பிச்சை வேண்டாம் நாயைப்பிடியுங்கள்!


612x.jpgஎல்லாவற்றையும் பார்த்தாயிற்று. பிரபாகரனது கண் புருவம் நெற்றி தாடையென விலாவாரியாக பிரித்து மேய்ந்த போஸ்ட்மார்ட்ட கட்டுரைகள் முதல் ஆறுமாதத்திற்கு முன்னாலாவாது புலிகள் பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருந்தால் இப்போது ஈழம் என்னும் சுயாட்சி மாகாணமாவது கிடைத்திருக்குமென்ற `அலுக்கோசு´த்தனமான எழுத்துக்கள் வரை பார்த்தாயிற்று. மேலும் எழுதுவதற்கு என்ன உண்டு..?

வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். இந்தப்போர் ஏன் தோல்வியுற்றதென ஒரு மூன்றாம் தரப்பாக நின்று ஆராயமுடியாத மனத்தடை எனக்கு உண்டு. எனக்குமட்டுமல்ல என் சிந்தனையையொட்டிய பல புலம்பெயர்ந்தவர்களுக்கு உண்டு. ஒவ்வொரு தடவையும் வவுனியாவின் காட்டு முகாம்களில் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு அடுத்தநேரச் சோறுக்கு கையேந்துகிற நம் சொந்தங்களைக் காணுகிற போதெல்லாம் இவர்களுக்கு இந்த வாழ்வை நாமே பரிசளித்தோம் என்ற தாங்கவொண்ணாத குற்ற உணர்ச்சியில் குமைந்து விடுகிறேன்.

இதுபற்றி நிறையப்பேச விருப்பமில்லை. ஆனால் ஒன்றைச் சொல்லமுடியும். காலக்கோடுகளுக்கு வேண்டுமானால் புலிகள் இயக்கம் தோல்வியுற்றது மே 18 ஆக இருக்கலாம். ஆனால் உண்மையென்னவெனில் அது தன்னை கடைசி வரை நம்பியிருந்த தன்னோடிருந்த மக்களிடம் தோல்வியுற்று மாதங்களாயிற்று என்பதுதான். அந்தக் கடல்களும் காடுகளும் நிறையக் கதைகளை வைத்திருக்கின்றன. அதனை அவைகளே சொல்லட்டும்.

ஆனால் இன்றைய புலிகளின்தோல்வியும் தலைவரது இழப்பும் (இந்த இடத்தில் நீங்கள் என்னைத் துரோகியெனலாம்) என்னை வலிக்கச்செய்தளவு வவுனியாக் காடொன்றின் கட்டாந்தரையில் கூடாரம் அடித்து தினம்தினம் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் என்வயதொத்த ஒரு இளைஞனுக்கு இருக்கப்போவதில்லை. யாருக்குத்தெரியும்…? நிம்மதிப் பெருமூச்சொன்று தோன்றியிருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை..

000

இலங்கையில் தற்போது வாழும் குறிப்பாக வன்னியிலிருந்து வெளியேறிய மூன்று லட்சம் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கும் அவர்களின் விருப்புக்களுக்கும் இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்திருக்கின்ற எங்களது எண்ண ஓட்டத்திற்கும் இடையில் நிரவமுடியாத பாரிய இடை வெளியொன்று எப்போதோ விழுந்துவிட்டது. ஈழம் சுயநிர்ணயம் அடிப்படை உரிமைகள் என்பனவெல்லாம் நமது பேச்சாயிருக்க குந்த ஒரு நிலம்.. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் முடிந்தால் கொஞ்சம் சோறு உயிரோடு விடிகின்ற அடுத்த நாட்காலை என்பது அவர்களின் அதிகூடிய எதிர்பார்ப்பாகியது. அந்த தவிர்க்கவியலாத நிலையை நாம் விளங்கிக் கொள்ளவில்லை. விளங்கிய பலர் வெளிச்சொல்லவில்லை நானுட்பட..

கடந்த திங்கட்கிழமை, செட்டிக்குளம் முகாமிலிருந்து வவுனியா வைத்திய சாலைக்கு வந்த மச்சாளுடன் பேசினேன். அவர் தனது குழந்தைகளுக்காக வந்திருந்தார். பார்க்கச் செல்லும் நபர்கள் செல்பேசியூடு தொடர்புகளை அவ்வப்போது ஏற்படுத்துகிறார்கள். மச்சாள் தனதிரண்டு பிள்ளைகள் உயிரோடிருப்பது குறித்து பறாளாய் முருகனிலிருந்து புதுகுடியிருப்பு முருகன் வரை நன்றி சொன்னாள். மரணஅறிவித்தல் சொல்வதுபோல அவள் சாவுகளை வரிசைப்படுத்திக்கொண்டிருந்தாள். உனக்குத் தெரியும்தானே.. வேலுமாமா.. வெளிக்கிட்டு வாறநேரம் செல்விழுந்து அந்தஇடத்திலேயே சரி.. பாப்பாவையும் பிள்ளையளையும் நாங்கள் எவ்வளவோ இழுத்துபாத்தம். பாப்பா பிரேதத்தை விட்டுட்டு வரமாட்டன் எண்டு அதிலையே இருந்து அழுதுகொண்டிருந்தா. பிள்ளைகளும்தான். நாங்கள் என்னசெய்யிறது. விட்டிட்டு வந்திட்டம். அவவும் செத்திருப்பா.. பிள்ளையளும்தான்…

மச்சாள் தொடர்ந்துகொண்டேயிருந்தாள். நான் ம் மட்டும் கொட்டிக்கொண்டிருந்தேன். அந்தக்கோயில் வைச்சிருந்த ஐயாடை உடம்பே கிடைக்கல்லை.. மனிசிக்கு கால் இல்லை. தண்ணி அள்ள வெள்ளைக்கேட் காணியில இருந்து வாற கண்மணி ஆட்களை தெரியும்தானே.. அந்த குடும்பமே இல்லை.. அவரில்லை. இவ இல்லை.. அவர்கள் இல்லை என மச்சாள் சொல்லிக்கொண்டே இருந்தாள். மரணங்கள் எத்தனை தூரம் மரத்துப்போன ஒரு விசயமாகி விட்டது அவளுக்கு.

இறுதியில் நான் ம் கூடகொட்ட முடியாத ஒரு கேள்வியை அவள் கேட்டாள். உங்கட தலைவர் ஆறுமாசத்துக்கு முதலே சரணடையிற முடிவை எடுத்திருந்தால் எவ்வளவு சனம் தப்பியிருக்கும்..

அவள் தெளிவாகச் சொன்னாள். உங்கட தலைவர்!

எப்படி இந்தப் பிரிவு ஏற்பட்டது.. ? புலம்பெயர்ந்த நாம் யாருக்காக போராடினோம்?

வவுனியாவின் காடுகளின் திசைநோக்கி / சாவகச்சேரி முகாம்கள் நோக்கி கையெடுத்துக் கும்பிடுகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். முகத்தில் காறி உமிழுங்கள். எங்கடை பெடியள்.. மற்றும் எங்கட சனங்கள் என்ற ஊடாட்டத்தில் எங்கட சனங்களுக்காக எத்தனையோ இரவுகள் உருகியபோதும் நாசமறுப்பார் கொல்லுறாங்கள் என நாசமறுப்பாரில் எல்லாத்தரப்பையிட்டும் வெம்மியபோதும் நான் இறுதிவரை எங்கடை பெடியங்களுக்காகவே வெளியே பேசினேன் என்பதையிட்டு என்னைக் கொன்று போடுங்கள்.

000

புலிகளிடத்தில் நான் உணர்வுத்தளத்தில் மிக நெருங்கியிருந்தேன் ஏனென்பதற்கு காரணங்களை விபரிக்க முடியுமா எனத்தெரியவில்லை. அது என்வயதொத்த பலருக்குமான நிலையாக இருக்கலாம். சிந்தனை மட்டத்திலும் தமிழர்கள் தாம் விரும்புகின்றதான ஒருதீர்வினை பெறுவதற்கு சிங்கள அரசை அதன் இராணுவ பொருளாதார இயந்திரங்களை நொருக்கி பணியவைக்ககூடியதான ஒரு நம்பிக்கையாக புலிகள் இருந்தார்கள் என்னளவில். ஆனால் ஒரு கட்டத்தில் – பிச்சைவேண்டாம் நாயைப் பிடியுங்கள் என எல்லோரையும் போலவே ஒரு இழவும் வேண்டாம். சனத்தை உயிரோடு இருக்கவிட்டுவிடுங்கள் என நானும் மறுகினேன். ஆனால் வெளிச்சொல்லத் தைரியமற்றிருந்தேன். பொதுவெளியில் புலிகளை நோக்கி சுட்டுவிரல் நீட்ட தயக்கமுற்ற ஒவ்வொரு பொழுதும் குற்ற உணர்ச்சி அதிகரித்துக் கொண்டே போனது. புலிகளுக்கு வெளியே புலிகளல்லாத பலருக்கும் துரோகிப்பட்டங்களை வழங்குவதற்குரிய அதிகாரங்களிருந்தன என்பதுவே பெரும் பயமாகியது. (இன்றது பத்மநாதனைத் துரோகியென்கிறது. தயாமோகனைத்துரோகியென்கிறது. நாளை மதிவதனியே வந்து அவர் இல்லைத்தானென்றால் அவரையும் துரோகியெனச் சொல்லும்)

புலிகளின் தலைவரிடத்தான நெருக்கமும் மேற்சொன்ன வகையானதே.. கூடவே சில பிடிபடாப் பெருமைகளும் சுமந்தது. இன்றவரில்லையென்றாகி விட்டது. அந்த உண்மை அடுத்து நிகழ்ந்தேறும் அரங்குகளில் தெறிக்கிறது. எத்தனை வெட்கக் கேடான வேதனையான பொழுதுகளைத் தாண்டுகிறோம் நாம். புதிய புதிய மர்ம மனிதர்கள் தோன்றுகிறார்கள். புதிய புதிய அறிக்கைகள் வருகின்றன. தளத்திற்கு வெளியே எஞ்சிய புலிகள் இயக்கமோ அல்லது வால்களே இன்று இரண்டாக நிற்கின்றன எனத் தெளிவாகத் தெரிகிறது. மக்களின் மரணங்களை வைத்து நிகழ்த்திய அரசியல் மக்களைத்தாண்டியும் நீள்கிறது.

மக்கள் பாவம். முன்னைய நாட்களில் இயக்கம் பிரிந்தபோது தலைவர் இருக்கின்ற இடத்திற்கு தம்மையும் நகர்த்தினார்கள். இப்போதும் அப்படியே.. தலைவர் இருக்கின்றார் எனச் சொல்கிற இடத்திற்கு.. நகர்த்துகிறார்கள்.

எல்லோரும் விரும்புகிறார்கள். எல்லலோரும் நம்புகிறார்கள்.. என்ன செய்ய.. நம்பிக்கைளும் விருப்பங்களும் எப்போதும் உண்மையாகி விடுவதில்லையே..

