முதலாளியின் அப்பா

என்னுடைய வேலை அனுபவத்தைப் பற்றியும் எழுத வேண்டும் என்ற ஆவல் தாரா வின் ஒரு பதிவினை பார்த்த பிறகு ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அது கட்டாயம் எழுதப்பட்டேயாக வேண்டும் என்ற முடிவினை எட்டியது. அதாகப்பட்டது,
ஒஸ்ரேலியா வர முன்பே அங்கு போனால் ஏதாவது பகுதி நேர வேலை செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது கிடைக்கும் நேரத்தை பயனாக செலவழிக்கலாம் என்பதனால் அல்ல அதுவே கட்டாயமும் என்பதனாலும் ஆகும்.
ஆக இங்கு வந்து ஆரம்பத்தில் அதிகம் யாரையும் அறியாமல், [...]

லக்ஸ்மன் கதிர்காம (ர் இல்லை)

போன சனிக்கு முதல் சனிக்கிழமை!
முதல்நாள் வரை பாயாசம் காய்ச்சுவதாக இருந்த எண்ணத்தை கதிர்காமரின் இறப்புச் செய்தி கேட்டு கைவிட்டு விட்டம். ஏற்கனவே பிளான் பண்ணியிருந்தது தான் என்றாலும், நாளைக்கு கதிர்காமரின் இறப்பை பாயாசம் காய்ச்சி கொண்டாடினாங்கள் எண்ட பழிச்சொல் வரக்கூடாது பாருங்கோ!
அண்டைக்கு காலமை போல என்னோடை படிக்கிற என்ரை சிங்கள நண்பன் msn இல் Nudge ஒண்டை அனுப்பினான். நான் அப்ப போனில இருந்தன். அவரின்ரை Nudge க்கு பதிலேதும் சொல்லேல்லை.
மச்சான் லக்ஸ்மன் கதிர்காம [...]

கிட்டு மாமா பூங்கா

யாழ்ப்பாணத்தில நல்லூருக்கு கிட்டவாக இறுதிக்காலங்களில் நான் யாழ்ப்பாணத்திலிருந்த எங்கள் வீட்டுக்கு அண்மித்தாக கிட்டு மாமா பூங்கா இருந்தது.
எனக்கு சுப்பிரமணிய பூங்கா தெரியாது. விருத்தெரிய முதலே அது அழிந்து விட்டது. பூங்கா என்றால் இப்படி இப்படி இருக்குமாம் என்று கேள்விப்பட்டதனை முதலில் நேரடியாக பார்த்தது இங்கு தான்.
அப்பிடியென்ன பிரமாதம் உலகில் இல்லாத பிரமாதம் என யாரும் கேட்கலாம். அப்படி எதுவும் இல்லைத்தான். ஆனால் யுத்த காலத்தில் எங்கள் வயதொத்த சிறுவர்களின் மகிழ்வுக்கான தளமாக அது இருந்தது.
யாழ்ப்பாணம் சிங்கள இராணுவத்தினரால் [...]

SuperCup க்கு தமிழ் என்ன இலங்கையில் 3A

மோட்டச்சைக்கிளில் (அதை மோட்டச்சைக்கிள் என்று சொல்லலாமோ தெரியாது. சோமிதரன் தான் கொண்டு வந்திருந்தான். TVS 50 ரகம் போல வேறொன்று. லைசென்ஸ் தேவையில்லையென்ற படியால் இறங்கி ஏறும் சோதனைச்சாவடிகளில் அந்த வண்டிதான் சரியான தெரிவு என அவன் சொன்னான்.)
நானும் சோமிதரனும் நாவற்குழி பாலத்தை தாண்டுகிறோம்.பாலத்தில் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. சைக்கிள் மோட்டர்சைக்கிள் தவிர்ந்த வாகனங்களுக்கு அந்த வீதி மூடப்பட்டிருந்தது. அந்தப்பாலத்தினை என்னால் எண்டைக்கும் மறக்க முடியாது.
95 இன் இடம் பெயர்வில் பாலத்தில் ஏறுவது ஆபத்தென எண்ணி அருகே [...]

மெல்பேணில் இசை நிகழ்வு

இன்று மெல்பேணில் தமிழர் புனர்வாழ்வு கழக நிதிக்காக இன்னிசை மாலை நிகழ்வொன்று நடைபெற்றது. போயிருந்தேன்.
வசந்தனும் வந்திருந்தார். அவர் என்னிடம் இலங்கையிலிருந்து கொண்டு வரச் சொன்ன சில புத்தகங்களையும் நானாக கட்டாயம் படியும் எனச்சொல்லிக் கொடுத்த ஷோபா சக்தியின் தேசத்துரோகிகள் தொகுப்பினையும் பெற்றுக்கொண்ட அதே வேளை எனக்கு இரவு வேலை நேரம் நேரத்தினை போக்குவதற்காக மட்டும் சாண்டில்யனின் கடல் புறா மூன்று தொகுதிகளையும் கொண்டு வந்து தந்திருந்தார்.
நிகழ்வின் ஆரம்பத்திலிருந்தே மேடையில் அந்த இசையமைப்பாளரை எங்கோ பார்த்த மாதிரி [...]

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231