சாரல் » குறிப்புகள்

இனி அங்கால… sayanthan.com
எந்தக் காரணமும் சிறப்பாக இல்லைத்தான். இங்கேயிருந்து புறப்பட்டுப்போக.. மால்வெயர்த்தாக்குதல் ஏதோ இருக்கிறதென நண்பர்கள் சொல்கிறார்கள்தான். ஆனால் அது தீர்க்கமுடியாத சிக்கல் அல்ல. இருந்தும் போகிறேன். இணையம் ஆரம்பமான புதிதில் எட்டொன்பது வருடங்களுக்கு முன்னால் சயந்தன். கொம் இணையப் பெயர் இன்னொரு நபருக்கு சொந்தமாயிருந்தது. அவரொரு IT மனிதராயிருக்க வேண்டும். அது அப்பட்டமாகத் தெரியும் வகையில் ஏகத்துக்கும் தளத்தை வடிமைத்திருந்தார். சில இடங்களில் அது எனதுதான் என்றும் எடுத்து விட்டிருக்கிறேன்.   பிறகு அவ்வப்போது அந்தப் பெயரை சோதித்து வருவதுண்டு. அண்மையில் ரவிசங்கரோடு பேசிக்கொண்டிருந்த போது திடீரென சயந்தன்.கொம் ஐ சோதித்துப் பார்த்ததில் அது கேட்பாராற்றுக் கிடந்தது. அப்பவே ரவிசங்கர் அதனை தனது நண்பர் ஒருவர் ஊடாக வாங்கித்தந்தார்.

பிறகு hosting.. வடலிக்கு hosting ஆகட்டும்.. google apps இன் மின்னஞ்சல் சேவையாகட்டும் அண்ணை ஒரு உதவியெனக்கேட்டுத் தரும் பார்த்தியண்ணை (ஒருபேப்பர்) இதற்கான வழங்கி ஏற்பாட்டையும் செய்து தந்தார். கொஞ்சம் கொஞ்சமாக முடித்து..

இனி..

http://sayanthan.com

என்ன..? மு. மயூரன்.. தற்கால நடைமுறைக்கு ஏற்ப போகின்றேன்தானே..? இனி முகப்பில் எனது தாடி வைத்த படமொன்றும் போட வேண்டும். அப்போதே இலக்கு முழுமையடையும்.

வலை மேயவும் வீசவும் வந்த கதை – தொடராம்
இதுவொரு விளையாட்டு. கூகுள் குரூப்பொன்றில் நான்கேட்க மு.மயூரன் தொடக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. மயூரன் சொன்னதுபோல தனியே விளையாட்டு அன்றி உள்ளே ஒரு அர்த்தம் பொதிந்திருக்கிறது. அவரவர் தனது வலைபதிய வந்த கதையைச்சொல்வதனூடாக அக்கால கட்டத்தைய இணையம்/ தமிழ்/ திரட்டிகள் குறித்த இன்னோரன்ன சங்கதிகளை ஆவணப்படுத்துகிறார் என்பதே அது. இத்தொடரில் சந்திரவதனா அழைத்தார். நன்றி.

அருண்மொழிவர்மன், கீத் ஆகியோரது இத்தொடர்பதிவுகள் படித்தேன். கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு மனநிலையிலிருந்து வந்தவன் நானென்று சொல்லலாம். தனிமை. 2004 யூலை மெல்பேணில் ஒரு புறநகர் மாணவர் விடுதியொன்றில் போய் விழுந்தபோது கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோலிருந்தது. பாணுக்கு பட்டரைப்பூசிக் கொண்டு போவதும் படிப்பு முடிய வருவதும் பிட்சாவைச் சுடவைத்துச் சாப்பிடுவதும் பேயறைந்தவன் போல இருப்பதும் அவ்வப்போது தொலைபேசி வழி குரல்களூடு ஆசுவாசப்படுத்திக் கொள்வதுமாக கரைந்த காலம். நான் தனிமையை விரும்புகிறவன் என்று நானே நம்பியிருந்தவன். உண்மையில் அப்படி இருந்தவனும்தான். ஆனால் ஒட்டுமொத்தமாக தனிமை தன்னை என்னில் திணித்தபோது மூச்சடைத்துப்போனது. தமிழில் பேசுவதற்கு தொலைபேசி அழைப்புக்கள்தான் இருந்தன. ஒருவித வெறுமை சூழ்ந்தபோது வெளிக்கிட்டதுதான் சாரல்.

இணையத்தில் ஏற்கனவே பரீச்சயம் உண்டு. புளொக்தான் புதியது. 2002 சமாதானம் துளிர்த்தபோது  இன்று புது உதயம் எழுகிறது. எழுநா என்னும் கன்றொன்று இன்று கண் திறந்து கொள்கிறது நன்றென்று வாழ்த்தி நான் மிதந்து கொள்கிறேன் என்கிற புதுவை இரத்தினதுரையின் வாழ்த்தோடு வெளியான எழுநா இணையத்தளத்தின் ஆசிரியர் என பேக்காட்டிய நி. கெனடி நான்தான். தமிழ் எழுத்துருவை தரவிறக்க என்னும் ஒரு மூலையிலிட்ட இணைப்போடு பாமினி எழுத்துருவில் எழுநா ஓடிக்கொண்டிருந்தது. ஒருநாள் சோமிதரன் யாழ்ப்பாணத்து குடிநீர் வளம் இல்லாமல்போய் அதுவொரு பாலைவனமாகும் என்கிற ஒரு கட்டுரையை எழுதி அதையொரு ப்ளொப்பியில் தந்தார். ப்ளொப்பி அளாப்பி விட்டது. அதற்குள் இருந்த ஏதோ ஒரு ட்ரோஜன் எட்டுக்கால்ப் பாய்ச்சலில் இணையத்துக்குள்ளும் புகுந்து… அத்தோடு இணைய முயற்சிகள் கைவிடப்பட்டன.

இனி புளொக் கதைக்கு வருவோம். மு.மயூரன் ஒரு இணையம் வைத்திருந்தார் என கொழும்பில் அறிந்திருக்கிறேன். ஆனால் அது புளொக் நுட்பமென்றோ புளொக் என்றால் என்ன என்றோ அறியமுற்படவில்லை.  இப்படியான இடைவெளிக்குப்பிறகு யாழ் இணையத்தில் புளொக் பற்றிய முதல் அறிமுகம் கிடைத்தது.  யாழ் இணையத்தில் குடில் என்றார்கள். அப்போது யாழ் இணையமே குடில் அமைக்கும் வசதியினையும் வழங்கியது. ஒரு பின்னிரவு அந்த மாணவர் விடுதியில் அனைவருக்கும் பொதுவான இணைய மையத்தில் குடில் எப்படி அமைப்பது என்ற சுரதாவின் விளக்கங்களினூடு உருவானது சஜீ என்கிற அந்த முதல் வலை. முகவரி sajee.yarl.net. முதற்பதிவிற்கு பின்னூட்டமிட்டவர்கள் பாரி, மூக்கன், ஸ்ரேயா, மதி, சந்திரவதனா. அப்போதே தமிழ்மணம் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது ஒரு மாசக்குழந்தை அது. வலைப்பூ என்கிற ஒரு  வலையும் இருந்தது. அதில் வாராவாரம் ஒரு பதிவர் ஆசிரியராக இருந்து தான் படித்து சுவைத்த பதிவுகள் புதிய அறிமுகங்கள் என எழுதுவார். இந்நாளைய தமிழ்மண நட்சத்திரத்தின் முன்னோடி அதுதான். அவ்வாறான பதிவொன்றில் சந்திரவதனா என்னைக்குறிப்பிட்டிருந்தார். மகிழ்ச்சியாயிருந்தது.

நான் பாமினி முறையில் எழுதப்பழகியவன். கணணியில் தமிழ் அறிமுகமானதே கணணி வாங்கும்போது அந்தக்கடைக்காரர் போட்டுத்தந்த அலங்காரம் ஆடம்பரம் ரஞ்சனி ரசிகை பாமினி என்ற எழுத்துருக்களூடாகத்தான். ஆக அது தவிர்க்க முடியாததாகி விட்டது. புளொக் என்ற அறிமுகத்தில் எனக்குள் முன்னிலையில் இருந்த சங்கதி அதற்கென எழுத்துருக்களை தரவிறக்கத் தேவையில்லை என்பதுதான். மற்றும்படி அதன் நுட்பப்புதினங்கள் புரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் இதுவும் ஒரு பொன்ட் என்ற நினைப்புத்தான் இருந்தது.  சுரதாவின் பொங்குதமிழ் பக்கத்தை படியெடுத்து அறையிலிருந்த என் கணணியில் வைத்திருந்தேன். இரவுகளில் பாமினியில் எழுதி பொங்குதமிழில் இட்டு யுனிகோட் ஆக்கி புளொப்பியில் எடுத்து விடுதியின் இணைய மையத்திற்கு சென்று பதிவேற்ற வேண்டும். அவ்வாறுதான் செய்தேன். அறைக்கான வாடகை 300 டொலர்களாவகவும் இணையப்பாவனைக்கான வாடகை 200 டொலருமாக வந்தது.

என்ன எழுதினேன் என்றால் எல்லாம் சுயபுலம்பல்கள்தான்.  மொத்தமாக நனவிடைதோய்தல்கள்தான். ஆனால் அதில் ஒரு சுகம் இருந்தது. வலைப்பதிவில் இருக்கிற பின்னூட்ட வசதிதான் ஆரம்பத்தில் அங்கிங்கென விலகாத ஆர்வத்தை தந்தது.

யாழ் தந்த வலைப்பதிவு வசதி வாபஸ்பெறப்பட முன்னராகவே நான் புளொக்கருக்கு மாறினேன். அப்போது சஜீ என்ற பெயரை எடுத்துவிட்டு சாரல் ஆக்கினேன். பிறகு வேர்ட்பிரசில் சொந்தமாகப் புகுந்து கொள்ளலாம் என sajeek.com இற்கு மாற்றிக்கொண்டேன். சாரல்  ஏதாவது பெயர் வைக்கவேண்டுமென்பதற்காக வைத்த பெயர் இது. இப்பொழுது மாற்ற விருப்பம் ஆனால் அடையாளமாகிவிட்டதே என்ற யோசனை இருக்கிறது. சாரல் மீறலாகலாம்.

இனி சில குறிப்புக்கள்

இப்போது யாரும் பெரிதாகப்பயன்படுத்துவதில்லை. ஆனால் முன்பு சகலரும் மாட்டிவைத்திருந்தார்கள். ஒரு பின்னூட்ட மஜிக் பெட்டி. ஆங்கிலத்தில் தட்டுங்கள் பாமினியில் தட்டுங்கள் யுனிகோட்டில் வரும் என்ற அறிவிப்புடன். இப்போதும் அதனை வைத்திருப்பவர்களில் வசந்தன் ஒருவர். ஆரம்பத்தில் அதனைப் பயன்படுத்துவதற்காக நிறைய சில்லெடுப்பு வேலைகளை செய்திருக்கிறேன்.

வலையில் எழுத ஆரம்பித்தபிறகு அச்சூடகங்களில் பெயர் வரவேண்டும் என்ற என் முன்னைய அவா பெரிதும் குறைந்து இல்லாமலேயே போனது.

பின்னூட்டங்கள் குறித்த எதிர்பார்க்கை இப்போ அறவே இல்லாமல் போய்விட்டது. (இது வலைப்பதிவின் முத்தி நிலை) முன்பு தமிழ்மணத்தின் எல்லையாகிய நாற்பதைத் தொட்டபிறகுதான் மறுவேலை என்ற கணக்காய் அவ்வப்போது அனானிப்பின்னூட்டங்களைப்போட்டும் நன்றிசொல்லியும் தமிழ்மணத்தில் தூக்கிவிடுவேன். பத்துக்கும் குறைந்த இப்போதைய பின்னூட்டங்களைப் பார்த்தாலே புரியுமே : )

இரண்டுதடவைகள் அனானியாக என்னைத்திட்டியே நான் எனக்கு பின்னூட்டியிருக்கிறேன் யுவர் ஆனர்..

சாரல் பதிவுகளை பல இடங்களிலிருந்து எழுதியிருக்கிறேன்.  யாழ்ப்பாணத்திலிருந்தும் கிளிநொச்சியிலிருந்தும் 2005 யூன் சில பதிவுகள் எழுதப்பட்டிருக்கின்றன.

பிடித்த பதிவுகளில் சாரலில் எழுதிய இந்த யாழ்ப்பாணப் பயணக்கட்டுரையும் கொழுவியில் எழுதிய தமிழ்மணத்தில் யுத்தப்பிரகடனம் என்ற பதிவும் உள்ளடங்கியவை.

வலைப்பதிவு நிறைய நண்பர்களைத்தந்திருக்கிறது. தொடர்பற்றுப்போன நண்பர்களை கூட்டிவந்திருக்கிறது.

என்ர வலைப்பதிவு பற்றி கட்டுரைக்கு என்ரை படம்தானே போட வேண்டும் : )

நான் அழைப்பவர்கள்

கானா பிரபா (இவர் வராவிட்டால் கட்டாயமாக இழுத்து வரப்படுவார்)

வசந்தன் (இவரது ஆண்டாண்டு கால மெளனவிரதத்தை அன்றைக்கு இலங்கைப் பெடியங்கள் கலைச்செழுப்பி கூட்டிவந்திருக்கிறார்கள்)

சாந்தி

நாங்கள் ஏன் பொண்ணு பார்க்கப் போவதில்லை?
திருமண நிகழ்வுக்காக பெண் பார்க்கப் போகும் ஒரு வழக்கம் தமிழகத்தில் ( இந்தியா.) உள்ளதென்பதை எனது பதின்மங்களில் தமிழக சமூக நாவல்களிலும், திரைப்படங்களிலும் நான் அறிந்து கொண்ட போது, அவை கதைக்கு சுவாரசியம் சேர்க்கச் சொல்லப்படுகின்றன எனத்தான்  நம்பியிருந்தேன். கதைகளிலும், படங்களிலும் பெண் பார்க்கும் நிகழ்வில் சில சமாசாரங்கள் எப்போதும் நடைமுறையில் இருக்கும். பஜ்ஜி சொஜ்ஜி, பெண்ணைப் பாடச் சொல்லி கேட்பது, நேரடியான சீதனப் பேச்சுக்கள், வீட்டுக்குப் போய் கடிதம் போடுகிறோம் என்பவையே அவை. அதிலும் குறிப்பாக பெண்ணைப் பாடச்சொல்லிக் கேட்பதெல்லாம் நடைமுறை வாழ்வில் நடக்குமா என்ற சந்தேகத்திலேயே இது வெறும் கதையாயிருக்கும் என நினைத்ததுண்டு.