நான் உணர்வு ரீதியாக நெருங்கியிருந்த அக்கறையுற்றிருந்த புலிகள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது. வரலாற்றில் அதன் தொடர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. புதிய மர்ம ஆசாமிகள் குறித்து எனக்கெதுவித அக்கறையும் இல்லை. அது பத்மநாதனோ அறிவழகனோ.. எவராகவும் இருக்கட்டும்.

30 ஆண்டுகாலம் போராடிப் போய்ச்சேர்ந்த ஒருவனின் மரணத்தை மறைப்பதில் ஆயிரம் காரணங்கள் சொல்கிறார்கள். மக்கள் எழுச்சி தடைப்பட்டுவிடுமாம். அடுத்த ஆறு மாதத்தில் மக்கள் எழுச்சிமூலம் எதையாவது சாதித்துவிடும் நம்பிக்கையென்பது எத்தனை பெரிய மோசடி?

விடுதலைப்போரை வைத்து தின்று கொழுத்த கூட்டம் தலைவர் உயிரோடிருப்பதாகத்தான் சொல்லும். அதுமட்டுமல்லாமல் வைகோவையும் நெடுமாறனையும் கொண்டு சொல்லவும் வைக்கும். நாம் விரும்புகிற செய்தியைச் சொல்வதால் அவற்றையே நாமும் நம்புவோம். (ஒருவார காலம் துக்கம் அனுஸ்டிக்கச்சொல்லி அதனை அனுஸ்டித்துக்கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி தனது பிசினஸ் பாதிக்கப்பட்டுவிடுமோ என பயந்தோ என்னவோ அதை நிறுத்திவிட்டது. இதுநாள்வரை தம்மை புலிகளின் அதிகாரபூர்வ ஊடகமாக குறிப்பால் உணர்த்திக்கொண்டிருந்த பல ஊடகங்களும் திடீரென்று கள்ள மெளனம் சாதிக்கத் தொடங்கிவிட்டன. HERO இல்லாத படம் ஓடாதென்பதைப் போல)

அலுப்படிக்க எழுதுகிறார் என நான் நக்கலடிக்க எழுதுகிற இராயகரனும் குடித்துவிட்டு எழுதுகிறார் என நான் அனானியாக ஆங்காங்கே கும்முகிற சிறிரங்கனுமாவது அந்த தலைவனுக்குரிய அஞ்சலியைப் பாடட்டும். தன்மீதும் தன்போராட்டத்தின் மீதும் அக்கறையுள்ள சிலரையாவது பிரபாகரன் சம்பாதித்தார் என்பதே ஒரே ஆறுதல்.

நான் முழுவதுமான நம்பிக்கையற்று இருக்கிறேன். வெறும் கோரிக்கைகளோடு..
புலம்பெயர்ந்து வாழ்கிற ஈழத்தமிழர்களே.. உங்களது அடுத்த எந்த அரசியல்நகர்வும் அங்கே மிச்சமிருக்கிற செத்துப்பிழைத்த சனத்தை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். யாழ்செல்லும் படையணியோ திருமலை செல்லும் படையணியோ எந்தப்படையணியின் அநாமதேய அறிக்கைகளுக்கும் ஊடகங்களில் முக்கியத்துவம் தருவதைத் தவிருங்கள். இனியாவது புலம்பெயர் மாடுகளை குசிப்படுத்தும் செய்திகளை வழங்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
நாம் மக்களோடு மக்களாக கலந்திருக்கிறோம் என்ற யாழ்செல்லும் படையணியறிக்கை எவ்வளவு லூசுத்தனமானதென்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா..? யாழ்ப்பாணத்தில் ஒரு முகாமை நிறுவி 14 வயதிலிருந்து 50 வரையான எல்லாரையும் முகாமிலிட்டு வடிகட்டப்போகிறோம் என சிங்களம் புறப்பட்டால் கேட்பதற்கு நாதியில்லையென்பதை புரிந்து கொள்ளுங்கள். இதுவே மட்டக்களப்பிற்கும் பொருந்தும். இதுவே திருகோணமலைக்கும் பொருந்தும்.

பத்மநாதனாக இருக்கட்டும் அறிவழகனாக இருக்கட்டும்.. அங்கே எஞ்சியிருக்கின்ற போராளிகளுக்கு தண்டனையேதுமற்ற பொதுவாழ்வில் இணைவதற்கான ஏதாவது ஒரு வழியை எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்துவிடுங்கள். வெட்கத்தை விட்டு சொன்னால்.. (இதிலென்ன வெட்கப்பட இருக்கிறது. கருணாநிதியை கெஞ்சி ஜெயலலிதாவை கெஞ்சி ஒபாமாவை கெஞ்சி யுஎன்ஓவை கெஞ்சி கடைசியில் மகிந்தவையும் கெஞ்சி.. விட்டபிறகு கருணா என்கிற முரளிதரனைக் கெஞ்சுவதில் என்ன நேர்ந்துவிடப்போகிறது. ) கருணாமூலமாகவேனும் ஒரு பாதுகாப்பான சரணடைவை ஏற்படுத்திக் கொடுங்கள். நடு ஆற்றில் விட்டதைப்போன்று தனித்த அந்த போராளிகளையும் தளபதிகளையும் இராணுவம் தேடித்தேடி அழிக்கிறது என்ற செய்திகளை தாங்கமுடியவில்லை.
SRILANKA-WAR/
முகாம்களில் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு தங்களைத் தொலைக்கப்போகிற உறவுகளுக்கு என்ன சொல்ல முடியும்..? இதோ.. இங்கே மீளவும் exil government புறநிலை அரசு சுயாட்சிக்கான அழுத்தம்.. தமிழீழ தனியரசிற்கான தேர்தல் (அதுமட்டுமல்ல.. மீளவும் போராளிகளை பலப்படுத்தி ஈழத்தை அடைவோம் என்கிற இரக்கமற்ற கதைகளும் கூட) என அடுத்த காட்சிகளுக்கான மேடைகள் தயார் செய்யப்படுகின்றன. இவை தேவை அல்லது தேவையற்றவை என்பதை தெளிவாக அறிவித்துவிடுங்கள். நாம் வெறும் 4 மில்லியன்களே உள்ள தனித்த இனம். வேறெவரும் அற்ற இனம். ஆறுகோடி தொப்புள் கொடி என்பதெல்லாம் ச்சும்மா.. அந்த ஆறுகோடிப்பேரில் நாம் சிலருக்கு பெரும் சோகமாக இருந்தோம். சிலருக்கு பெரும்தொல்லையாக . சிலருக்கு நோ கமன்ட்ஸ் ஆக.. சிலருக்கு வியாபாரமாக .. அவர்களில் எமக்காக அழுபவர்களின் கண்ணீரை நாமே துடைத்துவிட வேண்டியிருப்பதுதான் உண்மை நிலவரம். அதை விடுத்து ஆறுகோடி பேரை வைத்து எதையாவது செய்யமுடியும் என யோசிக்கத் தொடங்கினால் – அந்தக் கணமே அவ் நினைப்பைத் தூக்கியெறிந்துவிட்டு சிங்களவர்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள்.

வேறென்ன சொல்ல…? மீளவும் ஒருதடவை மன்னித்துவிடுங்கள் எனக் கேட்பதைத் தவிர

This entry was posted on Thursday, May 28th, 2009 and is filed under Featured. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

74 Responses to “பிச்சை வேண்டாம் நாயைப்பிடியுங்கள்!”

  1. பாரி.அரசு on May 28th, 2009 at 1:05 pm

    //கருணாமூலமாகவேனும் ஒரு பாதுகாப்பான சரணடைவை ஏற்படுத்திக் கொடுங்கள். நடு ஆற்றில் விட்டதைப்போன்று தனித்த அந்த போராளிகளையும் தளபதிகளையும் இராணுவம் தேடித்தேடி அழிக்கிறது என்ற செய்திகளை தாங்கமுடியவில்லை.//

    இன்றைக்கு அரசியற்துறை பொறுப்பாளர் தமிழினி கைது செய்யப்பட்டார் என்கிற செய்தியை வாசித்பொழுது இதே எண்ணவோட்டம் மனதில் வந்து போனது…

  2. John Nathan on May 28th, 2009 at 1:32 pm

    TRUE

  3. ராஜநடராஜன் on May 28th, 2009 at 1:37 pm

    படமும்,எழுத்தும் சோகத்தை மட்டுமே துணைக்கு அழைக்கிறது.

  4. raya on May 28th, 2009 at 2:10 pm
  5. palPalani on May 28th, 2009 at 2:20 pm

    /*
    நாம் வெறும் 4 மில்லியன்களே உள்ள தனித்த இனம். வேறெவரும் அற்ற இனம். ஆறுகோடி தொப்புள் கொடி என்பதெல்லாம் ச்சும்மா.. நாம் சிலருக்கு பெரும் சோகம் சிலருக்கு பெரும்தொல்லை. சிலருக்கு நோ கமன்ட்ஸ் சிலருக்கு வியாபாரம்.. அவர்களில் எமக்காக அழுபவர்களின் கண்ணீரை நாமே துடைத்துவிட வேண்டியிருப்பதுதான் உண்மை நிலவரம். அதை விடுத்து ஆறுகோடி பேரை வைத்து எதையாவது செய்யமுடியும் என யோசிக்கத் தொடங்கினால் – அந்தக் கணமே அவ் நினைப்பைத் தூக்கியெறிந்துவிட்டு சிங்களவர்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள்.
    */
    Yes, Please don’t expect any help from these 6 crore ppl, they are selfish.

  6. mugu on May 28th, 2009 at 2:30 pm

    சயந்தன்,

    உங்க‌ளின் கோப‌ம் நியாய‌மான‌தே.
    ஆனால் ஆயுதத்தின் மூல‌மாக‌ ம‌ட்டுமே
    ஈழ‌ம் பெற‌லாம் என்ப‌து முட்டாள்தனம்.மக்களின் உண்மையான‌ விடுத‌லை எழுச்சி இல்லாம‌ல்
    உல‌கில் யாரும் சுத‌ந்திர‌ம் பெற்ற‌தாய்
    ச‌ரித்திர‌ம் இல்லை.

    த‌மிழ்நாடு ஒரு த‌னிநாடு அல்ல‌….புரிந்து
    கொள்ளுங்க‌ள்….அர‌சிய‌ல் ச‌ட்டத்திற்குள் தான்
    ப‌ங்க‌ளிப்பு செய்ய‌ முடியும்.

    ச‌க‌ த‌மிழ‌னாய் வ‌ன்னியில் ம‌க்க‌ள் ப‌டும்
    முள் வேலி வாழ்க்கை க‌ண்டு க‌ண்ணிர் விட‌த்தான்
    முடிகிற‌து.

    ம‌ன்னித்துவிடுங்க‌ள்….

