மே 31 – எரியும் நினைவுகள்!

1981 மே 31 நடு இரவு ஓர் இனத்துக்கெதிரான அழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக யாழ்ப்பாண நூல் நிலையம் எரியூட்டப்பட்டது. தமிழர்களின் மனங்களில் ஆறாத ரணமாயுள்ள அந் நூலக எரிப்புக் குறித்து நண்பர் சோமிதரன் எரியும் நினைவுகள் என்னும் ஆவணப் படமொன்றைத் தயாரித்துள்ளார். படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் யாழ் நூலகம் குறித்தும் எரியும் நினைவுகள் ஆவணப்படம் குறித்தும் சோமிதரன் வழங்கிய கருத்துக்களை இங்கு கேட்கலாம்.

இந்திய அரசியலில் ஈழம் பற்றியொரு உரையாடல்

ஈழச் சூழல் பற்றி ஈழத்தவரல்லாத ஒரு தமிழருடன் விரிவாகப் பேசியதில்லை நான். (மெல்பேணில் இருந்த ஆரம்ப காலத்தில் அடுத்த அறையில் அகப்பட்ட கிழக்குத் தீமோர் நண்பர் ஒருவரோடு சற்று அதிகமாகவே கதைத்திருந்த போதும் இப்போது நினைத்துப் பார்த்தால் நான் தனியே விடுதலைப் புலிகளின் வெற்றிகளை மட்டும் அவருக்குப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறேனே தவிர ஈழப்போரின் இன்னொரு அங்கமாகிய மக்கள் பற்றி அவருக்கு எதையும் எடுத்துச் சொல்லவில்லை.(: )
வலைப்பதிவுலகில் அறிமுகமான வரவனையானுடன், அண்மையில் இந்திய சூழலில் ஈழப் பிரச்சனை [...]

கருத்து உருவாக்கமும் ஈழ ஊடகங்களும் – ஒலிப்பத்தி

ஈழத் தமிழ்ச் சூழலில் ஊடகங்கள், சர்வதேச மக்கள் மத்தியிலும், சர்வதேசத்தின் முடிவெடுக்கும் அதிகார மையங்கள் மத்தியிலும், எவ்வளவு தூரம் கருத்துக்களை உருவாக்கும் ஊடகங்களாக செயற்படுகின்றன என்பது குறித்த ஒலிப்பத்தி இது.
புலம் பெயர்ந்த சூழலில், ஈழ நிலை குறித்து, வெளி மக்களுக்கு மிகச் சிறப்பாகக் கொண்டு சேர்க்கக் கூடிய வாய்ப்புக்களும், வசதிகளும் இருந்த போதும், அது பற்றி கிஞ்சித்தும் சிந்தியாது இணையம், பத்திரிகை, வானொலி, தொலைக் காட்சியென சகல ஊடகப் பரப்பிலும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் [...]

யாழ்ப்பாணம், ஒரு படத் தொகுப்பு

2005 நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் என்னால் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு இது. ஏற்கனவே சில இந்த வலைப்பதிவில் வந்திருந்தாலும் இத் தொகுப்பிலும் மீளவும் இடம் பெற்றிருக்கின்றன. வெளிச்சப் பெட்டி (Light Box)நுட்பத்தில் அமைந்திருக்கும் இத்தொகுப்பினை பார்வையிட ஒரு படத்தின் மீது அழுத்திய பின்னர் தோன்றும் பெரிதான படத்தின் வலது இடது பக்கங்களில் மெளஸை நகர்த்துவதால் தோன்றும் Next,Prev என்பவற்றின் மீது அழுத்தி அடுத்த படத்திற்கோ அல்லது அதற்கு முந்தைய படத்திற்கோ செல்லலாம். தனித் தனியாகவும் பார்க்கலாம். [...]

தமிழகத்தில் ஈழ அகதிகள்

S.A டேவிட் ஐயா, 17 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் வசிக்கும், ஈழத்தினைச் சேர்ந்த ஒரு கல்வியியலாளன். தன்னை ஒரு அகதி எனவே இப்போதும் விளித்துக்கொள்ளும் டேவிட் ஐயா எழுதிய Tamil Eelam Freedom Struggle (An inside Story) நூலினை அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. Periyar Era என்னும் சஞ்சிகையில் அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவரைப் பற்றி ஆனந்த விகடன் இதழ் ஒன்றில் வாசித்த நினைவிருந்த போதும், இந்த நூலின் ஊடாக [...]