ஆனால் பெண் பார்க்கச் செல்லும் பழக்கம் அங்கு பெரும்பாலும் நடைமுறையில் உண்டென்பதை சில நண்பர்கள் மூலமாகவும், தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நேயர்களிடமிருந்தும் பின்னாளில் அறிந்து கொண்டேன்.

ஈழத்தில் இவ்வாறான பெண் பார்க்கச் செல்லும் நடைமுறை தற்போதைய வழக்கில் இல்லை. நிறையப் பண்பாட்டுத் தொடர்புடைய தமிழகத்திடமிருந்து இந்த வழக்கம், நமக்கும் முன்பு நடைமுறையிலிருந்து பின்னர் அருகியற்றதா, அல்லது இந்த நடைமுறை அறவே  இல்லையா என்பதை பழம்பெரும் பதிவர்களான மலைநாடன், சின்னக்குட்டி, கானா பிரபா போன்றவர்கள் தான் சொல்ல வேண்டும்.

ஈழத்தில்  திருமணம் நிச்சயிக்கப் பட்ட பின்னர் வேண்டுமானால் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்கு செல்வதுண்டே தவிர பெண் வீட்டுக்குப் போய் அங்கு வைத்து பிடித்தால் நிச்சயம் செய்யலாம் என்ற நடைமுறையில்லை.

நிறுவன ரீதியான திருமண முகவர்கள், மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் எனப் பரவலாக அங்கும் நடைமுறை வந்துவிட்டாலும் அவற்றின் மூலம் கிடைக்கப் பெற்ற சாத்தியமான இடங்களுக்கு தமது உற்றார், உறவினர், அன்புச் சித்தப்பா, ஆசை மாமா என ஒட்டுமொத்தமாய்ச் சென்று, பொண்ணுக்குப் பாடத்தெரியுமா என்று எவரும் ஈழத்தில் கேட்காமல் விட்டதேன் என யோசிக்கிறேன்.

பெரும்பாலும் மூன்றாவது நபர் ஒருவர் இருதரப்புக்கும் இடையில் உறவினைப் பேணுவார். நிறுவன முகவர்கள் தவிர, இடை உறவினைப் பேணும் இவர்களைத் தரகர் என முடியுமா தெரியவில்லை. கிராமப் புறங்களில் நாலு பேருக்கு நல்லது செய்யலாம் என நினைக்கும் யாராவது ஒருவர் தான் இந்தப் பணியில் ஈடுபடுவார். பெட்டையின்ர படம் ஒண்டு தரட்டாம் எண்டதில இருந்து பிடிச்சிருக்காம் சாதகம் தரட்டாம் என்பது வரை எல்லாம் இவர் ஊடாகத் தான் பேசி முடிக்கப்படும். வெறும் மீடியேற்றர் என்றாலும் கூட அவ்வப்போது கிளம்புகின்ற சின்ன சின்னப் பிரச்சனைகளை சமரசம் செய்ய உதவுவார்.

ஒருவேளை பெண்ணை நேரடியாப் பார்க்கும் தேவையிருந்தால்க் கூட கோயில்களிலேயோ வேறெங்காவது வீடுகளிலோ பார்த்து விடுவார்கள்.

இரு வீட்டுக்கும் இணக்கப் பாட்டுக்கு வருவதை ஈழத்தில் முற்றாக்கியாச்சு என்று குறிப்பிடுவர். இணக்கம் எட்டப்பட்டுப் பின்னர் முறிந்தால் சம்பந்தம் கலைஞ்சு போச்சு என்று சொல்வதுண்டு. சம்பந்தம் குழைக்கிறது என்று ஒன்றும் உள்ளது. நான் நினைப்பது சரியானால் அது இது தான். இரு தரப்பும் இணக்கம் ஏற்பட்டால் அதாவது முற்றாக்கினால் மாப்பிள்ளை வீடு தனது சுற்றம் சூழ பெண் வீட்டுக்குச் சென்று அளவளாவும். அன்று ஒரு முருங்கை மரம் கூட பெண் வீட்டில் நட்டு வைப்பார்கள். (எல்லாம் திட்டத்தோடு தானோ..:)

என்னிடம் உள்ளது இரு கேள்விகள்.
பெண்களை நேரடியாக வீட்டில் சென்று பார்த்து முடிவெடுக்கும் வழக்கம் அங்கு சாதாரண நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம் தானா..? அல்லது திரைப்படங்கள் அவற்றை ஊதிப்பெருப்பித்துக் காட்டுகின்றனவா..?

ஈழத்தில் எப்போதாவது இவ்வாறான பெண்பார்க்கும் நடைமுறை வழக்கில் இருந்ததா..

முடிந்தால் ஈழத்துக் கல்யாண வழக்கில் உள்ள விசேட சொற்களையும் குறிப்பிடுங்களேன். உதாரணமாக முற்றாக்கியாச்சு.. சம்மந்தம் குழைத்தல்..

ஸ்பெயின் ஒரு பயணமும் சில படங்களும்
சுவிற்சர்லாந்தின் மத்தியிலிருந்து ஜெனிவா வழியூடாக பிரான்ஸைக் குறுக்கறுத்து அத்திலாந்திக் கடலோரத்தில் ஸ்பெயினின் சன் செபஸ்ரியான் நகருக்கு , சுமார் 1300 கிலோமீற்றர்கள் என்றும் சென்று சேர 13 மணித்தியாலங்களென்றும் நவி காட்டினாலும் வழிநெடுக சுச்சா சிச்சா முச்சா மற்றும் கபே கோலா தே இவற்றோடு கொண்டுபோன புளிச்சாதம் என 17 மணித்தியாலங்கள் எடுத்தது. அன்றிரவு ரைட் சகோதரர்கள் கனவில் வந்து எங்கட மூஞ்சையப்பாத்தா என்ன வேலை வெட்டியில்லாத கேனைப்பயல்கள் என எழுதியிருக்கா என்றுவிட்டுப் போனார்கள்.

சுவிற்சர்லாந்தில் வதிகிற மற்றைய தேசியக்காரர் அண்டைநாடுகளுக்குச் செல்வதற்கான விசா அனுமதி முறை கடந்த டிசம்பரில் நீக்கப்பட்டது. எல்லைகளில் ஏனென்றும் கேட்கிறார்கள் இல்லை. பிரான்ஸ் – சுவிஸ் எல்லையில் ஒரு பேருக்காவது வரியல்கள் பொலிசார் நிற்கிறார்கள். பிரான்சில் இருந்து ஸ்பெயினுக்குள் நுழைந்தோம் என்பதை நவி சொல்லித்தான் தெரிந்தோம்.  ஐரோப்பா ஒன்றாகிவிடும்போலத்தான் தெரிகிறது.

பிரான்ஸ் ஆகட்டும் ஜெர்மன் ஆகட்டும் தமிழை வைத்தே வழிகேட்ட தமிழை வைத்தே சாப்பாட்டுக்கடை எங்கென்று விசாரிக்கிற எனக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தது. ஐரோப்பாவில் ஆங்கிலத்தை வைத்து நாக்கு கூட  வழிக்கமுடியாதென்பதை இன்னுமொருக்கா ஸ்பெயின் தலையில் குட்டிச் சொன்னது. இவ்வாறான நாடுகளுக்கு போகமுதல்  அடிப்படை வார்த்தைகளையாவது பயிற்சி எடுத்துச் செல்லுகிற சில புரொபசனல் டூரிஸ்ட்டுகள் இருக்கிறார்கள்.  எனக்கெல்லாம் அந்த நல்ல பழக்கமில்லை. மொழிகள் பிறக்க முந்தைய மனிதன் என்ன செய்தான்..? இருக்கவே இருக்கிறது Body Language. (நாங்கள் ஜெர்மனில் பேசினாலும் சரி ஆங்கிலத்தில் பேசினாலும் சரி அதையெல்லாம் மற்றக்காதால் விட்டுவிட்டு நம் சைகையை மட்டும் புரிந்துகொண்டு அவர்கள் ஸ்பானிஸ் மொழியிலேயே உடல் மொழியோடு பேசினார்கள். ஒரு கட்டத்தில் ஐயா வணக்கம்.. உப்பிடியே மேற்கால போய் கிழக்கால திரும்பினால் இந்த இடம் வருமோ என்று கேட்கத்தொடங்கி விட்டோம். அவர்களும் வழமைபோல உடல் அசைவை புரிந்து கொண்டு…. )

சின்ன வயசில் ஊரில் இருந்து யாழ்ப்பாணம் போவதென்றால் – நன்றாக வெளிக்கிடுத்தி விடுவார்கள். எங்கேயோ பரனுக்குள் கிடக்கும் சப்பாத்தெல்லாம் எடுத்து எண்ணை போட்டு பொலிஸ் செய்து அணிந்து போவோம். முதல் விமானப்பயணத்தின் போது கோட் சூட் போட்ட கொமடி இன்னும் மறக்கவில்லை. பிறகுதான் வெளியிடங்களில் அடிபட பயணங்களுக்கென பிரத்தியேக உடையெதுவும் இல்லையென்றும் casual ஆகப்போகலாம் என்றும் பிடிபட்டது. என்றாலும் ஒரு கட்டைக்காற்சட்டையோடும் செருப்போடும் (வெக்கை கூடினால் சேர்ட்டை கழட்டிவிட்டு இருந்தும் ) இன்னொரு நாட்டுக்குள் நுழைந்தது புதிது..

ஸ்பானிய மக்களுக்கு நாங்கள் புதியவர்களாக இருந்தோம். உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து தங்கள் நாட்டையும் மதித்து வருகிறார்கள் என்று நினைத்தார்களோ என்னவோ மகிழ்ச்சியை கட்டிப்பிடித்துக் கொஞ்சிப் பகிர்ந்து கொள்கிறார்கள். (இப்பதானே வாறம்.. கொஞ்சம் பொறுங்கோ… ) இந்தியாவைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். (சிலகாலங்களுக்கு முதல் ஒரு பயணத்தில் சுவிஸ் காரரொருவர் நீங்கள் இந்தியாவோ என்று கேட்டார். சிறிலங்கா என்றோம். பதிலுக்கு எல்லாம் ஒன்றுதானே என்றார் அவர். இப்ப வெர்ஜினியா அப்ப நீங்கள் ஜெர்மனியோ என்று கேட்க அவர் எழும்பிப் போய் வேறொரு சீற்றில் இருந்து விட்டார்)

எனக்குக் கடல் பிடிக்கும். உருட்டிப்பிரட்டுகிற அலைகள் அற்ற சன் செபஸ்ரியன் கடல் (BAY) திரும்பச் சின்ன வயசுக்குக் கொண்டுபோய் விட்டது. அந்தச் சின்ன வயசுகளில் நாங்கள் ஆ என்று வாய் பிளந்திருக்க யாரேனும் சொல்வார்கள். வெளிநாடுகளிலயாம் உடுப்புப்போடாமல் கடல்கரைகளில குளிப்பினமாம். ம்.. அவர்கள் சொன்னது உண்மைதான்.

குறைந்த யூரோக்களில் சமையல் குளியல் வசதிகளுடன் கூடிய அப்பார்ட்மென்ட் கிடைத்தது. அரிசி கொண்டுவந்தார்கள். அங்கே பக்கத்திலேயே கணவாய் மீன் நண்டு இறால் என கிடைக்க.. பிறகென்ன.. சோறும் கறியும்தான். (இதை விடமாட்டமெல்லோ)

ஸ்பெயினின் அத்திலாந்திக்கடலோரம் பயணம் செய்தால் போர்த்துக்கல் வருகிறது. மத்தியதரைக்கடலைத்தாண்டினால் ஆபிரிக்கா வருகிறது. உலகம்  டுக்குட்டியானது. இதெல்லாம் போய்வந்த பிறகு மப்பை எடுத்துப்பார்த்தால் தான் எனக்குத் தெரிகிறது. எப்படித்தான் அறுநூறு எழுநூறு வருசங்களுக்கு முதல் தேடிப்பிடிச்சு இவங்கள் இலங்கைக்கு வந்தாங்களோ..

வருகிற வழியில் பிரான்சில் லூர்த் கோவிலுக்கும் போய்த்திரும்பினோம். மொத்தமாக 3400 கிலோமீற்றர் பயணம். இரண்டுநாள் நாரிப்பிடிப்பு..

லிஸ்ற்றில் இன்னொரு நாடும் இருக்கிறது அது எகிப்து. பார்ப்போம்.

Spain

23 Photos

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – ஒரு இசைப்பாட்டு
எனக்குச் சின்ன வயசில இருந்தே ஒரு வலைப்பதிவர் மாநாட்டில கலந்து கொள்ளவேணுமென்று நிரம்ப ஆசை. ஆனா அது ஒருக்காலும் நிறைவேறியதில்லை. ஒருதடவை சிட்னி ரயிலுக்குள்ளை ஸ்ரேயா என்ற பழைய பதிவரை (இப்பவும் எழுதுகிறாவா என தட்டிப்பார்க்க பஞ்சியாக இருக்கிறது.) சந்திச்சுக் கதைத்ததுதான் அதிகபட்சமாக நான் கலந்துகொண்ட நீளமான வலைப்பதிவர் மாநாடாயிருக்கும். அதிலும் அப்ப கோடைகாலமென்றபடியால நான் அடிக்கடி பராக்குப்பார்த்ததாக அவர் குற்றமும் சாட்டியிருந்தார். அதை விட மெல்பேணில் ஜோய் மகேஸ்வரனின் நிகழ்வு ஒன்றில் இடைவேளையில் வசந்தனை சந்தித்துக் கதைத்ததையும் ஒரு சின்ன மாநாட்டில் சேர்க்கலாம். ஒரே வானொலியில் சம காலத்தில் சேவை செய்தும் (சேவைதானே கானா) கானா பிரபாவை கடைசிவரை கண்ணால் காணமுடியவில்லை. கண்டிருந்தால் அதையும் ஒரு பதிவர் சந்திப்பாக்கியிருக்கலாம். இவற்றை விட இன்னும் இரண்டு சந்திப்புக்கள் உள்ளன.சுவிசில்  ஒருமுறை மலைநாடான் வீட்டுக்கு வந்திருந்தார். மற்றயது எனக்கும் சாத்திரிக்கும் சபேசனுக்குமிடையிலானது. அது ஜெர்மன் பிரான்ஸ் எல்லையில் உள்ள ஒரு தொடரூந்து நிலையத்தில் நடந்தது. (ஸ்ஸ்ப்பா.. ஒரே பந்தியில நான் சிட்னி மெல்பேண் சுவிஸ் ஜெர்மன் பிரான்ஸ் முதலிய இடங்களைச்சுத்தியவன் எனச்சொல்ல எப்படியெல்லாம் மூக்கைச் சுற்றவேண்டியிருக்கிறது. ) இப்படியாகத்தான் எனது சின்னச்சின்ன சந்திப்புக்கள் நடந்தன.

