முகாம்களில் இருந்து கிடைத்த கடிதங்கள்


முகாம்களில் அடைப்பட்டிருக்கின்ற மூன்று லட்சம் மக்களில் ஏறத்தாள 1600 மாணவர்கள் வரும் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்ற இருக்கிறார்கள். இவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நூல்கள் மற்றும் சத்துணவு போன்றவற்றை ICUTS என்னும் ” சர்வதேச பல்கலைக்கழக தமிழ் மாணவர் சங்கம் ” ( International Committee of University Tamil Students) எனும் அமைப்பு உதவிகளைப் பெற்று இலங்கை கல்வித்திணைக்களம் ஊடாக அந்த மாணவர்களுக்குச் செய்து வருகின்றது. அது தொடர்பான அவர்களின் அறிக்கை.

எம் இனிய தமிழ் நெஞ்சங்களே!

வாழ்வில் துன்பம், என்பதை கடந்து துன்பமே வாழ்வாய் எம்மினத்தின் ஒரு பகுதி வாடி வதங்குகிறது. உறவுகளையிழந்து, உறுப்புக்களை தொலைத்து, உடமைகள் அழிக்கப்பட்டு, ஊரையும் பறிகொடுத்து இன்று உணவின்றி, உறங்க ஓர் இடமின்றி கூடாரங்களுக்குள் குந்தியிருந்து தூங்குகிறது எம்மினம். எம்மினத்தின் எந்தவொரு பகுதியும் அனுபவிக்காத துன்பத்தையும்,கிட்டத்தட்ட முப்பதிற்கும் குறையாத வருட போர் வாழ்வையும் கடந்து தான் இந்த மனிதகுலம் இன்றும் வாடுகிறது. தம் வாழ்வில் எதைதான் இவர்கள் கண்டிருப்பார்கள்? மின்சாரம் எப்படியிருக்குமென்றே அறியாதவர்கள் எத்தனைபேர்? இவர்களுக்கேன் இந்த கொடிய தண்டனை? எல்லோராலும் கைவிடப்பட்ட மக்கள் தான்… எம்மாலுமா கைவிடப்பட்டவர்கள்?

பொறுப்பேற்று தடை விதிப்பவர்களே செய்து முடிக்கட்டும் என தட்டிக்கழிப்பதுதான் கடமையா?

எல்லோருக்கும் உதவுமளவு எம்மினம் வசதியாய் இல்லைத்தான். ஆனால் பரீட்சைக்கு முன்னராவது எம் பல்கலைக்கழக அண்ணாமார், அக்காக்கள் படிக்க கொப்பி தருவர், எழுத பேனா தருவர் என கல்லின் மேல் தலை வைத்துறங்கி கனவு காணும் இளம் சந்ததிக்கு என்ன
பதில் கூறப்போகிறோம்?

அன்புக்குரிய எம் சொந்தங்களே, பரீட்சைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இவர்களுக்குதவ முடியாதா?
கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் பல ஆசிரியர்கள் கொழும்பிலிருந்து வவுனியா சென்று கற்பிக்கின்றனர். அவர்களிடம் மாணவர்கள் கோரிக்கைகளாக சில தேவைகளை முன்வைத்துள்ளனர்.
அவை சுருக்கமாக வருமாறு -

1) பாடக்குறிப்புக்கள்
2) கடந்தகால பரீட்சை வினா விடைப்புத்தகங்கள்
3) எழுதிப்பழகவும் குறிப்பெடுக்கவும் பயிற்சிக்கொப்பிகள்/தாள்கள்
4) எழுதப்பேனா,பென்சில் மற்றும் ஏனைய கல்வி உபகரணங்கள்
5) இரவில் படிக்க அரிக்கன் விளக்குகள்
6) மாற்று உடைகள் மற்றும் உள்ளாடைகள்

