பனங்காய்ப் பணியாரமே..!

பனங்காய்ப் பணியாரம் தெரியுமோ? பனம்பழச்சாறெடுத்து மாவொடு பிசைந்து எண்ணையில் பொரிச்சு.. (அப்பிடிச்செய்யிறதெண்டு தான் நினைக்கிறன். )நல்ல சுவையாக இருக்கும். யாழ்ப்பாணத்தில பனம்பழ கால சீசனில எல்லா வீடுகளிலும் இந்தப் பணியாரம் செய்வினம்.
கிட்டடியில கேட்ட ஒரு பாட்டில காதலியை பனங்காய்ப்பணியாரத்திற்கு ஒப்பிட்டிருந்தவை. பனங்காய்ப் பணியாரமே பச்சை கொழும்பு வெத்திலையே என்று!
இந்தியாவில இப்பிடியொரு பணியாரம் இருக்கா என்று தெரியவில்லை. இருந்தால் சொல்லவும்! அது இப்பிடித்தான் இருக்கும். அய்.. பனங்காய்ப் பணியாரமே..பட உதவி – திரு கிளிநொச்சியிலிருந்து

ஊர்ப்பூக்கள்

செவ்வெரத்தம் பூ
நித்தியகல்யாணியும் மொட்டும்

தொடர் தாக்குதல்கள்: இலங்கையில் – 1

நானும் அனந்தனும் சேயோனும் கொழும்பில் தாட்சாயினி வீட்டுக்கு போயிருந்தோம். சேயோன் கனடாவிலிருந்து வந்திருந்தான். படிக்கின்ற காலங்களில் முன் நெற்றியில் வந்து விழும் முடிகளை வாயிலிருந்து காற்றுக்கொண்டே ஊதிச் சரி செய்து வயிற்றெரிச்சல் தருகின்றவனை இப்போது பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.
அகண்ட தமிழ்த்தனிநாடு எண்டுறது போல அவன்ரை நெற்றி மேலேறி தலையிலும் கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்து இருந்திச்சு. பரம்பரை வழுக்கையெண்டும் தான் அதைப்பற்றி கவலைப்பட போறதில்லை எண்டும் சொன்னான்.
தாட்சாயினி வீட்டை போய் இருக்கிறம். தாட்சாயினியின்ரை அம்மா அதில நான் [...]

என்னா இதுங்கிறேன்?

இதோ.. அண்ணாந்து ஆறுதலாக தேடியும் கிடைக்காத தீர்த்தம் போல இவர் அருந்துவது என்ன என்று தெரிகிறதா?
யாழ்ப்பாணத்தில் எல்லோருமே படம் எடுத்துக்கொண்டோம். இவர் மட்டுமே மிக வாய்ப்பாக கமெராவுக்குள் அகப்பட்டுக்கொண்டார். யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் என்னோடு தனது நேரத்தினை செலவழித்தமைக்காக இந்தப் பதிவினையும் படத்தினையும் அவருக்கு காணிக்கையாக்குகின்றேன்.
நன்றி நண்பா நன்றி

படம் காட்டுறன்

யாழ்ப்பாணத்தில் எழுந்த மாற்றாய் ஒரு பத்துப்பேரை படம் பிடித்தால் கண்டிப்பாக ஒரு இராணுவ சிப்பாயோ அல்லது ஒரு இராணுவ வாகனமோ அவர்களுக்குள் அடங்குவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. உண்மையும் அது தான். யாழ்ப்பாணத்தில் பத்து நபர்களுக்கு ஒரு சிப்பாய் என்ற விகிதத்தில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளார்கள். இந்த படம் யாழ் பேரூந்து நிலையத்தில் எடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் இருக்கின்ற முனியப்பர் கோயில் இது. இப்போது யாழ்ப்பாணத்தின் காதல் தெய்வம்.

யாழ்ப்பாணம் வரவேற்கிறது!

யாழ்ப்பாணத்தினுள் நுழையும் வாயில்
யாழ் நூல் நிலையத்தின் அண்மித்தாக

தொடரும் யாழ்ப்பாண காட்சிகள்

யாழ்ப்பாணத்தின் இன்னும் சில காட்சிகள் இவை. யாழ்ப்பாணத்தின் இணைய வேகத்தோடு போராடி பணத்தை விரயம் செய்ய விருப்பம் இல்லை. அதே நேரம் பொறுமையும் இல்லை. இந்த படங்கள் ஏற்கனவே கிளிநொச்சியில் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி பதிவேற்றப்பட்டவை. (ஓசியில் படம் காட்டுதல்!). இனி வரும் படங்களை ஒஸ்ரேலியா திரும்பியவுடன் காட்டுவதே நல்லது எனவே நன்றி. (தமிழ் மணத்தில் ஏதேனும் சண்டை நடக்கிறதா?)
யாழ் கோட்டையின் வெளிப்புறத்தில்
நல்லூர் திலீபன் நினைவு தூபி
யாழ்ப்பாணம் புதிய தபால் நிலையம்

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • http://tinyurl.com/ylg4h62 திரிசாவா இது..?
  • விதாவ படம் முடிந்தபிறகு பக்கத்திலிருந்தவர் சொன்னது.. அமெரிக்ககாரன் அமெரிக்ககாரன்தான்.. சினிமாகாரன் சினிமாகாரன்தான் :)
  • ஆதவன் மார்ச் 2010 emagazine http://www.aathavanonline.com/?page_id=1220
  • எங்களை சகமாணவரும் சரி சில ஆசிரியரும் சரி IDP students என்று பிரிச்சு பேசிகினம்.. அது சரியான கவலையாயிருக்கிறது - ஒரு மாணவி - மணற்காடு

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231