உண்மையான ஒரு வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை இப்போதைக்கு நிறைவேறப்போவதில்லை என்பதால் எங்கு வலைப்பதிவர் சந்திப்பு நடந்தாலும் அதுபற்றி வரும் பதிவுகளை ஆவலுடன் படிப்பதுண்டு. ஒருகட்டத்தில் எல்லா பதிவர் சந்திப்புகள் குறித்த பதிவுகளும் ஒரே ரெம்பிளேட்டுக்குள் (அறிமுகம்.. பேச்சு.. போண்டா.. தாகசாந்தி) என்று சுற்றிச் சுற்றி வரத்தொடங்கினாலும் படிக்கிற ஆர்வம் தீரவில்லை. அதுபோலத்தான் இலங்கை வலைப்பதிவர் சந்திப்புக் குறித்த படங்கள் பதிவுகளையும் பார்வையிடும் ஆர்வம் கொண்டிருந்தேன்.

இதில் ஒரு கூடுதல் சந்தோசம் உண்டு. அது எனது அரசியல். பொதுவில் தேவையற்றது.  நாங்களும் இருக்கிறோம் என்ற அந்தச் செய்திக்காகவும் நண்பர்கள் கலந்து கொள்ளும் வலைப்பதிவுச் சந்திப்பென்பதாலும் முதல்மாநாடு என்றதாலயும் எனது ஈடுபாடு இதில் இருந்தது. பதிவர் சந்திப்பு பதிவுகளை எதிர்கொண்டிருந்த நேரத்தில அவர்கள் ஒரு ஆச்சரியத்தை அளித்தார்கள். அது சந்திப்பு முழுதும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று அறிவித்தார்கள். அந்த நினைப்போது தூங்கச் சென்றதாலேயோ என்னவோ கனவும் அதுவாகத்தான் இருந்தது. அது ஒரு சுவையான கனவு. கனவில் நானும் பதிவர் சந்திப்புக்கு போயிருந்தேன். மாயாவும் வந்திருந்தார். கனவுச்சந்திப்பு என்னவோ ஏதோ திடீரென்று முடிந்ததுபோல இருந்தது. எப்போதும் கனவுகள் முடிகையில் எழும் ஏமாற்றத்தோடு விழித்தபோது இலங்கையில் சந்திப்புத் தொடங்கி ஒன்றரை மணித்தியாலங்கள் கடந்து விட்டிருந்தது. சடார் புடார் என எழும்பி தட்டினால் லோசன் கதைத்துக்கொண்டிருந்தார். நேரடி ஒளிபரப்பும் அதனூடான சற்றிங் வசதியும் மாநாட்டில் இருப்பதுபோன்ற உணர்வை தோற்றுவித்துக்கொண்டிருந்தன. என்ன.. ஒருவரையொருவர் தொட்டுப்பார்த்துக் கொள்ள முடியாது.

டக்கென்று எல்லோரையும் பார்த்த திளைப்பில் சற்றில் அரட்டைதான் அதிகமாகப்போனது. பார்வையாளர்களின் கேள்விகளுக்கு கொஞ்ச நேரம் கொடுங்கள் என நான் ஊரோடியைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்படியே கொடுத்திருந்தாலும் கேட்கிறதுக்கு என்னிடம் கேள்விகள் எதுவும் இல்லை. யாழ்தேவியின் பெயர் குறித்துப் பேசினார்கள். பாமினி தமிழ் 99 மற்றும் ரோமானிஸ்ட் முறைகள் குறித்தும் பேசினார்கள். முதலாமாண்டில் கடிதம் கொடுத்ததிலிருந்து  பாமினியைப் பிடிக்குமென்றதால நானொரு பாமினிக்காரன். தமிழ் 99 ஐ முயற்சித்தும் பார்த்ததில்லை. ஆனால் அம்மா என்பதை Amma என எழுதுவதை நான் வெறுக்கிறேன். தமிழ், எழுத்து வடிவம் அழிந்த ஒரு மொழியல்ல. அந்த இடத்தில் பதிவர்கள் பயன்படுத்தும் முறைகுறித்து ஒரு ஓட்டுப்பதிவு நடாத்தியிருக்க வேண்டும் என வசந்தன் சொல்லிக்கொண்டிருந்தார்தான். யாரும் காதுகொடுத்துக் கேட்கவில்லை. நான் உட்பட.

சந்திப்புக்கு ஒரு சின்னப்பெடியன் வந்திருந்தான். ஊரோடியிடம் கேட்டேன். அவரது பெயர் யசீர் நசருதீன். வயது 11. அவரது வலைப்பதிவில் அவர் ஒரு பதிவெழுதியிருந்தார். அது இப்படித் தொடர்ந்தது.

நான் இங்கு மகிழ்ச்சியாக வாழ்கிறேன்

நீ அங்கு மரணத்தில் வாழ்கிறாயா?

எனக்கு இங்கு உணவு உண்டு

உனக்கு அங்கு உணவு உண்டா ?

எனக்கு பெற்றோர் உள்ளனர்

உனக்கு பெற்றோர் இருக்கிறார்களா?

நான் பாடசாலையில் கல்வி கற்கிறேன்

நீ அங்கு அகதி முகாமில் என்ன செய்கிறாய்?

பெண்களும் வந்திருந்தார்கள். ஊரோடி ஏழு என எண்ணிச்சொன்னார். நான் பார்த்தவரையில் அவர்கள் யாரும் பேசவில்லை. அவர்களும் பேசட்டும். அவர்களிடமும் மைக் கொடுங்கோ என்று கேட்டுக்கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். சரி பரவாயில்லை அடுத்த முறை சூம் செய்யக்கூடிய கமெரா பயன்படுத்துங்கோ..

சந்திப்பு அங்கிங்கென இலக்கற்று அலையாமல் திட்டமிடப்பட்ட முறையில் நடந்ததென நினைக்கிறேன். இந்தச் செய்திபரவுவதனூடாக வேறும் பல புதியவர்கள் அதென்ன புளொக்காம் என வருவார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிற ஒரு நிகழ்வை வைக்கலாம். பட்டறை மாதிரியான நிகழ்வுகளை நடாத்துவதற்கு புலம்பெயர்ந்திருக்கிற நாமும் உதவத்தயாராயிருக்கிறோம். நிகழ்வினை சிறப்பாக்கிய அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்.

0	0	0

இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் போது பதிவர் சாத்திரி இடையில் வந்து ஈரோப்பிலும் ஒரு சந்திப்பை வைச்சால் என்ன என்று ரண்டு மூன்று பேர் கேட்டதாகச் சொன்னார். ( இந்த முறை எந்த போர்டரோ தெரியாது.) நானும் ஓமண்ணை. இந்தியப்பதிவர் கூட்டம் – இலங்கைப் பதிவர் கூட்டம் எல்லாம் நடக்குது நாங்கள்தான் தனிச்சுப்போனம் என்றேன். அதெல்லாம் கலங்க வேண்டாம். வின்ரர் தொடங்கட்டும் .. வண்டியைக்கட்டுவம் என்றிருக்கிறார். (ரிக்கெற் மலிவாம்) வின்ரரோ சம்மரோ.. ஐரோப்பாவின் நடுவில சுவிஸ் இருக்கிறதால சுவிஸ்தான் எல்லாருக்கும் வசதி என்றதை மட்டும் என் சார்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ் பாலச்சந்திரனின் நாவல்! வடலி வெளியீடு
இலங்கையின் ஆரம்பகால வானொலி தொலைக்காட்சி கலைஞரான கே. எஸ் பாலச்சந்திரன் அவர்களின் கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஈழத்தின் வடபகுதிக் கடலோரக்கிராமங்களின் கதைகளைப்பேசும் இந் நாவல் என்னளவில் ஒரு விதத்தில் வேறுபட்டு நிற்கிறது. எனது தலைமுறைக்குத் தெரிந்த கடல் தனியே உப்பும் நீரும் நிறைந்ததல்ல. அது குண்டுகளையும் ரத்தங்களையும் ஓலங்களையும் தன்னத்தே வைத்திருந்தது. கடல் அப்படித்தான் அறிமுகமானது. அப்படித்தான் பழகியது.

இந்த நாவல் இப்போதைய தலைமுறைக்குத் தெரிந்திராத ஒரு கடலை கதை முழுதும் அலைகளால் நிரப்புகிறது. முப்பது வருடங்களுக்கு முன்னால் இலங்கையின் வடபகுதியின் கடற்கரை கிராமங்களில் ஊடுபடிந்திருந்த கதைமாந்தர்களை அவர்களது உணர்வுகளை வாசகர்களோடு பேச விடுகிறது.

அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்  அவர்களின் முன்னுரை இன்னும் நிறையச் செய்திகளைச் சொல்கிறது.

நாவல் தயாரிப்பில் வந்தபோது ஒரு பரிசோதனை முயற்சி செய்து பார்த்தோம். இலங்கையின் எண்பதுகளில் வந்த புத்தக அட்டைகளுக்கு என ஒரு தனியான ஸ்டைல் இருந்தது. ஆரம்பகால வீர கேசரிப் பிரசுர நாவல்கள் மற்றைய நாவல்களில் இவ் அட்டைப்படங்களில் ஒருமிப்பைக் காணமுடியும். கே. எஸ் பாலச்சந்திரனது நாவலும் கதைப்படி எழுபதுகளில் நிகழ்கிறது. ஆகவே அட்டைப்படத்தை அந்தக் காலங்களுக்குரியதாக செய்யலாம் என்றொரு எண்ணம். இலங்கைத் தமிழ் நாவல்களில் பரீட்சயம் உள்ளவர்களுக்கு இந்நாவலின் அட்டைப்படம் நாவல் பேசப்போகும் காலத்தை நினைவு படுத்தும் என நினைக்கின்றேன்.  தற்போது யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஓவியர் ரமணி நாவலுக்கான அட்டைப்படத்தை தயாரித்துத் தந்தார் அவருக்கு நன்றி. இரண்டொரு தினங்களில் தமிழகத்திலும் ஓரிரு வாரங்களில் கனடாவிலும் ஓரிரு மாதங்களில் இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளிலும் மற்றும் வடலி  இணையத்தில் உடனடியாகவும் இந்நாவல் கிடைக்கும்.

0	0	0

பி.எச்.அப்துல் ஹமீத்  அவர்களின் முன்னுரை

பன்முகக் கலைஞன் பாலா வனொலி,தொலைக்காட்சி,மேடை,திரைப்படக் கலைஞர்  நேர்முக வர்ணனையாளர், (சிறுகதை,திரைக்கதை,கட்டுரை) எழுத்தாளர்,  திரைப்பட இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்,தொகுப்பாளர், இத்தனை முகங்கள் இருந்தும், தன் வித்துவத்தைச் செருக்காய்க் கொள்ளாமல், பண்போடு பழகும் பக்குவம் தெரிந்தவர்.

“எவனுக்கு எவனும் தாழ்ந்தவன் இல்லை   அவனவன் திறமை- ஒரு துறை” – ஈழத்து ரத்தினம்

இதனை நன்கு உணர்ந்து, எவரையும் மதித்து நடப்பவர் என்பதால் பல்துறை சார்ந்த விற்பன்னர்களின், பாசத்துக்கும் நேசத்துக்கும் உரியவர். சிறுவர்மலர், இளைஞர்மன்றம், எனப் படிகள் பல தாண்டி, 1967ல் ஒரு “அறிவிப்பாளனாக” வானொலியில் என்னை முழுநேரமும் பிணைத்துக்கொண்ட பின் நான் சந்தித்த கலைஞர் வரிசையில், “பாலா” தனித்துவமானவர். அவர் வானொலிக் கலைஞராகத் தெரிவானது-1970ல். இயல்பான தனித்துவமான குரலினால், நகைச்சுவை  உணர்வினையும், அதேவேளை பாசமும், சோகச்சுவையும் நிரம்பிய உணர்வுகளை இவரால் எப்படியெல்லாம் பிரதிபலிக்க முடிகிறது என, நான் வியந்ததுண்டு.

நண்பர் எஸ்.ராம்தாஸ் எழுதி, என்னால் நெறிப்படுத்தப்பட்ட, “கோமாளிகள் கும்மாளம்” வானொலி ரசிகர்களின் அமோக வரவேற்பினைப்பெற்றுப் பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது பலர் அறிந்ததே. ஆனால் அதனைத் தொடர்ந்து ஒலிபரப்பான, “தணியாத தாகம்”(சில்லையூராரின் எழுத்தில்,கே.எம்.வாசகர் நெறிப்படுத்திய வானொலி நாடகத்தொடர்) கோமளிகளின் கும்மாளத்ததை விடப் பலமடங்கு ரசிகர்களது குடும்பத்து உணர்வுகளின் பிரதிபலிப்பாய் வரவேற்பினைப்பெற்றது என்றால் அதற்குக் காரணம், அந்தக்கதாபாத்திரங்களை தம் குரலால் உயிருள்ள பாத்திரங்களாய் மாற்றி, வானலைகளில் வலம் வரச்செய்த கலைஞர்களே. குறிப்பாக “சோமு” என்ற பாசமிகு அண்ணனாய் தன் மிகையற்ற நடிப்பால், ஆயிரமாயிரம் உள்ளங்களை ஈர்த்த, கே.எஸ்.பாலச்சந்திரனை அந்த நாளைய வனொலி நேயர்கள், இன்றும் பசுமையுடன் நினைவு கூர்வார்கள்.

