சாரல் » நினைவுகள்

சேயோன்! விடுபட்ட சில நட்புக் குறிப்புக்கள்
பிளான் பண்ணி ஒருவனை பிரண்ட் ஆக்க முடியுமென நீங்கள் நினைக்கிறீர்களா? காதலிக்கவே முடிகிறது. நட்பென்ன நட்பென்று சப் என்று முடித்துவிடாதீர்கள். என்னையும் கொஞ்சம் பில்டப் கொடுக்க அனுமதியுங்கள். ஏனெனில் நான் பிளான் பண்ணியே ஒருவனைத் தோழனாக்கினேன். தோழன் என விளிப்பதற்கும் ஒரு காரணமுண்டு. ஏனெனில் அது புரட்சிகரமாயிருந்தது. இவ்வளவும் சொன்னபிறகு என்ன பிளான் என்றதைச் சொல்லத்தான் வெட்கமாக் கிடக்கிறது. பம்மிக்கொண்டு கடந்து போகலாம். பரவாயில்லை. புரட்சிகளும் வெட்கங்களும் என்றுவிட்ட பிறகு உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிளானுகள் தோன்றலாம். அவைகளும் தோன்றல்களும் சாதாரணமெனிலும்  உண்மையென்றொன்றிருக்கிறதல்லவா. அதைச் சொல்ல வேண்டும்.

பள்ளிக்குட மூன்றோ நான்காம் நாள் அது. யாரையும் தெரியாத நாட்களாயிருந்தன அவை. அப்பதான் அவரைப்பார்த்தேன். அவரையல்ல.. அவரது ரியூசன் பாக்கைப் பார்த்தேன்.. பாக்கையல்ல.. அதுக்கையிருந்த அந்தக் கசெட்டை.. சொன்னால் நம்புங்கோ. யாரையாவது சினேகிதனாக்கிக்கொள்ள வேண்டுமென அலைந்த மனசு டப்பெண்டு குறித்துக் கொண்டது நீதான்ரா என்ரை பிரண்ட் என்று. என்ரை மனசு குறித்துக்கொண்டால் பிறகென்ன : ) அடுத்த இரண்டாவது மணியில் அவர் எனது பிரண்ட். அது இங்கு முக்கியமில்லை நண்பர்களே.. அடுத்த நான்காவது மணி நேரத்தில் அந்த கசெட் என்ரை பாக்கில் இருந்தது இரைதேடிய கழுகொன்றின் கால்களில் அகப்பட்ட கோழி குஞ்சைப்போல

இப்படியாகச் சிக்குப்பட்டவர்தான் சேயோன்.

0	0	0

சேயோன் கண்டிப்பு நிறைந்தவர். அதை முதல் நாட்களிலேயே நான் கண்டுகொண்டேன். நட்பு வலையில் அவரைச் சிக்கவைத்து பெற்றுக்கொண்ட கசெட்டில் நான் சும்மா இருக்க முடியாத வியாதியில் திருவிளையாடல் என பெயரெழுதிக் கொடுத்த போது அவர் எள்ளும் கொள்ளுமாய் வெடித்துச் சொன்னார். “இனி உனக்கு சப்ளை இல்லை” என்று.  நட்பென்று நான் போக இவன் என்னை ஒரு கஸ்டமரா டீல் செய்திருக்கிறான் என்றது கவலைதான். என்றாலும் காட்டிக்கொள்ளவில்லை. ஏனென்றால் அந்தநேரம் அவரொரு பொன் முட்டையிடும் வாத்து. அதை விட என்னைத்திட்டும் உரிமை அவருக்கில்லாமல் வேறு யாருக்கு

0	0	0

காதலென்றது உடடியாக கவர்ச்சி காமம் என ஏகப்பட்டப் புள்ளிகளின் உருவானாலும் காலப்போக்கில் அவற்றிற்கு அப்பாலான புரிந்துணர்வொன்றில் வாழ்க்கை ஓடுகிறதல்லவா. அப்படித்தான் சேயோனுடனான நட்பும். அதற்காக காதலுக்குரிய காரணத்தை இங்கு பொருத்திப் பார்க்க கூடாது நீங்கள். சொல்லப்போனால் முதலிரண்டு பந்திகளையும் நீங்கள் வாசித்திருந்தால் அந்தக்காரணங்களும் பொருந்தி வருகின்றன தான்.

கொழும்பில் எனது முதலாவது நண்பராயிருந்தார் சேயோன். வகுப்பில் எனது அருகிலிருந்தார். இரண்டாவது வரிசையில் நாங்கள் இருந்தோம். தனுஸ், நான் சேயோன் அனந்தன் நிரஞ்சன் (கிளின்டன்) எனது ஞாபகம் சரியாக இருந்தால் இதுதான் அந்த வரிசையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் சைவ்பிரியாணி கொண்டு வருவேன். இடைவேளை மணியடிக்கவும் பாய்ந்து பறந்து சுழன்று அதை எடுத்துத் அமுக்கும் கூட்டத்தில் அவரிருப்பார் எப்போதும். எல்லாம் முடிந்தபிறகு எஞ்சிய பார்சல் கட்டிய தினமுரசுப்பேப்பரில் மீனாவையோ ரோஜாவையோ பார்த்து பெருமூச்செறிவேன் நான்.  அந்த நாட்களில் சில நாட்கள் பள்ளிக்கூடம் முடிய சேயோன் வீட்டில் நின்று ரியூசனுக்குப் போக வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் அவர் வீட்டில் பயிற்றங்காய் குழம்பும் பருப்புக்கறியும் பச்சையரிசிச் சோறும் தினமும் இருக்கும். எனக்கும் சேர்த்தே இருக்கும். என்னதான் இருந்தாலும் பயிற்றங்காய் கறிக்கு பிரியாணி கட்டுப்படியாது அல்லவா..

0	0	0

வகுப்புக்கு அருகில் இருந்தது அந்த நாணயக்குற்றியிட்டுப் பேசும் தொலைபேசி. அதில இருந்து கள்ளக் கனக்சன் எடுத்து திருகோணமலை யாழ்ப்பாணம் மட்டக்களப்பு கண்டி என கன ஜோராக ஓடிக்கொண்டிருந்தது அந்த தற்காலி ரெலிபோன் பூத். ஒரு தொலைபேசி கொஞ்சம் வயர் ஒரு ஊசி. இவ்வளவும்தான். கொஞ்சக் காலங்களில் பிடிபட்டுவிட்டது.  சேயோன் ஒரு மாணவத் தலைவனாக இருந்ததால் அவரைத்தான் அதிபர் விசாரித்தார். “ஓம் சேர்.. நானும் கண்டனான். ஒரு வெள்ளைநிற, தலையை மேவி இழுத்த ஒருவர்தான் இந்தக் கள்ளக் கனெக்சனை எடுத்துச் செய்தவர். நான் அடையாளம் காட்டுறன் என அதிபரை அலைக்கழித்ததுதான் மிச்சம்.

எனக்குத் தெரியும். அந்த அங்க அடையாளங்கள் ஒருபோதும் சேயோனுக்குப் பொருந்தியதில்லை. சிறிலங்கா ரெலிகொம் அப்போ முழு அரசுரித்தாய் இருந்தது. அரச சொத்துக்களை நஸ்டப்படுத்த வேண்டுமென்ற புரட்சிகர விதை அவர் மனதில் இருந்ததை அவரே அறியமாட்டார்.

0	0	0

சேட்டை விட்டியெண்டால் உதை வாங்குவாய் என சேயோனை ஒருவ பேசியபோது நான் அருகில் இருந்தேன். இல்லை ஐந்தாறு அடி தள்ளித்தான் நின்றேன். அதை ஒளிந்து நின்றதென்கிறார்கள். பூசைகள் முடிந்த பிறகுதான் போய்க் கூட்டிவந்தேன். அது ஏதோ போன்/ பெண் பிரச்சனை. சேயோனிடமிருந்து நம்பரை வாங்கிய யாரோ சீரியசாக விளையாடி விட்டார்கள். அவர் அந்த விசயத்திலும் ஒரு சப்ளையர் தான்.  ஒரு டிஜிற்றல் டயரியில எக்கச்சக்க போன் நம்பர்கள் இருந்தன. எனக்குத் தந்ததில்லை. ஏனென்றும் தெரியவில்லை. ஆனால் பெரும்பாலான அவரது நடவடிக்கைகளில் நானும் இருந்திருக்கிறேன். போனைப் போட்டு சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ பாடுவது நினைவிருக்கிறதா சேயோன். ?

இவ இருக்கிறாவா என்றும் இன்னார் கதைக்கிறதென்றும் யாரும் அக்காமாரைக் கொண்டு பதிவு செய்து வைத்து ஒவ்வொருக்காவும் அதை ஒலிக்கவிடுவதும் அது முன்னைப்பின்னை ஓடுவதும்.. ரீ வைன்ட் செய்து திரும்ப முயற்சிப்பதும்.. அட..  வேலை வெட்டி இல்லாமல் இருந்திருக்கிறோம் நண்ப,

0	0	0

ஒரு முறை சேந்தன் சேர் என் மீது இன்ப நிழலை நானே எழுதியதாக குற்றம் சுமத்தினார். சேயோன் நீயாவது சொல்லியிருக்கலாமே அதை நான் எழுதவில்லையென்று.. ? இதற்கு முதல் நான் எழுதியவற்றை பத்திரிகையில் வந்தவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளாத நீங்கள் அன்று மட்டும் ஏன் அமைதியாயிருந்தீர்கள்..? பதில் சொல் நண்ப பதில் சொல்..

0	0	0

சேயோன் எங்களை நுவரெலியாவிற்கு கூட்டிக்கொண்டு போனார். அவரா அல்லது தினேசலிங்கமா அல்லது கீரனா என்று இன்றுவரை சரியாகத்தெரியவில்லை. நிறையத் தலைமைத்துவப் போட்டிகள் யார் வழிநடத்துவது என்று. நானெல்லாம் சேயோன் உன் தலைமையிலிருந்தேன். அன்றிரவு கீரன் என்னை வெருட்டிய போது நீ ஓடிப்போய் ஒளிந்து கொண்டாய். நினைவிருக்கிறதா ? நானும் ஓடி வந்தொளிந்த இருண்ட அறையில் உனது ஸ் ஸ் என்ற மூச்சும் யாரது என்ற அச்சக்குரலும்   சரி போகட்டும். காலைக்கடனை கழிக்கவே முடியாத இடத்தினின்று நாங்கள் கஸ்ரப்பட்டுக் கொண்டிருந்தபோது நீ மட்டும் நைசாக போய் உன் சொந்தகார வீடொன்றில் அலுவலை முடித்து விட்டு வந்தாய். நாங்கள்அதிகாலை  ஏதோ அருவிப்பக்கம் ஒதுங்கி பிறகு  ஆற்றில் கையை வைத்து கொஞ்ச நேரம் கையைக்காணவில்லையென்று தேடிக்கொண்டிருந்தோம்.

0	0	0

இன்னும் சேயோன் வீட்டு மொட்டைமாடி அந்தப் பைனாக்குலர் ஒரு பழைய ரி வி எஸ் சட்டப்புத்தகங்கள் நிறைந்த அந்த முன் அறை  உன் நெற்றியில் விழும் முடியென தொலைந்து போன எல்லாவற்றையும் மீள நினைவுறுத்தி முடிக்கிறேன். நன்றி

முன்பொரு காலம்
(4 வருடங்களுக்கு முன்னர் எழுதிய பதிவின் மீள் இடுகை)

‘உவரோடை எதுக்கு அடிக்கடி தனகுறாய்’ எண்டு அம்மம்மா கேட்டா.

‘தனகேல்லையம்மம்மா, அவர் சொல்லுறதுகளுக்கு பின்னூட்டம் குடுக்கிறன் என்றன் நான்.

அம்மம்மாவுக்கு பின்னூட்டம் எண்டால் என்னெண்டு விளங்கேல்லைப் போலை. ‘என்ன விண்ணானக் கதை கதைச்சுக் கொண்டிருக்கிறாய் எண்டா அவ. எண்டாலும் நான் அவரோடை தனகுப்படுறது அவவுக்கு பிடிக்கவில்லை.

ஆனா உண்மையா நான் அவரோடை தனகுப்படேல்லை. அவருக்கும் எனக்கும் சாதாரண சம்பாசனைதான் நடந்திச்சு. எண்டாலும் அவர் ஒண்டு சொல்லுறதும் அதுக்கு நான் நக்கலா அல்லது கொஞ்சம் குத்தலா பதில் சொல்லறதும் எங்களுக்குள்ளை நடந்து கொண்டிருக்க, அதை அம்மம்மா நானும் அவரும் தனகுப்படுறம் எண்டு விளங்கி கொண்டாவோ தெரியேல்லை.

அந்த அவர் லண்டனில இருந்து இரண்டு சின்னப்பெடியள் மற்றும் மனைவியோடை வந்திருந்தவர்.

2002 இலிருந்து ஒவ்வொரு விடுமுறைக்கும் இலங்கைக்கு வந்து போறவர். அதுக்கு முதல் ரண்டு மூண்டு வருசம் இந்தியாக்கு வந்து போனவராம். ஏனெண்டால் 2002 க்கு பிறகு தானே இலங்கையில் சண்டை நிண்டது. அதுக்கு முதல் வாறது பயம் தானே!

அவற்றை ரண்டு பெடியங்களும் சரியான cute ஆக இருந்தாங்கள். கிராமத்து வீடு அவங்களுக்கு ஒரு புது உலகம் மாதிரி இருந்திருக்க வேணும். ஆனால் வெயில் தான் அவங்களை கஸ்ரப்படுத்திப்போட்டுது. அவங்களாலை வெயிலை தாங்க முடியேல்லை. அடிக்கடி எரிச்சல்ப் பட்டுக்கொண்டிருந்தாங்கள். உண்மையாகவே அவங்களாலை அந்த வெயிலை தாங்க முடியாது தான். உண்மையில வெளிநாடுகளிலேயே பிறந்து வளந்தவங்கள் சுட்டெரிக்கும் வெயிலைக் கண்டு எரிச்சல்ப்படுறது ஒரு பிழையே இல்லை.

