காசிக்குப் போன பதில்கள் – கேள்விகளுடன்

தமிழ்மணம் ஐந்தாவது ஆண்டு நிறைவையொட்டி அதன் நிறுவனர் காசி இந்தவாரம் நட்சத்திரமாகத்திகழ்கிறார். நட்சத்திரப்பதிவுக்கான தேவையாக அவர் சிலருக்கு ஐந்து கேள்விகளை அனுப்பிப் பதில்களைக் கோரியிருந்தார். எனக்குக் கிடைத்த கேள்விக்கொத்திற்கான பதில்களை அனுப்பியிருந்தேன். தற்போது திட்டம் மாற்றப்பட்டு அவரவர் தங்கள் தங்கள் தளங்களிலேயே அவற்றை வெளியிடச்சொல்லி ஓலை வந்திருக்கிறது. ஜிமெயிலின் அடி ஆழங்களில் தேடிக்கொண்டிருந்த போது அவரிடமிருந்து வந்த ஓலை கொண்டுபோன பதில்களையும் கொண்டுவந்தது. இனி கேள்விகள் பதில்கள்..
1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று
எண்ணுகிறீர்களா? [...]

முன்பொரு காலம்

(4 வருடங்களுக்கு முன்னர் எழுதிய பதிவின் மீள் இடுகை)
‘உவரோடை எதுக்கு அடிக்கடி தனகுறாய்’ எண்டு அம்மம்மா கேட்டா.
‘தனகேல்லையம்மம்மா, அவர் சொல்லுறதுகளுக்கு பின்னூட்டம் குடுக்கிறன் என்றன் நான்.
அம்மம்மாவுக்கு பின்னூட்டம் எண்டால் என்னெண்டு விளங்கேல்லைப் போலை. ‘என்ன விண்ணானக் கதை கதைச்சுக் கொண்டிருக்கிறாய் எண்டா அவ. எண்டாலும் நான் அவரோடை தனகுப்படுறது அவவுக்கு பிடிக்கவில்லை.
ஆனா உண்மையா நான் அவரோடை தனகுப்படேல்லை. அவருக்கும் எனக்கும் சாதாரண சம்பாசனைதான் நடந்திச்சு. எண்டாலும் அவர் ஒண்டு சொல்லுறதும் அதுக்கு நான் நக்கலா அல்லது கொஞ்சம் [...]

ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்

“சிங்கள தன்னவத? ´´ (சிங்களம் தெரியுமா) என்றார் கண்ணாடித் தடுப்பிற்கு அப்பால் அமர்ந்திருந்த மீசையற்ற அதிகாரி. இல்லையென்று தலையாட்டினான் சீலன். “தன்னாய்´´ (தெரியாது) என சிங்களத்திலேயே அவனால் பதிலளித்திருக்க முடியும். கொழும்பில் தங்கியிருந்த கடந்த இரண்டு வருட காலத்தில் எக்காய், தெக்காய், துணாய் எனச் சில எண்களும் மேக்க, பைனவ, கருணாகர எனச் சில பயணச்சொற்களுமாக அவன் அறிந்து வைத்திருந்தான்.
சென்ற முறை கூட இதே பாஸ்போட் ஒபிஸில் (Office, ஆபிஸ்) தெரிந்த சில சிங்களச் சொற்களை வைத்துத்தான் [...]

இந்தியா,பிணந் தின்னி நாடென பிள்ளைக்கு சொல்லி வளர்ப்பதைத் தவிர

கடந்த ஏப்ரல் திங்கட்கிழமை , 20ம் திகதி. அதிகாலை. வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரமளவில் மக்கள் இரவோடிரவாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புகுவதற்காக சிங்கள ராணுவ முன்னரண்களை அணுகியிருந்தனர். காலைக்குப் பிறகு அவர்களை உள்ளெடுப்பதாகச் சொல்லியிருந்த இராணுவம் விடியல் நேரத்தில் மீளவும் அவர்களை பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் சென்று விடுமாறு திரத்தியது. அல்லோலகல்லோலப்பட்ட மக்கள் மீளவும் திரும்ப அவர்களுக்கு பின்னாலேயே கனகர ஆயுதங்களோடு இராணுவம் முன்னேறியது.
ராணுவம் புலிகளை எதிர்கொள்ளவும் தொடங்கியது சண்டை. இடையில் ஆயிரக்கணக்கான மக்கள் [...]

ராஜராஜ சோழனும் எழுத்தாளர் பாமரனும்..

ஐரோப்பாவில் (மற்றும் ஒஸ்ரேலியாவில்) ஒளிபரப்பாகும் நிகழச்சியொன்றை பாமரன் தொகுத்து வழங்குகிறார். ஏதோ ஒரு வகையில் பிரபல்யமானவர்களை அழைத்து அவர் காணும் செவ்வி சுவாரசியமாக இருக்கும். ( ஆரம்பத்தில் அந்த நிகழ்ச்சி எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என்றே தெரியாமல் பாமரன் இருந்தார் என காற்று வாக்கில் ஒரு செய்தி. உண்மையா செல்லா சார் ?)
சில பல காலங்களிற்கு முன்னால் எழுத்தாளர் சாரு நிவேதாவை அழைத்து அவர் உரையாடிய போதான சில சுவாரசிய சந்தர்ப்பங்களைச் சொல்கிறேன்.
ஈழத்து எழுத்தாளர்கள் [...]

