எனக்கு உடன்பாடில்லாத எழுத்துக்களையும் கருத்துக்களையும் எதிர்கொள்ளும் போதெல்லாம் பெரும்பாலும் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை.
ஆயினும் அக்கருத்தின் தர்க்கவியல், அவ்வாறான ஒரு கருத்து தோன்றுவதற்கு காரணமாயிருந்த சிந்தனை இவற்றை ஆராய்வதுண்டு.
இவையே அக்கருத்துக்களின் சொந்தக் காரர்கள் மீது எனக்கு தனியான எந்த வெறுப்புணர்வும் தோன்றாமல் விடுவதற்குரிய காரணங்களாக இருக்கின்றன.
இதற்கப்பால் இன்னுமொருவகையான கருத்துக்களையும் எழுத்துக்களையும் நான் எதிர் கொள்வதுண்டு.
எழுதுகின்ற தங்களையும் சரியான மடையன்கள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டி அதை வாசிப்பவர்களையும் மடையர்களாக்கி எழுதுபவர்கள் மீது முழுதும் வெறுப்பே எஞ்சி நிற்கிறது.
தினக்குரல் பத்திரிகையில் [...]
Written on March 15, 2005 | Posted in
பத்திகள் |
5 Comments
நடந்த காலங்களில் வலியையும் இரவுகளில் கண்ணீரையும் தந்த சில சம்பவங்கள் பின்னர் காலக் கிடங்கில் ஆழ அமிழ்ந்து போய் விடுகின்றன. மீண்டும் எப்போதாவது சமயங்களில் ஞாபகிக்கும் போது வலி தந்த அதே சம்பவங்களே சிரிப்பையும் ஒரு வித சுய ஏளனத்தையும் தருகின்றன.
அதிகாலை 6 மணிக்கு அவள் தன் வீட்டிலிருந்து புறப்படுவாள்.
அதனைத் தொடர்ந்து அவளைத் தொடர்ந்து அவனும்!
எப்பொழுதுமே சந்திப்புக்கள் எதேச்சையாக அமைய வேண்டும் என்பதற்காக அவன் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வான்.
‘என்ன அடிக்கடி காலையிலை சந்திக்கிறம்.”
அவளுக்குத் தெரியாது!
வீதியின் வளைவுகளில் [...]
Written on March 13, 2005 | Posted in
பத்திகள் |
4 Comments
பொதுவாவே எனக்கு கொஞ்சம் மென்மையான பாட்டுக்கள் கூடப் பிடிக்கும். துள்ளல் பாட்டுக்களை விட!
போன கிழழை ஒரு பாட்டு ஒண்டு பாக்கவும் கேட்கவும் கிடைச்சது. அதிலை என்ன வித்தியாசம் எண்டால்.. அது ஒரு காதல் பாட்டுத்தான்.. ஆண் குரல் சிங்களத்திலையும் பெண் குரல் தமிழிலையும் இருக்கிறது தான்.
என்னவோ கேட்ட உடனை பிடிச்சிட்டுது எனக்கு. வீட்டிலை இப்ப அது தான் அடிக்கடி போற பாட்டு.
சினிமா பாட்டெண்டால் சொல்லிட்டு விட்டிடலாம். எப்பிடியும் நீங்களும் கேப்பியள். இது கொஞ்சம் வித்தியாசம் தானே.. அது [...]
Written on March 12, 2005 | Posted in
பத்திகள் |
4 Comments
ஏற்கனவே எனது பதிவொன்றில் என்னைக் கவர்ந்த இவ்வொளிப்படம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். சிங்கள ராணுவ ஆக்கிரமிப்பில் யாழ்ப்பாணத்தின் நிலையை துல்லியமாக இப்படம் உணர்த்துகிறது.
ராணுவ முட்கம்பி வேலிகள், சுருள் கம்பிப் பாதுகாப்பு என்பவற்றுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தின் குறியீடுகள் என கருதக்கூடிய யாழ் நூல் நிலையம் (இதுவே 81 இல் எரிக்கப்பட்டது) தந்தை செல்வா நினைவுத்தூபி மற்றும் துரையப்பா விளையாட்டரங்கம் என்பன தெரிகின்றன.
சுற்றி வர ராணுவ வேலி! நடுவில் யாழ்ப்பாணம் ஒரு திறந்த வெளிச் சிறைக்கூடமாக!
படப் பதிவு திரு
Written on March 12, 2005 | Posted in
பத்திகள் |
3 Comments
மெல்பேர்ணில் பகுதி நேரமாக வாரத்தில் இரண்டு நாட்கள் Fuel station ஒன்றில் வேலை செய்கிறேன். ஒரு பகலும் மற்றுமொரு இரவுமாக எனது கடமை நேரம் இருக்கும்.
பகல் வேளைகளில் வேலை செய்வதும் நேரம் போவதும் பெரிதாக தோற்றுவதில்லை.
ஆனால் இரவு இருக்கிறதே.. நேரம் அதன் அரைவாசி வேகத்தில் நகர்வது போல இருக்கும். 12 மணியாச்சா? 2 மணியாச்சா? 4 மணியாச்சா.. ம்.. இன்னும் 2 மணிநேரம் தான் என அடிக்கடி எண்ணிக் கொண்டே நேரம் கழியும்.