  7. raya on May 28th, 2009 at 2:32 pm

    வணக்கம் சயந்தன்

    உங்கள் உணர்வுகள் அனுபவம் சார்ந்தது. ஆனால் அடுத்த எதிர்நிலைக்கு பாய்ந்து செல்வதும் தவறானது. மக்கள் நலனை கருணாவோ, இந்த அரசோ ஒருகாலும் பூhத்திசெய்ய முடியாது. மக்களுக்காக மக்களுடன் நில்லுங்கள். அதற்காக இயன்றதை செய்ய முனையுங்கள். விரக்தி மற்றறொரு தவறாக ஒருக்கவும் இருக்கக் கூடாது.

    பி.இரயாகரன்

  8. -/. on May 28th, 2009 at 2:37 pm

    சயந்தன் நீங்கள் ஓர் இற்றுப்போன உளநிலையிலே எழுதுவது புரிகின்றது. புலம்பெயர்நாடுகளிலே ஒன்றுமே செய்யாது ஒடுங்கியிருப்பதனாலே ஏதேனும் தீர்ந்துவிடுமா? புலம் பெயர்நாட்டிலே ஆயுதம் தாங்கவேண்டுமென்று எவரும் சொல்வதாகத் தெரியவில்லை. Exile Government தொடக்கம் தளத்தமிழர்களின் ஒடுங்கிய குரலை உரக்கக்கேட்கச்செய்யமட்டுமே புலம்பெயர்பெரும்பான்மை ஒலிக்கிறது. மிகுதி ஸ்ரீலங்கா அரசிடம் ஒடுங்கிப்போ என்பதாக.

    கருணாவிடம் இறைஞ்சியேனும் கேட்கலாம் என்பதெல்லாம் எழுத்திலே ஒரு பரிதாபத்தினை ஏற்படுத்த உதவலாம். இந்தியப்பதிவர்களிடம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலை இதைவிட உங்களுக்கு ஏற்படுத்தித் தந்தோமே என்று 140 சொற்கள் எழுத வகையேற்படுத்தலாம். அதற்குமேலே என்ன செய்ய முடியும்? ஓர் இயக்கம் ஒழிந்து முடிந்தபின்னால், பழியெல்லாவற்றையும் அதிலே தூக்கிப் போட்டுவிடும் கருணாகரவேலை உங்களுக்கும் தேவையா? புலிகள் சரண்டைந்திருக்கலாம் என்று மக்கள் சொன்னார்கள் என்றால், மக்களை அத்துணை அழுத்தத்துக்கு இட்டுவந்ததிலே புலிகளுக்கு மட்டும் பொறுப்பில்லை. அதற்கான வெளியழுத்தத்தை ஸ்ரீலங்கா அரசுக்குச் சார்பாகக் கொடுத்துக்கொண்டிருந்த எல்லா அரசுகளும் அவற்றினைச் சார்ந்து பதிவு போட்டுக்கொண்டிருக்கும் அவ்வரசுகளின் புத்திரர்களுமே காரணம். புலிகள் முடிந்துவிட்டதாலே, இப்போது தீர்வுகள் கிடைத்துவிட்டனவா?

    என்னைப் பொறுத்தமட்டிலே, புலம்பெயர்தமிழர்கள் (புலிகளுக்குக் கொடி பிடிக்காது அவர்களுக்கு எதிரானவர்களுக்கும் கொடிபிடிக்காது நின்ற பலருட்பட) செய்வதற்கு இன்னமும் நிறையவிருக்கின்றது. ஏதேனும் சுண்டுவிரல் நகக்கீறல் போலேனூங்கூட ஸ்ரீலங்கா அரசுக்கெதிராகச் செய்துகொண்டிருக்கவே வேண்டும்.

  9. -/. on May 28th, 2009 at 2:42 pm

    இவை பெரும்பான்மையான இந்தியப்பதிவர்களுக்கு குமுதம் வாசிக்கும் பொழுதுபோக்குக்குதூகலத்துக்கு மட்டுமே உதவுமென்பதாலே, இவை பற்றி பகிரங்கமாக எழுதுவதிலே எனக்கு உடன்பாடிருப்பதில்லை. ஆனால், இங்கே குறிப்பிடவேண்டி வந்தது, புலம்பெயர்ந்தவர்களிலே (நீங்கள் உட்பட) பழிகளைச் சுமத்துவதுபோலத் தோன்றியதாலேதான்..

  10. stalinguru on May 28th, 2009 at 2:49 pm

    இரயாகரன் மக இக போன்ற கூலி கும்பல்களிடம் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு முதலில் இவர்கள் பதில் அளித்ததாக எந்த சான்றையும் காணோம்

    http://trovkin.blogspot.com/2009/05/blog-post_9184.ஹ்த்ம்ல்

    https://www.blogger.com/comment.g?blogID=28837873&postID=1186329712777356682

  11. stalinguru on May 28th, 2009 at 2:55 pm

    30 ஆண்டுகாலம் போராடிப் போய்ச்சேர்ந்த ஒருவனின் மரணத்தை மறைப்பதில் ஆயிரம் காரணங்கள் சொல்கிறார்கள்.

    முப்பது ஆண்டுகாலமாக போராடி போய் சேர்ந்ததாக நீங்கள் சொல்லும் ஒரு மனிதனின் உடலில் இது உள்ளாடை இது ஆண்குறி என்று வட்டமிட்டு காட்டும் இரயாகரனையும் சிரீரங்கனையும் அஞ்சலி செலுத்துகிற புனித உள்ளங்களாக ஈழ விடுதலை போராட்டம் பெற்றதாக கருத எந்த கூச்ச நாச்சமும் இல்லையா உங்களுக்கு

  12. சயந்தன் on May 28th, 2009 at 3:01 pm

    ஓர் இயக்கம் ஒழிந்து முடிந்தபின்னால், பழியெல்லாவற்றையும் அதிலே தூக்கிப் போட்டுவிடும் கருணாகரவேலை உங்களுக்கும் தேவையா? //

    இது பழிசுமத்தும் வேலையல்ல பெயரிலி. பழி சுமக்கும் அறிவிப்பு. பெயரிலி அதிகாரங்களும் பதவிகளும் தம்முள் இழுபறிப்படுவதை கண்முன்னாலேயே பார்க்கிறேன்.

    அதிகாரத்திற்கும் பதவிக்கும் அலையும் தருணத்தில் அவை நடக்க இருக்கிற மக்கள் போராட்டத்திலும் ஆளுமை செலுத்தவே போகின்றன. அவற்றை மீறி வரலாம் என்ற நம்பிக்கை தனிப்பட எனக்கு இல்லை.

    மற்றும்படி.. ஒப்புகொள்கிறேன். மரணம் என் காலடிக்கு வரும்வரை நானும் பரணி பாடிக்கொண்டிருந்தேன்..

    என்ன செய்ய.. பூசாரிகள் பத்திரமாக சென்றுவிட்டார்கள். கலையாடிகள் செத்து போனார்கள்

    சுண்டுவிரல்நகக்கீறல் அளவாவது நான்போராட போராட.. அங்கே கோத்தபாய ஒவ்வொரு நகமாகப் பிடுங்கியெறிவதை எப்படி எதிர்கொள்ள… ?

  13. king... on May 28th, 2009 at 3:02 pm

    பெயரிலி அண்ணன் சொன்னது போல அரசாங்கத்துக்கு ஏதாவது அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தும் ஆனால் புலம்பெயர் மக்கயைளப்பற்றிய அபிப்பிராய பேதம் எனக்கும்இருக்கிறது.

    ஆக ….
    நான் உட்பட பேச வேண்டிய நேரத்தில் பேசவேண்டிய விசயங்களை பேசவில்லை என்பது என் எண்ணமும்.

    இப்பொழுது புலிகள் மீது மட்டுமே பழி போடுவதில் எந்த நியாயமும் இல்லை என்றாலும்,கதைகள் தொடரத்தானே போகிறது…

    சில வருடங்களுக்கு பிறகு வெளிவரப்போகும் இன்னும் சில கதைகளை பற்றி பின்னர் பேசலாம்…

  14. சயந்தன் on May 28th, 2009 at 3:09 pm

    ஸ்டாலின்குரு.. நீங்கள் உட்பட்ட இராயகரன் சிறிரங்கன் ஆகியோரின் சித்தாந்தங்கள் புரட்சிகள் இசங்கள் மட்டைகள் மயிர்கள் லொட்டுகள் சொசுக்குகள் குறித்த கரிசனையேதும் எனக்கில்லை. நீங்கள் டீம் பிரித்து அடிபடுகிறீர்கள் என்பதைத் தவிர எதுவும் தெரியவும் தெரியாது. விட்டுவிடுங்கள்..

  15. சயந்தன் on May 28th, 2009 at 3:12 pm

    மற்றும்படி 6 கோடிப்பேரிடமிருந்தும் இரக்கம் காட்டுவீராக என இறைஞ்சும் பதிவென்ற தோரணை இதில் தெரிந்தால்.. இந்த பதிவின் நோக்கம் அதுவல்ல என்பதை சொல்லிவிடுகிறேன்.

  16. king... on May 28th, 2009 at 3:14 pm

    மக்களுடைய மனோ நிலை மாறி வருடக் கணக்குகளாகிற்று என்பது என் எண்ணம்.

  17. -/. on May 28th, 2009 at 3:22 pm

    /சுண்டுவிரல்நகக்கீறல் அளவாவது நான்போராட போராட.. அங்கே கோத்தபாய ஒவ்வொரு நகமாகப் பிடுங்கியெறிவதை எப்படி எதிர்கொள்ள… ?/

    கீறாமல் இருந்தால் மட்டும் பிடுங்கியெறிவது தவிர்க்கப்படவா போகின்றது என்பதுதான் என் கேள்வி. கோத்தபாயாவிலும் மேலாக நான் அஞ்சுவது தாமே தமிழின் மாற்றுத்தலைமை என்று மணிகட்டிக்கொண்டிருப்பவர்களிடம். இன்னமும் புலம்பெயர் ஆங்கில வானொலிகளிலே புலிகளே அனைத்துக்கும் காரணம் என்பதுபோலத் திட்டித் தள்ளித் திரியும் நிர்மலா கும்பல் முதல் எட்டு வயதுக்குழந்தையைக் கொன்று கட்டிச் சாக்குக்குள்ளே போட்டுத் தூக்கியெறியும் கருணா கும்பல்வரைக்கும் ‘எங்கள் தலைவர்களே’ என்று சொல்லும் உளநிலைக்கு வன்னிமக்கள் வந்திருக்கின்ன்றார்களா என்றால், இல்லை என்றே சொல்வேன்.

