இனி அங்கால… sayanthan.com


எந்தக் காரணமும் சிறப்பாக இல்லைத்தான். இங்கேயிருந்து புறப்பட்டுப்போக.. மால்வெயர்த்தாக்குதல் ஏதோ இருக்கிறதென நண்பர்கள் சொல்கிறார்கள்தான். ஆனால் அது தீர்க்கமுடியாத சிக்கல் அல்ல. இருந்தும் போகிறேன். இணையம் ஆரம்பமான புதிதில் எட்டொன்பது வருடங்களுக்கு முன்னால் சயந்தன். கொம் இணையப் பெயர் இன்னொரு நபருக்கு சொந்தமாயிருந்தது. அவரொரு IT மனிதராயிருக்க வேண்டும். அது அப்பட்டமாகத் தெரியும் வகையில் ஏகத்துக்கும் தளத்தை வடிமைத்திருந்தார். சில இடங்களில் அது எனதுதான் என்றும் எடுத்து விட்டிருக்கிறேன். :) பிறகு அவ்வப்போது அந்தப் பெயரை சோதித்து வருவதுண்டு. அண்மையில் ரவிசங்கரோடு பேசிக்கொண்டிருந்த போது திடீரென சயந்தன்.கொம் ஐ சோதித்துப் பார்த்ததில் அது கேட்பாராற்றுக் கிடந்தது. அப்பவே ரவிசங்கர் அதனை தனது நண்பர் ஒருவர் ஊடாக வாங்கித்தந்தார்.

பிறகு hosting.. வடலிக்கு hosting ஆகட்டும்.. google apps இன் மின்னஞ்சல் சேவையாகட்டும் அண்ணை ஒரு உதவியெனக்கேட்டுத் தரும் பார்த்தியண்ணை (ஒருபேப்பர்) இதற்கான வழங்கி ஏற்பாட்டையும் செய்து தந்தார். கொஞ்சம் கொஞ்சமாக முடித்து..

இனி..

http://sayanthan.com

என்ன..? மு. மயூரன்.. தற்கால நடைமுறைக்கு ஏற்ப போகின்றேன்தானே..? இனி முகப்பில் எனது தாடி வைத்த படமொன்றும் போட வேண்டும். அப்போதே இலக்கு முழுமையடையும்.

This entry was posted on Monday, November 16th, 2009 and is filed under குறிப்புகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231