பொதுவாக அந்த வேலை [...]
Written on March 11, 2005 | Posted in
பத்திகள் |
5 Comments
தமிழ் மக்களின் மனிதாபிமான அவசர பிரச்சனைகளை தீர்க்கக் கூடியதான புலிகள் முன்வைத்துள்ள இடைக்கால நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி பகிரங்க பேச்சுக்களுக்கு அரசு தயார்!
இலங்கையில் சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்க இது சரியான தருணம் அல்ல. புதுடில்லியில் கதிர்காமர் தெரிவிப்பு
இடைக்கால நிர்வாக சபை குறித்துப் பேசி அதன் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முற்பட்டால் உடனடியாக அரசிலிருந்து விலகுவோம் ஜே வி பி யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச எச்சரிக்கை.
சமஷ்டித் தீர்வு மூலம் இனப்பிரச்சனையை தீர்ப்பேன். சந்திரிகா சபதம்.
மேற்குறித்த [...]
Written on March 9, 2005 | Posted in
பத்திகள் |
9 Comments
பாக்கு நீரிணை கடற்பரப்பு, மன்னார் வளைகுடா மற்றும் ஹவாய்த் தீவுகளில் மட்டுமே வாழ்கின்ற அருகி வருகின்ற ஒரு உயிரினம் இக் கடற்பசு. ஈழக் கடலின் தனித்துவமான பெரிய உயிரினங்களில் ஒன்றான இது Dugong எனப்படுகிறது.
தாவர உண்ணி என்பதனாலேயே அதிகம் பவளப் பாறைகள் மற்றும் தாவரங்கள் நிறைந்த ஈழத்தின் மேற்குக் கடல் பகுதியில் இவ்வுயிரினம் வாழ்கிறது.
ஆகக் கூடியதாக 3 மீற்றர் நீளமும் 400 கிலோ நிறையும் உள்ள கடற்பசு கிட்டத் தட்ட தரை விலங்கான யானையின் பருமனுக்கு சமனானது.
இரண்டு [...]
Written on March 9, 2005 | Posted in
பத்திகள் |
Leave a comment
இந்திய ராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் யாழ்ப்பாணத்திலை ஒரு குறிப்பிட்ட காலத்தில உணவுத் தட்டுப்பாடு இருந்தது. முருங்கைக்காய் கறி, இலைக் கஞ்சி இப்படி ஏதாவது ஒன்று கண்டிப்பாக எல்லோரது சமையலிலும் இருக்கும்.
பாணுக்காக அதிகாலையிலேயே எழுந்து ஓட வேண்டியிருக்கும்!ஆட்டுக்கால் விசுக்கோத்து (பிஸ்கற் என்பதன் சரியான தமிழ் வடிவம் என்ன என்று யாருக்காவது தெரியுமா?) என்ற ஒரு வகைப் பாண் அப்ப ரொம்ப பிரபல்யம். கொஞ்சம் பிந்திப் போனாலும் பாண் முடிந்து அந்த ஆட்டுக் கால் விசுக்கோத்துத் தான் கிடைக்கும்.
எனது பெரியப்பா [...]
Written on March 8, 2005 | Posted in
பத்திகள் |
12 Comments
இந்த மரத்துக்கு ஒரு விசேடம் இருக்கிறது. நெடுந்தீவில் இருக்கும் பெருக்க மரம் எனப்படும் இம் மரம் தான் யாழ் மாவட்டத்திலேயே மிகப் பெரிய சுற்றளவான மரம். அதே நேரம் தென்னாசியாவின் இரண்டாவது பெரிய சுற்றளவான மரமும் இதுதான்.
தென்னாசியாவின் மிகப்பெரிய சுற்றளவு உள்ள மரம் மன்னார் பள்ளி முனையில் உள்ளது.பட உதவி தி. தவபாலன்
Written on March 8, 2005 | Posted in
பத்திகள் |
4 Comments
என்னான்றே நீ என்னான்றேஎன்னான்றே நீ என்னான்றே
வன்னிக்காட்டு வரிச்ச புலி அண்ணேன்றேன்எங்க அண்ணேன்றேன் – எதிரிக்குதண்ணி காட்டும் தலைவன் எங்க அண்ணேன்றேன்எங்க அண்ணேன்றேன்
ஏ… நெல்லியடி நெத்தியடிமில்லரடி சொல்லியடிஅண்ணேன்றேன் வெற்றி மன்னேன்றேன்
ஆனையிறவு தெரியுமாஅடிச்ச அடி புரியுமாஎன்னான்றே நீ என்னான்றே
அன்பில தான் பஞ்சடாஅசராத நெஞ்சடாஅண்ணேன்றேன் எங்க அண்ணேன்றேன்……………………
இது நான் புதுசாக கேட்ட ஒரு புலிகளின் இயக்கப் பாட்டு! அறிவுமதி எழுத பாடியிருப்பவர் தமிழக பின்னணி பாடகி மாலதி.
விடுதலை கானங்களில் இப்பாடல் ரகம் ஒரு புது மாதிரியாக எனக்கு தோன்றுகிறது.
சிலர் தங்களை இப்பாடல் [...]
Written on March 6, 2005 | Posted in
பத்திகள் |
10 Comments