அம்பலம், யாழ்ப் பாணத்திலிருந்து ஒரு சிற்றிதழ்


headamஈழத்தைக் குறித்தான அரசியல் சமூக இன்னோரன்ன எழுத்துக்களை ஈழத்தவர்களே எழுதுகையில் உருவாகும் கனதி, அவை ஈழத்திலிருந்தே வெளியாகும்போது இன்னும் பெறுமதியுமுறுகின்றன. திறந்த நிலையில் தம் குரல்களை வெளிச்சொல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிற ஒரு சூழலில் இருந்து, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும், ஆங்காங்கே / அவ்வப்போது நம்பிக்கை ஒளிக்கீற்றுக்கள் எழுவதும் அணைவதுமாக இருக்கின்றன. பொருளாதார நெருக்கடியும் பற்றாக்குறையும் நிறைந்த சூழலில் இதழாக்கங்களுக்கான அதிகரித்த செலவும் அவற்றை இதழ்களின் விலைகளில் சுமத்துவதும் இவ்வாறான முயற்சிகள் ஆரம்பித்த வேகத்திலேயே அடங்கியும் விடுகின்றன.

யாழ்ப்பாணத்திலிருந்து அம்பலம் சமூக கலை இலக்கிய இதழ் வெளியாகியுள்ளது. காலாண்டு இதழான அம்பலம் மேற்சொன்ன நெருக்கடிகளின் ஊடே பயணித்து 5வது இதழையும் வெளியிட்டுள்ளது. ஈழத்தில் எழுதுவோருக்கிருக்கின்ற உயிரைக் குறித்தான தயக்கம், அடையாளப் படுத்தாது எழுத வேண்டியிருக்கிற நிர்ப்பந்தம், வார்த்தைகளைப் புதைக்க வேண்டியிருக்கிற யதார்த்தம் என்கிற பல துயர் முக சூழலுக்குள் நின்று அனுமதிக்கப்பட்ட அளவிலேனும் புதிய உரையாடல்களுக்கான வழிகளைத் திறக்கும் நம்பிக்கையில் அம்பலம் தொடர்கிறது.

cover-ampalamஓர் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஈழத்தின் இவ்வாறான இலக்கிய முயல்வுகள் அங்கேயே அவர்களுக்குள்ளேயே வெளித்தெரியாமல் அடங்கிவிடுகின்றன. வெளிச்சொல்லுகைக்கான ஏது நிலையும் இல்லை. அதே போல இங்கே புலம்பெயர்ந்த நாடுகளின் முயல்வுகளும் உரையாடல்களும் ஈழத்திற்குப் பரவலடைய ஏதும் செய்வதுமில்லை. தனித்தனித் தீவுகளாக இயங்குகிறோமோ.. என எண்ணத் தோன்றுகிறது.

அம்பலம் குழுவினர் ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கின்றனர். ஈழத்தில் இருந்து வெளிவரத்துடிக்கின்ற இவ் இதழின் தொடர்ச்சித் தன்மைக்கும் அதன் உரையாடல் நீட்சிக்கும் புலம்பெயர்ந்த தேசத்தில் தமிழ் இலக்கியங்களில் ஆர்வமுள்ளோரும் பங்களிக்க வேண்டுமென்கிறது அவ் வேண்டுகை. ஒரு பொதுவான தளத்தில் புலம்பெயர்ந்த நண்பர்களும் அங்குள்ளோரும் தொடர்ச்சியாக உரையாடவேண்டுமென்கிற பெருவிருப்பு அவர்களுக்கு உண்டு. இதழ்களுக்குரிய பிரதிகளை அளிப்பது மட்டுமல்லாது இதழுக்கான ஆண்டுச்சந்தாதாரர் ஆகுவதன் ஊடாகவும் அம்பலத்திற்கு பின்பலமாக நிற்கும்படி அவர்கள் கேட்கிறார்கள்.

0 0 0

ஆண்டுச் சந்தாவினை நாம் பெற்றுக் கொள்வதன் ஊடாக, இன்றைய இறுக்கமான சூழலில் “எனக்கென்ன வீண் சோலி” என்பதே பொதுதவான மனித அபிப்பிராயமாக இருக்கிற ஈழத்து நிலையில், ஈடுபாட்டோடு இயங்கும் ஒரு குழுவிற்கு பின்பலமாக நிற்பது மட்டுமன்றி எழுத்துக்கள் ஊடாகவும் இணைந்து உரையாடவேண்டும். அம்பலம் மட்டுமன்றி அதற்கேதுவான பிற வழிகளையும் கண்டுகொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த நாடுகளில் தனித்திருந்து ஈழத்து இலக்கியம் படைப்பவர்கள் கொஞ்சம் அந்தப்பக்கமும் கரிசனை காட்டவேண்டும். பொருளாதார ஏதுநிலையும் தொடர்ச்சித் தன்மையும் நீடித்தால் அவர்களாலும் சிற்றிதழ்களில் சிகரங்களைத் தொடமுடியும்.

0 0 0
அம்பலத்தின் 4 இதழ்களுக்கான வருடச்சந்தா ஐரோப்பிய கனேடிய நாடுகளுக்கு 30 டொலர்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. இறுதி இதழில் வெளியான படைப்புக்கள்

  • ஜொலிக்கும் விருதுகள் இருட்டடிப்புகளூம், குளறுபடிகளூம்-பயணி(அ.ஜேசுராசா)
  • விசாகரூபனின்’புலம்பெயர் கவிதைகள்’-2005 இல் வெளிவந்த புலம் பெயர்கவிதைகளை முன்வைத்து ஒரு பார்வை-சங்கிருத்தியன்
  • உருவம்,உள்ளடக்கம்,உணர்த்துமுறை – ரமேஷ்
  • ஈசு (சிறுகதை) ந.சத்தியபாலன்
  • கிழக்கு வெளிக்கும் (சிறுகதை) தாட்சாயணி
  • 30லட்சம்+30 பவுண்-பெண்ணுடல்=5 ஆயிரம் (சிறுகதை) தேஜோமஜன்
  • ஈழத்துப் பெண் கவிதைகளின் பின் புலத்தில் அனாரின் கவிதைகள்-நிலான் ஆகிருதயன்
  • பசுவே பசுவே பசுவய்யா-குப்பிளான் ஐ.சண்முகன்
  • யாழ்ப்பாண்த்துக்கு ஒரு செவாலியே விருது-பாக்கு
  • மற்றும்
    கோகுலராகவன்,மருதம் கேதீஷ்,அனார்,மாசிதன், தேஜஷ்வினி,நிஷா,கல்லூரன்,ஷப்தமி-கவிதைகள்

    சந்தாவை இணையம் மூலம் பெற இங்கு அழுத்துங்கள்.
    தொடர்புகளிற்கு
    த.பிரபாகரன்
    41,ராச வீதி,நல்லூர்
    யாழ்ப்பாணம்
    இலங்கை
    aowshathan@gmail.com

    This entry was posted on Monday, June 22nd, 2009 and is filed under புத்தகங்கள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

    2 Responses to “அம்பலம், யாழ்ப் பாணத்திலிருந்து ஒரு சிற்றிதழ்”

    1. குமாரசூரியர் on June 23rd, 2009 at 8:52 am

      நல்லமுயற்சி

    2. king... on July 26th, 2009 at 4:05 pm

      பகிர்வுக்கு நன்றி சயந்தன்…

    Leave a Reply

    முன்பதிவுகள்

    கடந்தவை

    இணைப்புக்கள்

    Skype Me™!

    இதே நிலவில்

    ட்விட்டுகிறேன்

    From my Flickr

    face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231