இனி அங்கால… sayanthan.com

எந்தக் காரணமும் சிறப்பாக இல்லைத்தான். இங்கேயிருந்து புறப்பட்டுப்போக.. மால்வெயர்த்தாக்குதல் ஏதோ இருக்கிறதென நண்பர்கள் சொல்கிறார்கள்தான். ஆனால் அது தீர்க்கமுடியாத சிக்கல் அல்ல. இருந்தும் போகிறேன். இணையம் ஆரம்பமான புதிதில் எட்டொன்பது வருடங்களுக்கு முன்னால் சயந்தன். கொம் இணையப் பெயர் இன்னொரு நபருக்கு சொந்தமாயிருந்தது. அவரொரு IT மனிதராயிருக்க வேண்டும். அது அப்பட்டமாகத் தெரியும் வகையில் ஏகத்துக்கும் தளத்தை வடிமைத்திருந்தார். சில இடங்களில் அது எனதுதான் என்றும் எடுத்து விட்டிருக்கிறேன். பிறகு அவ்வப்போது அந்தப் பெயரை [...]

வலை மேயவும் வீசவும் வந்த கதை – தொடராம்

இதுவொரு விளையாட்டு. கூகுள் குரூப்பொன்றில் நான்கேட்க மு.மயூரன் தொடக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. மயூரன் சொன்னதுபோல தனியே விளையாட்டு அன்றி உள்ளே ஒரு அர்த்தம் பொதிந்திருக்கிறது. அவரவர் தனது வலைபதிய வந்த கதையைச்சொல்வதனூடாக அக்கால கட்டத்தைய இணையம்/ தமிழ்/ திரட்டிகள் குறித்த இன்னோரன்ன சங்கதிகளை ஆவணப்படுத்துகிறார் என்பதே அது. இத்தொடரில் சந்திரவதனா அழைத்தார். நன்றி.
அருண்மொழிவர்மன், கீத் ஆகியோரது இத்தொடர்பதிவுகள் படித்தேன். கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு மனநிலையிலிருந்து வந்தவன் நானென்று சொல்லலாம். தனிமை. 2004 யூலை மெல்பேணில் ஒரு புறநகர் [...]

நாங்கள் ஏன் பொண்ணு பார்க்கப் போவதில்லை?

திருமண நிகழ்வுக்காக பெண் பார்க்கப் போகும் ஒரு வழக்கம் தமிழகத்தில் ( இந்தியா.) உள்ளதென்பதை எனது பதின்மங்களில் தமிழக சமூக நாவல்களிலும், திரைப்படங்களிலும் நான் அறிந்து கொண்ட போது, அவை கதைக்கு சுவாரசியம் சேர்க்கச் சொல்லப்படுகின்றன எனத்தான் நம்பியிருந்தேன். கதைகளிலும், படங்களிலும் பெண் பார்க்கும் நிகழ்வில் சில சமாசாரங்கள் எப்போதும் நடைமுறையில் இருக்கும். பஜ்ஜி சொஜ்ஜி, பெண்ணைப் பாடச் சொல்லி கேட்பது, நேரடியான சீதனப் பேச்சுக்கள், வீட்டுக்குப் போய் கடிதம் போடுகிறோம் என்பவையே அவை. அதிலும் [...]

ஸ்பெயின் ஒரு பயணமும் சில படங்களும்

சுவிற்சர்லாந்தின் மத்தியிலிருந்து ஜெனிவா வழியூடாக பிரான்ஸைக் குறுக்கறுத்து அத்திலாந்திக் கடலோரத்தில் ஸ்பெயினின் சன் செபஸ்ரியான் நகருக்கு , சுமார் 1300 கிலோமீற்றர்கள் என்றும் சென்று சேர 13 மணித்தியாலங்களென்றும் நவி காட்டினாலும் வழிநெடுக சுச்சா சிச்சா முச்சா மற்றும் கபே கோலா தே இவற்றோடு கொண்டுபோன புளிச்சாதம் என 17 மணித்தியாலங்கள் எடுத்தது. அன்றிரவு ரைட் சகோதரர்கள் கனவில் வந்து எங்கட மூஞ்சையப்பாத்தா என்ன வேலை வெட்டியில்லாத கேனைப்பயல்கள் என எழுதியிருக்கா என்றுவிட்டுப் போனார்கள்.
சுவிற்சர்லாந்தில் வதிகிற [...]

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – ஒரு இசைப்பாட்டு

எனக்குச் சின்ன வயசில இருந்தே ஒரு வலைப்பதிவர் மாநாட்டில கலந்து கொள்ளவேணுமென்று நிரம்ப ஆசை. ஆனா அது ஒருக்காலும் நிறைவேறியதில்லை. ஒருதடவை சிட்னி ரயிலுக்குள்ளை ஸ்ரேயா என்ற பழைய பதிவரை (இப்பவும் எழுதுகிறாவா என தட்டிப்பார்க்க பஞ்சியாக இருக்கிறது.) சந்திச்சுக் கதைத்ததுதான் அதிகபட்சமாக நான் கலந்துகொண்ட நீளமான வலைப்பதிவர் மாநாடாயிருக்கும். அதிலும் அப்ப கோடைகாலமென்றபடியால நான் அடிக்கடி பராக்குப்பார்த்ததாக அவர் குற்றமும் சாட்டியிருந்தார். அதை விட மெல்பேணில் ஜோய் மகேஸ்வரனின் நிகழ்வு ஒன்றில் இடைவேளையில் வசந்தனை சந்தித்துக் [...]