1965ல் நெல்லியடி, ஐக்கிய கலசாலையில் ஆரம்பித்த தன் மேடைநாடகப் பயணத்தின் வெள்ளிவிழாவை 1990ல் இவர் கொழும்பில் கொண்டாடியபோது இவரது கலைப்பயணத்தின் பரிணாமம் எத்தகைய பெருமைக்குரியது என்பதை அறிந்து பலரும் வியந்தனர். இதிகாசம்,நகைச்சுவை,சமுக,நவீன, பா நாடகம் எனப் பரந்து விரிந்த இவரது நடிப்புத்திறமையின் ஆளுமை, 1973ல் முதன் முதலாய்த் தமிழுக்கு இவர் அறிமுகப்படுத்திய “தனி நடிப்பு” நகைச்சுவைச்சித்திரத்தின் மூலம், புதுப் பரிமாணம் பெற்றது. 1974ல் உலகத்தமிழாரய்ச்சி மாநாட்டுக்காக முழுக்க முழுக்க பெண்களே பாத்திரங்களை ஏற்று நடிக்து, நான் நெறிப்படுத்திய, “வீணைக்கொடியோன்” நாடகத்தை மேடையேற்ற யாழ் வீரசிங்கம் மண்டபத்துக்குப் போயிருந்தவேளையில் தான் இவரது தனிநடிப்பின் திறன் கண்டேன். பின் அந்தத் தனி நடிப்புக்குக் கிடைத்த  பெரும்வரவேற்பு இவரை “ அண்ணை றைற் பாலச்சந்திரன்” என அடையளம் காணும் அளவு நிலைத்தது. ஓர பேரூந்து நடத்துனரின் அன்றாடப் பணியின் அவஸ்த்தைகளை குணச்சித்திரம் கலந்து வரிக்கு வரி, ரசிகர்களைவ வாய் விட்டுச்சிரிக்கும் வகையில் இவர் அமைத்திருந்த பாணி, நமது இலங்கைக் கலையுலகத்துக்கு ஒரு புதிய அறிமுகமாய் அமைந்திருந்தது. தனது பிரதியை, தானே தயாரிக்கும் ஆற்றலை அந்த நாளிலேயே கொண்டிருந்தவர் பின்னாளில் படைப்பாற்றல் மிகு எழுத்தாளராகப் பரிமளித்தில் வியப்பில்லை

தான் பிறந்த மண், கரவெட்டியை, கதைக்களமாய்க்கொண்டு, இவர் எழுதிய, “கிராமத்துக்கனவுகள்” நாடகத்தொடரை, அன்றைய “~ப்றா யுனிக்கோ

பினான்ஸ்” நிறுவனத்துக்காக நெறிப்படுத்தி வனொலிக்கென அமைத்துத்தரும் பாக்கியம் எனக்குக்கிட்டியது. அந்த நாடகத்தை நான், நெறியாழ்கை செய்யும்போது, நாடகபாத்திரங்களுக்கு குரல்கொடுக்க வந்திருந்த கலைஞர்கள், ஒருமுறையேனும் பிரதியை வாசித்துப்பார்க்காமல், முதல்ஒத்திகையின்போதே அப்பாத்திரங்களோடு ஒன்றிப்போவதை அவதானித்திருக்கிறேன். அந்த அளவு வசனங்களில் இயல்புத்தன்மையும், உயிரும் கலந்திருந்தமையே காரணம். வானொலிக்கென உருவாகிப் பின், வர்த்தக ரீதியில் “ஒலியிழைப்பேழை” வடிவில் வெளியான முதல் நாடகம் என்ற பெருமையும் அதற்குக்கிடைத்தது அதற்குப்பின், தனது புகழ்பெற்ற நகைச்சுவைச் சித்திரங்களான “அண்ணை றைற்” – “வாத்தியார் வீட்டில்” போன்ற நாடகங்களையும் இவர் ஒலியிழைப்பேழைகளாக வெளியிட்டார். இம்மூன்று ஒலியிழைப்பேழைகளும் பின்னாளில் ஒரு மகத்தான கலைஞருக்கு உந்து சக்தியாகப் பயன்படப்போகின்றன, என்பதை அன்று அவர் நினைத்திருக்கமாட்டார்.

பத்மஸ்ரீ கமல்ஹாஸன் தனது, “ஹேராம்” படத்துக்கு, அமைதியான சூழலில் திரைக்கதை எழுத, பாரிஸ் மண்ணில் தங்கியிருந்தபொழுது, அங்கு பணிபுரிந்த, நமது மண்ணின் மைந்தர்கள் பேசிய பேச்சு வழக்கினால் கவரப்பட்டு, தானும் இந்த மொழிவழக்கைப் பேசி நடிக்கவேண்டுமென்று ஆசைப்பட்டாராம். “தெனாலி” திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவைப்படமாயினும் அந்த பாத்திரம் யாழ்மொழி வழக்கைக் கொண்டதாக அமையவேண்டும் என்று கமல் விரும்பினார். (இயக்குனரும்,தயாரிப்பாளருமான, திரு.கே.எஸ்.ரவிக்குமாருக்கு இதில் உடன்பாடில்லை) ஆனால், நகைச்சுவைப்படமென்று வரும் ரசிகர்களுக்கு நமது மண்ணின் துயரத்தினை, ஒன்றிரண்டு காட்சிகளிலாவது சிறுகண்ணீர்த் துளியாச்சொல்லவேண்டும் என்பதே கமலின் அடிப்படை நோக்கம் என்பதை பின்னால் அறிந்துகொண்டேன். எனவே யாழ் மொழிவழக்கில் வசனங்களை அமைக்கவும் பேசவும் கமல் எனது உதவியை நாடினார். ஏற்கனவே வானொலியில் யாழ் மொழி வழக்கிலமைந்த நாடகங்களை நெறிப்படுத்தித் தயாரித்தவன் என்ற வகையில் நானும் இசைந்து, கமலைச் சந்தித்த வேளையில், கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களது, மூன்று ஒலியிழைப்பேழைகளையும் அவர் கையில் கொடுத்து, முதலில் இவற்றைக்கேட்டு மொழி இயல்பினை பரிச்சியப்படுத்திக்கொள்ளுங்கள், பின் பயிற்சி செய்யலாம் என்று கூறினேன். அடுத்த நாள் காலை என்னால் நம்பவே முடியாத வகையில் அவர் பேசிக்காட்டியபோது, அவரது கிரகிக்கும் தன்மையின் ஆற்றலைக்கண்டு வியப்பிலாழ்ந்தேன். ஆயினும் இம்மொழிநடை தமிழ்நாட்டு மக்களுக்குப் புரியாமல் போனால் “ஹேராம்” படத்துக்கு ஏற்பட்ட கதி, தன் படத்துக்கும் வந்துவிடக்கூடாதே என்று, திரு.கே.எஸ்.ரவிக்குமார் ஆதங்கப்பட்டதால், தமிழக மக்களுக்குப் புரியும் வகையில் சொற்களையும், உச்சரிப்பையும் மாற்றிமைத்து, யாழ்மொழிவழக்கின் சாயலை மட்டும் காட்டும் வகையில் அந்தப்பாத்திரத்தில் நடித்து முடித்தார் கமல். அந்த வகையில், தெனாலி பாத்திரத்துக்கு தோன்றாத்துணையாய் விளங்கியவர் நண்பர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களே.

1992ம் ஆண்டு, இலங்கை அணி, கிரிக்கட் விளையாட்டில் “டெஸ்ட்” அந்தஸ்த்து பெற்றபின் முதன் முதலாக நடைபெற்ற “அவுஸ்திரேலிய-இலங்கை” டெஸ்ட் விளையாட்டின்போது, நேர்முகவர்ணனை செய்தவர்கள் வரிசையில் பாலாவுக்குத் தனிச்சிறப்பிடம் உண்டு. 1991ல் “தெற்காசியக் கூட்டமைப்பின்” விளையாட்டுப் போட்டிகளின்போது, கூடைப்பந்துப்போட்டிக்கும் நேர்முக வர்ணனை செய்யக்கூடிய ஆற்றலைப் இவர் பெற்றிருந்தார்.

இலங்கை வானொலியில், “கலைக்கோலம்”சஞ்சிகை, “விவேகச்சக்கரம்”பொது அறிவுப்போட்டி. புலம்பெயர்ந்தபின், கனேடியவானொலிகளில், “மனமே மனமே” “ஓல்ட்-இஸ்-கோல்ட்”, “தோழியர் கும்மாளம்” போன்ற நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்தவர். கனேடியத் தொலைக்காட்சியில்-இவர் “வை.ரி.லிங்கம்” எனும்பாத்திரமாய் உருமாறி நேர்முகம் காணும் நகைச்சுவைத் தொடரில், நானும் கலந்துகொண்டு உரையாடியபோது, சாதாரணமாக நகைச்சுவை உணர்வுடன் பேசத்தெரியாத எனக்கும் கூட நகைச்சுவை உணர்வனைப் பொங்கிப்பிரவகிக்க வைத்தவர்.

“நாடுபோற்ற வாழ்க”, “நான் உங்கள் தோழன்”, “அவள் ஒரு ஜீவநதி” “வாடைக்காற்று” “~ர்மிளாவின் இதயராகம்” “அஞ்சனா(சிங்களம்),டீடுநுNனுஐNபுளு (ஆங்கிலம்)ஆகிய இலங்கைத்திரைப்படங்களில் இவர் பதித்த தடங்கள் தனித்துவமானவை. அவற்றில் தன்னிகரற்றது “வாடைக்காற்று” திரைப்படத்தில் அவர்ஏற்றபாத்திரம். அந்தப் படம் வெளியிடப்பட்ட சில நாட்களின்பின்,

“பைலட் பிரேம் நாத்” படத்துக்காக நடிகர் திலகத்துடன் படப்பிடிப்புக்கு வந்திருந்த, நண்பர் மேஜர் சுந்தர ராஜன் “விஜயா ஸ்டூடியோவில்” வாடைக்காற்று திரைப்படத்தைப் பார்த்து, பாலாவின் நடிப்பை வியந்து என்னிடம் பாராட்டியபோது, ஒரு இலங்கைக்கலைஞன் என்ற வகையில், நான் பெருமிதம் கொண்டேன்.

நமது மண்ணில் தினகரன்,வீரகேசரி,நாளிதழ்களில் “மலர் மனாளன்” எனும் புனைபெயரில் எழுதிய சிறுகதைகள், சிரித்திரன் இதழில் எழுதிய “சிரிகதைகள்” பின்னாளில் புலம்பெயர்ந்த மண்ணில் வெளிவரும் பத்திரிகை மற்றும் சஞ்சிகைகளில் எழுதிய கட்டுரைகள் என, இவரது எழுத்துப்பணி தொடர்ந்து கொண்டேயிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது

இதோ! முதன்முதலாக ஒரு நவலைப்படைத்துள்ளார் பாலா.

“கரையைத் தேடும் கட்டுமரங்கள்”

இதன் அச்சுக்கோர்த்த முதல்பிரதியை வாசித்தபொழுது 35 ஆண்டுகள் பின்னோக்கி என் நினைவுகளை இழுத்துச்சென்றது. ஏறக்குறைய அதே காலகட்டத்திலேயே,தன் கதைக்களத்தையும் சம்பவங்களையும் உருவாக்கியிருக்கிறார் பாலா. எழுபதுகளின்  நடுப்பகுதியில்-மீன்பிடி வலைகளைத் தயாரிக்கும் உற்பத்தியாளர்களான “ஜஃபர்-ஜீ-பிரதர்ஸ்”; நிறுவனம்  வானொலியில் “மீனவர் விரும்பிக்கேட்ட பாடல்கள்” எனும் ஒரு நிகழ்ச்சியை ஆரம்பிக்க விரும்பி என்னை அணுகியபோது, மீனவர்களே பங்குகொள்ளும் ஒருநிகழ்ச்சியை அவர்கள் வாழும் சூழலுக்கே சென்று ஒலிப்பதிவு செய்து, ஒலிபரப்பினால் நன்றாய் இருக்குமே என ஆலோசனை சொன்னேன். அது ஜனரஞ்சகமாய் இருக்குமா? என்ற சந்தேகத்துடன் அரை மனதாக மூன்று மாதங்கள் ஒப்பந்தத்துடன் ஆரம்பித்தார்கள். “மீனவ நண்பன்” என்ற பெயரில் நான் தயாரித்தளித்த அந்த நிகழ்ச்சி நேயர்களின் பெரும் வரவேற்பைப்பெற்று மூன்றரை வருடங்கள் தொடர்ந்தது. இலங்கைத் தீவில், தமிழ் பேசும் மீனவர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சென்று ஒன்றிண்டு நாட்கள் அங்கு தங்கியும், ஆழ்கடல் வரை அவர்களோடு பயணித்தும் அவர்களது வாழ்க்கைச் சூழலின் சிறப்பினை ஆய்ந்து அறிந்த அன்றைய அனுபவத்தை, மீண்டும் இரைமீட்டி மகிழும் வாய்ப்பினை இந்த நாவல் எனக்குத் தந்தது. பாலா, பிறந்து வளர்ந்த கரவெட்டி கிழக்கின் சூழலிருந்து தன்னைப் பெயர்த்தெடுத்து ஒரு “காலச்சக்கரத் தேரிலேறி” பின்னோக்கிச்சென்று 70 பதுகளின் இறுதியில், “மான்பாஞ்ச வெளிக்கிராமத்தில்” தன்னைத்தானே பிரசவிக்கச்செய்து அவர்களுடனே வாழ்ந்து அந்தத் துயரம்தோய்ந்த வாழ்வை அனுபவித்து உருகி உருகி எழுதியிருக்கிறார். தன் எழுத்தால், பயன்படுத்தும் சொற்களால், வரிகளால் வாசகன் உள்ளத்தில் காட்சிகளை விரியச்செய்து அந்த சூழலுக்கே அழைத்துச் செல்க்கூடிய ஆற்றல் கொண்டவனே ஒரு சிறந்த எழுத்தாளனாக முடியும். “கரையைத்தேடும் கட்டுமரங்கள்” நாவலின் முதல் அத்தியத்தின் முதல் பந்தியை வாசிக்கும்போதே நீங்களும் மான்பாஞ்ச வெளிக்கும்,புங்குடு தீவுக்கும்,இழுத்துச் செல்லப்படுவீர்கள். கச்சான் காற்றின் தழுவல் உங்களை வெற்றுடம்பாக்கித் தழுவிச்செல்லும். விரிந்து பரந்த வெண்மணற்கடற்கரையும், பச்சைநிறம் கொண்டு சாமரம் வீசும் தென்னையும் அதன் ஓலைகளும் உங்களுக்குப் பரிச்சியமாகும். அலைகடலோடு போராடி ஜீவமரணப்போராட்டம் நடத்தும் அவர்களது வாழ்க்கையை நீங்களும் வாழ்வதுபோன்ற உணர்வுக்குள் ஈர்க்கப்படுவீர்கள். அதன்பின் நீங்கள் ஒரு அந்தோணியாகவோ, ஸ்டெல்லாவாகவோ, மாறி இந்தக்கதையை வாழ்ந்து அனுபவிப்பீர்கள் என்பது நிச்சயம். கதையும் அதன் முடிவும் நீங்கள் வாசித்து அனுபவிக்க வேண்டியது. அதை சுருக்கமான வரிகளில் நானே சொல்லிவிட்டால் உங்கள் சுவாரசியம் குறைந்து போகலாம்.

