யாழ்ப்பாணத்தில் நவாலி வட்டுக்கோட்டை இணையுமிடத்தில் களையோடை அம்மன் கோவில் என்கிற ஒரு சின்ன அம்மன் கோவில் இருக்கிறது. எனது ஊரிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வேளைகளில் அந்த அம்மன் கோவிலைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் எனது கண் அங்கே அந்தக் கோவில் வளாகத்தில் நின்ற ஒரு மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கின்ற ஒரு சிறிய ரக விமானத்தை நோக்கும்.
ஆம். அது பறப்பதற்கு முயற்சி செய்து பலன் தராது விட்ட ஒரு சிறிய விமானம்.
85, 86 காலப் பகுதிகளிலேயே புலிகள் [...]
Written on March 31, 2005 | Posted in
பத்திகள் |
6 Comments
படிப்பு முடிஞ்சோ அல்லது வேலை முடிஞ்சோ வரேக்கை Tram எடுத்துத் தான் வாறனான். Tram நிறுத்தத்திலை ஒரு ஐஞ்சு பத்து நிமிசம் நிக்க வேண்டியிருக்கும். அந்த நிறுத்தத்துக்கு பக்கத்திலை ஒரு வட இந்திய சாப்பாட்டுக் கடை இருக்கு.
இங்கை என்ரை இடத்திலை இலங்கைத் தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகள் குறைவு. இல்லையெண்டே சொல்லலாம். வியட்னாம், சீன கடைகள் தான் கூட. அதுவும் பஸ்ஸிலோ ரெயினிலோ ஏறினால் நான் ஒஸ்ரேலியால இருக்கிறனோ இல்லாட்டி சீனாவில இருக்கிறனோ எண்டு சந்தேகமா இருக்கும்.
எனக்கு கொஞ்சம் [...]
Written on March 31, 2005 | Posted in
பத்திகள் |
8 Comments
என்னை உங்கள் எல்லாருக்கும் காட்டுறதுக்காக ஒரு படம் ஒண்டு போட்டன் தானே! அதிலை ஈழநாதன் நல்லூர் கிட்டு பூங்காவில பாத்த மாதிரி கிடக்கு எண்டு ஒரு பின்னூட்டம் விட அதை வாசிக்க எனக்கு மனசெல்லாம் பின்னுக்குப் போட்டுது.
95 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில வலிகாமம் மேற்கு பக்கமா இலங்கைத் தேசிய ராணுவம் சண்டை பிடிச்சுக்கொண்டு முன்னேறி வந்தது. அதுக்கு முன்னேறிப் பாய்ச்சல் எண்டு அதுக்கு பேர் வைச்சிருந்தவை. (முன்னேறிப் பாய்வதென்ன அம்மா.. நீ பின்னாலே ஓடுவதேன் சும்மா எண்ட [...]
Written on March 27, 2005 | Posted in
பத்திகள் |
11 Comments
ஒரு மூன்றாவது கண் பார்வை!‘குறு’ குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாலும் நேரத்திட்டமிடலில் ரொம்பவே சொதப்புகின்ற சயந்தனாலும் இன்று ஒஸ்ரேலியாவில் இடம் பெற்ற வலைப்பதிவர் சந்திப்பு குறித்து சரியாகவோ, முறையாகவோ அறிவிக்க இயலவில்லை.
இன்று வெள்ளிக்கிழமையான விடுமுறை நாளில் இந்த சந்திப்பு நடைபெற்றது. குறுகிய கால இடைவெளியில் ஒழுங்கு செய்யப் பட்டிருப்பினும் ஒஸ்ரேலியாவில் இருந்து வலைப்பதிகிற இரண்டு மூன்று பேரைத் தவிர மற்ற அனைவரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டார்கள்.
சந்திப்பு இதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பிரத்தியேக இடத்தில் நடைபெற்றது. [...]
Written on March 25, 2005 | Posted in
பத்திகள் |
14 Comments
ஏன் கல்வி ஒரு மாணவனுக்கு கடுமையாக இருக்கிறது.. ஏன் பலர் பரீட்சைகளில் தோற்கிறார்கள் என்கிற ஒரு ஆய்வு எனக்கு மெயிலில் வந்தது. உங்களுக்கும் சில சமயம் வந்திருக்கும். வராதவர்களுக்காக அதை இங்கை தாறன்!
முதலில ஒரு வருசத்தில இருக்கிற மொத்த நாட்களில 52 ஞாயிற்றுக் கிழமைகள் வருது. ஒரு மனிசனுக்கு ஓய்வு கட்டாயம் முக்கியம் எண்ட படியாலை அந்த 52 நாளும் படிக்க முடியாது. ஆக மிச்சம் 313 நாள் தான் படிக்க இருக்கு.
கோடை விடுமுறை எண்டு [...]
Written on March 25, 2005 | Posted in
பத்திகள் |
1 Comment
எனது படத்தை வலைப்பதிவில் வெளியிட வேணும் என்று கோரிய அநேகம் பேரின் வேண்டுகோளை மதித்து (அடி ஆத்தி! அநேகம் பேரா..? அது யாரு? சரி! ஆகக்குறைந்தது எனது விருப்பத்திற்கு ஏற்ப) இந்தப் பதிவு! இதில் ஒரு மார்க்கமாக நின்று கொண்டிருப்பது நான் தான்!