இலங்கை வானொலியில் Comedy Time

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தன் தமிழ் ஊடாக இலங்கையின் தமிழர்கள் பற்றிய, அவர்கள் பேசுகின்ற மொழி பற்றிய நன்மதிப்பை அண்டை அயல் நாடுகளில் ஏற்படுத்தித் தந்தது என்பது வரை மகிழ்ச்சியாயிருக்கிறது.
சந்தோசம்.
எமக்கெல்லாம் அதன் தமிழ்ச்சேவை ஒலிபரப்புக்களை கேட்கின்ற வாய்ப்பு கிடைக்க வில்லை. ஆனாலும் அதன் வர்த்தக சேவை ஒலிபரப்பு எம்மைக் கடந்து தான் தமிழகம் போகும். தமிழகத்தின் பல ஊர்களின் பெயர்கள் எனக்கு அறிமுகமானதே வர்த்தக சேவை ஒலிபரப்பிலிருந்து தான்.
யாழ்ப்பாணத்திலிருந்த கடைசி காலம் வரை சினிமா பாடல்களுக்கு வர்த்தக [...]

புதுசு கண்ணா புதுசு

புது புளொக்கருக்கு மாறிய பின்னரும் நான் கிளாசிக் வகை வார்ப்புருவையே பயன்படுத்துவதால் புளொக்கரின் புதிய வசதிகளைப் பயன்படுத்த முடியாது இருந்தது. குறிப்பாக லேபிள் இடும் வசதி..
அதற்காக சும்மா இருந்து விட முடியுமா..? இணையத்தில் விழுந்து மூழ்கி புரண்டு எழுந்ததில் கிடைத்த அறிவுத் துணுக்குக்களை முன்வைத்து எனது பதிவிலும் லேபிள்களைக் கொண்டு வந்திருக்கிறேன். அதற்காக ஒரு வெறும் பதிவினை வெளியிட வேண்டிய கட்டாயம். இதற்கு முன்னைய பதிவு அதற்காகத் தான்.லேபிள்களைச் சுட்டுவதன் மூலம் திரட்டப்படும் பதிவுகள் இந்தப் பிரிவுகள் [...]

பிரிவுகள்

d2bWriteCat();

தலைப்பெதுவும் கிடையாது

பள்ளியின் பின்புறமாக எல்லோருடைய சைக்கிள்களும் நிறுத்தப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் எதேச்சையாக இரண்டொரு தடவை அவளதும் அவனதும் சைக்கிள்கள் அருகருகே நிறுத்தப்பட்டிருந்தன. அப்பொழுது தான் அவள் அறிமுகமானாள்.
வித்தியாசமாக தெரிந்தாள்.
இப்பொழுதெல்லாம் வேண்டுமென்றே அவனது சைக்கிள் அவளினது சைக்கிளின் அருகே நிறுத்தப்படுகிறது.
இயல்பாகவே விழிகள் அவளை தேடத்தொடங்குகின்றன.
தினமும் பார்த்து விடத் துடித்தான்.
மற்றவர்களிடத்தினின்று தன்னை வித்தியாசப்படுத்த, தனித்துவமாய் திகழ திட்டங்கள் தீட்ட ஆரம்பித்தான்.
ரியூசனிலும் அவள் இணைந்து கொண்டாள்.
பின்தொடர்தல்கள் தொடர்கின்றன.
மனசுக்குள் பூப்பூக்கத்தொடங்குகின்றது.
அவள் எப்போதும் அவனையே பார்ப்பதாய் எண்ணங்கள்.
நண்பர்கள் அப்படித்தான் சொன்னார்கள்.
ஒரு சில வேளைகளில் அதுவே உண்மையாயும் இருந்தது.
காதலிக்க [...]

படங்களில் நிற்பது நான் தான்

இந்தப் படங்களை எனது வலைப்பதிவில் அங்கங்கு எங்காவது பார்த்திருக்கலாம் நீங்கள். டிஜிற்றல் கமெரா கிடைத்த ஆரம்ப நாட்களில் ஒஸ்ரேலியாவில் அருகிருந்த வீட்டுப் பொடியன் செந்தூரனை சிப்பிலியாட்டாத குறையாக அப்படியெடு இப்பிடியெடு அந்தா எடு இந்தா எடு என்று ஆக்கினைப் படுத்தி எடுத்த ஒரு சில படங்களில் இரண்டு படங்கள்..தோளுக்குப் பின்னிருந்து சூரியன் ஒளிர வேண்டுமென நினைத்து எடுத்தது. சற்றுத் தவறி விட்டது. நான் இந்தப் படத்தில் மிக அழகாக இருப்பதாக அப்போது யாரோ சொன்னார்கள்.Titanic பாதிப்பில் எடுத்தது. [...]

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • Could not connect to Twitter

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231