“செம்மீன்”எனும் பெயரில் மீனவர் வாழ்கையை, மலையாள மொழியில் ஒரு காவியமாய்த் தந்த தகழிசிவசங்கரம் பிள்ளையும், “ஒருகடலோரக் கிராமத்தின் கதை” எழுதிய தோப்பில் முஹம்மது மீரானும், “கடலும் கிழவனும்”  நாவல் தந்த ஏர்ணஸ்ட் ஹேமிங்வே-யும் இவருக்கு உந்து சக்தியாய் இருந்ததாகவும்.  பேசாலைக்கிராமத்தில் “வாடைக்காற்று” படப்பிடிப்புக்காகச் சென்றிந்த வேளையில் அவர்களது வாழ்க்கையும் பழக்கவழக்கங்களும் பரிச்சியப்பட்டதாகவும் சொல்கின்றார்;. ஆனால், சம்மட்டி மரியாம்பிள்ளை, தாய் மதலேனாள், அந்தோணி,அவனது தங்கை எலிசபெத்,சின்னத்தங்கை மேரி, இளம் விதவையான ஸ்டெல்லா எனத்தொடரும் அத்தனை பாத்திரங்களாகவும் மாறி அவர்கள் கோணத்திலிருந்து அந்தந்தக் குணஇயல்புகளோடு பேசும் வார்த்தைகளும், அவர்களது மனஉணர்வுகளைச்சித்தரிக்கும் வரிகளும், மீனவர் வாழ்க்கைக்கே உரிய சம்பிரதயாங்களைச் சித்தரிக்கும் பாங்கும், அற்புதம்,அச்சரியம்!    வேறொரு சூழலில் இருந்துகொண்டே அவர்களது வாழ்கை முறைமைகளையும், சம்பிரதாயங்களையும்,தொழில் சம்பந்தமான நடைமுறையையும்,குண இயல்புகளையும், எப்படி இவரால் சித்தரிக்க முடிகிறது.?

உலகளாவிய ரீதியில், இந்த நாவல் வாசகர்களைச்சென்றடைந்தால், சிறந்த படைப்புகளைச் சீர்தூக்கிப்பார்த்து விருது வழங்கிக் கௌரவிக்கும் ஆய்வாளர்கள் கையில் இந்நூல் சென்றடைய ஆவன செய்தால், நிச்சயம் இந்த நூல் சிறந்த படைப்பிலக்கிய நாவலுக்கான அங்கீகாரம் பெறும். கே.எஸ்.பாலச்சந்திரனுக்குக் கிடைக்கும் அங்கீகாரம், நமது மண்ணுக்கும் பெருமைதேடித்தரும்

எல்லோருக்கும் பொதுவான இறையின் அருளால் அது நிறைவேற வேண்டுகிறேன்.

நமது மண்ணின் படைப்பாளனுக்குக் கைகொடுக்கும் “வடலி” பதிப்பகத்துக்கு எனது நன்றி கலந்த வாழ்த்துகள்

அன்புடன்

பி.எச்.அப்துல் ஹமீத்

0  0  0

இரண்டொரு வாரங்களில் வெளியாகவுள் வடலி வெளியீடான அபராதி நூலின் அட்டைப்படம் இது

அபராதி – குற்றம் புரிந்தவன்

ஏனெனில் இவர்கள் புதியவர்கள்
2004 நவம்பர் 23, அமைதிபேச்சுக்காலம். புலிகள் மீளவும் யுத்தத்தை ஆரம்பிக்கவேண்டுமென்கின்ற ஆசைகள் புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்த காலம். ஐந்து நாளில் வரப்போகின்ற மாவீரர் தின உரையில் தலைவர் யுத்தநிறுத்தத்தில் இருந்து விலகுகிறோம் என அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்த காலம். அன்று எழுதிய பதிவு இது. ஒரு புலம்பெயர்ந்தவனாக யுத்தத்தை தீர்மானிக்கும் சக்தியாக நானும் புலம்பெயர்ந்தவர்களும்  இருக்க முடியாது என்பதில் அன்றும் சரி இன்றும்சரி நான் தெளிவுடன் இருந்ததை மீளவும் எனக்கு நினைவு படுத்துகிறது இப்பதிவு. இந்த நிலைப்பாட்டில் புலிகள் பெற்ற வெற்றி அல்லது தோல்வி எதுவும் செல்வாக்குச் செலுத்தவில்லை என்பதுவும் மகிழ்ச்சிதான்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு yarl.net தந்த வலைப்பதிவு வசதியூடாக எழுதிய பதிவும் சில பின்னூட்டங்களும் இவை. யுத்த தோல்விக்குப்பிறகு காற்றடிக்கிற பக்கம் சாய்கின்ற கதை கதைப்பவர்களுக்கு அர்ப்பணிக்கின்றேன். ஏனெனில் அவர்கள் புதியவர்கள்.

குரல்தரவல்ல அதிகாரிகள்

2004 நவம்பர் 23

ஏலவே எழுத நினைத்திருந்த விடயம் இது. சேயோன் கூட அவ்வப்போது புறுபுறுத்துக் கொண்டிருந்தான் இது பற்றி.

புலம் பெயர் நாடுகளில் தங்களைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக காட்டிக் கொள்கிறவர்களுக்கு தங்களது புகழ் குறித்த உள்நோக்கம் இருக்கிறதா?

ஆம் என்கிறான் சேயோன். இப்போது நானும் கொஞ்சமாய் தலையாட்டுகிறேன் அதற்கு உதாரணங்களை பார்த்த பின்பு!

முதலில் புலம் பெயர்ந்த ஈழத் தழிழர்கள் அனைவருமே யுத்தத்தின் கோரத்தால் மன வலியோடு மண்ணை விட்டுப் போகவில்லை என்பதைச் சொல்ல வேண்டும்.

முக்கால் வாசிப் பேர் தமது தனிப்பட்ட வாழ்வின் தர மேம்பாட்டுக்காய் சென்றவர்கள். அதில் வெற்றியும் கண்டவர்கள். பின்னர் தமது உறவுகளை ஒவ்வொன்றாக அழைக்க அவர்களுக்கும் வெளிநாடுகளின் அதிகரித்த வாழ்க்கைத் தரத்தை மனதார ஏற்றுக்கொண்டு அடுத்தவர்களை அழைத்துக் கொண்டவர்கள். இதுவே உண்மை!

இவ்வாறு சென்றவர்களின் பொருளாதாரம் விடுதலைப் போரிற்கு மிக்க பக்க பலமாய் அமைந்ததென்பதையும் யாரும் மறுக்க முடியாது!

0	0	0

அண்மைக்காலமாக என் வயதொத்த பல வெளிநாட்டு இளைஞர்கள் என்னோடு பேசும் போதும் எங்காவது எழுதும் போதும் நடந்து கொள்கிற முறையைப் பார்க்கின்ற போது இதன் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

அவுஸ்ரேலியா வந்த ஆரம்பத்தில் என்னோடு கொழும்பில் படித்த என் வயதொத்த இளைஞன் கனடாவில் இருந்து எனக்கு சொன்னார்!

‘உங்கை ஆராவது இயக்கத்துக்கு எதிரா கதைச்சாலோ எழுதினாலோ அவங்களிலை ஒரு நோட்டம் வை. எங்களுக்கு அந்த தகவல்கள் வேணும்.”

அவருக்கு நான் சொன்ன பதில்!

‘நீ எல்லாம் ஊரிலை இயக்கத்துக்கு ஆட்சேர்க்கும் போது வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே கிடந்த ஆளெல்லோ.. ”

எங்களுக்கு அந்த தகவல்கள் வேணும் என்ற அந்த வார்த்தைகள் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்?

தானும் ஒரு புலி என்று உணர்த்துகிறாரா?

தனக்கும் புலிகளுக்கும் இடையில் உயர் மட்டத் தொடர்பேதும் இருப்பது போல காட்டிக் கொள்ள ஆசைப் படுகிறாரா?

அவ்வாறாயின் அவர் தனது தனிப்புகழ் தொடர்பாக கவனமெடுக்கிறாரா?

நண்பன் சேயோன் அவருக்கு அருகிலேயே இருப்பவன். இப்பொழுதெல்லாம் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் கனேடிய பொறுப்பாளர் என்றும் ஒட்டாவா பொறுப்பாளர் என்றும் தான் குறிப்பிடுகிறான்.

புலம் பெயர்ந்த பின்னர் எப்படி ஒரு இரவில் இவர்களால் புலிகளின் குரல் தர வல்ல அதிகாரிகள் ஆகிவிட முடிகிறது?

புலத்தில் சண்டை நடக்காது என்ற தைரியமா?

இன்னுமொருவரை மிக அண்மையில் அறிந்து கொண்டேன். அவரது கருத்துக்களை படித்தறிந்த பின்னர் அவரைச் சுவிஸ் பொறுப்பாளர் ஆக்கலாம் என்று சேயோன் சொல்லியிருக்கிறான்.

அந்த இளைஞருக்கு ஈழப் பிரச்சனையில் தனது தர்க்க ரீதியான வாதத் திறமையை முழுமையாக காட்ட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் போலும். வெறும் கற்றுக்குட்டித் தனமான அவரது கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப் படக் கூடிய அளவிற்கு வளர்ச்சியற்றிருந்தன.

அவர் எழுதுகிறார்!

கருணா போன்ற ஒருவரை வளர்த்து விட்டது தாயகத்தில் வாழ்கின்ற மக்கள் தானாம். புலத் தமிழர்கள் இல்லையாம்

புலிகள் தவிர்ந்த மாற்று இயக்கங்களை செயற்பட தாயக தமிழர்கள் அனுமதித்திருக்கிறார்களாம். புலத் தமிழர்கள் அப்படி அனுமதிக்க மாட்டார்களாம்

சுவிஸில் துரோகிகள் எவரும் இல்லையாம் என்றவர் இன்னும் ஒரு படி மேலே போய் அப்படி யாராவது இருந்திருந்தால் அவர்களை உயிருடன் விட்டு வைத்திருக்க மாட்டோம் என்கிறார்.

எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. வடிவேலு பாணியில் சின்னப் புள்ளைத் தனமால்ல இருக்கு என்று சொல்ல வேண்டியது தான்.

உச்சக் கட்டம் இது தான்.

வேறொருவர், சுவிஸ் காரருக்கு எதிரான கருத்தொன்றை முன்வைக்க இவர் எழுதினார் பாருங்க ஒரு வரி!

‘இதை நான் சேர்க்க வேண்டிய இடத்திலை சேர்க்கிறன்.”

அந்த சேர்க்க வேண்டிய இடம் எது என்பது உங்களுக்கு தெரியும். அந்தக் கருத்தின் மூலம் தனக்கும் அந்த சேர்க்க வேண்டிய இடத்திற்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்பதை நபர் உணர்த்த விரும்புகிறாரா? அப்படி விரும்பின் அதற்கான காரணம் என்ன? இதற்கு சேயோன் சொல்கிற பதில்

புகழ்!

சுவிஸ் நண்பர் மேலும் தொடர்கிறார். தான் தாயகத்தில் இருந்திருந்தால் இன்று மாவீரர் ஆகி விட்டிருப்பாராம்.

இங்கே பூச்சுத்தத் தொடங்கும் போது தான் எனக்கு கோபம் வருகிறது. இந்த கோபம் எனக்கு சிறு வயதிலேயே வந்தது. காசியானந்தன் எழுதிய ஒரு பாடல் வரிகள் புலத்திலிருந்து பாடுவது போல இருக்கும். அதில் நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல்லை என்கிற ஒரு வரி வரும்.

அவர்களை யார் வர வேண்டாம் என்றது என்று அப்பவே யோசித்திருக்கிறேன். (உண்மையிலேயே காசியானந்தனின் கடவுச் சீட்டினை இந்திய அரசு பறிமுதல் செய்து வைத்திருப்பதாய் யாரோ சொன்னார்கள்.)

தாயகத்தில் இருந்திருந்தால் மாவீரர் ஆகி விட்டிருப்பேன் என்றால் இன்னமும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை என்று தான் நான் சொல்லுவேன்.

ஒன்றை உரத்துச் சொல்ல ஆசைப் படுகிறேன். தேசத்தின் விடுதலைக்கான அர்ப்பணிப்பு என்பதனிலும் பார்க்க நான் உட்பட எங்களுக்கு எமது தனி வாழ்வின் மேம்பாடு முன்னிலையில் நின்றதனால் நாம் வெளிநாடுகளுக்கு வந்து விட்டோம். அதுவே உண்மை.

வந்துட்டோமில்ல! அப்புறம் என்ன? அங்கையிருந்தால் போராளியாகி இருப்பேன்.. மாவீரர் ஆகியிருப்பேன் என்கிற கதைச் சுத்தல்கள்!