இவை மாணவர்களால் வைக்கப்பட்ட கோரிக்கைகள். இதைவிட ஆசிரியர்கள் அவதானித்த முக்கிய விடயம் 10 மணிக்கு கஞ்சி குடித்து விட்டு வகுப்பில் மயங்கி விழும் மாணவ்ர்கள். எனவே அவ்வப்போது அவர்களிற்கு முடிந்தளவு சத்துணவையாவது வழங்க வேண்டும். ஏறத்தாள 1600 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகிறார்கள். இவர்களில் சிலர் பல்கலைக்கழகங்களுக்கு தரப்படுத்தல் முறையில் நிச்சயமாக உள்வாங்கப்படுவார்கள். இதற்கு குறைந்தளவு மூன்று பாடங்களில் சித்தியிருந்தாலே போதுமென்பதை அறிவீர்கள். நாம் வழங்கும் இந்த சிறிய உதவி பாரியளவில் அவர்களது வாழ்வை மாற்றாதா? எனவே தயவுசெய்து புலம்பெயர் உறவுகள் பண உதவி செய்யுமாறும் உள்ளூர் பல்கலைக்கழக மாணவர்கள் பண உதவி மற்றும் பாடப்புத்தக உதவிகளை செய்துதவுமாறும் வேண்டுகிறோம். இவையனைத்தும் கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டு கல்வித்திணைக்களத்தினூடாக பல்கலைக்கழக மாணவர்களாலேயே நேரடியாக கையளிக்கப்படும். பண மற்றும் பொருட்கள் சரியான முறையில் சென்றடைந்தமை உறுதிப்படுத்தப்பட்டு தேவையேற்படின் ஆதாரப்படுத்தப்படும். விரைந்து செயற்படுங்கள்.

ஒரு நாள் சத்துண்விற்காக குறைந்தது (1600×40) 64,000 தேவைப்படும் என்பதை மனதிற்கொள்க.

மின்னஞ்சல் : contact@icuts.org
http://www.icuts.org
0 0 0

அரச பிரிவான கல்வித்திணைக்களத்தின் அனுசரணையோடு எப்படி உதவுவதென்ற நம் புலம்பெயர் கெளரவச் செருக்குகளை கொஞ்சம் அப்பால் நகர்த்தி விட்டு / மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு விரைந்து உதவுவது நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

அண்மைக்கால உதவிகளுக்குபிறகு முகாம்களில் இருந்து அவர்களுக்குக் கிடைத்த கடிதங்களை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். படங்களில் அழுத்துவதன் மூலம் அவற்றைப் பெரிதாக்கிப் படிக்கலாம்.
12346

This entry was posted on Tuesday, July 7th, 2009 and is filed under குறிப்புகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 Responses to “முகாம்களில் இருந்து கிடைத்த கடிதங்கள்”

  1. -/. on July 7th, 2009 at 1:40 pm

    //அரச பிரிவான கல்வித்திணைக்களத்தின் அனுசரணையோடு எப்படி உதவுவதென்ற நம் புலம்பெயர் கெளரவச் செருக்குகளை கொஞ்சம் அப்பால் நகர்த்தி விட்டு / மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு விரைந்து உதவுவது நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும். //

    சயந்தன் இது வெறும் புலம்பெயர்கௌரவச்செருக்கு என்று நீங்கள் எழுதுவது ஒவ்வாது.

  2. saniyan on July 16th, 2009 at 6:09 pm

    கர்நாடக சங்கீத புத்தகம் கிடைக்கிறது கொஞ்சம் கஸ்டம் போல…..

  3. பாமரன் on July 23rd, 2009 at 12:37 am

    “சயந்தன் இது வெறும் புலம்பெயர்கௌரவச்செருக்கு என்று நீங்கள் எழுதுவது ஒவ்வாது”

    உங்களுடைய “ஓ” வன்னா மன்னிக்கவும் “ஒ” னாவை அதாவது ஒவ்வாத்தை விளக்க முடியுமா ஐயா!!

  4. பாமரன் on July 23rd, 2009 at 12:38 am

    “சயந்தன் இது வெறும் புலம்பெயர்கௌரவச்செருக்கு என்று நீங்கள் எழுதுவது ஒவ்வாது”

    உங்களுடைய “ஓ” வன்னாவை, மன்னிக்கவும் “ஒ” னாவை அதாவது ஒவ்வாததை விளக்க முடியுமா ஐயா!!

Leave a Reply

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • கொழும்பு குலுங்குகிறது - உடைபடுகிறது சிங்களப் பேரினவாதம் இப்படி தலைப்பிடுபவர்களை என்ன செய்யலாம்
  • நேற்று இரவு பானா காத்தாடி பார்த்தபோது - இந்தாளுக்கு இத்தனை வருசமா இதயத்து ஓட்டை அடைபடவில்லையா என்று கமென்ட் அடித்தேன்.. ....
  • காலையில் இருந்து வாயில் நிற்பது http://tinyurl.com/34c7uf7
  • http://www.inparsiddy.com/page-060910-03.html அவ்.. திரும்பவும் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு கிளம்பணுமா ...

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231