கே.எஸ் பாலச்சந்திரனின் நாவல்! வடலி வெளியீடு

இலங்கையின் ஆரம்பகால வானொலி தொலைக்காட்சி கலைஞரான கே. எஸ் பாலச்சந்திரன் அவர்களின் கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது.
ஈழத்தின் வடபகுதிக் கடலோரக்கிராமங்களின் கதைகளைப்பேசும் இந் நாவல் என்னளவில் ஒரு விதத்தில் வேறுபட்டு நிற்கிறது. எனது தலைமுறைக்குத் தெரிந்த கடல் தனியே உப்பும் நீரும் நிறைந்ததல்ல. அது குண்டுகளையும் ரத்தங்களையும் ஓலங்களையும் தன்னத்தே வைத்திருந்தது. கடல் அப்படித்தான் அறிமுகமானது. அப்படித்தான் பழகியது.
இந்த நாவல் இப்போதைய தலைமுறைக்குத் தெரிந்திராத ஒரு கடலை கதை முழுதும் [...]

ஏனெனில் இவர்கள் புதியவர்கள்

2004 நவம்பர் 23, அமைதிபேச்சுக்காலம். புலிகள் மீளவும் யுத்தத்தை ஆரம்பிக்கவேண்டுமென்கின்ற ஆசைகள் புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்த காலம். ஐந்து நாளில் வரப்போகின்ற மாவீரர் தின உரையில் தலைவர் யுத்தநிறுத்தத்தில் இருந்து விலகுகிறோம் என அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்த காலம். அன்று எழுதிய பதிவு இது. ஒரு புலம்பெயர்ந்தவனாக யுத்தத்தை தீர்மானிக்கும் சக்தியாக நானும் புலம்பெயர்ந்தவர்களும் இருக்க முடியாது என்பதில் அன்றும் சரி இன்றும்சரி நான் தெளிவுடன் இருந்ததை மீளவும் எனக்கு நினைவு படுத்துகிறது இப்பதிவு. இந்த [...]

புலி எதிர்ப்புக் “கதைகள்”

நீங்கள் இப்ப ஒரு புலி எதிர்ப்பாளர் என்கிறார் அவர். அவர் மட்டுமில்லை. வேறு சிலரும் கேட்டிருக்கிறார்கள். பேசியிருக்கிறார்கள். காரண காரியங்களை நான் கேட்டுக்கொள்ளவில்லை. என்னால் அந்த பார்வைகளைப்புரிந்து கொள்ளமுடிகிறது. டெலோ நியூசிலும் தகவல்கள் டொட் கொம்மிலும் ஏன் தமிழரங்கத்திலும் எழுத்துக்கள் வருமாயின் அவ்வாறான ஒரு பார்வை உருவாகும்படிதான் எல்லா மட்டச்செயற்பாடுகளும் ( அந்த தளங்களினதும் உட்பட) உள்ளன. உண்மையில் புலிகள் குறித்த சில எதிர்மறைக் கருத்துக்களை புலிகள் அற்ற நிலையில் சொல்வது குறித்த குற்ற உணர்ச்சி எனக்கு [...]

பெருங் கதையொன்றின் சிற்சில குறிப்புக்கள்

ஆபிரிக்கா ஒரு இருண்டகண்டமென்று தனபாலன் வாத்தி படிப்பித்தபோது அந்தக்கண்டத்திலேயே தானும் வந்து இருண்டுகிடக்க வேண்டுமென்று நிமலன் நினைச்சுக்கூடப் பாத்திருக்கமாட்டான். ஆபிரிக்காவில்த்தான் இருக்கிறது என அறிந்தேயிராத ஸ்நேகலில் அவன் வந்து விழுந்து ஒரு வருசமும் சொச்ச மாதங்களுமாகிவிட்டது. ஸ்நேகலை வெளிநாடு என்று இவன் ஒருக்காலும் ஒத்துக்கொள்ள மாட்டான். வெளிநாடென்றால் சிங்கப்பூர்மாதிரி இருக்கோணும், ஓம் இவன் சிங்கப்பூரிலும் ஆறுமாசம் அடைபட்டுக்கிடைந்த கதையும் உள்ளது.
ஸ்நேகலில் வீடென்ற பெயரில் ஒரு மரக்கூட்டுக்கை நிமலனும் இன்னும் பதினாறு பேரும் அடைந்து கிடைந்தார்கள். உண்மையைச் [...]

சிவத்தக் கன்னம் மட்டும் தான் சிவக்குமா

சத்தியமாக தஞ்சாவூரை ஆங்கிலத்தில் டன்சூர் என அழைப்பார்கள் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் சொல்லும் வரை! ஆனால் அவருக்கு கூட அதில் பெரும் சந்தேகம் இருக்குமாப்போல முகபாவனைகள் உணர்த்தின. இத்தனைக்கும் அவர் அங்கே தான் பிறந்திருக்கிறார்.
சென்ற வாரம் ரயில் பயணமொன்றில் அருகிருந்து சிநேகமாய்ப் புன்னகைத்த அவர்
“இந்தியாவா” என ஆங்கிலத்திலேயே கேட்டார். பெரும்பாலும் அவர் இந்தியராகவே இருப்பார் என்பது என் அனுமானமாயிருந்ததால் “இல்லை. சிறிலங்கா” என்றேன். முன்பொரு தடவை சில வட இந்தியர்களுக்கு “நான் இந்தியாதான் மெட்ராஸ்” என அறிமுகப் [...]

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231