இந்தச் சமாதானத்திற்கான காலத்தை அரசு புலிகளை பலவீனப்படுத்த பயன் படுத்துகிறது. புலிகளை இறுக்கமான ஒரு சர்வதேச வலைக்குள் சிக்க வைத்த அதன் கைகளை கட்டி விட முயல்கிறது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

உண்மைதான்!

எனது பார்வை இதனை புலத் தமிழர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பது தான்! அநேகம் பேர் புலிகள் மீண்டும் யுத்தத்தை தொடங்குவதே இத் தடைகளை தாண்டுவதற்கான சரியான வழி என்கிறார்கள். அதுவே சரியானதுமாய் இருக்கலாம்.

யுத்தத்தின் நேரடி பாதக விளைவுகள் எதனையும் அனுபவிக்காத (சாதக விளைவுகள் பல.. பலரை அந்தந்த நாட்டுப் பிரஜைகள் ஆக்கியது யுத்தம் தான்.) ஒரு தேசத்திலிருந்து கொண்டு எப்படி இவர்களால் யுத்தத்தை தொடங்கு என்று கேட்க முடியும்?

சிறு வயதுகளில் தந்தை தாயுடன் வெளிநாடுகளுக்குப் போய் இன்று இளம் வயதை அடைந்து விட்டவர்களும் யுத்தத்தை தொடங்கினால்த் தான் எங்களுக்கு என்று ஒரு தனி நாடு வரும் என்கிறார்கள். தனி நாடு வந்த பின்னர் விடுமுறைக்குச் சென்று வர எண்ணியுள்ளார்களோ என்னவோ?

யுத்தம் வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கின்றவர்கள் அந்த யுத்தத்தின் விளைவுகளை நேரடியாக சந்திக்கப் போகின்ற மக்கள் தான்.

மழை ஒழுகும் ஓலைக் குடிசை வாழ்வென்றால் என்ன என்று தெரியாதவர்கள், காதைக் கிழிக்கும் குண்டுகள் ஓசையை மறந்து விட்டவர்கள் அல்லது அப்பா அம்மா சொல்லிக் கேட்டவர்கள், பாம்புகளும் யானைகளும் நிறைந்த காடு சார்ந்த வாழ்க்கை முறையின் சிரமங்கள் தெரியாதவர்கள் யுத்தத்தை தொடங்கு என்று சொல்கின்ற போது அவர்களின் குற்ற உணர்ச்சி அவர்களை குத்திக் கிழிக்க வில்லையா?

சக்கரவர்த்தியின் (கனடா) ஒரு கவிதை எனக்கு மிகவும் கவர்ந்தது. அதன் மிகச்சரியான வடிவங்கள் என் நினைவில் இல்லை. இருப்பினும் அதன் சாராம்சம் இது தான்.

என் இதயம் யாருக்காக

இரத்தம் சிந்தி

கண்ணீர் வடிக்கிறதோ

அவர்கள் உங்களுக்காகவும்

வெடித்துக் கொள்கிறார்கள்

என்பது தான் என்

மிகப் பெரிய சோகம்.

சில பின்னூட்டங்கள்

புலம்பெயர்ந்தவிடங்களில் த.வி.புலிகள் பேச்சுவார்தையில் தமிழீழக்கோரிக்கையை கைவிட்டுவிட்டதாக ‘என்ன இவங்கள்’ எண்டு நிறைய புலம் பெயர்ந்த ஆதரவாளர்கள் துணுக்குற்றதைக் கண்டிருக்கிறென்.  ஏன்?  அங்கிருக்கிற மக்களிடம் கேட்டால் சொல்லுவார்க்ள தமக்கு என்ன வேணுமென்று.  இவ்வளவுகால யுத்தத்தில் நேரடையாக பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்தான்.  வெளிநாட்டுக்காரர்களால் அங்கே அடிக்கடி போய்வர முடிகிறது – யுத்த நிறுத்தம் விடுமுறையைக் கழிக்க உதவியிருககிறது.  ஆனா அங்க உள்ளாக்கள் என்ன செய்யிறதென்று -இடைக்கால நிறுத்தத்தை நம்புவதா வேணாமா என்று- முடிவற்றுப் போவதாக சொல்கிறார்கள்.  கனடாவில் so called புலி ஆதரவாளர்களின் நடப்பு இதுதான்.

நீங்கள் வி.பு.ஆதரவாளர் என்று நனைக்கிறேன்.  சிக்கரவர்த்தியின் எழுத்துக்கள் இங்கே புலிஎதிர்பர்பாகத்தான் பார்க்கப்படுகிறது.  ஆனால் அவரென்னவோ தூதேசத்தில் இருந்து தம் குழந்தைகளை கவனமாக வளர்த்தபடி ‘போர்ப்பரணி பாடும்’ பாட்டுக்காரர்களைத்தான் வைதபடி இருப்பதாகப் படுகிறது!

இன்னுமொன்று இங்கே நீங்கள் சக்கரவர்த்தியை பிறரை மேற்கோள் காட்டினால் நீங்களும் ஒரு புலிஎதிர்ப்புவாதி என்றுதான் பார்க்கப்படுவீர்கள்.  நீங்கள் எழுதிய இந்தப் பக்கத்தில் உண்மையான ஆதங்கம் இருக்கிறது.

நன்றி.

-பொடிச்சி

புலி எதிர்ப்பு, அல்லது புலிகளை எதிர்நிலையில் விமர்சித்தல் என்பது தம்மை வித்தியாசமாக அடையாளங்காட்டிக்கொள்வதற்காக சில புத்திஜீவிகளால் மேற்கொள்ளப்படுகிறது. (பொடிச்சியின் பரம வைரி….?)

புலி ஆதரவு என்பது “தல” படத்துக்கு முதல்நாள் டிக்கட் வாங்கிவிடத்துடிக்கும் இளைஞர் பட்டாளத்தின் மனநிலைக்குச் சமமாகவே பெரும்பாலும் இருக்கிறது.

புலிகளுக்கு சார்பான பெருமடுப்புப் பரப்பரைக்கு கேள்விகளற்று அடிமையாபவர்கள் ஏராளம்.

இந்த இரண்டு ஈரெதிர் போக்குகளையும் இந்த இடத்தில் மேலதிக தகவலுக்காகத்தான் சொன்னேன்.

“அவர்களுக்கு” எதிரான விமர்சனம் “எதிரிக்கு” சார்பானதாய் இருந்துவிடும் என்ற கருத்து தமிழ் தேசிய வாதிகள் பலராலும் அடிக்கடி சொல்லப்படுகிறது.

அதில் உண்மை இல்லாமலில்லை.

அதற்காக ப்[உலிகளின் செயற்பாடுகளை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வதற்கும் இல்லை.

மக்கள் விடுதலை இயக்கம் என்ற அளவில் அவ்வமைப்புக்கு ஏராளம் பொறுப்புக்கள் உண்டு.

அவற்றை என்றைக்கும் தட்டிக்கழித்துவிடமுடியாது.

தேசியம் என்ற சிறுவட்டத்தைத்தாண்டி மனிதர் நிலையில் சிந்திப்பவர்கள் புலிகளை மிகக்கடுமையாக அண்டிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

அக்கண்டிப்புக்களை எவ்வாறு கையாளவேண்டும் என்பது புலிகளின் பொறுப்புணர்வோடு சம்பந்தப்பட்ட விஷயம்.

-மு.மயூரன்

புலி எதிர்ப்புக் “கதைகள்”
நீங்கள் இப்ப ஒரு புலி எதிர்ப்பாளர் என்கிறார் அவர். அவர் மட்டுமில்லை. வேறு சிலரும் கேட்டிருக்கிறார்கள். பேசியிருக்கிறார்கள். காரண காரியங்களை நான் கேட்டுக்கொள்ளவில்லை. என்னால் அந்த பார்வைகளைப்புரிந்து கொள்ளமுடிகிறது. டெலோ நியூசிலும் தகவல்கள் டொட் கொம்மிலும் ஏன் தமிழரங்கத்திலும் எழுத்துக்கள் வருமாயின் அவ்வாறான ஒரு பார்வை உருவாகும்படிதான் எல்லா மட்டச்செயற்பாடுகளும் ( அந்த தளங்களினதும் உட்பட) உள்ளன. உண்மையில் புலிகள் குறித்த சில எதிர்மறைக் கருத்துக்களை புலிகள் அற்ற நிலையில் சொல்வது குறித்த குற்ற உணர்ச்சி எனக்கு இருக்கிறது.

ஆழமாகப்பார்த்தால் அவை புலிகள் மீதான விமர்சனங்கள் அல்ல என்று தோன்றுகிறது. அவை கோபங்கள். தோல்வியைத்தந்து விட்டார்களே என்றோ அல்லது யுத்தத்தில் வெல்லவில்லையே என்றோ மாதிரியான கோபங்கள் அல்ல அவை. அவ்வாறான மோட்டுத்தனமான காரணங்களுக்காக கோபப்படுகின்ற இழிநிலை எனக்கு ஏற்பட்டுவிடவில்லை. எனது கோபம் அரசியல் ஆழங்களில் இறங்கி ஆராயாத கோபம். அது தனியே உணர்வுத்தளத்திலானது.  இறுதிக்காலங்களில் புலிகள் தம் சொந்த மக்களோடு முரண்பட்டு இறுதிவரை தம்மை ஏந்திய மக்களின் மனங்களில் ஆறாத வலிகளை ஏற்படுத்தியதை ஜீரணிக்க முடியாத கோபம்.  பதின்மூன்று வருடங்களுக்கு முன்னே தன் மூத்தவனை முல்லைத்தீவிலும் தன் பேத்தியொருத்தியை நாச்சிக்குடாவிலும் விடுதலைக்காய் கொடுத்த மூதாட்டியொருத்தி “எங்கள் எல்லாருக்கும்  துரோகம் செய்து போட்டாங்கள் மோனை” என்பதைக் கேட்கிறபோதேற்படுகிற தாங்க முடியா கோபம்..

பச்சைமட்டையடிப்பிரயோகம், இறுதிக்கட்ட வலுக்கட்டாய ஆட்பிடி, வெளியேறத்தடுத்தமை , துப்பாக்கிமிரட்டல்கள் என இப்பட்டியல்களை மிகுந்த மன மகிழ்ச்சியோடும் புளகாங்கிதத்தோடும் ஏளனத்தோடும் பட்டியல் இடுகின்றனர் சிலர்.

“உவையளுக்கு உது தேவைதான்” என்கின்ற திருப்தித்தன்மையோடு அவற்றை சொல்லுவோரும் உளர்.

ஆனால் மிகுந்த வலியோடும் நினைத்துப்பார்த்திரா துயரத்தோடும் “இவர்கள் இப்படிச்செய்தார்கள்” என்கின்ற வெட்கத்தோடும் தமக்குள் குமுறுகின்றனர் பலர். யோசித்துப்பார்த்தால் ஆழமான புலி விசுவாசத்தின் அடிப்படையிலேயே இந்தக் குமுறல் நிகழ்கிறது.

0	0	0

எனது கோபங்களை விட்டுத்தள்ளுங்கள். போகட்டும். ஆனால் வன்னி மக்களின் கோபங்களை ஒரேயடியாக “ஆமியோட சேர்ந்திட்டுதுகள்” என்ற லேபளில் புறக்கணித்து விடுவதைவிட அயோக்கியத்தனம் வேறு கிடையாது. அவர்களின் விமர்சனங்களில் அதிகம் கோபம் இருக்கலாம். கேட்டுத்தான் ஆகவேண்டும். ஏனெனில் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் அமைப்பை நீட்டிப்பது என்ற செயற்பாடும் நாடுகடந்த அரசு என்ற கட்டமைப்புக்கான முன்முயல்வுகளும் தனியே புலம்பெயர்ந்த பத்து லட்சம் மக்களுக்கானது அல்ல.  இலங்கைக்கு வெளியே உகண்டாவிலோ அல்லது கனடாவிலோ தமிழரின் அரசியல் அபிலாசைகளை பூரணப்படுத்தும் ஒரு தீர்வினை எட்டும் கனவுகள் ஏதும் இந்நடவடிக்கைகள் ஊடாக இருப்பின் அந்த மக்களை மறந்துவிடலாம். ஆனால் அப்படியல்ல. தாயகம்நோக்கியே மீளவும் கதைகள் இருக்கிற நிலையில் அந்தக்குரல்கள் மிக முக்கியமானவை. அந்தக்குரல்களின் கேள்விகளைக் கடந்துவிட்டு போகமுடியாது.

0	0	0

நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்தில் ஒரு பெரிய இசை நிகழ்வு நடந்தது. சிங்கள அரசின் “திட்டமிட்ட” நிகழ்வுதான் அது. தமிழ்நாட்டு இசையமைப்பாளர் தேவி சிறிபிரசாத் வேறும் பல பாடகர்கள் பாடகிகள் வந்து மாம்பழமாம் மாம்பழம் கறுத்தக்கொழும்பான் மாம்பழம் என்று பாடிக்கொண்டிருந்தார்கள். சுமார் இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருப்பார்கள். பெரும்பாலும் இளைஞர்கள்தான். மேடையிலும் ஆட்டம். பார்வையாளர் மத்தியிலும் ஆட்டம். கொண்டாட்டம்.

அப்படியா என்ன கொழுப்பு அவர்களுக்கு என்று நீங்கள் கேட்கமுதல் கொஞ்சம் பொறுங்கள். இந்நிகழ்வை நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்த புலம்பெயர்ந்த தமிழர்கள் பேயறைந்தவர்கள் போல் ஆனார்கள். உண்மையில் மூன்று லட்சம் மக்கள் பக்கத்தில் வவுனியாக்காடுகளில் அடைபட்டுக்கிடக்கிறார்கள். பக்கத்தில் சாவகச்சேரி முகாம்களில் ஐயாயிரம் பேர் சாப்பாட்டுக்கும் மலசலத்திற்கும் வரிசையில் நிற்கிறார்கள். இந்த நிலையில் இந்தமாதிரியான குத்தாட்டம் ஒருமாதிரியாகவே எனக்கு இருந்தது. சிங்கள அரசு மிகத்திட்டமிட்ட முறையில் இயல்புநிலைத் தோற்றத்தைக்காட்ட இவற்றை ஏற்பாடு செய்கிறது என்பதும் புரிகிறது.

