வடலியின் நூல்கள், கனடாவில் வெளியீட்டு நிகழ்வு

வடலி வெளியீடுகளான கருணாகரனின் பலிஆடு கவிதை நூல் த.அகிலனின் மரணத்தின் வாசனை ஆகிய இரு நூல்களுக்கான வெளியீட்டு நிகழ்வு வரும் வெள்ளி 28 ஓகஸ்ட் மாலை 6 மணிக்கு கனடாவில் நடைபெற இருக்கிறது. மேலதிக விபரங்கள் கீழே..

கே.எஸ் பாலச்சந்திரனின் நாவல்! வடலி வெளியீடு

இலங்கையின் ஆரம்பகால வானொலி தொலைக்காட்சி கலைஞரான கே. எஸ் பாலச்சந்திரன் அவர்களின் கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது.
ஈழத்தின் வடபகுதிக் கடலோரக்கிராமங்களின் கதைகளைப்பேசும் இந் நாவல் என்னளவில் ஒரு விதத்தில் வேறுபட்டு நிற்கிறது. எனது தலைமுறைக்குத் தெரிந்த கடல் தனியே உப்பும் நீரும் நிறைந்ததல்ல. அது குண்டுகளையும் ரத்தங்களையும் ஓலங்களையும் தன்னத்தே வைத்திருந்தது. கடல் அப்படித்தான் அறிமுகமானது. அப்படித்தான் பழகியது.
இந்த நாவல் இப்போதைய தலைமுறைக்குத் தெரிந்திராத ஒரு கடலை கதை முழுதும் [...]

அம்பலம், யாழ்ப் பாணத்திலிருந்து ஒரு சிற்றிதழ்

ஈழத்தைக் குறித்தான அரசியல் சமூக இன்னோரன்ன எழுத்துக்களை ஈழத்தவர்களே எழுதுகையில் உருவாகும் கனதி, அவை ஈழத்திலிருந்தே வெளியாகும்போது இன்னும் பெறுமதியுமுறுகின்றன. திறந்த நிலையில் தம் குரல்களை வெளிச்சொல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிற ஒரு சூழலில் இருந்து, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும், ஆங்காங்கே / அவ்வப்போது நம்பிக்கை ஒளிக்கீற்றுக்கள் எழுவதும் அணைவதுமாக இருக்கின்றன. பொருளாதார நெருக்கடியும் பற்றாக்குறையும் நிறைந்த சூழலில் இதழாக்கங்களுக்கான அதிகரித்த செலவும் அவற்றை இதழ்களின் விலைகளில் சுமத்துவதும் இவ்வாறான முயற்சிகள் ஆரம்பித்த வேகத்திலேயே அடங்கியும் விடுகின்றன.
யாழ்ப்பாணத்திலிருந்து [...]

விருப்புக்குரிய புத்தகங்களும் சுவிசில் நூல் நிலையமும்

2005 இன் ஒரு நாள், கொழும்பின் பூபாலசிங்கம் கடையில் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூல் இருக்கா எனக் கேட்டதற்கு அங்கு வேலை செய்த அக்கா ஒரு மாதிரியா பார்த்தா. பிறகு அவ காட்டிய இன்னுமொருவர் அது விற்பதில் சில பல பிரச்சனைகள் இருக்கென்று சொல்லவும், பரவாயில்லையெனச் சொல்லி விட்டு சோபா சக்தியின் இரு புத்தகங்களும் தமிழ்க்கவியம்மாவின் ஒரு சில புத்தகங்களும் வாங்கிச் சென்றிருந்தேன். ( விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரின் புத்தகத்தை கொழும்பில் வாங்கியது புதிய அனுபவம் [...]

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231