ஏனெண்டால் ஏழெட்டு வருசத்துக்கு வெளிநாட்டுக்கு போன ஆக்கள் எல்லாம் திரும்பி இலங்கைக்கு வந்து நிக்கேக்கை ‘இதென்ன கண்டறியாத வெயில். மனிசரை இருக்க விடுகுதில்லை. உடம்பெல்லாம் நச நச எண்டு ஒரே வியர்வை. ச்சீ. இதுக்கை என்னெண்டு இருக்கிறது’ எண்டு சொல்லும் போது, பாவம் அந்தப் பெடியள் சொல்லுறது ஒரு தப்பே இல்லை.

லண்டன் காரர் நல்லா அரசியல் மற்றும் ராணுவ விசயங்கள் கதைப்பார். அவரிடம் அம்பிட்டால் ஒரு அரசியல் வகுப்பு எடுக்காமல் விடமாட்டார் போல எண்டு நான் நினைச்சன். அவரின்ரை கதைப்படி தமிழருக்கெண்டு ஒரு தனிநாடு வலுகெதியில கிடைக்க வேணும் எண்டு விரும்பிறார் போல எனக்கு தோன்றிச்சு.

‘உந்தக் கிளைமோர் மட்டும் வெடிச்சு அதுல போன எங்கடை 40 பெடியளுக்கும் ஏதாவது நடந்திருக்க வேணும், பிறகு நடந்திருக்கிறதே வேறை’ எண்டு அவர் ஆவேசமா ஒரு நாள் சொன்னார். ‘நடந்திருக்கிறதே வேறை எண்டு அவர் சொன்னாலும் எனக்கென்னமோ ‘நடக்கிறதே வேறை’ எண்ட தொனியிலதான் அவர் சொன்ன மாதிரி இருந்திச்சு.

அவற்றை அவவின்ரை தம்பியார் ஒரு நல்ல pulzer மோட்டச்சைக்கிள் வைச்சிருக்கிறான். அவதான் அது வாங்கிக்குடுத்தவவாம். ‘அக்கா வாங்கித்தந்தது என்று பெருமையாச் சொல்லுவான். பெற்றோலுக்கும் அக்கா தான் அனுப்பிறவ போலை. அதுக்கும் அவன் ஒரு தத்துவ விளக்கம் சொல்லிப்போட்டு ஒரு பார்வை பாத்தான்..

‘அக்காக்கு ஒரு அம்பது பவுண்ஸ் எண்டுறது பெரிய காசில்லையென. ஆனா.. அதையே இங்கை அனுப்பினா கிட்டத்தடட 6000 ரூபா என்ன..அவுஸ்ரேலிய டொலர் எவ்வளவு போகுது!? எழுபதாக்கும்.. லண்டன் பவுண்ஸ் நூற்றம்பது போகுது’

அக்காக்கு என்ன வெறும் ஐம்பது பவுண்ஸ் தானே’ எண்டு அவன் சொல்லவும் என்ர மனசு கட கடவெண்டு கணக்குப் போட்டுது. அம்பதெண்டால் ஒரு ஐஞ்சு மணித்தியாலம் வேலை செய்ய வேணும். ஐஞ்செண்டால் அது விடியக்காலமை 4 மணிக்கு தொடங்குதோ அல்லது பின்னிரவு 2 மணிக்கு முடியுதோ ? அதெல்லாம் அவனுக்கு தெரியுமோ தெரியாது!

அவனோடை ஒரு நாள் ரவுணுக்கு ஒரு சொந்தக்கார வீட்டை போனனான். தன்ரை pulzer மோட்டச்சைக்கிளை தந்து ‘நீர் ஓடும்’ எண்டான். உண்மைய சொல்லப்போனால் எனக்கு க்ளச் மொடல் சைக்கிள்கள் ஓடிப் பழக்கமில்லை. அதை விட முக்கியமான விசயம் யாழ்ப்பாணத்து தெருக்களில் ஓடுறதுக்கு ஒரு விசேட பயிற்சியும் தற்துணிவும் வேணும்.அது என்னட்டை இல்ல.

யாழ்ப்பாணம், வீதி ஒழுங்கைக் கூட ஒழுங்காக் கவனிக்க ஆக்கள் இல்லாமல் கிடக்கு.

நான் சிரிச்சுக்கொண்டே ‘இல்ல நீரே ஓடும் எண்டன். சீற்றில அவனுக்கெண்டு இருக்கிற இடத்தில இருக்காமல் நல்லா பின்னாலையா இருந்து என்னையும் இன்னும் பின்னுக்காக தள்ளிக் கொண்டு முதுகை வளைச்சு அவன் ஒரு வித்தியாசமாத்தான் ஓடினான். அவ்வப்போது பொம்பிளைப்பிள்ளையளை கடக்கேக்கை horn அடிச்சான்.

என்ன தான் நேருக்கு நேரை நிண்டு கதைச்சாலும், ஒண்டா இருந்து பம்பல் அடிச்சாலும், சண்டை பிடிச்சாலும் இப்பிடித்தள்ளித் தள்ளி நிண்டு கவன ஈர்ப்புக்களை செய்யிறது எண்டுறது ஒரு தனிச்சுகம் தான்.

அவவை கடந்து போகேக்கை ஒருக்கா குரலை செருமுறதும் (மோட்டச்சைக்கிள் வைச்சிருக்கிற ஆக்கள் horn அடிக்கலாம்) ஏன் நேற்று கோயிலுக்கு வரேல்லை என்று எங்கேயோ பாத்துக் கேக்கிறதும் அதுக்கு அவ அந்தக் கேள்வி பிடிச்ச மாதிரியும் அதே நேரம் பிடிக்காத மாதிரியும் முகத்தை வைச்சுக்கொண்டு சொண்டுக்குள்ளை சிரிக்கிறதும், அவர் அவவை முந்திக்கொண்டு போறதும் பிறகு ஸ்லோப் பண்ணுறதும் , அவ பக்கத்தில வாற தன்ரை சினேகிதியப் பாத்து ‘இப்ப என்னவாமடி இவருக்கு’ எண்டு கேக்கிறதும்… ஓ.. அது ஒரு அழகிய உலகம்……

Track மாறிட்டன் எண்டு நினைக்கிறன்.

அவனுக்கு பின்னாலை இருந்து போகேக்கை சும்மா பேச்சுக் கொடுத்தன். ‘இங்கை என்ன கார்கள்? என்ன மொடல்கள் ஓடுது?’  எனக்கு ஒரு மொடலுகளின்ரை பெயரும் தெரியாட்டிலும் சும்மா கேட்டன்.

அதுக்கு அவன் ‘காரை மனிசன் ஓடுவானே. உள்ளை இருந்து ஓடினால் ஆர் பாக்கப் போறாங்கள். மோட்டச்சைக்கிள் எண்டாத்தான் முறுக்கிக் கொண்டு ஓட ஒரு நாலைஞ்சு மடியும்’ எண்டான்.  ‘அதென்ன நாலைஞ்சு மடியும்’ எண்டு யோசிச்சுக்கொண்டேயிருக்க அவன் என்னை கொண்டு போய் சொந்தக்கார வீட்டை நிப்பாட்டினான்.

அந்த வீட்டில இருந்த ஒரு அக்கா அவனைப்பாத்து ‘என்ன ஐசே.. ‘இந்தப்’ படத்தில ‘இன்ன’ ஹீரோ ‘இந்தக்’ கட்டத்தில ‘இப்பிடி’ வாற மாதிரி வாறீர் எண்டு கேட்டா. அதுக்கு அவன் இல்லயக்கா, இது அப்பிடியில்லையெண்டு விட்டு இன்னொரு படத்தில இன்னொரு ஹீரோ இன்னொரு கட்டத்தில இன்னொரு மாதிரி வாறதெண்டு விளக்கம் குடுத்தான்.

அதுக்கு அவ, ம்.. அந்த மாதிரியும் கிடக்கு இந்த மாதிரியும் கிடக்கு எண்டா. உவங்கள் படத்தை பாக்கிறவங்களோ இல்லாட்டி பாடமாக்கிறவங்களோ எண்டு நான் மனசுக்குள்ளை பிரமிச்சுக்கொண்டிருக்க, அவ என்னைப்பாத்து என்ன ஆள் சரியா கறுத்துப் போய் முகமெல்லாம் வாடி ஆளே மாறிப்போய் வந்திருக்கிறீர் எண்டு கேட்டா. அதைக் கூட என்னாலை பொறுக்க முடியும்!

ஆனா அவவின்ரை அம்மா என்னைப் பாத்து காச நோய் வருத்தக்காரன் வந்த மாதிரி இளைச்சுப் போய் வந்திருக்கிறீர் எண்டு கேட்டாவே ஒரு கேள்வி ! அதை நான் ஆயுளுக்கும் மறக்க மாட்டன் எண்டு அப்பவே முதலாவது சத்தியம் பண்ணிக்கொண்டன். ரண்டாவது சத்தியமும் பண்ணினனான். அதுக்கு பிறகு வாறன்.

‘ஒஸ்ரேலியாவில கிட்டத்தட்ட யாழ்ப்பாணச் சுவாத்தியம் தான். அதுவும் கோடை காலத்தில சரியா யாழ்ப்பாணம் மாதிரித்தான் இருக்கும். இப்ப தான் அங்கை குளிர் தொடங்குது. போன முறை அங்கை சரியான வெயில்! அது தான் இப்பிடி எண்டு நான் வெதர் மேலை பழியைப்போடடன்.

‘அப்ப அங்கை இனி ஸ்நோ கொட்டுமோ’ எண்டு அவ தன்ரை பொது அறிவை வளக்கப்பாத்தா.

‘இல்ல எங்களுக்கு ஸ்நோ இல்லை. அது எங்கையோ மலைப்பக்கம் கொட்டுதாம். நான் போனதில்லை’ எண்டு நான் சொன்னன்.

‘எட.. அப்ப அங்கை ஸ்நோ இல்லையே? என்ரை மகன்ரை வீட்டு முத்தத்தில நிறையக் கொட்டுமாம் என்ன.? வீடியோ கொண்டு வந்து போட்டுக் காட்டினவன். நல்ல வடிவாத்தான் இருந்தது.’ அவவின்ரை கதையைப் பாக்க ஏதோ ஸ்நோ இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் எண்டுமாப்பொலை இருந்தது. அப்ப தான் நான் ரண்டாவது சத்தியம் செய்தன். ஒஸ்ரேலியா திரும்பினவுடனை பக்கத்தில எந்த இடத்தில ஸ்நோ கொட்டுதோ அங்கை போய் நானும் ஒரு படம் எடுத்து அனுப்புறதெண்டு.

இத்தனைக்கும் இடையில அந்த லண்டன் காரர் எனக்கு கன தரம் அரசியல் வகுப்புக்கள் எடுத்திட்டார். ‘ உது சரிப்பட்டு வராது. சிங்கள அரசுகளை நம்பி ஒரு பிரியோசனமும் இல்லை. பொடியங்கள் என்ன செய்ய வெணுமெண்டால் சண்டையைத் தொடங்கிப்போட்டு பத்துப்பதினைஞ்சு குண்டுகளை கொழும்பில வைக்க வேணும். அப்பிடியே அரசாங்கத்தை திணறடிக்க வேணும். அப்ப தான் அவங்களுக்கு புரியும் எங்களைப் பற்றி.’ எண்டு ஒருநாள் அவர் சொன்னார்.

நான் ஒண்டும் பதில் சொல்லவில்லை. உண்மையில சொல்லுறதுக்கு ஒண்டும் இல்லை.

இதெல்லாம் முடிஞ்சு அடுத்த நாளோ அதற்கடுத்த நாளோ லண்டனில் குண்டு வெடிச்சது. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆக்கள் செத்தவை.  கேட்ட மாத்திரத்திலேயே அவர் சரியா குழம்பிப்போனதா அவற்றை அவா சொன்னா.
அது லண்டனில. நாங்கள் இருக்கிறது வெம்பிளிதானே. அந்த இடத்தில எங்களுக்கு பிரச்சனை ஒண்டும் இல்லை. எல்லாம் ஸ்மூத் என்டு யாரிடமோ போன் செய்து கேட்டு சொன்னாராம்.’

‘ம் உண்மைதானே! வெம்பிளி தவிர்ந்த வேறை எந்த இடத்தில குண்டு வெடிச்சாலும் அவருக்கு பிரச்சனை இல்லைத்தானே..! ‘

அதுவொருகாலம்! யாழ்ப்பாணம்
(4 வருடங்களுக்கு முன்னான பதிவொன்றின் மீளிடுகை)

அந்த ஆச்சி கிட்டடியில சாகப்போற மாதிரி, எனக்கு தெரியேல்லை. ஆனாலும் அம்மா சொன்னா. “நீ அடுத்த முறைக்கு வரேக்கை மனுசி இருக்குதோ இல்லையோ தெரியாது. எதுக்கும் ஒருக்கா போய்ப்பாத்திட்டு வா.”

பரவாயில்லை. மனுசி திடகாத்திரமாத்தான் இருந்தது. என்னைக் கண்டவுடனை அடையாளம் கண்டுகொண்டிச்சு.

“வாப்பு. என்னப்பு சரியா இளைச்சு போட்டாய்? சரியான சாப்பாடு இல்லைப்போல?” நான் மெல்லிசா சிரிச்சு வைச்சன். “எப்பிடி இருக்கிறியள்” எண்டு கேட்டன்.

“முந்தி மாதிரி ஓடியாடி வேலையள் செய்ய முடியேல்லை. எண்டாலும் பரவாயில்லை. ஏதோ இருக்கிறன். கடவுள் எப்ப என்னை எடுக்கப்போறாரோ தெரியேல்லை.” எண்டு அவ சொன்னா.

எனக்கெண்டால் இப்ப கடவுள் எடுக்க மாட்டார் எண்டு தான் தோன்றிச்சு.

மனிசி நிறைய கதைச்சது. கொஞ்சம் நேரம் அமைதியாய் இருந்தது. இருந்தாப்போல கேட்டுது.

“அப்ப உனக்கு அங்கை காட் கிடைச்சிட்டுதோ?”