    புலம்பெயர்ந்த அரசியல் என்பது ஒற்றையானதல்ல. அந்தந்த நாடுகளின் உள்ளூர் அரசியலுமுட்பட்டதே. ஆனால், முயன்றால், அது கொடுக்கக்கூடிய அழுத்தமே உள்ளவற்றிலே ஸ்ரீலங்காவுக்கான பேரழுத்தம். மனித உரிமைகளென்று எவருமே கவலைப்படப்போவதில்லை. காஷ்மீரிலே கொல்லப்படாதவர்களா? ஈராக்கிலே கொல்லப்படாதவர்களா? திபெத்திலே கொல்லப்படாதவர்களா? அல்ஜீரியாவிலே கொல்லப்படாதவர்களா? வட அயர்லாந்திலே கொல்லப்படாதவர்களா? ஆனால், இந்த நாடுகளிலே உடலங்களை உயிர் பிதுக்கிப் பிரித்து உழக்கித் தள்ளியவர்கள் கைகளிலேதான் மனித உரிமைச்சங்கீதத்தினை நடாத்தும் கைக்கோலிருக்கின்றது. அதனை ஆட்டச்செய்வதிலே முயலும்வரை முயலலாம். முடியாவிட்டால், தோற்றுத்தான் போனோமா என்பதிலும்விட இயன்றவரை முயன்றோம் என்ற திருப்தி எஞ்சும். அவ்வளவுதான். மிகுதிப்படி, இடது, வலது, மார்க்ஸியம், மார்புக்கச்சையிசம், திராவிடம், ஆரியம், காந்தியம், கோவணாம்சம் எல்லாம் வெளிப்பம்மாத்துகள்மட்டுமே

  18. king... on May 28th, 2009 at 3:27 pm

    என்னைப்பொறுத்த வரையில் மஹிந்தவிடம் மக்கள் என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களோ என்னவோ முறையான ஆள் ஒருவரிடம் கோத்தபாய கிடைத்தால் குனியவைக்க்க்கூடும் அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடுவார்கள்

    மஹிந்தவுக்கு இப்பொழுது கிடைத்திருப்பது தற்காலிகமாகவோ என்னவோ தேவதூதன் இமேஜ் அதனை தக்கவைத்துக்கொள்ள அவர் பெரும்பாடு படவேண்டும் அதற்கான ஆசை அவரிடம் இருக்கிறதென்பது உணர்வு மயப்பட்ட அவருடைய பேச்சுகளில் இருந்து தெரிகிறது…

  19. சயந்தன் on May 28th, 2009 at 3:31 pm

    இன்னமும் புலம்பெயர் ஆங்கில வானொலிகளிலே புலிகளே அனைத்துக்கும் காரணம் என்பதுபோலத் திட்டித் தள்ளித் திரியும் நிர்மலா கும்பல் முதல் எட்டு வயதுக்குழந்தையைக் கொன்று கட்டிச் சாக்குக்குள்ளே போட்டுத் தூக்கியெறியும் கருணா கும்பல்வரைக்கும் ‘எங்கள் தலைவர்களே’ என்று சொல்லும் உளநிலைக்கு வன்னிமக்கள் வந்திருக்கின்ன்றார்களா என்றால், இல்லை என்றே சொல்வேன்.//

    ஓம்.. கையறு நிலை.. யாருமற்ற நிலை. அதே நேரம் அவர்களுக்கான அரசியலை அவர்களேன் உருவாக்கக்கூடாது..? நான் சொல்லவருவது இதுதான்.

    அவர்களை அணுகி அவர்களின் விருப்புகளுக்கேற்று அவர்களின் நிம்மதியான வாழ்வுக்கு தமக்கான தெரிவுகளை அவர்கள் தேட.. அதற்காக ஆதரவளிப்பதுதான்.. அல்லது போராடுவதுதான்.

  20. -/. on May 28th, 2009 at 3:46 pm

    /அவர்களை அணுகி அவர்களின் விருப்புகளுக்கேற்று அவர்களின் நிம்மதியான வாழ்வுக்கு தமக்கான தெரிவுகளை அவர்கள் தேட.. அதற்காக ஆதரவளிப்பதுதான்.. அல்லது போராடுவதுதான்./

    சயந்தன், நிச்சயமாக அதைத்தான் நானும் சொல்கிறேன். யார் அவர்களை எச்சூழலிலே எங்கே அணுகுவது என்பதுதான் சிக்கல். அவர்களைச் சுதந்திரமாக வெளியே கேட்கப் பேசவிடுங்கள் என்பதுதான் புலம்பெயர்ந்தவர்களின் இன்றைய குரலாகவிருக்கவேண்டும் என்கிறேன்.

    கருணாவோ பத்மநாதனோ சுசீந்திரனோ நிர்மலாவோ பேசவேண்டாம். அவதி அவதியாக, மனிதப்பேரழிவின் சாட்சியங்கள் உலகத்தை எல்லைக்கப்பால் நில்லென்று கூறி ஒழி/ளிக்கப்படுகின்றன. இன்னும் ஒரு மாதத்திலே எப்படியாக ஒழிக்கப்பட்டன என்று கிழக்கு பதிப்பகம் இந்தியப்பத்திரிகைகளிலே வந்த கட்டங்களை ஒட்டிப் புத்தகமாக வெளியிடும்வரைக்கும் நாங்கள் பொறுத்திருந்து உன் மை அறியத் தேவையா? இன்றைக்குப் புலம்பெயர்ந்தவர்களே குரல் எழுப்பவேண்டியிருக்கின்றோம். செல்லும் வழி இருட்டுத்தான். ஆனாலும், சென்றுதான் ஆகவேண்டும். சோர்ந்து போய் ஆவதற்கொன்றுமில்லை. மெய்யாகவே இந்த மக்கள் மீது அக்கறையிருக்குமென்றால், எதையேனும் எமக்குச் சரியென்று படுகின்றவிதத்திலே இன்றைக்குச் செய்தே ஆகவேண்டும். நேற்று “”ஸ்ரீலங்காவை ஆதரி, விசாரணை தேவயில்லை” என்ற ஐநா மஉவிலேயான இந்தியாவின் வாக்கினைப் பற்றிப் பதிப்பிக்க என்றைக்கும் துணிவு வராதென நான் கருதும் வியாபாரிகள் பத்ரியும் பா ராகவனும் மொட்டைமாடிக்கூட்டங்களும் மூன்று மாதங்களுக்குப் பின்னாலே மட்டுமே சுயதணிக்கைகளுடன் வருவார்கள்; நமது மக்கள் நமது குரலென்பதுதான் இன்றைய நிலை.

  21. suresh on May 28th, 2009 at 4:11 pm

    //இலங்கையில் தற்போது வாழும் குறிப்பாக வன்னியிலிருந்து வெளியேறிய மூன்று லட்சம் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கும் அவர்களின் விருப்புக்களுக்கும் இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்திருக்கின்ற எங்களது எண்ண ஓட்டத்திற்கும் இடையில் நிரவமுடியாத பாரிய இடை வெளியொன்று எப்போதோ விழுந்துவிட்டது. ஈழம் சுயநிர்ணயம் அடிப்படை உரிமைகள் என்பனவெல்லாம் நமது பேச்சாயிருக்க குந்த ஒரு நிலம்.. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் முடிந்தால் கொஞ்சம் சோறு உயிரோடு விடிகின்ற அடுத்த நாட்காலை என்பது அவர்களின் அதிகூடிய எதிர்பார்ப்பாகியது. அந்த தவிர்க்கவியலாத நிலையை நாம் விளங்கிக் கொள்ளவில்லை. விளங்கிய பலர் வெளிச்சொல்லவில்லை நானுட்பட//

    இது முற்றுலும் உண்மை

  22. anno on May 28th, 2009 at 4:23 pm

    /*
    நாம் வெறும் 4 மில்லியன்களே உள்ள தனித்த இனம். வேறெவரும் அற்ற இனம். ஆறுகோடி தொப்புள் கொடி என்பதெல்லாம் ச்சும்மா.. நாம் சிலருக்கு பெரும் சோகம் சிலருக்கு பெரும்தொல்லை. சிலருக்கு நோ கமன்ட்ஸ் சிலருக்கு வியாபாரம்.. அவர்களில் எமக்காக அழுபவர்களின் கண்ணீரை நாமே துடைத்துவிட வேண்டியிருப்பதுதான் உண்மை நிலவரம். அதை விடுத்து ஆறுகோடி பேரை வைத்து எதையாவது செய்யமுடியும் என யோசிக்கத் தொடங்கினால் – அந்தக் கணமே அவ் நினைப்பைத் தூக்கியெறிந்துவிட்டு சிங்களவர்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள்.
    */
    100% COORRECT…

  23. king... on May 28th, 2009 at 4:37 pm

    அதேதான் இப்பொழுது செய்யக்கூடியதும் வடக்கு கிழக்குக்கான பொதுவான தலமை ஒன்றை தெரிவு செய்வதை மக்களிடமே விட்டுவிடலாம் அது யாராக இருந்தாலும் அவர்களுக்கான அரசியல் அவர்களிடமே இருக்கிறது அவர்களுக்கான சமாதானம் அவர்களிடமிருந்தே தொடங்கட்டும்.
    (இந்த அணுகு முறைக்கான கேள்விகள் அவர்களுக்குள்ளேயும் இருந்திருக்கலாம்)

  24. சோமி on May 28th, 2009 at 5:32 pm

    நண்பனே,
    நானும் நீயும் கடந்த 8 வருடங்களா பேசிக் கொள்ளுகிற ஒவ்வொரு வேளைகளிலும் புலிகள் பாற்றியும் எங்கடை மக்கள் எங்கைடை பெடியள் பற்றீயும் எதனை உணர்ச்சியோ டு பேசினோமொ… இப்போம் உனது கட்டுரை அத்தகைய உணர்ச்சியோடு இருக்கிறது. இப்போதும் நாம் பல இரவுகள் பேசியிருக்கிறோம். ஆனாள் நாம் கடந்த எட்டு வருடத்தில் அதிகம் உணர்ச்சி வசப்பட்டே இருந்திருக்கிறோம். இப்போதகிலும் நிதானம் தேவை.

    புலிப்பாசிசம் பேசியவர்களையும் இணையதில் புரட்சி நடத்திக் கொண்டிருபவர்களையும் உன் தலைவனுக்காக அல்லது பிரபாகரனுக்கா பதி பாடச் சொல்லுவதும் இன்னுமொரு சராணாலயமாக கருணாகரப் புல்லுரிவிகளை அழைப்பதும் எத்தனை பொருத்தம் எனத் தெரியவில்லை. ஆனால் அனைவரையும் இணைத்து பொது உரையாடல் நிகழ்த்தியாக வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ராயகரன் போன்றவர்களூம் நிர்மலா அக்கா உள்ளீட்ட இலண்டன் மனித உரிமைக் காரகளும் …இன்னும் இன்னும்….. ப்லரும் கை கோர்பார்களானல். எதாவது அதிசயம் நடகாலாம்..

