போறன். குட்டிப் பெடியனா இருக்கேக்கை எடுத்த படங்களில இருந்து இந்தா இப்ப முந்தாநாத்து எடுத்த படம் வரைக்கும்… படங்களோடை கொஞ்சம் கதைக்கவும் போறன்..

இந்தப்படம் என்ரை பிறந்தநாள் ஒண்டுக்கு எடுத்த படம். என்ன அமைதியா நல்ல பெடியனாய் இருக்கிறன் என்ன? ம்.. சொல்ல மறந்திட்டன். இந்தப் படம் எடுத்தண்டு தான் இந்தியா எங்களுக்கு சாப்பாடு போட்டது.
இந்தப்படத்தை ஏற்கனவே என்ரை வலைப்பதிவில போட்டிருக்கிறன். ஏதோ ஒரு நாடகத்தில (பெயர் மறந்து [...]

சைய சையா நய்.. தைய தையா

எல்லாமாச் சேத்து ஒரு 15 000 சனம் வந்திருக்கும். அதில ஒரு முக்கால்ப் பங்கு இந்திய அதுவும் ஹிந்தி மொழி பேசும் சகோதரர்களாக இருந்திருப்பார்கள். நாங்கள் ஒரு ஏழெட்டு தமிழ்ப்பெடியள்.
வழமை போலத்தான் கொஞ்சம் லேற்றாகப் போனம். உள்ளே நுழைஞ்ச போது ஏதோ ஒரு ஹிந்திப்பாட்டை ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். நீண்ட முடி வளர்த்திருந்த அவர் சரியாகச் சொல்லப்போனால் பேயோட்டுபவர் மாதிரி பாடிக்கொண்டிருக்க ‘ஐயோ.. பயமாக்கிடக்கு’ எண்டு முதல் அலறல் எங்களிட்டை இருந்து வெளிப்பட்டது.
இருக்கைகளில் 3D கண்ணாடிகள் வைக்கப்பட்டிருந்தன. இருந்தவுடனையே [...]

மெல்பேணில் AR ரஹ்மான்

இப்பத்தான் நிகழ்வு முடிஞ்சு வீட்டை வந்தன். நித்திரை கொள்ளப்போறன் ஏனெண்டால் எனக்கு நித்திரை வருகுது. நன்றி

மெல்பேண், சிட்னி, நியூஸிலான்ட்- சங்கமம்

தென்துருவ வலைப்பதிவர் கழகமும் ஒரு பகிரங்க அறிவித்தலும்.வலைப்பதிவர் சந்திப்பொன்றை ஒஸ்ரேலியாவில நடத்தி நிறைய நாளாச்சு. கடைசியா போன சித்திரை மாசம் எண்டு நினைக்கிறன் ஒரு வலைப்பதிவா சந்திப்பை நானும் வசந்தனும் திறம்பட நடத்தி முடிச்சிருந்தனாங்கள். இந்த இடைப்பட்ட காலத்தில எங்கடை மெல்பேண் வலைப்பதிவர் கழக கண்மணிகளுக்கு நிறைய நேர மற்றும் இன்னொரன்ன நெருக்கடிகள் காரணமாய் ஒண்டும் சரிவர எழுத முடியேல்லை. ஒஸ்ரேலியாக்கு வந்த புதுசில வீடும் படிப்பும் வேலையும் எண்டிருந்த எங்கடை கழக கண்மணிகள்.. இப்ப உலகமும் [...]

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • Could not connect to Twitter

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231