பழைய Passwords

முற்குறிப்பு: இணையம் பாவிக்க தொடங்கிய ஆரம்ப காலங்களில் (முன்னமொரு காலம்) மின்னஞ்சல் முகவரிகளை அளவு கணக்கில்லாமல் பெறுவது வழக்கம். (ஓசியாக என்றபடியால் ஒவ்வொரு நாளும் ஒரு மின்னஞ்சல்).
நேற்று எனது பழைய முகவரிகளை நினைவுபடுத்தி ஒவ்வொன்றாக உள் நுழைந்து பார்த்தேன்… என்னமோ மூன்று வரியில் [...]

மூன்றாவது ஈழப்போரின் பத்தாண்டுகள்

சித்திரை பத்தொன்பது! மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்து 10 வருடங்களாகிறது.
1995 சித்திரை பத்தொன்பதாம் திகதி திருகோணமலைத் துறைமுகத்தில் கரும்புலித் தாக்குதல் மூலம் ரணசுறு, சூரயா என்ற இரண்டு கப்பல்கள் தகர்க்கப்படுவதோடு மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகிறது.
94 இன் இறுதியில் ஆட்சிக்கு வந்த சந்திரிகா இரண்டாம் கட்ட ஈழப்போரை நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் வரை எல்லாம் சரியாகத் தான் இருந்தது.
ஆனால் பேச்சுவார்த்தையின் நகர்வினூடே அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படத்தொடங்கியது.
யாழ்ப்பாணத்தில் வந்து இறங்கிய ஹெலிகளில் எந்த விதமான அதிகாரங்களுமற்ற [...]

ஒஸ்ரேலியாவில் சந்திரமுகி

முதல்நாள், முதல்க்காட்சி அலைமோதும் கூட்டம் இல்லை. ஆரவாரம் இல்லை.
இரவு ஏழு மணிக் காட்சி. ஏற்கனவே ரிக்கெற்றுக்களை பதிவு செய்து விட்டதனால்.. அவ்வப்போது ஆறுதலாக வந்து சேர்ந்த கூட்டம்..
இடிபட்டு தள்ளுப்பட்டு சட்டைகிழிந்து பேச்சு வாங்கி இவ்வாறான எந்தவிதமான அனுபவங்களும் இல்லாமல் சந்திரமுகி படம் இன்று பார்த்தேன்.
படம் ஏதோ பரவாயில்லைப்பா.. பாபாவை விட பரவாயில்ல.. இது தான் வந்திருந்த பெரும்பாலானோர் சொன்னது.
படம் ஆரம்பித்து ரஜினி தன் சப்பாத்துக்களை காட்டி வந்த போது முன்னிருந்து சிலர் மலர் தூவினார்கள். அட இங்கேயுமா?
வடிவேலு [...]

வருசப்பிறப்பு – ஒரு கலவைப் பதிவு

வருசப்பிறப்பு தமிழர்களுடையது இல்லை என சொல்லியாயிற்று. நல்லது. அது யாருக்கு வருடப்பிறப்பாக இருக்கிறதோ, எவரெல்லாம் (தமிழர்களேயாயினும்) அதனைத் தம் வருடப்பிறப்பாக கொள்கின்றனரோ அவர்களுக்கெல்லாம் எனது வாழ்த்துக்கள்.
சென்ற முறை இந்த வருடப்பிறப்பு நாள், நான் யாழ்ப்பாணத்தில் ஊரில் நின்றேன். சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களை ஊக்குவிக்கும் பரிசில் வழங்கும் நிகழ்வு ஒன்று, அன்று என் ஊரில் நிகழ்ந்தது. தவிர சில நிகழ்ச்சிகளும் நடந்தன. இறுதியில் நடந்தது இசை நிகழ்வு ஒன்று.
நீண்ட காலத்திற்கு பிறகு ஊரில் நான் மேடையேறினேன். ம். [...]

பாஞ்சாலியும் ஹெலியும்

ஊரில சிவராத்திரி மற்றது நவராத்திரி இந்த ரண்டுக்கும் விடிய விடிய நிகழ்ச்சிகள் நடக்கும். நாடகங்கள், பட்டிமன்றங்கள் எண்டு அந்த இரவு கழியும். தவிர மாவீரர் தினம் போன்ற நிகழ்வுகளும் இவ்வாறாக நடக்கும். 90 ஆண்டு மாவீரர் தினம் ஊர் முழுக்க வளைவுகள் வைத்து பெரிசா நடந்தது. கடைசி நாள் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
ஊரில நாலு திசைக்கும், ஆக்களை அனுப்பி விட்டு நிகழ்ச்சிகள் நடக்கும். ஏதாவது பிளேன் சத்தமோ, ஹெலிச்சத்தமோ கேட்டால் அவர் ஓடிவந்து சொல்லுவார். உடனை லைற் எல்லாத்தையும் [...]