  25. tamilnathy on May 28th, 2009 at 6:10 pm

    உங்கள் பதிவு பெரியதொரு குற்றவுணர்ச்சியைத் தந்தது. நானும் நீங்களும் மற்றவர்களும் கொஞ்சம் புலம்பிக்கொண்டு எங்காவது வாழ்ந்துவிட்டுப் போக சில ஆதாரமான விசயங்கள் இருக்கின்றன. தடுப்புமுகாம்களில் இருக்கும் அந்தச் சனங்கள்… அவர்கள் முதலில் முகாம்களிலிருந்து மீட்கப்படவேண்டும். (அவர்களை மீட்டுத்தான் முகாம்களுக்கு அனுப்பியதாக அரசாங்கம் சொல்கிறது) சாதாரண வாழ்க்கைக்கு அவர்கள் திரும்புவதற்கு உதவி செய்ய புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் அதிகாரங்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும்.

    “இன்றைக்குப் புலம்பெயர்ந்தவர்களே குரல் எழுப்பவேண்டியிருக்கின்றோம். செல்லும் வழி இருட்டுத்தான். ஆனாலும், சென்றுதான் ஆகவேண்டும். சோர்ந்து போய் ஆவதற்கொன்றுமில்லை. மெய்யாகவே இந்த மக்கள் மீது அக்கறையிருக்குமென்றால், எதையேனும் எமக்குச் சரியென்று படுகின்றவிதத்திலே இன்றைக்குச் செய்தே ஆகவேண்டும்.”

    என்று பெயரிலி சொல்லியிருப்பதே எனது நிலைப்பாடும். நிர்மலா, சுசீந்திரன் கும்பல் சும்மாவே அவலை மெல்கிற ஆட்கள். இப்போது பெரிய கொண்டாட்டமாக இருக்குமென்று நினைக்கிறேன். குற்றப்பட்டியலின் நீளம் சீனச்சுவரை விஞ்சியதாக இருக்குமென்று நினைக்கிறேன்.

  26. பதி on May 28th, 2009 at 6:46 pm

    பதிவிலும் பின்னூட்டத்திலும் உங்களது மனநிலை புரிகின்றது சயந்தன்.

    நிச்சயமாய், நீங்கள் சொல்ல விரும்புபவை மற்றைய புலம் பெயர் தமிழர்களின் கருத்துக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதே..அது நீங்கள் என்ன மனநிலையிலிருந்து எழுதியிருப்பினும்… இன்றைய யதார்த்தமும் யுத்த செய்திகளும் உறைக்கின்றன…

    //நாம் வெறும் 4 மில்லியன்களே உள்ள தனித்த இனம். வேறெவரும் அற்ற இனம். ஆறுகோடி தொப்புள் கொடி என்பதெல்லாம் ச்சும்மா..//

    இது தான் உண்மை. இதனை சந்தர்ப்பம் வாய்க்கும் ஒவ்வொரு முறையும் மிக அழுத்தமாக சொல்லுங்கள்…

    //எமக்காக அழுபவர்களின் கண்ணீரை நாமே துடைத்துவிட வேண்டியிருப்பதுதான் உண்மை நிலவரம்.//

    :(

    அரசியல் அடிமைகளாகி, சோகத்தை மட்டுமே துணைக்கு கொண்டுள்ளவர்களுக்கு மற்றொருவர் ஆறுதல்… இல்லையெனில் தீக்குளித்து சாகத்தான் தெரிகின்றது எமது மக்களுக்கு..

  27. மாண்டு போன மனிதம் on May 28th, 2009 at 7:01 pm

    எழு
    மண்ணைத்தட்டு
    பக்கத்தில் உள்ளவனை
    கைகொடுத்து எழுப்பு
    நடந்து போ
    எதிரியென்று ஓரினமில்லை
    என உணர்த்தி
    கைகுலுக்கு
    தட்டிவிடப்பட்டால்
    புன்னகைத்து மீண்டும்
    கையை நீட்டு
    எம் தேசத்தில்
    மாண்டு போன மனிதம்
    மீண்டு எழும்வரை.

  28. தழிழ்பித்தன் on May 28th, 2009 at 8:36 pm

    ஆனால் இன்றைய புலிகளின்தோல்வியும் தலைவரது இழப்பும் (இந்த இடத்தில் நீங்கள் என்னைத் துரோகியெனலாம்) என்னை வலிக்கச்செய்தளவு வவுனியாக் காடொன்றின் கட்டாந்தரையில் கூடாரம் அடித்து தினம்தினம் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் என்வயதொத்த ஒரு இளைஞனுக்கு இருக்கப்போவதில்லை. யாருக்குத்தெரியும்…? நிம்மதிப் பெருமூச்சொன்று தோன்றியிருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை///

    நான் உங்களுடைய இந்த கருத்துடன் முற்று முழுதாக ஒத்துப் போகிறேன். அன்று செத்த அமிர்தலிங்கம் முதல்… ஆயிரம் ஆயிரம் சிந்தனையாளர்களும் பலவாயிரம் மாற்றுக் கருத்தாளர்களும் வேள்வி எனும் பேயரில் வேட்டையாடப் பட்டார்கள். பல ஆயிரம் பேயருடைய பேனா பேச மறுத்தது பயத்தினால். ஆனாலும் நமக்கொரு தீர்வு வேண்டாமா? என பல்லாயிரம் மக்கள் துயரங்களையும் தாண்டி மெளனித்திருந்தனர். இன்று எல்லாம் …வெறுமையாகிப் போகியது.

    ஒரு தாயின் பிள்ளையை பலவந்தமாக ஆயுதத்தை திணித்த போது அதை தடுக்க முனைந்த தாயின் மார்பிலே காலணிகளால் உதை .. இதை விடவாடா சிங்களவன் கொடுமை செய்திட்டான். என்ற சித்தியின் கேள்விக்கு நான் மெளனிக்க உந்த வெளிநாட்டுச் சனத்துக்கு லூசுடா…

  29. மு. மயூரன் on May 28th, 2009 at 8:41 pm

    பின்னூட்டங்களை மின்னஞ்சலில் பெறுவதற்கான பின்னூட்டம் :)

  30. சயந்தன் on May 28th, 2009 at 9:06 pm

    ஆனால் அடுத்த எதிர்நிலைக்கு பாய்ந்து செல்வதும் தவறானது. //
    கருணாவிடம் உதவிகேளுங்கள் என்பதை அவ்வாறு நீங்கள் நினைத்திருக்கக் கூடும்.
    எனக்கு போக்கிடமேதும் இல்லை. தயவுசெய்து இன்றைக்கு எஞ்சியபோராளிகளை சாகாமல் உடனடியாகக் காப்பாற்ற ஏதாவது மக்கள்மயப்பட்ட போராட்ட வழிகளை சொல்லுங்கள்.

    தயவுசெய்து அவர்கள் கடைசிவரை அவர்கள் போராடி மடியட்டும் எனச் சொல்லிவிடாதீர்கள் :(

  31. சயந்தன் on May 28th, 2009 at 10:45 pm

    புலிப்பாசிசம் பேசியவர்களையும் இணையதில் புரட்சி நடத்திக் கொண்டிருபவர்களையும் உன் தலைவனுக்காக அல்லது பிரபாகரனுக்கா பதி பாடச் சொல்லுவதும் இன்னுமொரு சராணாலயமாக கருணாகரப் புல்லுரிவிகளை அழைப்பதும் எத்தனை பொருத்தம் எனத் தெரியவில்லை.//

    சோமி.. பாடச் சொல்லவில்லை. ஆனால் இன்று அவர்களே பாடுகிறார்கள். நானோ நீங்களோ இல்லை! அதே போல கருணாகரப்புல்லுருவிகள் தொடர்பானது..

    இறுதி காலத்தில் நாங்கள் சிதம்பரத்தை அழைத்தோம். கனிமொழியை அழைத்தோம்.. மகிந்தவை அழைத்தோம்.. பசிலை அழைத்தோம்..

    அதனைப்போலவே மிச்சமிருக்கிற போராளிகளை உயிரோடு மீட்க சாத்தியமான வழிகளில் எந்தவழியையாவது பின்பற்ற தயாராக வேண்டாமா.

    அல்லது முன்னய அதேயளவான நிமிர்ந்த நெஞ்சுடன்.. செத்தாலும் மானத்தோடு சாக வேண்டுமெனவும்… தொடரப்போகிறோமா..?

  32. Nivedha on May 28th, 2009 at 11:55 pm

    அன்பின் சயந்தன்,

    இத்தனை மாதங்களாக எல்லாவற்றையும் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்து நானும் கிட்டத்தட்ட உங்களின் மனநிலைக்கு வந்துவிட்டிருந்தேன். அங்கே சனத்தின்ட பாட்டை யோசிக்காமல் இந்த புலம்பெயர் தமிழினத் தலைமைகள் மேடைகளெங்கும் வீரங்கதைப்பதும், சபதமிடுவதும் எதையும் விட வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறது.. இன்னமும் கொடிபிடிக்காதவர்களைக் களையெடுப்பது பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. எல்லா நம்பிக்கைகளும் தகர்ந்து கொண்டிருக்கின்றன.. எனக்குக் எதுவும் சொல்லத் தோன்றுதில்லை.. களத்திலில்லாதவரை சொகுசாக மூன்றுவேளை சாப்பிட்டு குடித்துக்கொண்டு எல்லாத்தையும் பேசிக்கொண்டிருப்பது இலகுதான்.. அகிம்சை, அறம் பற்றிப் பிடுங்குவதுகூட.. எந்தக் காலத்திலும் நாங்களிந்த குற்றவுணர்விலிருந்து விடுபட முடியாதென்ற உண்மை மட்டும் உறைத்துக் கொண்டேயிருக்கிறது ஒவ்வொரு கணமும்..

  33. கொண்டோடி on May 29th, 2009 at 3:56 am

    உங்கள் தனிப்பட்டட கருத்துக் குறித்துச் சொல்ல ஏதுமில்லை. ஆனால் வன்னியில் வாழ்ந்த உங்கள் மச்சாளின் கருத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன்.

    ஆனால் சிலரின் எழுத்துக்கள் பொறுத்த கட்டத்தில் எவ்வளவு ஆபத்தானவையாக இருக்குமென முன்பு நான் பயந்துகொண்டிருந்தேன். அந்த சிலரில் தமிழ்சசி வந்தார், இப்போது நீர்.

    உமது இடுகை மாலன், டோண்டு கூட்டத்தால் மேற்கோளிடப்படும்போது நான் பேசுகிறேன்.

  34. மானங்கெட்ட தமிழன் on May 29th, 2009 at 6:03 am

    //உங்கட தலைவர் ஆறுமாசத்துக்கு முதலே சரணடையிற முடிவை எடுத்திருந்தால் எவ்வளவு சனம் தப்பியிருக்கும்..//

    உண்மையிலும் உண்மை.

  35. தோழர் on May 29th, 2009 at 6:29 am

    இனியென்ன..? எல்லா புரட்சியாளரும் ஒன்றாயிட்டீங்க! ஒரே குஜால்தான். ஓடிப்போய் சிவத்தக் கலரில ஜட்டியொன்று வாங்கி போடுங்க.. புரட்சி ஓங்கட்டும்.

