மண்டபம் ஏதிலிகள் தங்ககத்திலிருந்து திருச்சிக்கு சென்று தங்கியிருந்த காலப் பகுதி அது!
என்னை அங்குள்ள ஏதாவது பள்ளியில் சேர்த்து விடுவதற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. யாரோ ஒருவர் மூலமாக அறிமுகமான சட்டத்தரணி ஒருவர் தான் அதற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
பெரும்பாலும் எல்லா பள்ளிகளிலும் அனுமதி மறுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஒரு பள்ளிக்கு இருக்கின்ற வரைமுறைகள் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு அமையவே அனுமதிகள் தரப்படவில்லை என்றே நான் நம்புகின்றேன்.
இருப்பினும் நான் படகில் வந்தவன் என்ற [...]
Written on February 20, 2005 | Posted in
பத்திகள் |
3 Comments
இண்டைக்கு ஒரு யானைக் கதை சொல்லப்போறன்!
அப்ப நாங்கள் தேவிபுரத்திலை இருந்தனாங்கள். தேவிபுரம் வன்னியில புதுக்குடியிருப்புக்கும் உடையார் கட்டுக்கும் இடையிலை இருக்கு. உடையார் கட்டை நானும் நண்பர்களும் UK எண்டுதான் சொல்லுவம்.
ஒரு சித்திரை மாசம் நடுச்சாமம் தான் நாங்கள் தேவிபுரத்துக்கு வந்தம். அது ஒரு தென்னந்தோட்டம். அடுத்தடுத்து ஒவ்வொரு வித்தியாசமான பெயருகளிலை நிறைய தோட்டங்கள். ஆச்சி தோட்டம் G.S காணி வெள்ளைக் கேற் (Gate) சிவத்தக் கேற் பத்தேக்கர் காணி எண்டு உப்பிடி நிறைய வித்தியாசமான பெயர்கள்.
நாங்கள் வந்திறங்கின [...]
Written on February 18, 2005 | Posted in
பத்திகள் |
4 Comments
வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு.. இந்த பாடல் குறித்து எனது பழைய பதிவொன்றிலும் குறித்திருந்தேன். என்ன காரணமோ தெரியவில்லை. இந்த பாடல் வரிகள் அத்தனையும் என்னை கவர்ந்திருக்கின்றன.. இந்த பாடலின் MP3 வடிவத்திற்கான ஓர் இணைப்பினை கொடுத்திருக்கிறேன். தரவிறக்கி கேட்டு பாருங்களேன். தரவிறக்கநன்றி www.thaiman.ch
Written on February 15, 2005 | Posted in
பத்திகள் |
3 Comments
ஹி ஹி ஹி அப்பிடியொண்டும் பெரிசா இல்லை இணைய வல்லனர்களே.. புது வீட்டுக்கு வந்தும் ஒழுங்காக கடிதங்கள் வந்து சேராது போல இருக்கிறது. இன்னமும் தீர்க்க வேண்டிய சில பிரச்சனைகள் கூடவே வந்து கொண்டிருக்கின்றன.
1) தமிழில் பின்னூட்டம்… பார்க்கும் பதிவில் எல்லாம் அவரவர் ஹாயாக தமிங்கிலிஷில் அடியுங்கள் தானாக தமிழாகும் பாமினியில் அடியுங்கள் தானாக யுனிகோட் ஆகும் என்றெல்லாம் போட்டிருக்கிறதை பார்க்க இந்தச் சின்னத்தம்பியின் மனது கனத்துப் போகிறது!!! கொசப்பேட்டை குப்பு விக்கி இப்பிடி எல்லா இடத்தில [...]
Written on February 14, 2005 | Posted in
பத்திகள் |
3 Comments
ஒரு சில கால இடைவெளியின் பின்னர் மீண்டும் வந்துவிட்டேன். யாழ் தந்த வீட்டில் போட்டது போட்டபடி இருக்க கொஞ்சம் ஜிலு ஜிலுப்பாய் ஒரு வீடு கட்டி வந்தாச்சு. ( இங்கே மெல்பேர்ணில் வசிக்கும் வீட்டினையும் மாற்றியாச்சு). இனித் தொடர்ந்து எழுதுவதற்கு முன்பாக ஒரு படம்! புது வீட்டில் படங்கள் எல்லாம் சரியாக வருகிறதா என பரிசோதிக்க இது.
ஒஸ்ரேலிய பழங்குடியினர் சிட்னியில் எடுக்கப்பட்டது.
பிற்குறிப்பு: தமிழில் பின்னூட்டம் தொடர்பாக எல்லா இடத்திலும் சொன்னது மாதிரி முயற்சித்து விட்டேன். ஒரு [...]
Written on February 14, 2005 | Posted in
பத்திகள் |
1 Comment
அரசாங்கத்தில் இருக்கும் சில சக்திகள் வடக்கு கிழக்கு பிரச்சனைக்கு தீர்வு காணும் தனது முயற்சிகளுக்கு தடங்கலாக இருந்து வருவதாக இலங்கை ஜனாதிபதி அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்ததாக சற்று முன்னர் சக்தி வானொலி சொல்லியது.
அது இப்பொழுதுதான் அவருக்கு தெரிந்ததா என்ற கேள்வியும் இப்போதாவது தெரிந்ததே என்ற எண்ணமும் ஒருங்கே உண்டாகின்றன.சக்தி சொல்லியதை வைத்துப் பார்த்தால் நமது அதிபர் சற்றுக் கடுமையாகத் தான் கருத்து வெளியிட்டிருக்கிறார் போல தெரிகிறது.
அரசாங்கத்தில் இருக்கும் சில சக்திகள் வடக்கு கிழக்கு பிரச்சனைக்கு [...]
Written on February 13, 2005 | Posted in
பத்திகள் |
2 Comments