சின்ராசு மாமா என்கின்ற துரோகி

சின்ராசு மாமாவின் சேட்டுப் பொக்கற்றுக்குள் பீடி, சுருட்டு, சிகரெட், சிகரெட் பெட்டி என்பவற்றைப் பார்த்து அவருக்கு இப்ப தொழில் அந்த மாதிரியா, அல்லது நொந்தமாதிரியா என்று நான் சொல்வேன். “என்ன மாமா இண்டைக்கு உங்கடை கடலம்மா பாத்துப்பாராமல் தந்திருக்கிறா போலை” என்று நான் சொன்னால் அவர் சிகரெட்டை பெட்டியாகவே வைத்திருக்கிறார் என்றும் மணிக்கொரு தடவை ஊதித்தள்ளுகிறார் என்றும் அர்த்தம். அவரிடம் சிகரெட், பீடி, சுருட்டு என்பன போலவே கட்டுமரம், கரைவலை, மீன்பிடி வள்ளம், ரோலர் என்ற சாமான்களும் [...]

முகாம்களில் இருந்து கிடைத்த கடிதங்கள்

முகாம்களில் அடைப்பட்டிருக்கின்ற மூன்று லட்சம் மக்களில் ஏறத்தாள 1600 மாணவர்கள் வரும் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்ற இருக்கிறார்கள். இவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நூல்கள் மற்றும் சத்துணவு போன்றவற்றை ICUTS என்னும் ” சர்வதேச பல்கலைக்கழக தமிழ் மாணவர் சங்கம் ” ( International Committee of University Tamil Students) எனும் அமைப்பு உதவிகளைப் பெற்று இலங்கை கல்வித்திணைக்களம் ஊடாக அந்த மாணவர்களுக்குச் செய்து வருகின்றது. அது தொடர்பான அவர்களின் அறிக்கை.
எம் இனிய தமிழ் [...]

கலைஞருக்கு எழுதிய கடிதமும் காலாவதியான குறிப்புக்களும்

அவுஸ்ரேலிய நாட்டிலிருந்த ஏதோ ஒரு சம்மேளனம் தன் கடிதமொன்றில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஈழத்தெய்வம் ஜெயலலிதா! உண்மையாய் பெருத்த சோகத்தை உணர்ந்தேன். அது ஜெ/கருணாநிதி என்கிற ஒற்றைமனிதர்களை முன்னிறுத்தியதல்ல. கையில் பிஸ்கட்டுடன் யார்யாரோ எல்லாம் எட்டாத உயரத்தில் நீட்டி ஞ்சூ ஞ்சூ என்கிறார்கள். நாம் நாய்களைப்போல கொஞ்சம் இர(ற)க்கம் காட்டுவீர்களா என்று இறைஞ்சுவதோடு வாலையும் ஆட்டிக் காட்டுகிறோம் என்பதைக் குறித்த வலியே அது.
அன்றைய நாளில் கானாபிரபாவிடம் இதுபற்றிக் கேட்டிருந்தேன். அவர் ஐயோ சத்தியமா அந்த [...]

சட்டவிரோத “குடி” யேற்ற வாசிகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு சுவாரசியமான பொழுது நேற்றமைந்தது. இணையம் வழி அறிமுகமாகி இப்போது இணைந்து பணியாற்றும் நண்பர்களுடன் போனதப்பொழுது. லண்டனிலிருந்து ஒருபேப்பர்காரன்கள் / காரிகள் பிரான்சில் இருந்து சிறியண்ணன் (சாத்திரி) ஜேர்மனிலிருந்து சபேசன் உட்பட்ட சிறு குழுவொன்று சுவிஸ் வந்திருந்தது. சுவிஸ் எனச் சொல்ல முடியாதவாறு பிரான்ஸ் ஜேர்மனி எல்லைப் பகுதிகளிலும் சிலசமயம் அந்த நாடுகளின் உள்ளேயும் என அறக்கப் பறக்க சூறாவளிப் சுற்றாகத்தான் அமைந்தது.
மதியத்துக்குப் பிறகு சாத்திரியண்ணன் தனது விமானத் திகதியை தள்ளிப் போடுவதற்காக விமான [...]

என்ன ஜென்மங்கள் நீங்கள் / நாங்கள்

இடம் கிளிநொச்சியில் ஒரு மண்டபம்
காலம் சமாதானம் கண்ணாமூச்சி ஆடிய, வந்தவர்கள் பத்திரமாகத் திரும்பிச் செல்ல முடிந்த ஒரு வருடம் மேடையில் இயக்குனர் பாரதிராஜா உரையாற்றிக் கொண்டிருக்கிறார். ஆக்ரோசமான பேச்சு. அனல் வார்த்தைகளில் பறக்கிறது. அமைதியாக உட்கார்ந்திருக்கிறது மக்கட் கூட்டம். மேடையில் பேசும் போது முன்னிருக்கும் மக்கட் கூட்டத்தை கற்களாக உருவகப் படுத்தி கொள்ளச் சொல்வதுண்டு. இங்கு கற்களே மக்களாக இருப்பது போன்ற தோற்றம்.
கால்மணி நேரம் கடக்கிறது. அரைமணி நேரம்… முக்கால் மணி நேரம் இதற்கு மேல் பாரதிராஜாவால் [...]

ஆ(வா)ய்வுத் தொல்லையும் `ஆ´ என்ற வாய்களும்

ஈழத்தின் வடபகுதி, வன்னியில் சிறிலங்கா அரச பயங்கரவாதப் படைகளின் இராணுவ நடவடிக்கைகளின் பெறுபேறாய் நடந்தேறும் சொல்லொணாத் துயர் மிகும் மனிதப் பேரவலங்கள் மனதிற்குள் விரக்தி வெறுப்பு ஓர்மம் கையறு நிலையென உணர்வுக் கலவையின் திரளென உருவாகித் தணிந்தெழுகின்றன. வீடும் ஊரும் இழந்து உறவுகளைத் திக்கொன்றாய்த் தொலைத்துவிட்டு இலக்கின்றி வரும் அயல் தேசத்தின் அன்பளிப்புக் குண்டுகளுக்கும் வானிருந்து உயிர்குடிக்கும் எமப் பறவைகளின் கொலைக் கொத்தல்களிலிருந்தும் தன்னை மனைவியை சின்னஞ்சிறு குழந்தைகளை காப்பாற்றி இளைப்பாற எங்காவது ஒரு மரநிழல் கிடைக்காதா [...]

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • Could not connect to Twitter

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231