  36. லோஷன் on May 29th, 2009 at 6:57 am

    ஒரு நீண்ட பெருமூச்சு தான் வந்தது.. அனைத்தையும் வாசித்து முடித்த பிறகு..
    என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
    முகாம்களில் அவதியுறும் மக்களை நினைக்கையில் தான் அழுகை வருகிறது.. முற்றிலும் ஏமாற்றப்பட்டு,இழந்தவர்கள் அவர்கள் தான்..

    சயந்தன், உங்கள் பல கருத்துக்கள், மனவோட்டங்களோடு ஒத்துப் போகிறேன்..
    தீர்வு என்ற பக்கம் பற்றி என்னால் யோசிக்க முடியவில்லை.. இன்னமும் குழம்பி, நொந்து போயிருக்கிறேன்.

  37. கந்தசாமி on May 29th, 2009 at 7:36 am

    கருணாநிதி க்கோ காங்கிரஸ் ஓட்டு போட்ட எந்த ஜென்மமும் , தயவு செய்து ஈழ தமிழருக்காக வருத்த பட வேண்டாம்.

  38. யெஸ்.பாலபாரதி on May 29th, 2009 at 8:22 am

    :( ((

  39. வாசுகி on May 29th, 2009 at 8:28 am

    முள்ளுக்கம்பிக்குள் வாழும் மக்களின் எதிர்கால வாழ்க்கைக்காக புலம்பெயர்ந்தவர்கள் போராட வேண்டும். உறவுகளை இழந்த அந்த மக்களின் அழுகைக்குரல் கேட்க முடியவில்லை.
    bbc யில் தமது உறவினர்களை தேடித்தரச்சொல்லி அழுதார்கள்.
    சாப்பாடு பிரச்சினை என்று சொன்னார்கள்.
    கொழும்பில் உணவுப்பொருட்களை மக்களிடம் சேகரித்து சேவாலங்கா மூலம் அனுப்புகிறார்கள்.
    ஆனால் அது போதுமானதாக இல்லை.
    ஒரு சிலரே அர்ப்பணிப்போடு செயற்படுகிறார்கள்.
    பலர் அதற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல இருக்கிறார்கள்.

    போராட்டத்தில் இணைந்த எத்தனையோ இளைஞர்கள், தமிழருக்கு ஒரு நாடு வேண்டும்
    என்று நினைத்ததை தவிர வேறு பாவம் செய்யவில்லை. (இவர்கள் பயங்கரவாதியாம்,
    அவர்களை கூறுபோட்டு காசு பார்க்கும் அவர்கள் ஜனநாயகவதியாம்)பாடசாலை நாட்களில் எத்தனை
    திறமையான மாணவர்கள் இணைந்தார்கள். அவர்களுக்கு ஒரு எதிர்காலம் கிடைக்கும் என்றால்
    எவருடைய காலில் விழுவதும் பிழை இல்லை என்பதே என் கருத்தும்.
    உங்களது பதிவை வாசித்து விட்டு சில புரட்சியாளர்கள் உங்களையும் தங்களுடன்
    இணைக்க முயற்சிக்கிறார்கள் போல ………

    தயவு செய்து இந்தியாவுடன் சேர்ந்து, தீர்வுத்திட்டம் கேட்போம் என்று யாராவது
    கதைத்தால், எங்களுக்கு வடக்கின் வசந்தமும் மகிந்த சிந்தனையுமே போதும் என்பதை மட்டும்
    சொல்லிவிடுங்கள்.

  40. kana Praba on May 29th, 2009 at 10:02 am

    //உமது இடுகை மாலன், டோண்டு கூட்டத்தால் மேற்கோளிடப்படும்போது நான் பேசுகிறேன்.

    Posted by கொண்டோடி | May 29, 2009, 3:56 am //

    இதுதான் என் கவலையும்,
    ஏற்கனவே ‍‍உங்கள் பார்வையை, சொல்லவந்ததை ஆளாளுக்கு திரித்தும் தமகேற்கவும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டினம். கரு நாகத்திடம் அடைக்கலம் தேடுவதும் பானையில் இருந்து அடுப்புக்குள்ளை விழுந்த கதையாயிடும், பெயரிலி சொன்னது போல இது சிறீலங்கா அரசாங்கத்தின் மூர்க்கத்திலும் விளைந்ததை மறந்துவிடக்கூடாது.

  41. சயந்தன் on May 29th, 2009 at 10:09 am

    கானா,கொண்டோடி
    அந்த ஆபத்தை நான் உணர்ந்தே இருக்கிறேன்.
    முன்னொருதடவை ஈழநாதன் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.
    நான் சிங்கள பயங்கரவாதம் குறித்து பேசினேன்.
    அவர்கள் புலிப்பயங்கரவாதம் குறித்து பேசினார்கள்.
    நான் இந்தியப் பயங்கரவாதம் குறித்து பேசினேன்.
    அவர்கள் புலிப்பயங்கரவாதம் குறித்து பேசினார்கள்.
    நான் உலனப் பயங்கரவாதம் குறித்து பேசினேன்.
    அவர்கள் புலிப்பயங்கரவாதம் குறித்து பேசினார்கள்.
    நான் துணைக்குழு பயங்கரவாதம் குறித்து பேசினேன்.
    அவர்கள் புலிப்பயங்கரவாதம் குறித்து பேசினார்கள்.
    நான் புலிப்பயங்கரவாதம் குறித்து பேசினேன்.
    அவர்கள் எனது வார்த்தைகளை கடன்வாங்கிக் கொண்டார்கள்!

  42. வாசுகி on May 29th, 2009 at 11:35 am

    ஈழநாதன் கவிதை நன்றாக உள்ளது.
    கானா பிரபா சொல்வது சரி தான்,
    நானும் சில பதிவுகளில் கண்டேன், உங்களது பதிவை தமக்கு சாதகமானதாக சிலர்
    பாவித்திருக்கிறார்கள்.

  43. மு. மயூரன் on May 29th, 2009 at 5:08 pm

    பதிவைத் தமக்குச்சாதகமாக ஆட்கள் எப்படி பயன்படுத்தினார்கள் என்று அறிய ஆவலாயிருக்கிறது.

    முன்னர் எனது வலைப்பதிவுக்கு அளிப்புரிமை வழங்கியபோது பயந்தேன். நான் பிரபாகரன் என்று எழுதிய பதிவை வேற ஆட்கள் தொக்கைப் பிரபாகரன் என்று மாற்றி பிரசுரித்து விட்டால் என்ன செய்வதென்று ;) பிறகு கோபி வந்து விளங்கப்படுத்தின பிறகுதான், அப்பிடி மாற்றி பிரசுரித்தால் அந்தக்கட்டுரை எனதல்ல என்ற விசயம் புரிந்தது.

    உங்கள் பதிவை முழுமையாக யாரும் பிரசுரித்தால் அதனால் என்ன பிரச்சினை வரப்போகுது?
    நடுவில் நாலு வரியை எடுத்து சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், உங்கள் எந்தப்பதிவினுடையதும் நடு நாலு வரிகள் யாருக்காவது சாதகமாக இருக்கக்கூடும்.

    இங்கே பின்னூட்டமிட்ட இரயாகரனும் பெயரிலியும் ஒரு முக்கியமான கருத்தை ஒருசேரச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது உங்கள் பதிவு பென்டுலத்தின் ஒரு அந்த அரசியலில் இருந்து மறு அந்தத்துக்கு தாவிவிடும் அபாயம் பற்றிய பிரச்சினை.

    பதிவும் அதன் கருத்துக்களும் எழுதப்பட்டதன் நோக்கமும் தம்மளவில் நேர்மையான அரசியலைக் கொண்டிருக்கும் பட்சத்தில் எதைப்பற்றியும் வருந்த வேண்டியதில்லை.

    அவர் என்ன நினைப்பார், இவர் இப்படி எடுத்துக்கொள்வார், முன்வீட்டு மாமி என்ன நினைப்பா, பக்கத்து வீட்டுக்காரன் அப்பிடிக் கதைப்பான் எண்டெல்லாம் சொல்லிக்கொண்டு உண்மைகளை பேசத் தயங்கியும் மறுத்தும் வரச்சொல்லிச்சொல்லும் கருத்துக்களின் பின்னணி உளவியலையும் அரசியலையும் சயந்தன் நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்.

    அந்த அரசியல் கொண்டுவந்து சேர்த்திருக்கும் இடத்தையும் நாங்கள் அனைவரும் நன்றாக அறிவோம்.

    சிவப்பு ஜட்டிப் பின்னூட்டம் அப்பட்டமாகவே பின்னூட்டமிட்டவரின் அலங்கோலங்களை சொல்லிச்சிரிக்கிறது. பின்னூட்டமிட்டவரின் அப்பாவித்தனமான விகார மனநிலை ஆர்வம் தருகிறது.

  44. மு. மயூரன் on May 29th, 2009 at 5:15 pm

    நான் இந்தியப் பயங்கரவாதம் குறித்து பேசினேன்.
    அவர்கள் இந்தியாவிடம் ஆயுதம் வாங்கிக்கொண்டு சிங்களப்பயங்கரவாதம் பற்றி பேசினார்கள்.
    நான் உலகப் பயங்கரவாதம் குறித்து பேசினேன்.
    அவர்கள் இணையப்புரட்சி என்று ஏளனம் செய்துகொண்டு சிங்களப்பயங்கரவாதம் பற்றி பேசினார்கள்.
    நான் அமெரிக்கப் பயங்கரவாதம் குறித்து பேசினேன்.
    அவர்கள் அமெரிக்க தெய்வத்தை வணங்கிக்கொண்டு சிங்களப்பயங்கரவாதம் பற்றி பேசினார்கள்.
    நான் புலிப்பயங்கரவாதம் குறித்து பேசினேன்.
    என்னில் கொஞ்சப்பேரைப் போட்டுத்தள்ளிவிட்டு சிங்களப்பயங்கரவாதம் பற்றி பேசினார்கள்.
    நான் சிங்களப்பயங்கரவாதம் பற்றி பேசினேன்
    அதனை தங்கள் பெயரில் பிரசுரித்துக்கொண்டார்கள்

    ;-)

  45. மு. மயூரன் on May 29th, 2009 at 5:26 pm

    //ஓர் இயக்கம் ஒழிந்து முடிந்தபின்னால், பழியெல்லாவற்றையும் அதிலே தூக்கிப் போட்டுவிடும் கருணாகரவேலை உங்களுக்கும் தேவையா? //

    -பெயரிலி

    //இன்னுமொரு சராணாலயமாக கருணாகரப் புல்லுரிவிகளை அழைப்பதும் //

    -சோமி

    இருவரும் எழுத்துப்பிழை விட்டீர்களா, அல்லது சோமி மட்டும் எழுத்துப்பிழை விட்டுள்ளரா? அல்லது சோமியும் பெயரிலியும் இப்பெயரால் குறிக்கப்படும் நபரது தற்போதைய கருத்துக்கள் மீதான தமது கோபத்தை வெளிப்படுத்துகிறார்களா?