யாழ்ப்பாணத்தில இப்ப வெளிநாடு சம்பந்தப்பட்ட பொதுவான பேசுபொருள் இது தான் என்றாலும் செத்தாலும் செத்துப்போடும் போய்ப்பாத்து விட்டு வா எண்டு அம்மா அனுப்ப, போய்ப்பார்த்த ஒரு ஜீவனிடமிருந்து இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை.

மனுசி என்ன கேட்குது என்று எனக்கு விளங்கிட்டுது. இண்டைக்கு காட் கிடைக்கிறது எண்டது யாழ்ப்பாணத்து சமூகத்தின் உச்ச பட்ச எதிர்பார்ப்புகளில் ஒன்றாகிவிட்டது போல எனக்குப் பட்டது.

இன்னொரு பக்கத்தாலை மனுசி ஆருக்கும் என்னை கலியாணம் பேசப்போதோ என்று கூட ஒரு வெட்கம் கலந்த யோசினை எனக்கு வந்து போனது.

மகளுக்கு வெளிநாடுகளில ஆரும் காட் கிடைச்ச பெடியனா பாக்க முடியுமோ? சாதியைப் பற்றி பிரச்சனையில்லை. ஆனா காட் கிடைச்சிருக்க வேணும் எண்ட மாதிரியான கதையள் அங்கை வலு பிரபலம்.

எனக்கென்னவோ சாதி முறையெல்லாம் ஒழிஞ்சு புதுசா காட் கிடைச்ச சாதி, காட் கிடைக்காத சாதி என்று வந்தாலும் வந்திடும் போல கிடக்கு.

“என்ன காட் ஆச்சி” எண்டு நான் அவவை கேட்டன்.

“அதுதானப்பு! அங்கை இருக்கிற காட். அது கிடைச்சால்த்தானம் ஆரையேனும் கூப்பிடலாம். என்ரை மூத்த ரண்டுக்கும் கிடைச்சிட்டுது. கடைசிதான் பாவம். இன்னும் கிடைக்காமல் கஸ்ரப்படுறான்.”

மனுசி உண்மையிலேயே கவலைப்பட்டுது.

“ஓமணை. இப்ப கொஞ்சம் கஸ்ரம் தான்.” எண்டு சொல்லி நான் அவவை ஆறுதல்ப்படுத்த முயற்சித்தன்.

எனக்கும் ஆறுதலாயிருந்தது. ஏனென்றால் எல்லாம் உந்த சமாதானத்தாலை தான் எண்டு மனுசி சொல்லவில்லை.

ஆனா எனக்கு இன்னொருவர் அப்பிடிச்சொன்னார். அவரும் வெளிநாடு தான். ஐரோப்பா நாடுகளில இப்ப கோடைகாலம் எண்ட படியாலை நிறையப் பேர் விடுமுறையில தமிழீழத்துக்கு வந்திருக்கினம். விடுமுறை முடிய தங்கடை இடங்களுக்கு போறதுக்கு முதல் தங்கடை பிள்ளையளுக்கு தமிழீழத்தின் அருமை பெருமைகளை அவை சொல்லிக்கொண்டிருக்கினம்.

அதுகள் தங்களுக்குள்ளை டொச்சிலையும் பிரெஞ்சிலையும் இங்கிலிசிலையும் கதைச்சுக் கொண்டு யாழ்ப்பாணத்தை ஒரு மல்ரி கல்ச்சர் சிற்றியாக்கி, மாட்டு வண்டிலயும், ஆட்டுக்குட்டியையும் விநோதமாக பார்த்துக் கொண்டிருக்குதுகள். ஒரு காலத்திலை நான் ரெயினைப் பார்த்த மாதிரி.

இதுக்குள்ளை இங்கிலிஷ் கதைக்கிற ஒரு பிள்ளையின்ரை அம்மா சொன்னா. இப்ப டொச்சிலையோ பிரெஞ்சிலையொ படிச்சால் பிற்காலத்தில எங்கடை நாடுகளில வந்து வேலை எடுக்க முடியாதென!. இப்ப இவன் இங்கிலிசில படிக்கிற படியாலை ஒரு காலத்தில எங்கடை நாட்டில வந்து வேலை செய்யலாம் என்ன? நல்ல வேளை நாங்கள் நேரத்தோடை லண்டன் போனது.

நான் அந்த பிற்காலத்தில எங்கட நாட்டுக்கு வந்து வேலை செய்யப்போற பெடியை பார்த்தன். கொசுக்கடியில முகம் எல்லாம் வீங்கி, தடிமனாலை குரல் எல்லாம் அடைச்சு, பெடியை பாக்கவே பாவமா இருந்தது. அவனுக்கு வெயில் ஒத்துக்கொள்ள வில்லையாம் எண்டு அவன்ரை அம்மா சொன்னா.

தனக்கு தமிழீழம் எண்டொரு நாடு சிறீலங்காவில இருக்கு எண்டு அறிவூட்டப்படுகிற ஒரு குழந்தையின் அப்பா தான் அந்த கேள்வியை என்னை கேட்டார்.

“ஏன்.. அசைலம் அடிக்கேல்லையோ.. ஒஸ்ரேலியாவில கஸ்ரமோ?”

தெரியாதெண்டு சொன்னன்.

“விசாரிச்சு பாக்கவில்லையோ?” எண்டு கேட்டார்.

“எனக்கு இப்ப என்ன அவசரம்? வேலை செய்யிறன். படிக்கிறன். அசைலம் பற்றி யோசிக்கவில்லை.” என்று சொன்னன்.

“ஓ.. முந்தி சண்டை நடக்கும் போதாவது அசைலம் அடிக்கிறதுக்கு ஒரு காரணம் சொல்லலாம். இப்ப ஒண்டும் இல்லைத்தானே…” எண்டு அவர் சொல்லிக்கொண்டிருக்க எனக்கு பத்திக்கொண்டு வந்திச்சு. என்ன செய்ய வயசுக்கு மூத்த ஆக்களை எடுத்தெறிந்து பேசி எனக்கு பழக்கம் இல்லையெண்ட படியாலை பேசாமல் இருந்தன்.

யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்டாயிற்று. பஸ்ஸில் தான் வந்தேன். பயணங்களின் போது அது விமானப்பயணமாயினும் எதுவாயினும் எனக்கருகிலிருப்பவர் யாராயிருக்கும் என எதிர்பார்ப்பதும் பின்னர் ஏமாந்து போவதும் தான் எனக்கு அமைந்த வாழ்க்கை. ஆனால் அன்று வழமை மாறியிருந்திச்சு.

அவளுக்கு என்னை விட வயசு குறைவு. லண்டனில் படித்துக்கொண்டிருக்கிற அவளும் விடுமுறையில் வந்து திரும்பினாள். எனக்கு பக்கத்த சீற். தனியத் தான் வந்தாள். லண்டனில் ஏரோ ஸ்பேஸ் இஞ்சினியரிங் படிக்கிறாளாம். நாங்கள் பேசிக்கொண்டே வந்தோம்.

லண்டன் பற்றி நிறைய சொன்னாள். லண்டனில் தமிழ் இளைஞர்கள் படும் கஷ்டங்கள் பற்றி சொன்னாள். அகதி அந்தஷ்த்துக்கள் ஏற்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் மிகுந்த நெருக்கடிக்குள்ளும் வேதனைக்குள்ளும் ஆகிறார்கள் என்றாள். ஒரு அறையை சில நேரங்களில் 5 க்கும் மேற்பட்டவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்றாள். சரியான அனுமதியில்லாததால் அடிமாட்டு விலைச் சம்பளத்தில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்றாள். மணித்தியாலத்துக்கு மூன்று அல்லது நான்கு பவுண்ஸ் தான் சில சமயங்களில் கொடுக்கிறார்களாம். எவ்வளவு தான் கஷ்ரப்பட்டாலும் வீட்டிலிருந்து பெற்றோர் கதைக்கும் போது அதையெல்லாம் மறைத்து சந்தோசமாக பேசிச் சிரித்து மகிழ்விக்கிறார்கள் என்றாள்.

லண்டனிலிருந்து வருகின்ற ஒரு பேப்பரில் அண்மையில் றெபேக்கா என்பவர் எழுதியிருந்த ஒரு கட்டுரை பற்றி அவளிடம் விசாரித்தேன். I would never marry a tamil man என றெபேக்கா எழுதிய காரணங்கள் சரியானவை தானா என கேட்டேன்.

நாங்கள் பேசிச் சிரித்து வருவதை எமக்கு அருகிலிருந்து வந்த ஒரு நடுத்தர வயதுப் பெண் பார்த்துக் கொண்டே வந்தார். முறிகண்டி தாண்டியதும் தான் கேட்டார்.

“வீட்டை வந்து போறியள் போல” அவளைப்பார்த்து தான் கேட்டா.

“ஓம். லீவில வந்து போறன்.”

“எந்த நாடு?”

“லண்டனுங்கோ..”

அவ தன்ரை மகள் ஜேர்மனியில எண்டா. மகள் இப்ப புருசனோடையும் பிள்ளையளோடையும் கொழும்பில வந்து நிக்கிறதாகவும் தமிழ்ச்செல்வன் ரண்டு கிழமை காலக்கெடு விதிச்சிருக்கிற படியாலை என்னவும் நடக்கலாம் எண்டு கொழும்பில நிக்கிறதாகவும் இந்த இடைப்பட்ட காலத்தில நுவெரெலியா கண்டிப்பக்கம் போகலாம் எண்டு தன்னையும் கூப்பிட்டவையாம். ரண்டு கிழமை முடிய யாழ்ப்பாணம் வாறதைப்பற்றி யோசிப்பம் எண்டவையாம்.

“தம்பி அப்ப நீர் லண்டனுக்கு போய் எவ்வளவு காலம்” எண்டு அவ என்னைப்பார்த்து கேக்க எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டிட்டுது.

“இல்லைங்கோ.. நான் லண்டனில்லை. நான் கொழும்பு” எண்டன்.

மனுசி கொஞ்சம் குழம்பிப் போன மாதிரி இருந்திச்சு. மனுசி எங்களை என்னெண்டு நினைச்சுப் பார்த்திருக்கும் எண்டதை நான் நினைச்சுப் பார்த்தன். கொஞ்சம் சங்கடமாவும் கொஞ்சம் வெக்கமாகவும் இருந்திச்சு.

நான் மனிசியைப் பாத்தன். அவ இப்ப கொஞ்சம் தெளிவா இருந்த மாதிரி இருந்திச்சு.

ஓ.. அப்ப இனி இவ உம்மை கூப்பிட வேணுமென்ன? மனுசி திடீரென்று கேட்டுது.

எனக்கு இதுக்கும் மேலையும் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்திச்சு. வலு விபரமா அவவுக்கு நான் எடுத்துச் சொன்னன்.

ரண்டு பேரும் சின்னப்பிள்ளையளா இருக்கேக்கையே நினைச்சன். எண்டாலும் இப்ப உப்பிடி நடக்குது தானே.. எண்டு மனுசி சமாதானம் சொன்னா

பிறகு மனுசி லண்டன் நிலவரங்கள் பற்றி அறியத்தொடங்கினா.

கனநேரத்துக்கு பிறகு நான் எதிர்பார்த்த அந்த கேள்வியை அவ கேட்டா.

“அப்ப உமக்கு லண்டனில காட் கிடைச்சிட்டுதோ?”

பிற்குறிப்பு: ஓமந்தை சோதனை சாவடியில் இறங்கி ஏறிய போது அவ லண்டன் பெண்ணைப் பார்த்து கேட்டாவாம். உமக்கு அந்த பெடியனுக்கு பக்கத்தில இருக்கிறதுக்கு ஒரு மாதிரி இருந்தா சொல்லும். சீற்றை மாத்துவம்.

எனக்கு அது தான் பிடிச்சிருந்தது. யாரென்றே தெரியாத ஒரு பெண்ணை தன் மகளாக நினைத்து அக்கறையோடை கேட்டா பாருங்கோ அங்கை தான் அவ ஒரு தமிழ் பொம்பிளையா நிக்கிறா. என்ன! அவவை மாதிரியான ஆக்களின் பிள்ளைகள் எல்லாம் வெளிநாடுகளில இருக்கினம்.

தொடர்ந்தும் சொல்லுவன்

போய் வருக என் தாய்நிலமே!
UK central college இப்படித் தான் சொல்லுவோம். ஆனால் மத்திய கல்லூரி அல்ல. வெறும் மகா வித்தியாலயம் தான். UK மகா வித்தியாலயம். உடையார் கட்டு மகா வித்தியாலயம். பரந்தன் முல்லைத்தீவு வழியில் விசுவமடுவிற்கு அடுத்ததாக சில கட்டடங்கள் சில கொட்டில்கள் சில மர நிழல்கள் இவைதான் அப்பாடசாலையில் மொத்தமான கட்டுமானங்கள். அப்போது 1996

நான்கைந்து பாடசாலை அனுபங்கள் எனக்கு உண்டு. எல்லாமுமே  மூன்று வருடங்களுக்கு மேற்படாதவை. அது ஓடிக் கொண்டிருப்பவருக்கான பொதுவிதி.

ஆனாலும் என்னவோ பள்ளிக் காலம் என்றவுடன் UK என்கிற உடையார் கட்டு பாடசாலைதான் நினைவுக்கு வருகிறது.  ஏன் என்பதற்கு ஒரேயொரு காரணம் தான் இருக்க முடியும். அது முதன் முறையாக பெண்களோடு அருகருகே பயிலும் வாய்ப்பு.  வாராது வந்த மாமழையான வாய்ப்பு. பதற்றமும் தயக்கமும் மகிழ்ச்சியுமான அப்போது வயது 16.

ஒரு ஏப்ரல் நாள். கடந்த நான்கு மாதங்களில் வன்னி மெதுமெதுவாக இயைபடைந்து விட்டிருந்தது. கொஞ்சக் காலம் கொட்டில் கட்டுவதில் போனபோது சும்மாயிருக்கிறோமே எனத் தோன்றவில்லை. மென் இருண்மைக் காடுகளில் சூரை முட்கள் கிழித்தெடுக்க தடிகள் வெட்டினோம். சூரை முள் சும்மா இல்லை. மற்றைய முட்களினின்றும் மாறுபட்டது. தூண்டிலைப் போல எதிர் வளமாய் இருக்கும். ஆரம்பங்களில் கிழி கிழியென கிழித்திருக்கிறது.