ஆனால் இங்கே புலம்பெயர்ந்த தேசங்களில் வீடுகளில் சன் என்றும் கலைஞர் என்றும் நடக்கும் இருபத்துநான்கு மணிநேர கேளிக்கை விளையாட்டுக்களை நிறுத்தியவர் யார்..? கோடைகாலம் தொடங்கக் காத்திருந்து நிகழ்த்தும் பிறந்தநாள் சாமத்திய சடங்கு நிகழ்ச்சிகளை நிறுத்தியது யார்? பெருமெடுப்பில் நடத்தும் கோவில் திருவிழாக்களை நிறுத்தியது யார்? ஆகக்குறைந்தது கிரிக்கெட் மட்டையால் தலையிலடித்துக் கொல்வதையும் சுத்தியலால் தலையிலடித்துக் கொல்வதையும் நிறுத்தியது யார் ?

ஒரு இளம் உளவியலாளரோடு பேசினேன். யுத்தத்தில் சிக்கிய சமூகமொன்றுக்கு இத்தகைய பொழுதுபோக்கு நிகழ்வுகள் நீண்டகால அடிப்படையில் தேவைதான் என்கிறார் அவர். தொடர்ச்சியான யுத்த அழுத்தம் அவர்களுக்குள் ஏற்படுத்திய உளத்தாக்கங்களிலிருந்து விடுபட சரியானதும் விஞ்ஞானபூர்வமானதுமான செயற்பாடுகள் அங்கில்லாத நிலையில் இப்படியான நிகழ்வுகள்தான் அவற்றை ஓரளவு சரிக்கட்ட வேண்டியிருக்கிறது. குறிப்பாக சிறுவர்கள் / குழந்தைகள். (யுத்த சூழலிலிருந்து விலகி பத்து வருடங்கள் ஆகி விட்ட போதும் இன்றைக்கும் சட்டென வரும் விமான ஒலிகள் எனக்குள் சின்ன திடுக்கிடும் உணர்வைத் தருகின்றன. )

எங்காவது முகாமிலோ வேறு எங்கேயோ இவ்வாறான களியாட்ட நிகழ்வுகளில் சிறுவர்கள் குதூகலித்து ஆடக்கூடும். கொண்டாடக்கூடும். அந்த நிகழ்வுகளில் இருக்கிற அரசியலைப்புரிந்து கொள்கிற அதே நேரம் அந்தச் சின்னஞ்சிறுசுகள் மீது வன்மப் பார்வைகளை வீசாதீர்கள். அவர்கள் ஆடிவிட்டுப்போகட்டும்.

பெருங் கதையொன்றின் சிற்சில குறிப்புக்கள்
ஆபிரிக்கா ஒரு இருண்டகண்டமென்று தனபாலன் வாத்தி படிப்பித்தபோது அந்தக்கண்டத்திலேயே தானும் வந்து இருண்டுகிடக்க வேண்டுமென்று நிமலன் நினைச்சுக்கூடப் பாத்திருக்கமாட்டான். ஆபிரிக்காவில்த்தான் இருக்கிறது என அறிந்தேயிராத ஸ்நேகலில் அவன் வந்து விழுந்து ஒரு வருசமும் சொச்ச மாதங்களுமாகிவிட்டது. ஸ்நேகலை வெளிநாடு என்று இவன் ஒருக்காலும் ஒத்துக்கொள்ள மாட்டான். வெளிநாடென்றால் சிங்கப்பூர்மாதிரி இருக்கோணும், ஓம் இவன் சிங்கப்பூரிலும் ஆறுமாசம் அடைபட்டுக்கிடைந்த கதையும் உள்ளது.

ஸ்நேகலில் வீடென்ற பெயரில் ஒரு மரக்கூட்டுக்கை நிமலனும் இன்னும் பதினாறு பேரும் அடைந்து கிடைந்தார்கள். உண்மையைச் சொன்னால் அடைந்து கிடைக்கவில்லை. தூர இடங்களுக்குப் போகமுடியாட்டிலும் பக்கங்களில பிறீயா திரிய முடிந்தது. ஸ்நேகலில் இருக்கத் தனக்கு விசா இருக்கா இல்லையா என்ற ஒரு அறுப்பும் நிமலனுக்குத் தெரியாது. அதெல்லாம் ஏஜென்சிக்காரனுக்குத் தான் தெரியும். இன்னும் சொல்லப்போனால் ஸ்நேகலில இருந்து தான் எங்கை போகப்போறன் என்ற அறுப்பும் அவனுக்குத் தெரியாது. அதெல்லாம் ஏஜென்சிக்காரனுக்குத்தான் தெரியும்.

எல்லாந்தெரிந்த அந்த ஏஜென்சிக்காரன் ஒரு தமிழனாக இருந்தான். தேவாண்ணை தேவாண்ணை என்று அவனைக்கூப்பிட்டாலும் அவனுக்கு இன்னும் மூன்று பெயரும் மூன்று பாஸ்போட்டும் இருக்கலாமாம் என்று பதினேழு பேர்கள் பேசிக்கொண்டார்கள். தேவாண்ணையும் நிமலன் வந்திறங்கிய நாள்முதல் ஸ்நேகலிலதான் இருந்தார். அவருக்கு ஸ்நேகலில் ஏஜன்சி இல்லாத இன்னொரு தொழிலும் இருந்தது. கிழமையில மூன்று நாள் மொத்தமா மீன்களைப்பெட்டியடிச்சு பிரான்ஸ் ஜேர்மன் சுவிஸ் நாடுகளுக்கு அவர் அனுப்பிக்கொண்டிருந்தார். ஆபிரிக்க மீன்களை, இலங்கையிலிருந்து சுடச்சுட வருகிறது எனச்சொல்லி அங்கு விற்கிறார்களாம் என்றதையும் தேவாண்ணையே சொன்னார். அது உண்மையாகத்தான் இருக்கும். ரேஸ்ற்றில ஒரு வித்தியாசத்தையும் காணமுடியாது. ஆனால் மீன்கள்தான் கொஞ்சம் பெரிசா கொழு கொழு என்றிருந்தது. அதிலும் அறக்குலா மீன்கள் அடைக்கப்பட்ட றெஜிபோம் பெட்டிகள் கிட்டத்தட்ட சவப்பெட்டிகள்மாதிரி இருந்தன. ஸ்நேகலுக்கு வந்த புதிசில் இப்படியொரு பெட்டியில்தான் தேவாண்ணை தன்னை பிரான்சுக்கு அனுப்பப்போகிறாரோ என்று நிமலன் யோசித்திருக்கிறான். ஸ்நேகலில் இருந்து ஆறோ எழு மணித்தியாலத்தில் ஐரோப்பாவின் ஏதாவதொரு ஏயார்போர்ட்டில் தேவாண்ணையின் ஆள் யாராவது தன்னை வெளியே எடுக்கலாம் என்ற அளவுக்கு அந்த யோசனை இருந்தது.

தன்ரை பிசினசுக்கு எடுபிடி வேலைகள் செய்வதுபோக மற்றைய நேரங்களில் லைட்டாக உலாத்தச்சொல்லி தேவாண்ணையே ஓடர் போட்டிருந்தார். அப்பதானாம் பிரெஞ்சு பிடிபடும். “நாங்கள் சுவிசுக்குப்போய் அப்பிடியே அங்கையிருந்து கனடாக்கு போயிடுவம்” என்று சொன்ன நாலுபேரைத்தவிர மிச்சப்பேர் பிரெஞ்சைப்பிடிக்க மார்க்கெட் றோட்டு என்று அலைந்து கொண்டிருந்தார்கள். லொறிக்கும் பஸ்சுக்குமான குரொஸ்சில் பிறந்தமாதிரியான ஒரு வாகனம் அவர்களை ஏற்றி இறக்கியது.

“இந்தப்பிச்சைக்கார நாட்டுக்கை பிரஞ்சு எப்பிடி வந்தது” என்றான் நிமலன். பிரெஞ்சு கதைக்கிறவர்கள் வெள்ளைக்காரர்களா இருக்கவேணும் என்றும் பணக்காரர்களா இருக்கவேணும் என்றொரு பிக்சரை அவன் தனக்குள்ளே போட்டுவைச்சிருந்தான். அதுமட்டுமில்லாமல் தான் ஸ்நேகலுக்கு வந்த ரண்டோ மூன்று மாதத்தில வந்த ரூபன் ஒரு அறிவாளி என்றொரு பிக்சரையும் அவன் போட்டுவைச்சிருந்தபடியால இந்தக்கேள்வியை அவன் ரூபனிட்டைத்தான் கேட்டான்.  ரூபன் ஒருக்கா தொண்டையைச் செருமிக்கொண்டான். அது அவன்ரை பழக்கம். “காலனித்துவ.. ” என்று தொடங்கிய ரூபன் டக்கென்று இடையில நிற்பாட்டினான். ஏனென்றால் அவனும் ஒரு பிக்சரைப்போட்டு வைச்சிருந்தான் நிமலன் ஒரு மொக்கன் என்று. பிரான்சுக்கு றெஜிபோம் பெட்டியில போற கதையை நிமலன் அவனுக்கும் சொன்ன நாள் அவன் அதைப்போட்டான். ரூபன் அந்தக் குரூப்பில கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருந்தான். கிட்டத்தட்ட ஒரு ரைம் ரேபிள்போட்டு செய்யிறமாதிரி அவன்ரை நடவடிக்கைகள் இருந்தது. பேச்சும் மற்றாட்கள் மாதிரி படபடப்பா இல்லாமல் தெளிவாத்தான் வரும்.  அதிலும் அச்சு அசலான தமிழில் வரும். இப்ப கூட ஏதோ சப்பாத்தைப்பற்றிச் சொல்ல வெளிக்கிட்டு இடையில் நிறுத்தியதாகத்தான் நிமலன் நினைத்தான். பிரெஞ்சுக்கும் சப்பாத்துக்கும் என்ன தொடர்பென்றுதான் அவனுக்குத் தெரியவில்லை.  ஆனால் பிரெஞ்சுக்கும் பதினைந்து கசையடிகளுக்கும் தொடர்பிருக்கிறதும் பிரெஞ்சுக்கும் கட்டுநாயக்கா எயார்போட் அற்றாக்குக்கும் தொடர்பிருக்கிறதும் அவனுக்கு நல்லாத்தெரிந்திருந்தது.

அந்தத்தொடர்புகளுக்கு கொஞ்சக்காலம் முதல் அவன் ஒரு பிரெஞ்சு சிற்றிசனாக சிங்கப்பூரில் தங்கவைக்கப்பட்டிருந்தான்.

0 	0	0

நீர் கொழும்புக்குக் கிட்டவான ஒரு கடற்கரையில் இருந்து இத்தாலிக்கு எந்தப்பக்கமாகப் போறது என நேசன் யோசிச்சுக்கொண்டிருந்தபோது இரவாயிருந்தது. ஒரு ட்ரவலிங் பாக்கில மூன்று ஜீன்ஸ் மூன்று சேர்ட் இரண்டு சாரம் போட்டிருக்கிற பென்ரரோட இன்னும் பத்து, மொத்தமா பதினொரு பென்ரர், சித்தலெப்பை விக்ஸ் கொஞ்சம் பனடோல் கார்ட் ஒரு அல்பம், அல்பத்தில அம்மாவின் இரண்டு படங்களும் இருபத்தியிரண்டு அகிலாவின் படங்களுமாக அவன் குந்தியிருந்தான். இன்னும் நாற்பதுபேர் குந்தியிருக்காவிட்டாலும் சப்பாணிகட்டியும் காலை நீட்டியும் இருந்தனர். அவர்களின் ட்ரவலிங் பாக்கிலும் இதே மாதிரிச்சமாச்சாரங்கள் இருக்கலாம். ஆனால் அகிலாவின் படங்கள் இருக்கமுடியாது. பதிலுக்கு சாந்தி, தீபா மற்றும் இன்னோரன்ன பெயர்களையுடைய படங்கள் இருக்கலாம். ஆனால் அதிகமாக மெனிக்கே, சுமுது, லசந்தி மற்றும் இன்னோரன்ன பெயர்களுடைய படங்களே இருக்க சான்ஸ் என்பது இவனுக்கு கொஞ்சம் பதற்றமாக இருந்தது.

திரும்பவும் இத்தாலிக்கு எந்தப்பக்கமாகப் போறது என நேசன் நினைத்தான். நியாயமாகப்பார்த்தால் இந்தக்கேள்வியை யோசிக்கிறவனுக்கு இத்தாலி எந்தப்பக்கம் இருக்கிறதென்று தெரிந்திருக்கவேண்டும். ஆனால் ஆமிக்காரன் சித்திரவதை செய்யாத ஒரு நாடு இத்தாலி என்றதைத்தவிர அவனுக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை. நியாயத்தைப்பேசினால் இலங்கை என்று டுக்குட்டி நாடு இந்தியாக்கு கீழே இருக்கிறது என்று தெரியவந்தபோதே அவன் பாடசாலைக்காலங்களை முடித்து, இல்லை இங்கையும் நியாயத்தைப்பேசினால் பாடசாலைக்காலங்களை முறித்து அவன் தச்சுவேலைக்கு எடுபிடியாகப்போய்க் கொண்டிருந்தான். அதைச் சொல்வதற்கும் இந்தியாவிலிருந்து தலைப்பாகையும் தாடியும் வைச்ச ஒருத்தன் வரவேண்டியிருந்தது.

சுழிபுரம் காந்திகடையின் மேல்மாடியில் நேசனின் கையிரண்டையும் பின்னால் கட்டிவிட்டு வெறும்மேலில் சிகரெட்டால் ஒன்பதாவது சூடு போட்டபோது தலைப்பாகைக்காரன் சொன்னான்.

“இன்டியாட கொட்டை மாதிரி இருக்கிற நாட்டில இருந்து கொண்டு கொழுப்பெடுத்தாடா திரியிறீங்க.. சொல்லு வெற்றி எங்கை?” இப்பிடி இரண்டு மூன்று நாளாக இந்த இந்தியாவின் கொட்டைக்கதையை காந்தனுக்கும் அவன் சொல்லியிருக்கிறான். சந்திரனுக்கும்  சொல்லியிருக்கிறான் தலா ஏழு சிகரெட் சூடுகளோடு.