  46. பாரதி on May 29th, 2009 at 5:53 pm

    வணக்கம் சயந்தன்,
    விரக்தியின் விளிம்பில் எழுதப்பட்ட கட்டுரை. உணர்வுகளை கொட்டியிருக்கிறீர்கள்.
    மனதை நோகடிக்கச் செய்யும் பதிவிற்கான படம். உங்கள் கருத்துக்களுடன்சில இடங்களில் முரண்படுகிறேன். அதற்காக என் கருத்தை உங்கள் மீது திணிக்கவில்லை…

    //ஆனால் இன்றைய புலிகளின்தோல்வியும் தலைவரது இழப்பும் (இந்த இடத்தில் நீங்கள் என்னைத் துரோகியெனலாம்) என்னை வலிக்கச்செய்தளவு வவுனியாக் காடொன்றின் கட்டாந்தரையில் கூடாரம் அடித்து தினம்தினம் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் என்வயதொத்த ஒரு இளைஞனுக்கு இருக்கப்போவதில்லை. யாருக்குத்தெரியும்…? நிம்மதிப் பெருமூச்சொன்று தோன்றியிருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை..//

    உண்மைதான்…ஆனாலும் அந்த நிம்மதிப்பெருமூச்சு அவர்கள் வாழ்க்கை “முட்கம்பிவேலிக்குள்ளாகவே” தொடர்ந்தால் அது ஏக்கப்பெருமூச்சாக மாறாதென்பதுக்கும், வயிற்றுப்பசி அடங்கிய பின் “உரிமைப்பசி” எடுக்காதென்பதற்கும் என்ன நிச்சயம்.
    இதற்கெல்லாம் என்ன முன்னெடுப்புகள் எங்கள் தரப்பில் இருந்து செய்யலாம் என்பது எனக்குத் தெரியவில்லை.

    //”வவுனியாவின் காடுகளின் திசைநோக்கி / சாவகச்சேரி முகாம்கள் நோக்கி கையெடுத்துக் கும்பிடுகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். முகத்தில் காறி உமிழுங்கள். எங்கடை பெடியள்.. மற்றும் எங்கட சனங்கள் என்ற ஊடாட்டத்தில் எங்கட சனங்களுக்காக எத்தனையோ இரவுகள் உருகியபோதும் நாசமறுப்பார் கொல்லுறாங்கள் என நாசமறுப்பாரில் எல்லாத்தரப்பையிட்டும் வெம்மியபோதும் நான் இறுதிவரை எங்கடை பெடியங்களுக்காகவே வெளியே பேசினேன் என்பதையிட்டு என்னைக் கொன்று போடுங்கள்.”//

    நான் கூட பேசினேன்..அவர்கள் தவறு செய்தார்கள் என்பதையும் ஒத்துக்கொள்கிறேன், ஆனாலும் அவர்களுக்காகவே பேசினேன். காரணம் இன்றைய யாழ்,கிழக்கு நிலைமைகளை முற்கூட்டி எண்ணியே…
    உ+ம்:-
    http://www.kalachuvadu.com/issue-113/page44.asp

    உண்மையில் எனது கருத்துப்படி எந்த ஒரு விடுதலைப்புலி போராளிகளும் தற்போதைய நிலையில் அறிக்கை விடப்போவதில்லை..அவ்வாறான தகவல்கள் சிங்கள அரசாலேயே விடப்படுகின்றன. காரணம் எஞ்சியிருப்பவர்களையும் வேட்டையாடவே.
    இதையெல்லாம் எண்ணாது வெறும் உணர்ச்சியூட்டலுக்காக தமிழ்மக்களிடையே பேரினவாத அரசுக்கு தெரிந்தோ/தெரியாமலோ பரப்புரை செய்யும் தமிழ் ஊடகங்களை நினைத்தால் ஆத்திரம் தான் வருகிறது.

    நாம் இந்த நேரத்தில் வெறுமனே “தலைவர்” இருக்கிறாரா இல்லையா என பட்டிமன்றம் நடாத்துவதை விட்டு…
    முட்கம்பிகளின் வழியே எதிர்காலத்தை தேடும் அந்த மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பதை செயலில் காட்ட வேண்டும்.

  47. சயந்தன் on May 29th, 2009 at 8:18 pm

    பதிவைத் தமக்குச்சாதகமாக ஆட்கள் எப்படி பயன்படுத்தினார்கள் என்று அறிய ஆவலாயிருக்கிறது.//

    தமது கருத்துக்குச் சாதகமாக பயன்படுத்துவதற்கும் தமக்குச் சாதகமாக பயன்படுத்துவதற்கும் .. டோன்டு குறிப்பாக மாலன் போன்றவர்களை முன்வைத்து வித்தியாசம் இருக்குமென்றே கருதுகிறேன்.

  48. Ram on May 29th, 2009 at 9:48 pm

    I want to receive the followup comments via email,
    so please allow this

    Completely agreed with you sayanthan..
    But if I tell this, I will become a traitor,
    so I’m used to be silent at all
    Sometimes I feel why many diaspora here are so dump as not to realize the reality :(

  49. Chandra on May 29th, 2009 at 9:51 pm

    ஒருவர் இல்லை என்றான பிறகு……அவர் சார்ந்த விமர்சனங்களை வெகு இலகுவாகப் பேசலாம்…!!
    தமிழ் இனத்திற்கு ஒரு வரலாற்றுச் சாபக்கேடு உண்டு…~எட்டப்பன்” இல்லாத சரித்திரம் இல்லை! இது தான் எல்லாவற்றிற்குமான அடிப்படை முடிவுகளுக்கு அத்திவாரமாகிறது!!

  50. Ram on May 29th, 2009 at 10:52 pm

    It is not about ‘Ettappan’s, instead we create them to compromise our defeats and weaknesses. We don’t have unity then we accuse others.
    I don’t worry if you call me anti-tamil, I don’t worry
    I know who I am I and what I do!!!

    Here sayanthan anna was afraid you gonna brand him “Thuroki”, well done chandra, you didn’t use that word!!

    Sayanthan anna, don’t bother about some dump a**es. I know about you.. keep posting good articles

  51. சயந்தன் on May 29th, 2009 at 11:26 pm

    ஒரே குஜால்தான். ஓடிப்போய் சிவத்தக் கலரில ஜட்டியொன்று வாங்கி போடுங்க.. புரட்சி ஓங்கட்டும்.//
    எதுவோ.. தற்போதைய நிலையில் என்னிடம் வெள்ளை ஜட்டியைத்தவிர வேறொன்றும் இல்லை என்பதுதான் என்னிடமிருக்கிற பதில்

  52. Anonymous on May 29th, 2009 at 11:48 pm

    மெய்யாகவே இந்த மக்கள் மீது அக்கறையிருக்குமென்றால், எதையேனும் எமக்குச் சரியென்று படுகின்றவிதத்திலே இன்றைக்குச் செய்தே ஆகவேண்டும்//

    என்னகதையிது? அந்தமக்கள் மீது அக்கறையிருக்குமென்றால்,எப்படி எமக்குச் சரியெனப்படுவதை செய்யமுடியும்? அந்தசனத்திற்கு சரியெனப்படுவதைத்தானே செய்யவேண்டும். ? எப்படி எமது முடிவுகளை அவர்களிடத்தில் திணிக்கமுடியும்? ஒருவேளை மட்டகளப்பு மக்கள் பிள்ளையானைத் தெரிவு செய்தது போல இவர்களும் டக்ளசையோ கடிதம் புகழ் ஆனந்த சங்கரியையோ தெரிவு செய்துவிட்டால் அவர்களையும் துரோகியென்பீர்களோ?

  53. Anonymous on May 29th, 2009 at 11:58 pm

    அவர்களையும் துரோகியென்பீர்களோ?//
    இல்லை. அந்தளவு முட்டாள்களா நாம்..?
    ஆனால் டக்கியோ சங்கரியோ கள்ளவோட்டுபோட்டுவிட்டார்கள் என்று சொல்லுவோம். அதுஎங்கட உரிமை

  54. Bala on May 30th, 2009 at 5:39 am

    சயந்தன்,
    உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பல அலசல்களையும் அவலங்களைக் கேள்வியுற்றும் இதை எழுதி இருக்கிறீர்கள். 2007 வரை நான் இலங்கையில் இருந்தேன்-வன்னியில் அல்ல. ஆனால் வன்னியில் இருந்து நேரடியாக எனது வீட்டில் அடிக்கடி வந்து தங்குபவர்கள் -உறவினர் இருந்தனர். அவர்களில் பலருக்கும் இதே பிச்சை வேண்டாம்; நாயைப் பிடி மனோபாவம் அப்போதே இருந்தது. இப்போ யாழ் செல்லும் படையணியால் வரக்கூடிய பிரச்சனைகளை அப்போதே கொழும்பில் எதிர் கொண்டோர் பலர்; பெரும்பாலும் வாடகை வீட்டில் இருந்த அனைவரும்; நானும் உறவினர் வருவதென்றாலே பயந்தேன்.

    ஆனால் புலத்திற்கு வந்து பார்த்தால் இங்குள்ளவர்கள் மாதாந்தமோ வாராந்தமோ கொடுக்கும் பணமும் மற்றும் பலவும் என்னை ஆச்சரியப் படுத்தியது.

    ஆனால் காரணத்தை ஆராய்ந்தால், அங்கு வாழ்வே பிரச்சனை எனும் போது வேறு சிந்தனை இல்லை. ஆனால் இங்கு அன்றாட வாழ்வுக்குப் பிரச்சனை இல்லை எனும் போது எமது வேர்கள், உரிமைகள் என்றெல்லாம் சிந்தித்து எம்மால் முடிந்த வழியாகப் பணத்தையும் பிரச்சாரங்களையும் எடுத்தது புரிந்தது.

    புலம் பெயர்ந்தோர் குற்ற உணர்ச்சியில் தவிக்கத் தேவை இல்லை. ஆனால் நீங்கள் கூறியிருப்பது போல கருணாகரர்களிடம் கெஞ்சியாவது அங்கு வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய வேண்டும். ஆனால் யார் பூனைக்கு மணி கட்டுவது???

  55. மயூரேசன் on May 30th, 2009 at 7:04 am

    சயந்தன் நான் இப்போது உங்கள் நிலையில்தான் இருக்கிறேன். இனிமேலும் யுத்தம் செய்து மக்களையும், நிலங்களையும் எல்லாத்துக்கும் மேல் உயிர்களையும் இழப்பதில் அர்த்தம் இல்லை.