மொத்தம் மூன்று கொட்டில்கள். சிறிதும் பெரிதுமாக. சுவர்களுக்கு மண்ணுக்காக குழிகள் தோண்ட வேண்டியிருந்தது. ஒரே இடத்தில் தோண்டியிருந்தால் யானைக்கு பொறிக் கிடங்கு ஆகியிருக்கும். ஆனால் நீளமாக ஓடி பிறகு வலது பக்கம் திரும்பி கிட்டத்தட்ட ட வடிவில் மண்ணை அகழ்ந்தெடுத்தோம். பொதுக் கிணறு பொதுக் கக்கூசு (காட்டின் எல்லையோரம் ஆளுயரப் புற்களின் மறைப்பிலான பொது நிலம்தான் அது) போலவே பொதுப் பதுங்கு குழி அது. குண்டு தள்ளி விழுந்தால் பதுங்கு குழி. உள்ளே விழுந்தால் மரணக் குழி.

வன்னி அவ்வாறான ஒரு சனத்திரளை கண்டிருக்காது. திடீரென வீங்கி முட்டியதைப் போல கொஞ்சமென்ன அதிகம் திணறித் தான் போனது. நிலம் பெரிதுதான். யாழ்ப்பாண குடாவை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகம்தான். ஆனால் அத்தனை மக்கட் கூட்டத்தின் கொள்ளளவைத் தாங்கிக் கொள்வதற்கு அது தயாராய் இருக்கவில்லை.  தன்னளவில் நிறைவான உற்பத்தியோடு தன்னளவில் அளவான விலை விகிதங்களோடு எல்லோராலும் ஒதுக்கி வைக்கப் பட்ட ஒற்றை ஜீவனைப் போல வன்னி தன் பாட்டுக்கு சிவனே என்று இருந்தது.

ஒதுக்கி வைக்கப்பட்ட நிலம்தான். 94 வரையும் வன்னி தொடர்பான யாழ்ப்பாணத்துப் புரிதல் எப்படி இருந்தது. வன்னியோ அது காய்ந்து போன கருவாட்டு நிலமெல்லோ.. அங்கை மனிசர் இருப்பினமோ.. நுளம்பும் மலேரியாவும்.. ச்சீச்சீ தூத்தூ..

ஒரு இரவில் காலம் எல்லாவற்றையும் அடித்து துவைத்துக் காயப் போட்டது. கொஞ்சம் கொஞ்சமாய் கொசுக்கள் பழகின. காடு பழகியது. யானைகள் பழகின. குரங்குகள் பழகின.

இனிப் பள்ளிக் கூடம் பழக வேண்டும்.

கையில் பள்ளிச் சான்றிதழ்களோ ஏதும் அடையாளங்களோ இல்லை. கட்டடத்தின் வெளியே ஒரு மேசையைப் போட்டு பெயர் முன்னைய பாடசாலை கடைசியாய் படித்த வகுப்பு எல்லாவற்றையும் எழுதிக் கொண்டிருந்தார் ஏகாம்பரம் சேர். பின்னாட்களில் எனது கணக்கு வாத்தியார்.  ஆசிரிய பயிற்சி நெறிக்காக யாழ்ப்பாணம் பல தடவைகள் முன்பு வந்திருக்கிறார். பாடநேரங்களில் சில முன் வலிகள் அவரையுமறியாமல் வந்து விழும். ம்.. அப்ப எல்லாம் ட்ரெயினிங் வந்த போது வன்னியென்டால் ஒரு நக்கல் உங்களுக்கு. இப்ப….? என்பதோடு நிறுத்துவார். அந்த மனதை அப்போதை  விட இப்போது ஆழமாக உணர முடிகிறது.

வெள்ளைச் சேட்டு நீலக் காற்சட்டை கறுத்தச் சப்பாத்து கட்டாயம் என்ற முன்னைய பாடசாலையின் கொழுப்பெடுத்த விதிகளை யுத்தம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது. வெள்ளையைக் கிட்டவும் நெருங்க முடியாத ஒரு மண்ணிற அரைக் கை சேர்ட்டும் சாம்பல் நிற காற்சட்டையும் கான்சர் வருமென பயமுறுத்தினாலும் கனகாலமாக என் காலோடு தேய்ந்த நீல நிற முள்ளுச் செருப்புமென ஏகாம்பரம் சேருக்கு எனது முன்னைய பள்ளியின் பெயரையும் படித்த வகுப்பையும் சொன்னேன். ”ஓ.. அப்ப இந்த வருசம் ஓ எல் சோதினை.. என்று நான் மறந்தே போயிருந்த விசயத்தை அவர் நினைவு படுத்தினார். இன்னும் எட்டே மாதங்கள் இருக்கிறது. கடந்த ஆறு மாதமாய் பள்ளிப் புத்தகங்களை பார்த்தது கூட இல்லை.

பாடசாலைக் கட்டடங்களில் மக்கள் இருந்தார்கள். வெளியே மரநிழல்களில் வாங்கு மேசைகளை போட்டோம். ஆரம்பத்தில் நிரந்தர மாணவர்களுக்கு காலையும் இடம் பெயர்ந்தவர்களுக்கு மாலை வகுப்பும் என நடாத்தினார்கள். மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பமாகும். வீட்டில் சாப்பிட்டுவிட்டு சைக்கிள் ஓடி வந்தால் அருமையான நித்திரை வரும். மரநிழல் சுகமான காற்று தாலாட்டும். ஆசிரியர்கள் திட்டுவதற்கு எழுப்பினால் கூட வீடு வாசல் கிராமம் நகரம் என அனைத்தையும் இழந்து வந்த சோகத்தை முகத்தில் அப்பி விட்டு நிற்போம். இரங்கி இறங்கி விடுவார்கள். (முன்னைய யாழ்பாணத்து பள்ளியில் புண்ணியலிங்கம் சேர் தண்டிப்பதற்கு அழைத்தால் முதல்வேலையாக நெற்றியில் திருநீறை அப்பி முன் சென்று நிற்போம். சிவனடியார்களை துன்புறுத்தலாகாது என்பது அவரது கொள்கை.)

மதிய நேரத்துப் பள்ளி வேலைக்காகாது என்பதை சீக்கிரமே உணர்ந்து கொண்டார்கள். ஒரு புதிய புத்துணர்ச்சியுடன் கூடிய வாழ்வில் மறக்கவே முடியாத பள்ளி வாழ்க்கை அதன் பின்னர் எனக்கு ஆரம்பித்தது.

காரணமவள்.

0	0	0

20090224_pg17வள்ளிபுனம் சந்தியிலிருந்து தேவிபுரத்திற்கு பிரியும் வீதியில் கொஞ்சத் தூரத்தில் இருக்கிறது ஆச்சி தோட்டம். பென்னம் பெரிய தென்னந் தோட்டம். ஏக்கர் கணக்கில் சரியான அளவு தெரியாது.  மண்ணால் சுவரெழுப்பப்பட்ட ஒரு சுமாரான வீடு அதன் நடுவில் இருந்தது. சீமெந்துக் கட்டுடன் கூடிய கிணறு, சற்றுத் தொலைவில் தேங்காய்களை கொப்பறா ஆக்கி எண்ணெய் எடுக்கும் ஒரு ஆலை.

ஆச்சி தோட்டம் எப்போதுமே மனிதர்கள் நிறைந்து காணப்படும். தேங்காய்களை பொறுக்குபவர்கள், தேங்காய்களை, உரிப்பவர்கள், காய வைப்பவர்கள், குரங்கு திரத்துபவர்கள் என எனக்கு முற்றிலுமான புதிய அலாதியான உலகம் அது. நல்ல மனிதர்கள். பெரும்பாலானவர்களின் பூர்வீகம் தமிழகத்தின் தென்மாவட்டங்கள்தான். கலவரங்களின் போது மலையகங்களில் இருந்து வன்னியில் குடியேறியவர்கள். வன்னியைத் திருத்தியவர்கள். காடுகளை விவசாய நிலங்களாக்கியவர்கள்.

ஆச்சி தோட்டத்தின் வீட்டுச் சுவரில் இடியன்கள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். கட்டுத் துப்பாக்கிகள். பகல்களில் குரங்குகளை விரட்ட அவ்வப்போது வெடிக்கும். இரவுகளில் வெடித்தால் மான் அல்லது மரை அல்லது காட்டுப் பன்றி.  சூடு வாங்கி அவை தப்பித்து ஓடிவிடும். விடிகாலையில் இரத்தத்தைத் தொடர்ந்து சென்று எடுத்துவர வேண்டும் உடலமாய்.

ஆச்சிதோட்டத்தை சுற்றியும் வேறும் பல பெயர்களையுடைய தென்னங்காணிகள் இருந்தன. பத்து ஏக்கர் காணி , மஞ்சள் கேட் காணி, சிவத்தக் கேற் காணி என அடையாளப் பெயர்கள். பத்து ஏக்கர் காணியில் நாங்கள் குடியிருந்தோம். காணியின் ஒரு முடிவில் காடு தொடங்கியது. இரண்டு அல்லது மூன்று வருடங்களேயான இளைய தென்னைகள் அப்போது நின்றன. ஒரு குடி நீர்க் கிணறு இருந்தது. அந்த சுற்று வட்டாரத்திற்கான குடி தண்ணீர்க் கிணறு அது ஒன்றுதான். கிணற்றடி எப்போதும் களை கட்டியிருக்கும்.

நாங்கள் மூன்று கொட்டில்களை அங்கு அமைத்தோம். காட்டின் ஓரமேயிருப்பதாலும் இளைய தென்னைகள் என்றதாலும் இரண்டு தடவைகள் யானை வந்திருக்கிறது. அப்போது நடைபெறும் களேபரங்களில் யானையே மிரண்டு போயிருக்கும். என்ன அடுத்த நாள் பார்க்கையில் சமையல் சட்டிகளும் பாத்திரங்களும் வளைந்தும் நெளிந்தும் போயிருக்கும்.

சைக்கிளில்த்தான் பள்ளி செல்வேன். முக்கால்மணி நேரம் எடுக்கும். கிட்டத்தட்ட புதுக் குடியிருப்புக்கும் அதேயளவு தூரம்தான். இரண்டும் எதிரெதிர்த் திசைகளில் இருந்தன. வள்ளிபுனம் சந்தியில் ஏறினால் பரந்தன் வீதியில் உடையார்கட்டு நேர் வீதி. ஆனால் அப்படியெல்லாம் செல்வதில்லை. இடையில் சுதந்திரபுரச் சந்தியில் திருப்பி உட்சென்று ஒழுங்கைகளில் ஏறி மிதந்து சுற்றியடித்து மீளவும் பரந்தன் வீதியில் ஏறுவேன். பள்ளி முடியும் போதும் அப்படித்தான்.

காரணமவள்!

0	0	0

கண்ணன் அண்ணை பத்து ஏக்கர் காணியிலேயே தங்கி விட்டார். வன்னிக்கு இடம் பெயர்ந்த போது மகன் சுஜீவனுக்கு 3 வயது இருந்திருக்கும். கிளாலிப் படகில் அவன் என் கை அரவணைப்பில் இருந்தான். மகள் சுபா கலையக்காவின் வயிற்றிலிருந்தாள். பின்னர் புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் அவள் பிறந்த போது வெளியே இரணைப்பாலையில் கிபிர் குண்டுத்தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்தது. அவளுக்கு பெயர் வைக்க ஆலோசனைகளை கேட்ட போது கிபிரி என்ற பெயரைப் பரிந்துரைத்தேன். கண்ணன் அண்ணை ணங் என தலையில் குட்டினார்.

நாமெல்லாம் வெளியேறிய பிறகு அவருக்கு இன்னொரு மகள் பிறந்தாள்.  அவருக்கு ஆச்சி தோட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்புக் கிடைத்திருந்தது.

கடந்தவாரம் ஆச்சிதோட்டத்தில் செல் விழுந்து எட்டுபேர்  பலியாகியதாக தமிழ்நெட் சொல்லியது. வேறெந்த தகவலும் இல்லை. பிறிதொரு நாள் என் UK central college முகப்பில் சிங்கள ராணுவச் சிப்பாய் நிற்கக் கண்டேன். பள்ளி முகப்பில் வெள்ளைக் கொடி பறந்து கொண்டிருந்தது.

காரணமவளானவளெங்கே…

இது ஒப்பாரி அல்ல – நினைவு 1
புனைவுகளில் கற்பனை கலந்திருக்குமா என்பது குறித்து எனக்குத் தெரியாது. இந்த 86 களிலிருந்து என்பது எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து நான் நேரடியாகத் தொடர்புற்றிருந்த சம்பவங்களின் பதிவு. இவை அனைத்திலும் மகனாக நண்பனாக வழிப்போக்கனாக வாய் பார்த்தவனாக செய்தி கேட்டவனாக நான் ஏதோ விதத்தில் உள்ளிருப்பேன்.

டப் என்ற சத்தத்தில் கிணற்றிற்குள்ளிருந்து கேட்குமாப்போல் ஒரு சத்தம் அம்மாவிற்கும் அம்மம்மாவிற்கும் கேட்டிருக்கக் கூடும். எந்தவித அதிர்வினையும் பய உணர்ச்சியினையும் தராத அச்சத்தம் குறித்து அவர்கள் ஒரு சில நிமிசத்துளிகள் அசட்டையீனமாக இருந்திருக்கலாம். அல்லது அவ்வாறெதுவும் கேட்காத அளவில் நித்திரையிலும் இருந்திருக்கலாம்.