முகங்கள்

‘விழுந்தாலும் உயிர்ப்போம்’ எனத் தொடங்கி ‘எமைக் கழுவேற்ற நீளுமோ பிறர் கை’ என முடித்தான்.
பின்னாலிருந்து விசில் சத்தம் மாறி மாறி கேட்டது. அது அவனது நண்பர்கள். ‘அவ்வப்போது அடியுங்கடா விசில்’ என சொல்லியிருந்ததை மறக்க வில்லை அவர்கள்.
‘இப்பொழுது சென்று தொகுப்பிரையில் வருவேன் என எச்சரிக்கிறேன்’ என சென்றமர்ந்தான். எல்லோரும் கை தட்டினார்கள். அதுவும் மூன்றாவது வரிசையிலிருந்த அவள் பலமாய்த் தட்டினாள்.
அவள் ஒவ்வொரு முறையும் தட்டுகிறாள் அவனையே பார்த்தபடி.
இப்பொழுதும் அவனையே பார்த்தபடி..
‘யாராக இருக்கும் என்னைத் தெரிந்த ஆளாக இருப்பாளோ’
‘நிகழ்ச்சி [...]

நான் படம் பார்த்த கதை

சொன்னதன் பிறகு இவன் என்ன சரியான சூனியமாய் இருப்பான் போல இருக்கெண்டு நினைக்க கூடாது. 97 ம் ஆண்டு வரைக்கும் தமிழ்ச்சினிமாவில புதுசா யாரார் நடிக்கினம் அவையின்ரை பேர் என்ன எண்டு எனக்கு ஒண்டும் வடிவா தெரியாது. நடிகர்கள் எண்டாலும் பரவாயில்லை. ரஜினியையும் விஜயகாந்தையும் புதுசா வந்தவையில பிரசாந்தையும் தெரியும். நடிகைகளைப் பொறுத்த வரை எனக்கு தெரிஞ்ச ஆக்கள் நதியாவும் அமலாவும் ராதாவும் தான். குஷ்வுவையும் தெரியும்.
அதுவும் 92 க்கும் 97 க்கும் இடையில ஆரார் புதுசா [...]

கேள்வி கேட்டல்! எனது உரிமை

கேள்வி கேட்டு வாழும் உரிமை!அங்கீகரித்தே ஆக வேண்டிய அதி முக்கிய உரிமை அது!ஈழப்பிரச்சனை பற்றி பேசும் போதும், எழுதும் போதும் அதிகம் அடி படுகின்ற உரிமையாக இது இருக்கிறது.
‘உனது கருத்தில் எனக்கு கிஞ்சித்தும் உடன் பாடு கிடையாது. ஆயினும் நீ உனது கருத்தினைச் சொல்ல உனக்கு இருக்கின்ற உரிமையை என் உயிரைக் கொடுத்தேனும் காப்பாற்றுவேன்.’
ஜனநாயகத்திற்கு சரியான அர்த்தம் கூறும் கருதுகோளாக மேற்கண்ட வாக்கியம் அமைந்திருக்கிறது. (அதனை நான் முதலில் படித்தது ஈபிடிபி யின் ஒரு பத்திரிகை அறிக்கையிலிருந்து [...]

கவித எழுத போறன்!

ஆர் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. நான் முடிவெடுத்திட்டன்.எல்லாரும் கவித எழுதுகினம். அதுவும் நாப்பது ஐம்பது பின்னூட்டங்கள் வேறை.
நல்லாருக்கு, எழும்பியாச்சோ, நித்திர கொள்ளேலையோ எண்டுதான் பின்னூட்டங்கள் வந்தாலும், எனக்கென்ன.. எண்ணிக்கை தானே முக்கியம்.
அதனாலை தான் சொல்லுறன் நான் கவித எழுதியே தீரப் போறன்.
உந்த வசந்தன் சும்மா Anti Poet Org எண்டொரு இயக்கமாம். அது கவித எழுதக்கூடாது எண்டுதாம் எண்டு பினாத்துறார். ஒரு பொதுத்தளத்தில மாற்றுக்கருத்துக்களை வைச்சு விவாதிக்காமல், அதைப்பத்தி கேள்வி கேட்க எனக்கிருக்கிற உரிமையை [...]

வெட்கம் – (கெட்ட) கதை

இது ஒரு சிறுகதை (அப்பிடியா!) கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் எழுதி தினக்குரலில் வெளியானது. சிறுகதையென்றால் திடுக்கிடும் எதிர்பாராத முடிவுடன் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தை மாற்றி அது தன் பாட்டில் இயல்பாய்ச் சென்று முடியலாம் என ஒரு திடுக்கிடும் முடிவை நான் எடுத்து எழுதிய கதை.இரண்டு வருடங்களுக்கு முன் நிறைவைத் தந்த கதை இப்பொழுது நின்று திரும்பிப் பார்த்தால் திருந்துவதற்கும் முன்னேறுவதற்கும் இடம் உண்டு என்கிறது.இருப்பினும்.. இங்கே இட்டு வைக்கிறேன்.. ஆகக் குறைந்தது ஒரு ஆவணப்படுத்தலுக்காகவேனும்.. சற்றே [...]

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • http://tinyurl.com/ylg4h62 திரிசாவா இது..?
  • விதாவ படம் முடிந்தபிறகு பக்கத்திலிருந்தவர் சொன்னது.. அமெரிக்ககாரன் அமெரிக்ககாரன்தான்.. சினிமாகாரன் சினிமாகாரன்தான் :)
  • ஆதவன் மார்ச் 2010 emagazine http://www.aathavanonline.com/?page_id=1220
  • எங்களை சகமாணவரும் சரி சில ஆசிரியரும் சரி IDP students என்று பிரிச்சு பேசிகினம்.. அது சரியான கவலையாயிருக்கிறது - ஒரு மாணவி - மணற்காடு

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231