பட்டாம் பூச்சியும் பன்னிரு வருட சிறையும்

2002 இன் பெப்ரவரியில் ஒரு நாள்!தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருக்கின்றேன். வவுனியா ஓமந்தைப் பிரதேசத்தில் நிகழும் இலங்கை இராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்ற நிகழ்வொன்று நேரடியாக ஒளிபரப்பாகிறது. இலங்கை அரச படைகளால் ஆங்காங்கே கைது செய்யப்பட்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் அங்கு வைத்து புலிகளிடம் கையளிக்கப்பட, புலிகள் தம் வசமிருந்த இலங்கை அரச படையினரை பதிலுக்கு விடுதலை செய்தார்கள்.
துளிர் விட்டிருந்த சமாதான நம்பிக்கைகளின் பொருட்டு நல்லெண்ண அடிப்படையில் இருதரப்பும் இவ்வாறான ஒரு [...]

வங்காள மொழியில் என் நட்சத்திரப் பதிவொன்று

கடந்த நட்சத்திர வாரப்பதிவுகளில் நான் எழுதியிருந்த யுத்தமற்ற வாழ்வு எவ்வளவு அழகானது என்ற பதிவினை மதி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து globalvoicesonline.org இணையத்தில் இட்டிருந்தார். இந்த இணைப்பில் கிளிக்கவும்..
அவ் ஆங்கிலப் பதிவிலிருந்து rezwan என்பரால் அது வங்காள மொழியில் மொழி பெயர்க்கப் பட்டு இவ் விணைப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.
সায়ান্থন হচ্ছেন সুইজারল্যান্ডে বসবাসরত একজন প্রতিভাবান তামিল ব্লগার যিনি তার আন্ন্দদায়ক পডকাষ্টিং এর জন্যে বিখ্যাত। তার ব্লগ সাধারনত মজার মজার ছোট [...]

கழுவியாக இருத்தலும் கொழுவியாதலும்

அவ்வப்போது புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்களை நோக்கி, தட்டுக் கழுவிகள் என்றோ தூசு தட்டுபவர் எனவோ யாராவது இணையத்தில் எழுதுவார்கள். வலைப் பதிவுச் சூழலில் அனாமதேயப் பின்னூட்டங்களாக பெரும்பாலும் இவை இடம்பெறும். ஏதோவொரு வழியில் அவர்களை ஏளனம் செய்வதற்கும், காழ்ப்புணர்வைக் காட்டவுமே அவ்வாறு சிலரால் சொல்லப்படுகிறது என்பதற்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளன.
கோப்பை கழுவுவதும், தூசி தட்டுவதும் அவர்களின் பார்வையில் கேவலமான தொழில்களாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது. மேல்தட்டு வர்க்க நோக்கிலிருந்து ஒருவனின் தொழிலைச் சொல்லி அவனைக் கீழ்நிலைப் [...]

இது எவருடைய தவறாய் இருக்கலாம் ?

விமர்சனங்கள் எந்த அடிப்படையில் உருவாகின்றன என்பதற்கு பொருத்தமான இரண்டு வழிகளைச் சொல்ல முடியும். அவை நேரடி அனுபவத்தின் ஊடான தர்க்க ரீதியான சிந்தனையின் அடிப்படையில் உருவாகின்றனவாகவும், இன்னொரு வழியில் நேரடியான அனுபவமோ தொடர்போ அற்ற நிலையில் அது குறித்து அறியப்படும் செய்திகளினூடு உருவாக்கிக் கொள்ளும் கருத்துருக்களாகவும் அமைகின்றன. இவற்றோடு தனி விருப்பங்களும் இணைவதுண்டு.
இன்னொரு வழியில் ஏற்கனவே எடுத்து விட்ட முடிவின் அடிப்படையில் விமர்சனங்களை உருவாக்கிக் கொள்வோரும் உண்டு. அவர்கள் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் தமக்கிருக்கும் [...]

யுத்தமற்ற வாழ்வு எவ்வளவு அழகானது

வலைப் பதிவுகளில் நானும் சோமியும் அவ்வப் போது ஐந்து சதத்திற்கும் பெறுமதியில்லாத ஏதாவது ஒன்றைப் பற்றி, நகைச்சுவையை மட்டும் மையப்படுத்தி அளவளாவுவோம். என்னை ஒரு மொக்கைப் பதிவு மன்னன் ஆகப் பிரகடனப்படுத்தும் அளவிற்கு அவை இருந்து வந்துள்ளன. இது குறித்து அவ்வப் போது சில பெரியவர்கள் நமக்கு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கூறுவார்கள். உங்களிடமிருந்து வரவேண்டியவை இவ்வாறான ஒலிப்பதிவுகள் அல்ல எனவும், இப்படியான பம்பல்களை விட்டுவிட்டு ஆக்க பூர்வமாக ஏதாவது செய்யலாம் எனவும் அவர்களிடமிருந்து அறிவுறுத்தல்கள் வருவதுண்டு.
ஆனால் [...]

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231