ஆனால் தொடர்ந்தெழுந்த மிரட்டும் இரைச்சலும் இரைச்சலின் ஆர்முடுகலும் அவர்களை அல்லோலகல்லோலப்படுத்தத் தொடங்கியிருந்தது. ´´நாசமறுவார் ஏதோ புதுசா அடிக்கத்தொடங்கிட்டாங்கள்´´ அம்மம்மா தலைமாட்டிலிருந்த விளக்கைக் கொழுத்திச் சத்தம் போடத்தொடங்கினா. ´´மருமோள் எழும்பு.. பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு வெளியில வா.. செல்லுகள் அடிக்கிறான் ..´´ சொல்லிக்கொண்டிருக்கும் போதே தலைக்கு மேல் வெடித்தது. அம்மம்மா தொபுக்கென கீழே விழுந்து படுத்தா – ஸ்டீரியோ சிஸ்டத்தில் சத்தம் இடம் மாறுவது போல வெடித்தலின் பின்பும் அவர்களைக் கடந்து இரைச்சல் அமர்முடுகிச்சென்று அடுத்த கணங்களில் நிலம் அதிரச் செய்தது. ´´கடவுளே கிட்ட எங்கேயோ தான் விழுந்து போட்டுது. மருமோள் கெதியில வா பிள்ளை´´

அம்மா இன்னும் வந்த பாடில்லை – நித்திரை கொள்ளும் பிள்ளைகளை எழுப்புவதற்குச் சிரமமாயிருந்திருக்க வேண்டும் அவவுக்கு. மகளை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டா. மற்றவன் சுருண்டு படுத்திருந்தான்.

மீண்டும் டப் என்ற அமுக்கச்சத்தம் – காற்றைக் கிழிக்கும் கூவல் சத்தம் – மகளோடு முற்றத்தின் மாமரத்திற்கு கீழ் ஓடிவந்து மகளை நிலத்தில் வளர்த்தி இரு கைகளாலும் அவளை அணைத்து முழுவதுமாய் தனக்குள் மறைத்த படி கீழே கிடந்து முருகா முருகா என்றா அம்மா. காதுகளை கிழித்துத் தலைக்கு மேல் வெடித்து அவர்களைத் தாண்டிச்சென்றது இரண்டாவது செல். இன்னும் கொஞ்ச நேரத்தில் அது விழும்.

´´மருமோள் தம்பி எங்கை´´ அம்மம்மா நடுங்கும் குரலில் கேட்டவ பதிலை எதிர்பாராமல் உட்சென்று படுத்துக் கிடந்தவனை பாயோடு சுருட்டி தரதரவென்று இழுத்துவந்து முற்றத்தில் போட்டா. ´´மருமோள் தலைக்கு மேலை வெடிச்சு வெடிச்சுப் போகுது. என்ன கோதாரியோ தெரியேல்ல. உங்கை கிட்டடியளிலதான் விழுகுது.´´ அம்மம்மா ஆர்ப்பாட்டங்களில் அணைந்து போயிருந்த மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றினா. அம்மா நிலத்தில் வளர்த்தியிருந்த மகளைத் தூக்கி பாயில் வளர்த்தி தலையணை வைத்து விட்டா. மகன் எழும்பி சப்பாணி கட்டி முழிச்சிருந்தான். இந்தச் சத்தங்களும் இரைச்சல்களும் சாவினை ஏற்படுத்தி விடும் என்பதனையும் சாவு அச்சந்தரக்கூடியது என்பதனையும் அந்த ஆறு வயதுகளில் அவன் அறிந்திருந்தான்.

´´பிள்ளை . பஞ்சு எடுத்தந்து ரண்டின்ரை காதுக்குள்ளையும் வைச்சு விடு. உந்த இரைச்சலும் சத்தமும் கூடாது´´ செல் அடிக்கும் போது வீடுகளிற்குள் இருக்கக் கூடாது.வெளியான இடங்களில் குப்புறப்படுத்துவிட வேண்டும். பதுங்கு குழிகள் இன்னும் பாதுகாப்பானவை. செல் தலைக்கு மேல் விழும் சந்தர்ப்பங்கள் தவிர (விழுந்தால் விதியெனச்சொல்லி விட்டு போய்ச் சேர வேண்டியதுதான்) மற்றைய பொழுதுகளில் உயிர்ச் சேதத்தைத் தடுக்கக் கூடிய நிறைய வழிகள் இருந்தன.

பதுங்கு குழியொன்றை வெட்டச்சொல்லி அம்மம்மாவின் வளர்ந்த பேரனொருவன் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான். இரண்டு பனைமரங்களை அதற்காக தறித்து விழுத்த வேண்டுமேயென்ற காரணத்திற்காக அம்மம்மா பெரிதும் அக்கறையெடுத்திருக்கவில்லை. தவிர மடத்துப் பிள்ளையார் அந்த அளவிற்கு விட மாட்டார் எனவும் அவர்கள் நம்பத் தலைப்பட்டார்கள். ´´நீ இருந்து பாரடா பிள்ளையாரைத் தாண்டி ஒரு துண்டுச் சன்னம் கூட வர அவர் விடமாட்டார்´´

தன்னைத் தாண்டி இரண்டு செல்களை அனுமதித்த மடத்துப் பிள்ளையார் அடுத்ததாக மூன்றாவதற்கு அனுமதியளித்தார்.

´´டப்´´ காதைக்கிழிக்கும் இரைச்சல். அம்மம்மா நிலத்தில் விழுந்து கிடந்தபடி விளக்கை ஊதி அணைத்தா. பாவம். ஏவப்பட்ட செல்லுக்கு விளக்கின் ஒளிபார்த்து விழும் வல்லமை இருக்கும் என அவ நினைத்திருக்கலாம். இரைச்சல் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. மூன்று வயது மகள் வீரிட்டுக் கத்தினாள். அதையும் தாண்டி அம்மம்மா பெருங்குரலெடுத்து கடவுள்களை அழைத்தா. அம்மா அமைதியாயிருந்தா ஆனால் அழுதுகொண்டிருந்தா. மகனும்

இம்முறை தலைக்கு மேல் அல்லாது சற்றுத் தூரத்தில் மேலே வெடித்து காற்றை உதைத்து முன்னேறி வரும் இரைச்சல் கேட்டது. ´´பிள்ளையாரப்பா .. என்ரை பிள்ளையளைக் காப்பாற்று .. ´´அம்மா முணுமுணுத்தா. ´´இங்கைதான் எங்கையோ விழப்போது. போறதெண்டால் எல்லாரும் ஒண்டாப் போகவேணும். ´´ இருந்தாற்போல அம்மம்மாவிடமிருந்து வெளிப்பட்டன அந்த வார்த்தைகள்.

விழுந்த இடமெங்கும் செந்நிறம் பாய்ச்சி வெடித்தது ஆட்லறி –  அது 1986 ம் ஆண்டு

திருச்சிக் காரங்க யாராவது இருக்கீங்களா
யுத்தம் எங்களை ஒவ்வொரு இடத்திலிருந்தும் தூக்கித் தூக்கி எறிந்தது என்று சொல்வதை, யுத்தம் எங்களுக்கு புதிய புதிய இடங்களை அறிமுகப் படுத்தியது என்று சொல் என்றார் ஒருவர். தனி விருப்பற்ற சமயத்தில், தக்க காரணங்கள் ஏதுமின்றி, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு புதுப் புது இடங்களுக்கு அலைவதை நேர் எண்ணத்தில் நினைப்பதை எந்த வகைக்குள் அடக்குவது எனத் தெரியவில்லை.

ஆனாலும் யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்துக்குள் கிடந்த என்னை, பாடசாலைக்குக் காலை வருவதும் மதியம் திரும்புவதுமென வாழ்ந்த என்னை, எப்போதாவது யாரோடாவது ஐஸ்கிரீம் குடிக்கவும் உடுப்புக்கள் வாங்கவும் மட்டுமே நகரத்துக்கு வந்து போன என்னை, கிளாலி கடநீரேரிக்கு அப்பால் உலகொன்றிருப்பது குறித்து எந்த அக்கறையும் இன்றிக் கிடந்த என்னை என்னைப் போன்றோரை, யுத்தம் தூக்கி ஒவ்வொரு ஊராகத் துரத்தியதென்பது, துயரும் வலியும் நிறைந்ததெனினும் அதுவே மற்றுமொரு வகையில் புதிய அனுபவங்களை, புதிய மனிதர்களை, புதிய நினைவுகளை எனக்குள் தந்தது என்பதையும் குறித்தாக வேண்டும்.

இல்லாவிட்டால் காடுகளிலிருந்து தோட்டங்களுக்குள் நுழையும் யானைகளை கலைப்பது எப்படி என தெரிந்திருக்க முடியுமா? முல்லைத் தீவின் அலைகளுக்குள் நீந்தியிருக்க முடியுமா..? இலுப்பைக் கடவையிலும் நாச்சிக் குடாவிலும் நீர்க்குட்டைகளுக்குள் குளித்திருக்க முடியுமா..? ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சி மடம், அக்கா மடம், திருச்சியென திரிந்திருக்க முடியுமா..?

1997 இல் மண்டபம் முகாமில் குறிப்பிடத் தக்க காலம் இருந்த பிறகு, திருச்சி சென்று குடியேற விண்ணப்பித்திருந்தோம். ஆனாலும் அதற்கான விசாரணைகள், வில்லங்கங்கள் என கொஞ்சக் காலம் இழுத்தடித்த பிறகும், மண்டபத்திலும் திருச்சியில் ஒரு பொலிஸ் நிலையத்திலும் கறந்து விட்டுத் தான் திருச்சி செல்ல அனுமதித்தார்கள். அந்தக் காலத்தில்த் தான் இந்தியன் தாத்தாவின் வருகையினால் எல்லோரும் லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் நிறுத்தியிருந்தார்கள் இந்தியன் படத்தில். ஆமாங்க படத்தில்த் தான்.

திருச்சிக்கு செல்வதற்கு முன் சில விடயங்களைச் சொல்ல வேண்டும். தமிழகத்திற்கு அகதிகளாக வருபவர்களில் ஓரளவு வெளிநாட்டு உறவகளின் பணபலம் உள்ளவர்களாலேயே அவர்கள் விரும்புகின்ற சிலவற்றைச் சாதித்துக் கொள்ள முடிகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அந்தவாறான எந்த உதவியுமற்று சின்னச் சின்னக் கூலி வேலைகள் செய்தும், முகாமில் கொடுக்கின்ற மலிவு விலை உணவுப்பொருட்களையும் பணத்தையும் மட்டுமே நம்பியும் வாழ்க்கையை இன்னமும் கொண்டு நடாத்துகிறார்கள். தினமும் கடலை வெறித்த படி பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களைப் பார்க்க வலிக்கும். உயிரை மட்டுமே வைத்திருப்பது தான் வாழ்க்கையா.. ?

(இவர்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் உதவியுடன் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் போன்ற ஏதாவது அமைப்புகளினூடாக உதவிகள் செய்ய முடியாதா என்பதற்கு அதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாகச் சொன்னார்கள். விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். )

நீண்ட காலத்திற்குப் பிறகு நிலையான மின்சாரம், தொலை பேசிப் பாவனை, கணணியை நேரே பார்த்தது, திரையரங்குகளில் புதிய படங்கள் என பல முதன்முதல் அனுபவங்களை (வேறை ஒண்ணும் இல்லைப்பா) திருச்சி எனக்குத் தந்தது. நாங்கள் காஜாமலைக் colony என்ற இடத்தில் குடியிருந்தோம். காஜாமலை என்பது ஒரு கற்குன்று. அவ்வாறான ஒரு உயர்ந்த கற்குன்றை மலையைக் கூடப் பார்ப்பது அப்போது தான் முதற்தடவை.

திருச்சியின் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து 88 ம் இலக்க பஸ் எடுக்க வேண்டும். வரும் வழியில் சிம்கோ மீட்டர் கம்பனிக்கு முதல் ஸ்டாப்.. யாருக்காவது தெரியுமா..?

திருச்சியில் எனது பாடசாலைக்கு இணையும் முயற்சிகள், பாடசாலைகளின் விதிப்படியும், எனது தலைவிதிப்படியும் தள்ளித் தள்ளியே போனது. பாடசாலை விடுகைப் பத்திரம் என்னிடமிருக்க வில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து ஓரிரவில் ஓடிவரும் போது விடுகைப்பத்திரத்திற்கு எங்கு போக முடியும்?  அந்த இடம் பெயர்வின் சன சமுத்திரத்தில் நமது பாடசாலை அதிபரைக் கூட கண்டிருக்கிறேன். அவரும் தனது குடும்பம் குழந்தைகளுடன் இடம் பெயர்ந்து கொண்டிருந்தார். அன்றைக்கு அவரிடம் கேட்டிருக்கலாமோ..?

முல்லைத் தீவின் உடையார் கட்டு மகாவித்தியாலத்தில் நான் உட்பட இடம்பெயர்ந்த எவரும் உத்தியோக பூர்வமாக இணையவில்லை. 95 இல் எந்த வகுப்பு படித்துக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்டு விட்டு 96 இல் அதற்கடுத்த வகுப்பில் இருந்து படியுங்கள் (உண்மையிலேயே இருந்து தான் – நிலத்தில் ) என விட்டார்கள்.

சரி..TC தான் இந்தப் பாடு படுத்துகிறதே என்றால் சாதிச் சான்றிதழ் அடுத்த கொளுக்கி போட்டுப் பிடித்தது. அதை நான் யாரிடம் எடுப்பது..? எப்படி எடுப்பது..? அதற்கு என்ன ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு கோதாரியும் எனக்கு விளங்கியிருக்கவில்லை. ஒரு பாடசாலையில் அதனை எமது சொந்த ஊரிலிருந்து வாங்கித் தரும் படி சொன்னார்கள். ஊரிலையெண்டால் விதானையிடம் தான் கேட்க வேண்டும். கேட்கிறவரை விதானை இயக்கத்திடம் பிடித்துக் கொடுக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்..:))

இப்படி இது ஒரு பக்கத்தால் நடந்தாலும், நாங்கள் வந்த காலப்பகுதியிலேயே வந்து, திருச்சியில் தங்கியிருந்த இரண்டு அண்ணன்களைப் பழக்கம் பிடித்து காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த கணக்கா ஒவ்வொரு திரையரங்குகளிலும் புதுப்படங்கள் பார்ப்பதை வாடிக்கையாக்கியிருந்தேன். பெரிய இடத்து மாப்பிளை, சூரிய வம்சம், நேருக்கு நேர் இவையெல்லாம் உடன் நினைவுக்கு வருகின்ற படங்கள். மீனா மோனா என்ற ஒரேயிடத்தில் அமைந்த ஒரு தியேட்டர் ஞாபகத்தில் உள்ளது.

உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு வாராவாரம் செல்வது வழமை. மேலே உச்சியில் நின்று கொண்டு அடிக்கும் காற்றிலிருக்கும் குளிரை அனுபவித்துக் கொண்டே இருக்கலாம்.

ஆடிப் பெருக்கொன்றின் போது காவேரிக் (காவேரிதானே..) கரைக்கு சென்றிருக்கிறேன். யாழ்ப்பாணத்தில் ஆறுகள் கிடையாது. வழுக்கையாறு என்ற ஒரு நீரோட்டம் மழைக் காலங்களில் இருக்கும். அது கூட யாழ்த் தாய் சத்திரசிகிச்சையில் பெற்றெடுத்த குழந்தையென்று சொல்வார்கள்.

திருச்சியில் அப்போது ஒரு ரூபாய்க்கு சாம்பார் கறிக்கு தேவையான அனைத்து மரக்கறிகளையும் வாங்கலாமென்றிருந்தது எனக்குப் பெரிய அதிசயம் தான். அதுமட்டுமல்லாமல் பொதுவாகவே பொருட்களின் விலைகள் நமக்கு அதுவரை பழக்கத்திலிருந்த விலைப் பெறுமதிகளிலிருந்து பெருமளவு வேறு பட்டிருந்தன. நான் வழமையாக செல்லும் கடைக்காரர் எனனைச் சிலோன் தம்பி என்பார். அவரைப் போன்றோருடன் பேசும் போது நானும் தமிழக பேச்சு வழக்கில் பேச முயற்சித்தேன்.

திருச்சியில் பெருமளவிலான இலங்கைத் தமிழர்கள் இருப்பதாகச் சொன்னார்கள். ஒருமுறை இலங்கையர் ஒருவரின் திருமண நிகழ்வொன்றில், இருவரைக் காட்டி அதோ அவங்கள் தான் தலைவரின் அப்பாவும் அம்மாவும் எனக் காட்டினார்கள். அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள் அவர்கள்.

ஆயினும் இந்தவாறான எதிர்காலம் என்னவென்று தெரியாத வாழ்க்கை மீது கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு வரத் தொடங்கி விட்டது. பாடசாலைக்கான அனுமதிகள் மறுக்கப் பட்டு விட்டன. எரிச்சல் மெதுவாக கிளம்பத் தொடங்கியது. கனவுகள் கலைந்து விட்ட ஏமாற்றம் தான் எஞ்சியது. ஆரம்பத்திலிருந்த சுற்றித் திரியும் ஆர்வம் அற்றுப் போய் வீட்டில் முடங்கத் தொடங்கினேன்.

யாருக்குப் பயந்து வந்தோமோ அவர்களின் கோட்டையான கொழும்புக்கே போய் விடலாம் என்ற அடுத்த முடிவுக்கு காலம் துரத்தியது. சென்னை விமான நிலையத்தில் வைத்து அகதிகள் முகாமிலிருந்து அனுமதியின்றி செல்கிறீர்கள் என்ற நியாயமான குற்றச்சாட்டினை முன்வைத்த கியு பிரிவு அதிகாரி ஒருவர் நியாயமாய்க் கேட்ட தொகையை கொடுத்து விட்டு விமானம் ஏறினேன்.

நன்றி திருச்சி
நன்றி இந்தியா

(ஒரு கற்பனைக்கு.. திருச்சியில் எங்கேனும் பாடசாலை அனுமதி கிடைத்திருந்தால் எல்லாப் பாதைகளும் மாறி ஒரு வேளை நான் இப்பொது அங்கேயே செட்டில் (ஆமாங்க செட்டில்..) ஆகி விட்டிருப்பேனோ என்னவோ..  )

ஒபரேசன் பூமாலை – அந்த நாள் நினைவுகள்
அண்மைக் காலச் செய்திகளின் படி இந்தியா இலங்கை அரசுக்கான சகல வித உதவிகளையும் செய்வதற்கான காலம் கனிந்து வருகிறது. மேற்கு நாடுகளிடம் வரிசையாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு ஆறுதல் சொல்லவும் அரவணைக்கவும் அருகில் யாராவது இருக்கத் தானே வேண்டும். ஆயினும் அது பற்றிப் பேசுவதல்ல இப்பதிவு.

1987 யூன் 4 இந்தியா யாழ் குடாநாட்டின் பகுதிகள் மீது உணவுப் பொட்டலங்களை இட்டு இப்போது 20 வருடங்களாகி விட்டன. ஒபரேசன் பூமாலை என்ற இந்த நடவடிக்கை தொடர்பாக இந்திய இராணுவத் தரப்புக்கள், அப்போதைய இந்திய பத்திரிகைகள் என்ன சொல்லின?, அது பற்றி தகவல்கள் என்ன என்பன குறித்து, இன்னுமொரு தேவைக்காக தகவல்கள் திரட்டியபோது bharat-rakshak என்னும் இந்திய இராணுவத்தின் இணையத்தளம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் தமிழ் வடிவம் இது.

இக் கட்டுரையின் இடையில் வரும் இப்பந்தியினை வாசித்து விட்டு முழுவதையும் படியுங்கள்.

கடந்த மாதங்களில் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இது இலங்கையில் வாழும் தமிழ் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்த கவலையை இந்தியாவில் ஏற்படுத்தியது. உண்மையில் அது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும் கூட யாழ்ப்பாணத்தில் நடக்கும் சம்பவங்கள் இலங்கைத் தமிழரை தமது சகோதரர்களாகக் கருதும் தமிழக மக்களிடையே கொந்தளிப்பையும் உணர்வுப் பெருக்கையும் அதிகரித்து விட்டிருந்தது. சட்டங்களும் நீதிகளும் எதுவாக இருப்பினும் அந்த நேரத்தில் வெறுமனமே பார்த்துக் கொண்டிருப்பதில்லை என்ற முடிவை இந்திய அரசு எடுத்தது.

நாள்: யூன் 3 1987

இடம்: இந்திய விமானப் படையின் மிராஜ் ரக விமானங்கள் தரித்து நின்ற, மிக முக்கிய தளங்களில் ஒன்றான க்வாலியருக்கு (Gwalior) அருகில் மகாராஜ்பூர் விமானப் படை நிலையம்.
நேரம்: காலை 5.30,

No 7 படைத்தொகுதியின் (The Battle Axes) கட்டளையிடும் அதிகாரி அஜித் பவ்னானி (Wing Commander Ajit Bhavnani) அந்த மிக முக்கிய செய்தியை பெற்றுக் கொண்ட போது வெளிச்சம் இன்னும் முற்றாகப் பரவியிருக்கவில்லை. செய்தியில் தேவையான நபர்களுடன் சில விமானங்களை நாட்டின் தெற்கே, பெங்களூரின் ஹால் (Hal) விமான நிலையத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லும் படி அறிவுறுத்தப் பட்டிருந்தது.
மதியத்திற்கு சற்று முன்னர் 11.30க்கு பவ்னானி தன் மிராஜ் 2000 இலும், கூடவே 5 சிறப்பு அனுபவம் பெற்ற விமானிகள் வேறு விமானங்களிலும் பறப்பை ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் பெங்களூர் விமான நிலையத்தை சென்றடைந்தனர். அங்கு அவர்களுக்கு யெலஹங்கா (Yelahanka) விமானத் தளத்தில் தரையிறங்கும் படி அறிவுறுத்தப் பட்டது.

இரவு 9 மணியளவில் விமானிகள் தமது நடவடிக்கைக்கான அறிவுறுத்லை பெறும் வரையில் தமக்கான செயற்திட்ட விபரமெதனையும் பெற்றிருக்கவில்லை. இப்போது சொல்லப்பட்ட அறிவுறுத்தலின் படி அவர்கள் இலங்கையின் வடபகுதி மக்களுக்கான உணவு மற்றும் உதவிப் பொருட்களை வானிலிருந்து விநியோகிக்க உள்ள An-32 விமானத்திற்கு துணையாக செல்ல இருக்கின்றனர்.

இதற்கிடையில் நாட்டின் வடக்கில் ஆக்ராவில் (Agra ) PTS (Paratroopers Training School) தளத்தில் ஐந்து An – 32 விமானங்களில் உதவிப் பொருட்களை நிரப்பும் பணியில் பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். பொதுவாக இங்கு பரா றெஜிமென்டில் (Para regiment) உள்ள இந்திய இராணுவ வீரர்களுக்கு பரசூட் பயிற்சியே வழங்கப் படுகின்ற போதும், இன்று காலை அஜித் பவ்னானி குழுவினர் பெற்றதைப் போன்ற எதிர்பாரா அறிவுறுத்தலுக்கமைய, அவர்கள் உதவிப் பொருட்களையும் முடிந்தளவான மரக்கறி வகைகளையும் அட்டைப்பெட்டிகளிலும் பொலீத்தீன் பைகளிலும் அடைத்து அவற்றை பரசூட்டுகளுடன் இணைத்துக் கொண்டிருந்தார்கள்.

1971 போருக்குப் பின்னர் முதற் தடவையாக இன்னொரு நாட்டின் வான் பரப்பினுள் நுழைந்து நடாத்த இருந்த இந் நடவடிக்கைக்கு ஓபரேசன் பூமாலை என பெயரிடப்பட்டது.

கடந்த மாதங்களில் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இது இலங்கையில் வாழும் தமிழ் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்த கவலையை இந்தியாவில் ஏற்படுத்தியது. உண்மையில் அது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும் கூட யாழ்ப்பாணத்தில் நடக்கும் சம்பவங்கள் இலங்கைத் தமிழரை தமது சகோதரர்களாகக் கருதும் தமிழக மக்களிடையே கொந்தளிப்பையும் உணர்வுப் பெருக்கையும் அதிகரித்து விட்டிருந்தது. சட்டங்களும் நீதிகளும் எதுவாக இருப்பினும் அந்த நேரத்தில் வெறுமனமே பார்த்துக் கொண்டிருப்பதில்லை என்ற முடிவை இந்திய அரசு எடுத்தது.

கடந்த மே மாதம் இலங்கை அரசுக்கு அறிவிக்கப் பட்டு கப்பல் மூலமாக மனிதாபிமான நோக்கில் எடுத்துச் செல்லப்பட்ட 1000 தொன்களுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் தடுத்தி நிறுத்தி திருப்பியனுப் பட்டன. இந்நிகழ்வும், அதனை கொழும்பு அரசு தனக்கான வெற்றியெனக் கொண்டாடிய விதமும், இந்திய இரசு இந்த விடயத்தை இலகுவில் விட்டுவிடப் போவதில்லையென்பதனைத் தெளிவாக்கின. தற்போதைய ஆகாய மார்க்கமான உணவு விநியோகத்தின் கால்கோலாகவும் அது அமைந்தது.

யூன் 4

ஆக்ராவில் உதவிப் பொருட்களை விமானத்தில் ஏற்றும் பணியாளர்கள் இராணுவ வீரர்களின் உதவியுடன் அதனை முடித்தனர். பொருட்களுடன் தயாராய் நின்ற An – 32 விமானம், பகல் வெளிச்சம் ஏற்பட்ட பின்னர் சுமார் 8 மணியளவில் பெங்களூரை நோக்கிப் பறக்கத் தொடங்கியது. விமானத் தலைமையகத்திலிருந்து பெங்களூரிற்கு வந்திருந்த எயர் வைஸ் மார்ஸல் டென்சில் கீலொர் ( Air vice marshal Denzil Keelor) இறுதி நேர அறிவுறுத்தல்களைப் பகிர்ந்து கொண்டார்.

மதியம் தாண்டிய 3 மணி,  புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவர் வெளிவிவகார அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டார். நான்கு மணியளவில் இந்தியாவின் ஏதோ ஒரு இடத்திலிருந்து புறப்படும் விமானங்கள் யாழ்ப்பாணப் பகுதிகளில் ஆகாய மார்க்கமான உணவு விநியோகத்தில் ஈடுபடும் என்ற செய்தி திரு நட்வார் சிங் அவர்களினால் இலங்கைத் தூதுவருக்கு அங்கு வைத்துச் சொல்லப்பட்டது. கூடவே இந் நடவடிக்கை முழுமையாக செய்து முடிக்கப் படும் என தாம் எதிர் பார்ப்பதாகவும் ஏதாவது எதிர் நடவடிக்கைகள் இலங்கை இராணுவ தரப்பில் இருந்து வெளிப்பட்டால், அவை மிராஜ் 2000 விமானங்கள் மூலம் இராணுவ வழியில் எதிர் கொள்ளப்படுமெனவும் எச்சரிக்கப் பட்டது.

ஆயினும் அந்த எச்சரிக்கை தேவையற்றதாக இருந்தது. இலங்கை விமானப் படை வசம் அப்போதிருந்த சியாமசெட்டி ரக விமானங்களால் இந்திய விமானங்களை வானில் வைத்து எதிர் கொள்வதென்பது சாத்தியமற்றதாயிருந்தது. அப்படி ஏதாவது எதிர் நடவடிக்கைகள் இலங்கைத் தரப்பிலிருந்து வருமானால் அது நிலத்திலிருந்து வரும் சூடுகளாகவே இருக்க முடியும்.

அதே நேரத்தில் பெங்களுரில் இறுதிக் கட்ட சோதனைகள் முடிந்திருந்தன. உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். அவர்களையும் An-32 விமானத்தில் அனுமதிப்பதென முடிவு செய்யப்பட்டு 35 ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஒவ்வொரு குழுவில் 7 நபர்களாக ஐந்து விமானங்களிலும் அவர்கள் ஏற்றப் பட்டனர்.

