எங்கள் வீட்டு மரங்கள்

எல்லோரும் படம் காட்டுகிறார்கள்.
நாமும் ஏதும் காட்டலாம் என்றால் இது மெல்பேண் வானம், கடல், மற்றும் வானளாவும் கட்டடம், இது பூங்கா அது பூ என்று காட்டுவதற்கு நிறைய மினக்கெட வேண்டியுள்ளது.
சரி ஏதோ எங்களால் முடிந்தளவு சிக்கனமாக படம் காட்டலாம் என்ற எண்ணம்.
வசந்தன் தன் வீட்டின் உள்ளே இருக்கிற சாமான் சக்கட்டு எல்லாத்தையும் காண்பித்தார். நான் கொஞ்சம் வெளியே வந்திருக்கிறேன்.
இவை நான் மெல்பேணில் இருக்கின்ற வீட்டின் மரங்கள்.
மல்லிகையை போல மணக்கிற ஒரு மரம். முல்லையில்லை. பெரிய பந்தலாயிருந்தது. இப்ப [...]

குமரிக்கண்ட கடல்கோள் நிவாரணம்

நேற்று ஒரு செய்தி கேட்டன். இலங்கையில சுனாமியாலை பாதிக்கப்பட்ட இடங்களில அபிவிருத்தி பணியளை செய்யிறதுக்கு உலக நாடுகள் குடுக்கிற நிதியை சரியா பங்கிடுறதுக்கு பொதுக்கட்டமைப்பு ஒண்டை புலிகள் முன் மொழிஞ்சிருந்தவையெல்லோ. அதின்ரை பேரை அதாவது பொதுக்கட்டமைப்பு எண்ட பேரை முகாமைத்துவ வியூகம் எண்டு மாத்துறதுக்கு இலங்கையின்ரை அதிபர் ஆலோசிக்கிறாவாம்.
சுனாமி அடிச்சு ஆறு மாசம் ஆகப்போகுது. சரியா பாதிக்கப்பட்ட நிறைய இடங்கள் இலங்கை அரசின்ரை நிர்வாகம் நடக்காத புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியள் எண்டதாலை சுனாமிக்கு வெளிநாடுகள் வழங்கிற நிதியினை [...]

பாவியர் போற இடம்!

பாவியர் போற இடம் பள்ளமும் திட்டியும் எண்டு சொல்லுவினம். ஆனா நான் பாவியில்லையே.. அப்பாவியெல்லோ!அடச்சே… ஒரு நிமிச நேரத்தில எல்லாம் நடந்து முடிஞ்சுது.
150 டொலர்!
ரயிலில் கட்டணமின்றி பிரயாணம் செய்வது குற்றம் தான். அட.. ஆகக் குறைந்தது அந்தக் குற்றத்தை புரிந்திருந்தாலாவது தண்டம் அறவிட்டிருக்கலாம். போயும் போயும்.. ரயிலில் முன் சீற்றில் கால் வைத்ததற்கெல்லாம் தண்டம் அறவிடுவார்களா..?
அது குற்றம் என கண்ணுக்கு தெரியத்தக்கதாக எழுதி வைத்த பின்னரும் அவ்வாறு பிரயாணம் செய்தால் அறவிடுவார்கள் தானே!
இன்று மதியம் வகுப்புக்கள் முடிந்து [...]

வேட்டையாடு விளையாடு

ஊர் எண்டால் ஒரு பம்பல் எப்பவும் இருக்கும். பதின்ம வயசுடைய ஒரு கூட்டம் எக்காலத்திலும் தனக்குரித்தான குறும்புத்தனத்தை செய்து கொண்டே இருக்கும். இளநீர்களை களவாக பறிக்கிறது. பிலாப்பழத்தை களவாக வெட்டிக்கொண்டு போறது. இப்பிடி கிழமையில எதாவது ஒண்டு எப்பவும் நடக்கும்.
இப்பிடியான ஒரு கூட்டத்தில முழுநேர உறுப்பினராய் இருக்கிறதுக்கு எனக்க பெரிசா வசதிப்படேல்லை. சின்ன வயசிலையே யாழ்ப்பாணத்தை விட்டு போன படியாலை அந்த வாய்ப்பு கிடைக்கேல்லை. இருக்கும் வரையும் நானும் ஒரு இளநிலை உறுப்பினராத்தான் இருந்தனான் எண்டாலும் பெரிசா [...]

சிவராம்! புலிகளின் குரலிலிருந்து..

கடந்த இருபத்தொன்பதாம் திகதி புலிகளின் குரல் வானொலியின் கருத்துப் பகிர்வு நிகழ்ச்சியிலிருந்து..

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231