மூன்றாவது நாள் இலங்கை இந்தியாக்கு கீழைதான் இருக்கென்று நேசனுக்கு கொன்பேர்ம் ஆகிட்டுது.  ஆனால் சீக்கியன் சொன்ன கொட்டைக்கதைதான் விளங்கவில்லை. ஏனென்றால் ஆமிப்பெரியவனுக்குப் பின்னால சுவரில இருந்த பெரிய இந்தியா மப்பில இலங்கை கொஞ்சம் கொஞ்சமா வீங்கிப்போன மாதிரி இருந்தது. அதைத்தான் சீக்கியன் கொழுப்பு என்றானோ..

நாலாவது நாள் நேசனை நாலைஞ்சு பேர் மிதித்தார்கள்.  சிகரெட் சூடுகள் ஆறாத முதுகில் பூட்ஸ்கால் பட விண் விண் என்று வலித்தது. “ஐயோ சேர் எனக்கு வெற்றியைத் தெரியா சேர்.. நோகுது சேர்.. விட்டுடுங்கோ சேர்.. ” என்று நேசன் கத்திக்கொண்டிருந்த போது, வெற்றி ஊத்தைச்சாறமொன்றுடனும் தலைப்பா ஒன்றுடனும் பின்னால் கரியரில மீன்பெட்டியொன்று கட்டிய சைக்கிளில் “பாரை சுறா சூரை திரளி மீன்.. மீன்…” என்று கத்திக்கொண்டு காந்திகடையைக் கடந்து கொண்டிருந்தான்.

0	0	0

(குறிப்புக்கள் தொடரும்)

சிவத்தக் கன்னம் மட்டும் தான் சிவக்குமா
சத்தியமாக தஞ்சாவூரை ஆங்கிலத்தில் டன்சூர் என அழைப்பார்கள் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் சொல்லும் வரை! ஆனால் அவருக்கு கூட அதில் பெரும் சந்தேகம் இருக்குமாப்போல முகபாவனைகள் உணர்த்தின. இத்தனைக்கும் அவர் அங்கே தான் பிறந்திருக்கிறார்.

சென்ற வாரம் ரயில் பயணமொன்றில் அருகிருந்து சிநேகமாய்ப் புன்னகைத்த அவர்

“இந்தியாவா” என ஆங்கிலத்திலேயே கேட்டார். பெரும்பாலும் அவர் இந்தியராகவே இருப்பார் என்பது என் அனுமானமாயிருந்ததால் “இல்லை. சிறிலங்கா” என்றேன். முன்பொரு தடவை சில வட இந்தியர்களுக்கு “நான் இந்தியாதான் மெட்ராஸ்” என அறிமுகப் படுத்தி விட்டு, பயணம் முழுவதும் இந்தி தெரியாமல் இந்தியனாயிருப்பதன் அவமானத்தை அவர்கள் விளங்கப் படுத்திக் கொண்டே வர, அறுவையை அனுபவித்துக் கொண்ட அனுபவத்திற்கு பிறகு, ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை.

மீளவும் எனது தாய்மொழி என்ன என்று கேட்டார். தமிழ் என்றேன். தானும்தான் என்றார். தசாவதாரம் படத்தில் நாயுடு கமல் யாரும் தெலுங்கர்களைச் சந்திக்கும் போதொலிக்கும் பின்னணி இசை எனக்குள் ஒலிக்கத் தொடங்க, ஆர்வ மிகுதியால் “அப்ப தமிழிலேயே கதைக்கலாம்” என வாயெல்லாம் பல்லாகச் சொன்னேன்.

“ஊப்ஸ்.. எனக்கு கொஞ்சம் விளங்கும். பேச முடியாது. சின்ன வயசிலேயே லண்டனுக்கு பெற்றோரோடு சென்று bla bla bla bla… ” அவர் ஆங்கிலத்தில் தொடர்ந்தார். எனக்கொரு ஏமாற்றமும் இல்லை. அதுவுமல்லாது எனக்கும் இங்கிலிசு தெரியும் என எப்படியாம் காட்டுவது : )

அவர்தான் “தான் டன்சூர்” (அல்லது அதே மாதிரியான ஒரு ஒலி) என்றார். முதலில் கொஞ்சம் குழம்பித்தான் போனேன். சட்டென்று பொறிதட்ட “தஞ்சாவூர் ? ” என்றேன். “யா யூ கொட் இட்” என்றார்.

இருவார காலமாகத்தான் இங்கு அவர் தங்கியிருக்கிறார். வேலையில் இடமாற்றம். பயணத்தில் “இங்கே சுவிசில் கள்ளர்கள், தீயவர்கள், இன வெறி காட்டுபவர்கள் என அடையாளப் படுத்தப்பட்டோர் அதிகம் தங்கும் இடங்கள், என பிரிப்புக்கள் உண்டா” என அவர் கேட்டார். லண்டனில் உண்டாம். அவுஸ்ரேலியாவிலும் திருடர்கள் ஜாக்கிரதை என்ற எச்சரிக்கையிடப்பட்ட பகுதிகளைப் பார்த்திருக்கிறேன். நடு இரவொன்றில் திருடர்கள் திரத்த, நானும் மச்சானும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிய கதையொன்றும் உளது.

0 0 0

சுவிற்சர்லாந்தில் நிற வேறுபாடு காட்டும் மக்கள், அதனூடான புறக்கணிப்புகள் எதனையும் ஆழமாக அலசும் நோக்கம் இங்கில்லை எனக்கு. ஆனால் சில பல சந்தர்ப்பங்களில், அவர்களில், அவர்களின் வார்த்தைகளில் அவை வெளித்தெரியத்தான் செய்கின்றன. பஸ்சில் கறுப்பருக்கு முன்னால் அமர முடியாத, அமரும் இடத்தில் கட்டுள்ள, சில பழசுகள் இன்னும் இருக்கிறார்கள்.

அண்மையில் தேர்தல் கட்சியொன்று சுவிஸ் முழுவதும் ஒட்டியிருந்த போஸ்டர்கள் பரவலாக சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. நாகரீகம், மனிதாபிமானம், மட்டை, மண்ணாங்கட்டி என்ற இவர்களின் பீற்றுதல்களில் பெரும் ஏளனத்தை எனக்குள் உருவாக்கின அவை. சில வெள்ளையாடுகள், சுவிஸ் என்ற தேசத்திலிருந்து கறுப்பு ஆடு ஒன்றை உதைத்துத் தள்ளுவது போல அமைந்திருந்தது ஒரு சுவரொட்டி. அடுத்ததில் கொட்டிக் கிடக்கும் சுவிஸ் பாஸ்போட்களை, கறுப்பு, வெளுப்பு, பழுப்பு, சொக்லேட் என பல கைகள் பொறுக்கியெடுக்கின்றன. அதை நிறுத்துக என்ற மாதிரியானது அடுத்த சுவரொட்டி.

தன் தேசிய இனத்தின் வேலை வாய்ப்பு உட்பட பல வசதிகள் மற்றோரால் பறிக்கப்படுவதை, பங்கிடப்படுடடவதை அனுமதிக்க முடியாது என்ற கோணங்களில் இதற்கான நேர் வினைகளும் ஆற்றப்பட்டன. அந்த ஆய்வுகளை விட்டு விடலாம்.

0 0 0

நானும் நண்பரும் காரினை பார்க் செய்ய வேண்டியிருந்தது. அதற்கான நுழைவாயிலில் நமக்கு முன்னால் இன்னொரு கார். உள்ளே ஒரு வயதான பெண்மணி. அறுபதுகளைத் தொடும் வயது அவருக்கு இருக்கலாம். ஒன்றிரண்டு நிமிடங்களாக அவர் காரினை முன்னெடுப்பதாகத் தெரியவில்லை. நமக்கு வெட்டிப் பிடுங்கும் அவசரம் எதுவும் இல்லைத்தான். ஆனாலும் இள வயதல்லவா ? அந்தரித்த வயது!

சரியோ தவறோ வாகனத்தின் Horn ஐ அடித்து விடுகிறார் நண்பர். அடுத்து வந்த நிமிடங்கள் ஜாலியானவை. முன்னால் காரிலிருந்து இறங்கி குடு குடுவென நடந்து வந்தார் அந்த மூதாட்டி. பெரும் போர் ஒன்று மூளப்போகிறதென நாங்களும் தயாரானோம். அதிலும் ஜெர்மன் மொழியில் சண்டையிடுவதானால் எனக்குத் தயார்ப்படுத்தச் சில நிமிடங்களாவது வேண்டும்.

அருகில் வந்தார் மூதாட்டி. கண்ணாடியைத் திறந்து விட்டு “என்னணை” என்பது போலப் பார்த்தோம். “உதெல்லாத்தையும் கொண்டு போய் சிரிலங்காவில வைச்சுக்கொள்” என்று முதலாவது குண்டைப் போட்டார். “என்ன ஏது ஏன்.. எதுக்கு” என்று திக்குமுக்காடிப் போய்த் தெளிவதற்குள் அடுத்த குண்டு. “நானும் கொழும்பெல்லாம் போய் வந்த ஆள்த்தான். அங்கை ட்ரபிக்கில ஒரு மணித்தியாலம், ரண்டு மணித்தியாலம் எண்டெல்லாம் நிக்கும் போது, உன்னாலை பொத்திக் கொண்டு நிற்க முடிந்தது தானே. இப்ப இதில ஒரு ஒரு நிமிடம் நிற்க முடியாதோ உன்னால… ”

கிழிஞ்சுது. நானும் நண்பரும் திருப்பித் தாக்கிற எண்ணமெல்லாத்தையும் கைவிட்டு விட்டு சமாதானமாகப் போகலாம் என்று நல்லெண்ணத்தைக் காட்டினோம். “சரியணை. ஆச்சி. நாங்கள் சும்மா பம்பலுக்கு. மன்னிச்சுக் கொள்ளணை. போனை போனை….” என்றோம். அதற்கிடையில் பின்னாலும் சில வாகனங்கள் சேர்ந்து விட அவர் சென்று காரை எடுத்து வழி விட்டார். இறங்கிய பிறகும் அவர் சத்தமிட்டுக் கொண்டுதான் இருந்தார்.

நாங்கள் உட்சென்று விட்டோம். ஒரு அரைமணி நேரம் சென்றிருக்குமோ ? மீளவும் வெளியே வந்து கார் அருகில் செல்ல எங்கிருந்துதான் வந்தாவோ தெரியவில்லை. நினைச்சு நினைச்சு அழும் குழந்தையைப் போல ! ஒரு ஒற்றைச் சத்தத்தை தாங்க முடியாதவராய்..

எங்கள் மீதிருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிநாட்டுக் காரர்கள் மீது திரும்பியது. எல்லா வெளிநாட்டுக் காரர்களும் திருடர்கள், காட்டுமிராண்டிகள் என்ற ரீதியில் அவர் சத்தமிட்டுக் கொண்டிருந்தார். எல்லா வெளிநாட்டுக் காரர்களையும் வெளியே வீச வேண்டும் என்று அந்த வார்த்தையை அவர் உதித்த போதுதான், அந்தச் சிக்கல் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையைச் சந்தித்தது. அந்தப் பக்கத்தால் சென்று கொண்டிருந்த யாரோ ஒருவருக்கு (அனுமானத்தினடிப்படையில் யூகோஸ்லாவிய நாட்டுக்காரர்) அந்த வார்த்தைகள் உறைப்பினை ஏற்படுத்தியிருக்க வேண்டும். (நமக்கு மீன் குழம்பு, நண்டுக்கறி, இறைச்சிக்கறி இவை தவிர்ந்த வேறெதுவும் உறைப்பினைத் தருவதில்லையென்பதை சொல்லியா தெரிய வேண்டும். )

திடீரென பிரச்சனை இன்னொரு பரிணாமத்தை எடுத்து அந்த யூகோஸ்லாவிய நாட்டுக் காரருக்கும், அந்த மூதாட்டிக்குமிடையிலான பிரச்சனையாக உரு மாறியது. “எப்படி எங்களை வெளியே வீசச் சொல்லுவாய்” என அவரும் “ஓம் நீங்கள் எல்லாம் திருடர்கள்” என மூதாட்டியும் சண்டை பிடிக்கத் தொடங்கினார்கள். சண்டையின் மூலகர்த்தாக்களான நானும், நண்பரும் புலிகளையும் இந்திய இராணுவத்தையும் மோத விட்டு ஒதுங்கிய சிறிலங்கா இராணுவம் போல இடத்தை விட்டு நைஸாக வெளியேறினோம்.

அந்தப் பெண்மணியின் மனதிற்குள் ஒரு சிங்கத்தைப் போல படுத்திருந்த வெளிநாட்டவருக்கு எதிரான உணர்வை நாங்கள் சீண்டி விட்டோம் என்பதைத் தவிர வேறு என்னத்தைச் சொல்வது?

0 0 0

இது வெர்ஜினியாவிற்கு நடந்த சம்பவம். அவரோடு கூடப் பணிபுரியும் ஒரு இளவயது வெள்ளையினப் பெண் சிரித்துச் சிரித்தே கேட்டிருக்கிறார். “இஞ்சை.. நாங்கள் வெள்ளையென்ற படியால எங்களுக்கு கோபம் வந்தால் முகமெல்லாம் சிவக்கும். அதை வைச்சு நாங்கள் கோபமாயிருக்கிறம் எண்டு கண்டு பிடிக்கலாம். ஆனா இப்ப நீங்கள் கோபமாயிருக்கிறீங்கள் எண்டால்.. எப்பிடி கண்டு பிடிக்கிறது. (அதாவது கறுத்த முகத்தில கோபத்தில சிவப்பது தெரியாது என்றது அவாவிட கவலை)

பதிலுக்கு வெர்ஜினி சொன்னது இதுதான்.

“உண்மைதான். உனக்கு கோபம் வந்தால் உனது கன்னம் சிவக்கும். எனக்கு கோபம் வந்தாலும் உனது கன்னம்தான் சிவக்கும். ”

“அது எப்பிடி” என்று ஆச்சரியத்தில் இரண்டு மூன்று நாட்களாக வெர்ஜினியாவை விசாரித்துத் திரிந்தாவாம் அவ.