மாலை 3.55

முதலாவது An-32 விமானம் கப்டன் சுந்தர் மற்றும் ஸ்வாரப் ( Flt Lt SR Swarup ) ஆகியோரின் வழி நடத்தலில் மேலெழுந்தது.யாழ்ப்பாணம் சென்று மீளும் 900 Km தூரத்தைக் கொண்ட ஒரு சுற்றுப் பறப்பாக இது அமையும். இதற்கிடையில் நான்கு மிராஜ் விமானங்கள் பவ்னானி தலைமையில் பறப்பில் இருந்தன. இலங்கை விமானப் படைகள், வான் எதிர்ப்பில் ஈடுபட்டால் பயன்படுத்துவதற்காக இரண்டு மத்ரா மஜிக் II(Matra Magic) வானிலிருந்து வானுக்கான ஏவுகணைகள் அவற்றில் பொருத்தப் பட்டிருந்தன. ஆயினும் அவை தேவைப் படவில்லை.

பாக்கு நீரிணையை கடந்து முடித்த An-32 விமானங்களிலிருந்து 1000 அடி மேலே மிராஜ் விமானங்கள் பறப்பில் ஈடுபட்டன. ஐந்தாவது மிராஜ் இந்தியக் கரையோரமாக வான் அலைத் தொடர்புக்கான இணைப்புக்காக பறந்து கொண்டிருந்தது. தவிர இரண்டு An – 32 விமானங்களும் பெங்களூருக்கான றேடியோத் தொடர்பின் இடை இணைப்பிற்காக பறந்தன.

இந் நடவடிக்கையின் வழி நடத்தல் அதிகாரி கப்டன் சுந்தர் 4.47 அளவில் கொழும்பிற்கான றேடியோத் தொடர்பினை ஏற்படுத்த முயற்சித்தார். அது கை கூடவில்லையாயினும் ஒன்றினைத் தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அதாவது கொழும்பு ATC (Air-traffic control) றேடியோத் தொடர்புகளைக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆயினும் பதிலெதனையும் தரவில்லை.

நேரம் மாலை 4.50

விமானங்கள் யாழ் குடாநாட்டின் வான் பரப்பைத் தொட்டன. An-32 தனது பறப்பின் உயரத்தை 1500 அடி வரை குறைத்தது. கட்டளைக்கு ஏற்ப கதவுகள் திறக்கப் பட்டு உதவிப் பொருட்கள் கீழே போடப்பட்டன. வெள்ளை நிற பரசூட்கள் உடனுக்குடன் விரிந்து தீர்மானிக்கப்பட்ட பகுதிகளில் சென்று இறங்கின.

நடவடிக்கை பூரணப்படுத்தப்பட்டது. விமானங்கள் வடபகுதியில் அமைந்த இலங்கை விமானப் படைத் தளமான பலாலிக்குச் சமீபமாக பறப்பில் ஈடுபட நேர்ந்தாலும் இலங்கை இராணுவப் படைகளிடமிருந்து நிலத்திலிருந்தோ வானிலிருந்தோ எதிர்ப்பெதுவும் வரவில்லை.

மாலை 6.13 அளவில் விமானங்கள் பெங்களூரில் சென்று தரையிறங்கின. விமான தளத்தில் விமானிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.பிரதமர் அலுவலகத்திலிருந்து வாழ்த்து செய்திகள் அனுப்பப் பட்டன.

இலங்கை இந்நடவடிக்கையை அரச மற்றும் இராணுவ வன்முறைச் செயல் என கண்டித்தது. அமெரிக்கா கவலை மட்டும் தெரிவித்தது. மேலதிக கருத்துக்களைச் சொல்ல மறுத்தது.

விநியோகிக்கப் பட்ட உதவிப் பொருட்டகள் 23 தொன்களை விட அதிகமில்லையென்பதோடு முழுமையானவையுமல்ல. ஆனால் வலுப்பெறும் சிவில் யுத்தத்தினை இந்தியா ஒரு போதும் ஒரு பார்வையாளராக இருந்து பார்க்காது என்ற செய்தியினை இலங்கை அரசுக்கு இந்த நடவடிக்கை சொன்னது.

If it was against the interests of the ethnic Tamil minorities, then it would be against Indian interests as well as there would be corresponding repercussions in its own indigenous tamil population.

அண்மைய செய்தி – யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களுக்காக பழ நெடுமாறன் தலைமையில் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட உதவிப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக அனுப்புவதற்கு இந்திய அரசு அனுமதி மறுத்திருக்கிறது.
Sources: www.bharat-rakshak.com

ஆனந்தன் அண்ணா, நேற்றும் உங்களை நினைத்தேன்
ஆனந்தன் அண்ணை.. உங்களை நான் கடைசியாக் கண்ட போது நீங்கள் வழமைக்கு மாறாக அமைதியா இருந்தீங்கள். அப்பிடியொரு அமைதியில உங்களை நான் அதற்கு முதல் பார்த்ததே இல்லை. எப்பவும் சிரிப்பும் கும்மாளமுமா இருக்கும் நீங்கள் அண்டைக்கு ஏன் அப்பிடி இருந்தீர்கள்? அதுவும் ஆர்மோனியப் பெட்டியை நீங்கள் வாசிக்க, நாங்கள் பாட, வீடே கலகலக்கும். சில வேளை நீங்களே பாடிக்கொண்டு ஆர்மோனியம் வாசிப்பீர்கள். ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது என குரலை உயர்த்திப் பாடுவது அவ்வளவு நல்லாயிருக்காது என்றாலும் ஆர்மோனிய இசை, அதையெல்லாம் கடந்து இனிக்கும். நீங்கள் அந்தப் பாட்டைப் பாடும் போதெல்லாம் அம்மாவோ, அத்தையோ வழமையாக் கேட்கும், ஆனந்தன் ஆரடா அந்தப் பெட்டை எண்ட கேள்விக்கு பாட்டினூடே சிரிப்பியள் ஒரு சிரிப்பு அந்தச் சிரிப்பை கடைசியா உங்களைக் கண்ட போது நான் காணவில்லை.

ஆனந்தன் அண்ணை நாங்கள் எல்லாரும் ஒண்டாத் தான் இடம்பெயர்ந்தம். ஆமி, பொன்னாலை மாதகல் எண்டு எல்லா இடத்தாலையும் மூவ் பண்ணுறான் எண்ட செய்தி கேட்டதும் தான் தாமதம் முடிந்தவரை எல்லா சாமான் சக்கட்டுக்களையும் தூக்கி சைக்கிளில கட்டத் தொடங்கினம். அண்ணா நீங்கள் உங்கடை ஆர்மோனியப் பெட்டியைத் தூக்கி சைக்கிளில கட்ட, உங்கடை அம்மா பேசுறா. மனிசர் சாகக் கிடக்கிற நேரம் உனக்கு உது தானோ அவசரம். கழட்டி எறி. நீங்கள் என்ன நினைத்தியளோ தெரியா ஆர்மோனியப் பெட்டியை சைக்கிளில இருந்து இறக்கி வைச்சிட்டு கொஞ்சம் நேரம் அதையே பாத்தியள்.

செல் சத்தங்களும் பிளேன் சத்தங்களும் கிட்டவாக் கேட்கத் தொடங்கிட்டுது. துப்பாக்கி வெடிக்கிற சத்தங்களையும் கேட்கக் கூடியதாயிருந்தது. ஆமி, சண்டிலிப்பாய் பக்கத்தாலையும் மூவ் பண்ணுறான் எண்ட உடனை நாங்கள் நவாலியால யாழ்ப்பாண ரவுணுக்கு போக முடிவெடுத்து தெருவில இறங்கினம். தெரு முழுக்கச் சனம். சிவராசன் அண்ணை வந்து தன்ரை ரண்டு பொம்பிளைப் பிள்ளையளையும் எங்களோடை கூட்டிக்கொண்டு போகச் சொல்லிட்டு, தான் பிறகு தங்கடை அம்மாவைக் கூட்டிக்கொண்டு வாறன் எண்டுவிட்டு போயிட்டார். அத்தானிட்டை மோட்டச்சைக்கிள் இருந்ததாலை அவர் முதலில எங்கடை அம்மம்மாவையும் குழந்தையோடை இருந்த கீதா அன்ரியையும் கொண்டுபோய் விட்டுட்டு வாறேனெண்டு சொல்லிட்டுப் போனார்.

ஆனந்தன் அண்ணை வழி முழுக்க நீங்கள் பேசாமல் வந்தியள். நீங்கள் சிவராசன் அண்ணையின்ர கடைசி மகள் சோபாவை சைக்கிளில ஏத்தி வந்தனியள். அவள் அழுது கொண்டேயிருந்தாள். அவ்வப்போது அழாதையடி எண்டு அவளுக்குச் சொல்லிக்கொண்டு வந்தீங்கள். இதுக்கிடையில மோட்டச்சைக்கிளில போன அத்தான் திரும்பி வந்தார். அம்மம்மாவையும், கீதா அன்ரியையும் நவாலியில உள்ள தேவாலயத்தில் விட்டு வந்ததாகவும் அந்தப் பக்கம் பிரச்சனை இல்லையெண்டும் சொன்னார். இந்த முறை அவர்,அத்தை அம்மா இவையளை ஏத்திக்கொண்டு போனார்.

நாங்களும் நவாலியில சென் பீற்றர்ஸ் தேவாலயத்துக்கு வந்து சேர்ந்தம். தேவாலயம் அமைந்த சூழல் வீதி மூடிய மரங்கள் நிறைந்த நிழலான பகுதி. இடம்பெயர்ந்த மொத்தச் சனமும் அங்கை தங்களை ஆசுவாசப் படுத்திக்கொண்டிருந்திருந்தினம். சண்டை நடக்கிற பிரதேசத்தை தாண்டி வந்திட்டம் எண்டளவில நாங்களெல்லாம் செய்தியறியிற ஆர்வத்தில அங்கையிங்கையெண்டு கதைச்சுக் கொண்டிருந்தம். அழுது கொண்டிருந்த சோபா கூட இப்ப சிரிச்சுக் கொண்டிருந்தாள். தீபா தான் அப்பாவைக் காணேல்லையெண்டு அந்தரிச்சுக் கொண்டிருந்தாள். ஆனந்தன் அண்ணா நீங்கள் ஆரோடும் கதைக்கவில்லை. உங்கடை அம்மா அரிசி மாவுக்குள்ளை தண்ணியும் சீனியும் போட்டுக் குழைச்சு எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தா.

எல்லாரையும் நல்லூர் கோவிலுக்கு வந்து சேரச் சொல்லிவிட்டு அத்தான் தனக்குத் தெரிந்த ஒரு அங்கிள் வீட்டை போய் தங்குமிட வசதிபற்றி அறிந்து கொண்டு வாறதாச் சொல்லிப் புறப்பட்டார். நானும் அவரோடை வெளிக்கிட்டன். உண்மையில நான் சைக்கிள் ஓடிக் களைச்சுப் போயிருந்தன். நாங்கள் வெளிக்கிட்டம்! என்னோடை கீதா அன்ரியும் குழந்தையும்.

ஆனந்தன் அண்ணா அப்பதான் நான் உங்களைக் கடைசியாப் பாக்கிறன் எண்டு எனக்குத் தெரியேல்லை. நாங்கள் வெளிக்கிட்டு ஆனைக் கோட்டைச் சந்தி தாண்ட.. புக்காரா குத்துற சத்தம் காதைக் கிழிக்குது. மோட்டச் சைக்கிளை பிரேக் அடிச்சு நிப்பாட்டிப் போட்டு றோட்டோரமா விழுந்து குப்புறப் படுத்தன். கீதா அன்ரி தன்ர குழந்தையை நெஞ்சுக்குள்ளை வைச்சுக்கொண்டு விழுந்து கிடந்து, முருகா முருகா எண்டு கத்துறா. தொடர்ந்து எட்டுக் குண்டுகள் ஒரே இடத்தில், ஒரே பிளேனில இருந்து. நிலம் ஒருக்கா அதிர்ந்து தணிந்தது.

அத்தானுக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கிட்டுது. பக்கத்தில இருந்த ஒரு வீட்டில கீதா அன்ரியையும் குழந்தையையும் விட்டுவிட்டு அத்தான் என்னையும் ஏத்திக்கொண்டு திரும்பவும் நவாலிப் பக்கமா ஓடத் தொடங்கினார். அங்கிருந்து வாற எல்லாரிடமும், அண்ணை எங்கை விழுந்தது, அண்ணை எங்கை விழுந்தது எண்டு கேட்கிறம். ஆருக்குமே தெரியேல்லை.  இதுக்கிடையில ரண்டு மூண்டு வாகனங்கள் காயப்பட்ட ஆக்களை ஏத்திக் கொண்டு எதிர்த்திசையில் போகிறது.

நவாலித் தேவாலயச் சூழலை அடையாளமே காண முடியேல்லை. ஒரே புகை மண்டலம். காலுக்கு கீழே மிதிபடும் இடமெல்லாம் மனித தசைத் துண்டங்கள்.  ஆனந்தன் அண்ணா அந்தக் கணத்தை எனக்கு எப்பிடி எழுதுறது எண்டு தெரியேல்லையண்ணா. என்ர அம்மா, அத்தை, அம்மம்மா, ஆனந்தன் அண்ணா.. ஐயோ என்னாலை கத்தக் கூட முடியேல்லையண்ணா.

நான் முதலில கண்டது சோபாவைத்தான். அவளுக்கு நெற்றி, கன்னம் எல்லாம் ரத்தம். கையாலை பொத்திக் கொண்டு குழறிக் கொண்டிருந்தாள். அத்தை தன்ர சேலையில இருந்து கிழிச்சு அவளுக்கு கட்டுப் போட்டுக் கொண்டிருந்தா. அத்தையைப் பார்க்க ரத்தத்தில் குளித்திருப்பது போல கிடந்தது. இதுக்கிடையில சுவர் ஒன்று மேல் விழுந்து உள்ளிருந்து கத்திக் கொண்டிருந்த மச்சாளை அத்தான் கண்டு தூக்கிட்டார். அவவுக்கு காயம் ஒண்டும் இல்லை. ஆனா அவவுக்கு பேச்சு மூச்சொண்டும் வரேல்லை. தீபாவுக்கும் வயிற்றில் கிழியல். மற்றவர்களை உடல் முழுக்க மண்ணும் இரத்தமுமாக அடையாளம் கண்டு கொண்டோம்.