எப்பிடி இந்தப் படத்தை எடுத்தனியள் எண்டு யாரேனும் கேட்டால்..
அப்பிடி யார் எடுத்தது! அதுவா வந்திச்சு!!!
இந்த படத்துக்கு பொருத்தமான கவிதை எழுதுறாக்களுக்கு …. இந்தப் படத்தை Save picture as பண்ணி எடுத்துக்கொள்ளுற உரிமையை [...]
Written on March 23, 2005 | Posted in
பத்திகள் |
16 Comments
‘எங்க சக்திக்கு முன்னால உங்க சக்தி ஜுஜுப்பி!’
‘அணையிறதுக்கு நான் ஒண்ணும் தீக்குச்சி இல்லை! சூரியன்’
‘நான் சேர்த்த கூட்டம் அன்பால தானாச் சேர்ந்த கூட்டம்’
‘அசந்தா அடிக்கிறது உங்க பாணி அசராமல் அடிக்கிறது என் பாணி’
இவையெல்லாம் தமிழ்ச் சினிமாக்களின் பஞ்ச் வசனங்களாயினும் எனக்கு அதிகம் பரீச்சயம் ஆனது கொழும்பில இருக்கிற தனியார் வானொலிகள் மூலம் தான். உப்பிடி மாறி மாறி கோழிச்சண்டை போடுறதை ரசிச்சுக் கேட்கிறதே நல்ல ஒரு பொழுது போக்கு.
தொன்னூற்றெட்டின் துவக்கமாயிருக்க வேணும். அப்ப தான் ஈசல் கணக்கில [...]
Written on March 22, 2005 | Posted in
பத்திகள் |
5 Comments
ஈழத்தமிழ் குறித்து நமது சகோதரர்களின் மெச்சுகை அவ்வப்போது வலைப்பதிவுகளில் வரும். ஆஹா அதுவெல்லோ தமிழ் என்கிற மாதிரியான பாராட்டுக்கள் ஒருவித பெருமையைத் தருவது உண்மைதான். ஈழத்தமிழ் என்கிற அடைமொழியில் அவர்கள் குறிப்பிடுவது யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கு மொழியைத்தான் என நான் உணர்கிறேன்.
தமிழக சினிமாக்களிலும் இலங்கைத் தமிழ் என யாழ்ப்பாணத்து பேச்சு வட்டார மொழி தான் பயன்படுகிறது. அதாவது யாழ்ப்பாண பேச்சு வட்டார மொழியை நெருங்க முயற்சிக்கிறார்கள். ஆனால் வெற்றி பெறுகிறார்கள் இல்லை.
தமிழ்ச் சினிமாக்கள் பார்த்து [...]
Written on March 19, 2005 | Posted in
பத்திகள் |
21 Comments
கடந்த மாதத்தின் ஒரு வார இறுதியில் ஒஸ்ரேலிய பாராளுமன்றுக்கு சென்று பார்வையிட கூடிய வாய்ப்புக் கிடைத்தது. சிட்னியில் இருந்து கன்பெரா நோக்கிய 3 மணி நேரப் பயணம்! அதுவே மெல்பேணிலிருந்து 7 மணிநேரமாகையால் முதலில் சிட்னிக்கு விமானம் மூலம் சென்று அங்கிருக்கின்ற இரண்டு நண்பர்களோடு கன்பெரா நோக்கி புறப்பட்டேன்.
கன்பெராவின் மிகச் சரியான வட்டமானதும் நீள் கோடுகளுமான வீதிகளுக்கால் சென்று பாராளுமன்றை அடைந்தோம். கன்பெராவின் வரைபடத்தினை நோக்கும் போது மிகத் தெளிவாகவே அது செயற்கையாக உருவாக்கப்பட்ட நகரம் என்பது [...]
Written on March 19, 2005 | Posted in
பத்திகள் |
2 Comments
Jungfraujoch!
தமிழில் இந்த ஜேர்மன் வார்த்தையை எப்படி சரியாக உச்சரிப்பது என்று தெரியவில்லை. எனினும் கிட்டத்தட்ட அது ஜுன்ப்றோ என்னும் வார்த்தைக்கு நெருக்கமுள்ளதாக இருக்கலாம்.
இது போலவே Bahnhof என்னும் தொடரூந்து நிலையத்தினை குறிக்கும் ஜேர்மன் வார்த்தை, வாணப்பு என, யாரோ ஒரு அப்புவின் பெயரைச் சொல்வது போலவும் Sankt Gallen என்கிற இடத்தின் பெயர் செங்காலன் (யாரோ கரிகாலனின் தம்பி என்பது போல) என்றும் தான் எனக்கு அறிமுகமான சிலதிற் சிலவான ஜேர்மன் வார்த்தைகள் அறிமுகமாயின.
மீண்டும் jungfraujoch
சுவிற்செர்லான்டில் [...]
Written on March 17, 2005 | Posted in
பத்திகள் |
7 Comments