ஆனந்தன் அண்ணா.. என்னவோ தெரியேல்லை. ஆம்பிளையள் எல்லாம் தப்பியிருப்பினம் எண்டு அப்ப நான் நினைச்சிருந்தன் அண்ணா. உங்கடை அம்மா, ஆனந்தன் ஆனந்தன் எண்டு கத்தித் தேடுறது எனக்கு கேட்டது. ஆனந்தன் அண்ணா நீங்கள் எங்கை.. ?

அண்ணா.. நான் உங்களைப் பாத்தபோது நீங்கள் இரண்டு கைகளையும் மேலே தூக்கி திரும்பிப் படுத்திருந்தியள். உங்கடை அம்மா உங்கடை கன்னத்தை தட்டித் தட்டி கத்தினா. உங்களுக்குக் காயம் எதுவுமில்லையெண்டும் மயங்கிட்டியள் எண்டும் தான் நான் நினைச்சிருந்தன். அத்தை உங்கள் முகத்தில் தண்ணி தெளிச்சுக் கொண்டிருந்தா.

அண்ணா உங்கடை உடலைத் திருப்பியபோது தான் கவனிச்சம். நெஞ்சில் இதயமிருக்கும் பக்கமிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்ததை. பெரும் காயம் எதுவுமில்லையண்ணா உங்களுக்கு. ஆனா…

ஆனந்தன் அண்ணா உங்களுக்குச் செத்த வீடு கூட செய்யமுடியவில்லை. உழவு இயந்திரம் ஒன்றில் உங்கள் உடலை ஏற்றி, வரும் வழியில் கோம்பயன் மயானத்தில் எரிக்கக் கொடுத்து விட்டுக் கூடியழத்தான் முடிந்தது.

ஊரெல்லாம் உன் பாட்டுத் தான் உள்ளத்தை மீட்டுது என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் மேலே கைகளைத் தூக்கி திரும்பிப் படுத்திருந்த உங்களை நினைப்பேன் ஆனந்தன் அண்ணா. அது தவிர நீங்கள் இறந்த ஐந்தாவது நாளும் 2001 இன் நடுப்பகுதி ஒன்றிலும் நேற்றும் உங்களை நினைத்தேன்.

சில செய்திகள்:

1995 யூலை 9 இலங்கை இராணுவம் யாழ்குடாநாட்டின் வலிகாமம் மேற்குப் பகுதியில் மேற்கொண்ட ஒபரேசன் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கை காரணமாக தமது கிராமங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்து சண்டை நடக்கும் பிரதேசத்திற்கு அப்பால் உள்ள நவாலித் தேவாலயத்தில் தங்கியிருந்த மக்கள் மீது இலங்கை அரச விமானப்படைக்குச் சொந்தமான புக்காரா ரக விமானம் நடாத்திய குண்டுத் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

1995 யூலை 14 முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக புலிகள் நடாத்திய எதிர்ச்சமரில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

2001 யூலை 24 கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தினுள் நுழைந்த புலிகள் அங்கிருந்த விமானப் படைக்குச் சொந்தமான 13 வான்கலங்களைத் தாக்கியழித்தனர்.

2007 மார்ச் 26 வான்புலிகள் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்தினுள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டார்கள்.

அந்த ஐந்து பேரையும் யாருக்காவது தெரியுமா..?
இன்று ஒருவருடன் நமது இளம் பராயத்து நினைவுகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்த போது இது பற்றிய பேச்செழுந்தது. அதாவது நமது இளம்பராயத்து பாடப் புத்தகங்களில் இடம் பெற்ற சுவையான சுவாரசியமான கதைகளை இப்போதும் நம்மால் நினைவு கொள்ள முடிகிறதா என கொஞ்சம் முயற்சித்துப் பார்த்தோம். குறிப்பாக தமிழ் ஆங்கில பாடப்புத்தகங்களில் இவ்வாறான நிறையக் கதைகள் இருந்தன. கதைகள் மட்டுமல்லாமல் பாடல்களும் கூட.

இதனைப் படித்துக் கொண்டிருக்கும் யாருக்காவது Muru என்பவரைத் தெரியுமா? ஆரம்ப ஆங்கில பாடப் புத்தகத்தில் I am Muru, I am from Nigeria எனத் தன்னை அறிமுகப் படுத்துவாரே.. அவர் தான். அவரைத் தெரிந்திருந்தால் நீங்கள் என் வயதொத்தவர்கள்.

Muru ஐ போல மொத்தம் 5 பேர் இருந்தார்கள் என நினைக்கிறேன். எனக்கு Taro ஐயும் ஞாபகமிருக்கிறது. I am Taro, I am from Japan என்றவர் அவர். இது தவிர இந்தியாவிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் இருவர் இருந்திருக்கிறார்கள். இலங்கையில் இருந்து கூட ஒரு பெண் தன்னை அறிமுகப் படுத்தியிருப்பார். இவர்கள் எல்லோரும் சேர்ந்து தேங்காய்ப் பூ இனிப்புச் செய்து சாப்பிட்டதும் நினைவிருக்கிறது.

இவர்கள் ஐவரின் பெயர்களும் ஊர்களும் யாருக்காவது தெரியுமா.? எனது அறிதலின் படி வசந்தன், சிநேகிதி, டிசே போன்றோர் இதற்கு பதிலளிக்கக் கூடியவர்களாக இருக்கலாம். இது தவிர, வேறு கதைப்பாத்திரங்களையும் நீங்கள் அறிமுகப்படுத்தலாம். (நான் மூளையைப் போட்டு எவ்வளவு குழப்பியும் சிறு வயது தமிழ்ப் புத்தகங்களிலிருந்து எந்தக் கதையையும் என்னால் நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. )

எமக்கு முந்தைய பாடத்திட்டத்திலிருந்த இவ்வாறான சுவாரசியமான கதைகள் பற்றியும் அறிய ஆவல் உள்ளது.(கானா பிரபா உங்களை அங்கை சேர்க்கவா ? இங்கை சேர்க்கவா?) எமக்குப் பின்னும் பாடத்திட்டம் மாற்றப் பட்டிருக்கிறது. யாராவது சின்ன வட்டுக்கள் அதையும் எழுதுங்கள்.

தமிழகத்தில் எப்படி..? உங்கள் சிறு வயதில் பாடப்புத்தகங்களில் இருந்த சிறு சிறு கதைகள் அல்லது எவையாயினும் சுவையான விடயங்கள் பற்றி முடிந்தால் ஒரு outline கொடுக்கலாமே..

ஈழப் பாடல்களின் நினைவுகளில்..
பாடல்களுக்கு கடந்த காலங்களை நினைவு படுத்துகின்ற அற்புத சக்தி இருப்பதாகவே நான் கருதுகின்றேன். தமிழ்ச்சினிமாவின் பல பாடல்கள் என் சில கடந்த காலங்களை நினைவு படுத்துகின்றன என்பதற்கும் அப்பால் தமிழ்ச் சினிமாவிற்கு சற்றேனும் சம்பந்தப்படாத நாம் வளர்கின்ற காலங்களில் எந்த திணிப்பும் இல்லாமல் இயல்பாகவே எங்களுக்கு கேட்க கிடைத்த தமிழீழ எழுச்சிப் பாடல்களில் சிலவும் என் கடந்த காலங்களை நினைவு படுத்தியே நிற்கின்றன.

திலீபன் அழைத்தது சாவையா இந்தச் சின்ன வயதில் அது தேவையா என்ற பாடலைக் கேட்கையில் 87 இல் எங்கள் வீட்டின் கட்டட வேலைகள் நடந்த காலம் நினைவுக்கு வருகிறது.

கிழக்கு வானம் சிவக்கும் நேரம் என்னும் பாடலைக் கேட்கின்ற போதெல்லாம் 93 இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் எனது ஆரம்ப நாட்கள் ஞாபகத்தில் வருகின்றன.

ஓடு ஓடு நீ ஓய்ந்து விட்டால் வரும் கேடு என்ற பாடலில் 95 இன் வரலாற்றுத் துயரம் யாழ்ப்பாண இடம் பெயர்வு நினைவில் எழுகிறது.

சின்ன சின்ன கூடு கட்டி நாமிருந்த ஊரிழந்தோம் என்ற பாடல் எனது வன்னி நாட்களை நினைவில் இழுக்கிறது.

ஆரம்ப காலங்களில் தமிழ்ச் சினிமாவில் வெளிவந்த சில எழுச்சி மிகு பாடல்கள் தான் தமிழீழ விடுதலைப் போரின் பரப்புரைக்கு பயன்படுத்தப் படும் பாடல்களாக இருந்திருக்கின்றன.

ஊமை விழிகள் திரைப் பட பாடலான தோல்வி நிலையென நினைத்தால் அவ்வகையான ஒரு பாடல்.

பின்னர் தமிழீழ விடுதலைப் போரிற்கென தனித்துவமான பாடல்களை தயாரிக்கத் தொடங்கிய காலங்களில் தமிழக கலைஞர்களின் பங்களிப்பு மகத்தானவையாக இருந்திருக்கின்றன.

தேனிசை செல்லப்பாவின் குரல் இன்னமும் எங்கள் நினைவில் நிற்கின்றது. வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன், இசையமைப்பாளர் வைத்திய நாதன், மனோ ஆகியோரும் குறிப்பிடக் கூடிய அளவு பங்களிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.

வாணி ஜெயராமின்
நல்லூர் வீதியில் நடந்தது யாகம்
நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம்
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை
திலீபனை பாடிட வார்த்தைகள் இல்லை

என்ற பாடல் கேட்பவர்களின் கண்ணீரை வரவழைக்கும்.

மலேசியா வாசுதேவன் பாடிய
நடடா ராசா மயிலைக் காளை நல்ல நேரம் வருகுது
நடடா ராசா சிவலைக் காளை நாளை விடிய போகுது
பொழுது சாயும் நேரம் – இது
புலிகள் வாழும் தேசம்

என்ற பாடல் நம்பிக்கை ஊட்டுகின்ற ஒரு பாடல்.

மனோ இன்னுமொரு பெண் பாடகியுடன் இணைந்து பாடிய பாடல் காதல் வயப்பட்டிருந்த இரு உள்ளங்கள் விடுதலைப் போரில் இணையும் பொருட்டு தம் காதலை தியாகம் செய்வதாய் அமைந்திருந்தமை கவனிப்புக் குரியது.

தென்னங்கீற்று தென்றல் வந்து மோதும் – என்
தேசமெங்கும் குண்டு வந்து வீழும்
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் – அவள்
கையில் கூட ஆயுதங்கள் ஏறும்

என்று ஆரம்பிக்கின்ற பாடல் இப்படி தொடர்கிறது.

காவலுக்கு வந்த பேய்கள்??? கடிக்கும் நாளையில் – ஒரு
காதலென்ன மாலையென்ன இந்த வேளையில்?
எங்கள் புலி வீரர் அவர் இருக்குமிடம் போறேன். – தமிழ்
ஈழம் வந்தால் வாறேன்.

தவிர ஒரு சிறுமியின் குரலில் தமிழக பாடகி ஒருவர்(பெயர் நினைவில்லை) பாடிய காகங்களே காகங்களே காட்டுக்கு போறீங்களா?
காட்டுக்கு போய் எங்கள் காவல் தெய்வங்களை கண்டு களிப்பீர்களா?
என்ற பாடல் அப்போது சிறுவர்களாக இருந்த எங்களுக்கு மிகப் பிடித்த பாடலாக இருந்தது.

வாணி ஜெயராம் பாடிய வீசும் காற்றே தூது செல்லு என்ற பாடலின் பல வரிகள் பத்து ஆண்டுகள் கடந்தும் என் நினைவில் நிற்பது ஆச்சரியமாய் இருக்கிறது. அது இதுதான்.

வீசும் காற்றே தூது செல்லு
தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு
ஈழத்தில் நாம் படும் வேதனைகள் – அதை
எங்களின் சோதரர் காதில் சொல்லு

கத்திடக் கேட்டிடும் தூரமல்லோ – கடல்
கை வந்து தாங்கிடும் நீளமல்லோ
எத்தனை எத்தனை இங்கு நடந்திட
எங்களின் சோதரர் தூக்கமல்லோ

இங்கு குயிலினம் பாட மறந்தது
எங்கள் வயல் வெளி ஆடை இழந்தது.
இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை
உங்களின் ராணுவம் செய்து முடிக்குது..

கால ஓட்டத்தில் தமிழகத்தில் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் பாடல்கள் எங்கள் தாயக தேசத்திலேயே உருப் பெற தொடங்கின.

தாயகத்தில் வெளியான ஆரம்ப கால பாடல்களில் பாடகர் சாந்தன் மற்றும் சுகுமார் ஆகியோரின் பங்களிப்பு நிறையவே இருந்தது. சாந்தன் பாடிய எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம். தமிழீழ மண்ணை மீட்டெடுக்க ஓடிப்போகிறோம் என்ற பாடலை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற ஒரு சிறுவன் இராணுவ சோதனைச் சாவடியில் ஒரு பாட்டுப் பாடுமாறு இராணுவம் கேட்க பாடிக் காட்டினானாம்.

விடுதலைப் புலிகளின் உறுப்பினரும் கவிஞருமான புதுவை இரத்தினை துரை அவர்கள் பெருமளவில் எழுச்சிப் பாடல்களை எழுதியிருக்கிறார். அவரின் பாடல்களில் இது வரை என்னைக் கவர்ந்தவை கரும்புலிகள் என்கிற ஒலிப்பதிவுத் தட்டில் வெளிவந்த அத்தனை பாடல்களும் தான்.

அநாமதேயமான அந்த வரிகள் பல கேள்விகளின் முடிச்சுக்களை அவிழ்க்கின்றன.

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் – இவை
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்
பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் – இங்கு
போக விடை கொடுத்த நெஞ்சம் துடி துடித்திடும்

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும்
ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்.
பொங்கும் மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்
போன பின்னர் நாம் அழுவோம் யாரறீவீர்கள்.
October 31, 2004