    எனது ஆங்கிலப் பதிவு
    http://mayuonline.com/eblog/letter-by-a-lankan-tamil-for-tamils/

  56. arul on May 30th, 2009 at 11:14 am

    ஈழத்தில் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளினால் கலக்கத்திலும் ,அங்கு கஷ்டப்படும் மக்களின் அவலத்தைக்கண்டு வேதனையிலும் பலர் தவித்துக் கொண்டுள்ளார்கள்.அதில் பெரும்பாலான ஈழத்தமிழர்களும் ,கணிசமான தமிழகத் தமிழர்களும் அடக்கம்.
    இந்த சமயத்தில் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க பலர் கிளம்பியிருப்பதையும் என்னால் அவதானிக்க முடிகிறது.
    பூனையில்லாத வீட்டில் எலிகளுக்கு கொண்டாட்டம் என்ற பழமொழியும் தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன் என்ற பழமொழியும் நினைவுக்கு வருகிறது.
    கருத்துக்கள் எதிர்க்கருத்துக்கள் பின்னோட்டங்கள் என்று வருபவையில் சில நேர்மையாக இருக்கலாம், ,ஆனால் பல கருத்துக்கள் ஒரு hidden agenda வை நோக்கமாகக் கொண்டே வருகின்றன என்பதைத்தான் நான் உணர்கிறேன்

    இவர்களின் நோக்கம்,கிட்டத்தட்ட சிங்கள அரசின் அதே நோக்கம்தான்.

    கிட்டத்தட்ட தமிழ் மக்கள் கூட்டத்தின் மீது ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியையே சிங்கள அரசு கடந்த ஆறு மாதங்களாகச் செய்திருக்கிறது.
    உணவு கொடுக்காமல் குண்டு மழை பொழிந்து ,ஷெல் அடித்து ,கிட்டே வந்து துப்பாக்கியால் சுட்டு காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதி மறுத்து.(இந்த இடத்தில் நான் சொல்வது ஐநா மற்றும் ரெட் கிராஸ் அமைப்புகள் மூலம் இவை போவதைத்தடுத்து வைத்தது பற்றி ,ஏதோ இலங்கை அரசு தனது காசை செலவழித்து தமிழருக்கு ஒன்றும் செய்வதில்லை.) இப்படியான கொடுமைகளை அனுபவித்தவர்களை தடுப்பு முகாம்களில் போட்டு குடும்பங்களைப் பிரித்து இளையவர்களை களை பிடிங்கி extreme human deprivation என்ற அதீத நிலையில் தள்ளும் பொது மனிதர்கள் எப்படி நடப்பார்கள் என்பதை இந்தப் பரிசோனையில் மூலம் சிங்கள அரசு மற்றைய ஆதிக்க சக்திகளுக்கு எடுத்துக்காட்டுகிறது.
    தமது மேலாதிக்கத்தை ஏற்க மறுத்த ஒரு இனத்தையோ அல்லது குளுமத்தையோ எப்படித் தோற்கடிக்கலாம் ,அவர்களது விடுதலை உணர்வை எப்படி மழுங்கடிக்கலாம் என்பதையும் உயிர் வாழ்ந்தாலே போதும் ,உண்ண உணவு கிடைத்தாலே போதும் என்றும் அவர்களைக் கெஞ்ச வைக்கும் மனோ நிலைக்கு எப்படித் தள்ளுவது என்பதிலும் அவர்கள் பரிசோதனை செய்து வெற்றி கொண்டு விட்டார்கள் .

    இனிமேல் மற்றைய நாடுகளும் இதைப் பின்பற்றி உரிமை கேட்டுப் போராடும் இனங்களை ,சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களை ,தொழிலாள வர்க்கங்களை அடக்கலாம்
    அதுதான் இந்த நாடுகள் எல்லாம் சேர்ந்து இத்தனை கொலைகளைச் செய்த சிங்கள அரசை ஐநா மனித உரிமை என்ற கேவலாமான ஒரு சபையில் பாராட்டுத் தெரிவித்து முதுகில் தட்டிக் கொடுத்திருக்கிறார்கள் போல உள்ளது.

    என்ன ஆச்சரியம் என்றால் ,ஒருவன் ஒரு பெண்ணை மானபங்கப் படுத்தி கொடூரமாக கற்பழித்த போது, அப்படி கற்பழித்தவனை கண்டனம் தெரிவித்து சாடாமல் ,கற்பழிக்கப் பட்ட பெண்ணை ,நீ அழகாக உடுத்திக் கொண்டு வந்ததால் உன்மீது மையம் கொண்டு அவன் கற்பழித்து விட்டான் ,நீ அப்படி உடுத்திக் கொண்டிருக்க கூடாது என்ற மாதிரி சிலருடைய கருத்துக்கள் இருக்கின்றன

    சந்தடி சாக்கில் இங்கு வந்து புலம்பெயர் தமிழர்களையும் மற்றவர்களையும் முட்டாள்கள் மாதிரி விமர்சனம் செய்கிறார்கள் .

    அங்கு நடப்பவை பற்றி ஒன்றும் பேசாமல் அலட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று இவர்கள் எதிர் பார்க்கிறார்களா?

    Ram ,
    you think all the tamil people are dumb.
    probably highly intelligent people like you should give us an idea as to how to behave?
    do you think we tamils should keep our mouth shut?
    do you have any constructive ideas to find a solution to protect the people in vanni camps?
    if you have any ideas,can you tell us about it ,so that lesser mortals and foolish people like me can follow your foot steps.
    arul

  57. Bharathiraja on May 30th, 2009 at 2:13 pm

    ஒரு இந்திய அடிமையாக எனக்கு வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது… உதவ மனமிருந்தும் முடியாதிருக்கிறோம்… கேடுகெட்ட எங்கள் அரசியல் தலைவர்களால் நாங்கள் மானமிழந்து வாழ்கிறோம்.. அண்ணன் பிரபா போன்று எங்களுக்கும் ஒரு விடிவெள்ளி கிடைத்திட வேண்டும்…..

  58. பார்த்திபன் on May 30th, 2009 at 5:30 pm

    சயந்தன்,
    தாயகத்தில் மரண ஓலங்களின் நடுவில் மாட்டுப்பட்ட அந்த மக்களின் மனநிலை, இந்த “புலன்” பெயர்ந்த புண்ணாக்குகளுக்கு புரியப் போவதில்லை. 30 வருடங்களுக்கு மேலாக தனிநபர் துதி பாடியே வாழ்ந்த இவர்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் அதிலிருந்து விடுபட முடியாது. படிப்படியாகத் தான் தெளிவு பெறுவார்கள். அதுவரை நாம் பொறுத்திருக்காது அந்த மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும். அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கவும், மனிதராக வாழவும் நாம் வழி சமைக்க வேண்டும்.

  59. அஜீவன் on May 30th, 2009 at 8:18 pm

    புலத்தில் இருப்பவர்கள் அது யாராக இருந்தாலும் அறிக்கை விடுவதை நிறுத்துங்கள். அது இவர்களுக்கு கெளரவமாகத் தெரியலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக இலங்கை வாழ் அந்த தமிழ்ச் சமூகத்துக்கும் இந்த அறிக்கைகள் சாவு மணிகள்.

    அந்த மக்கள் மேல் நேசம் இருந்தால் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவமாவது செய்யாதீர்கள். எங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம். அவர்களை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

    அறிக்கை விடும், போராடும் ஆசையிருந்தால் அங்கு போய் இறங்கி கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து செய்யுங்கள். அதுதான்உங்கள் வீரமாக இருக்கும்.

  60. வசம்பு on May 31st, 2009 at 5:13 am

    சயந்தனின் பல கருத்துகளோடு நான் முரன்பட்டிருக்கின்றேன். ஆனால் இன்றைய சயந்தனின் மனநிலை என்னையும் ஆச்சரியப்பட வைத்ததில் வியப்பில்லை. உண்மைகளை உரத்துக் கூற முடியாவிட்டாலும் தன் ஆதங்கங்களை எழுத்தாய் வடித்து புலத்தமிழர்ககளின் தவறைச் சுட்டிக் காட்டியிருக்கின்றார். பல வருடங்களாக பல இணைணயங்களிலும் கருத்துகள் பகிர்ந்த நான் சில மாதங்களாக நடப்பவை கண்டு வெறுத்துப் போய் எங்கும் கருத்துப் பகிராமல் ஒதுங்கியிருந்தேன். இன்று சயந்தனின் பதிவு என்னை மீண்டும் எழுத தூண்டியுள்ளது. நல்லது நடக்க வேண்டுமென்பதே பலரின் விருப்பமும். அது தானாக நடைபெறாது, அது நடைபெற நாமும் உந்து சக்தியாக இருக்க வேண்டும்.

  61. Anonymous on May 31st, 2009 at 8:25 am
  62. அன்புடன் பாலா on May 31st, 2009 at 9:05 am

    மன்னியுங்கள், சயந்தன் :(

    //அவர்களில் எமக்காக அழுபவர்களின் கண்ணீரை நாமே துடைத்துவிட வேண்டியிருப்பதுதான் உண்மை நிலவரம். அதை விடுத்து ஆறுகோடி பேரை வைத்து எதையாவது செய்யமுடியும் என யோசிக்கத் தொடங்கினால் – அந்தக் கணமே அவ் நினைப்பைத் தூக்கியெறிந்துவிட்டு சிங்களவர்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள்.
    //
    இதில் அனைத்தையும் சொல்லி விட்டீர்கள் !

  63. praba on May 31st, 2009 at 12:28 pm

    சயந்தன்
    நான் நினைக்கிறன் மே 18க்கு முதல் நடந்த எதையுமே இனியும் கிண்டிக் கொண்டிருக்கத் தேவை இல்லை.தமிழீழம் பற்றி இனியும் தேவை இல்லாமல் கனவு காணுறதை விட்டுட்டு புதிய உரையாடல்களை தொடங்குவோம்.அதற்காக புலம் பெயர்ந்த மக்கள் அரசின் பிடிக்குள் சிக்கியுள்ள மக்களை விடுவிக்கும் போராட்டங்களை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். நடக்குமா?

    -பிரபா(நம்பிக்கைகளை ஏந்தியபடி)

  64. praba on May 31st, 2009 at 12:35 pm

    இத்தனை நாளும் புலிகளுக்காக போராடிய புலம் பெயர்ந்தவ்ர்கள் முகாமில் உள்ள மக்களுக்காகப் போராடவில்லையே. அது ஏன் சயந்தன்? உண்மையாக புலம் பெயர்ந்தவ்ர்கள் இனிமேல்தான் போராட வேண்டும்.

  65. தம்பி on June 1st, 2009 at 2:03 pm

    இப்போது இடம்பெயர்ந்த மக்களிடம் கேட்டால் அரிசியும் மாவும் இருக்கிறதுக்கு ஒரு யுன்எச்சஆர் ரென்ரும் தந்தால் போதும் என்றும் தான் சொல்வார்கள். அது மட்டும் போதும் என்று ஆறு மாதத்திற்கு பின்னும் அவர்கள் சொல்வார்களா?

    வெற்றி செய்தி தந்தால் தலைவர் தராவிட்டால் வேண்ட தகாதவர். உங்களுக்காக எல்லாம் ஒரு போராட்டம்? ஒரு தலைவர்?

  66. brown flore on June 1st, 2009 at 5:20 pm

    sayanthan, you have wriiten the truth In Jaffna people didnot ask anything, they want a normal life , me too have contacts in the displaced camps like you said people want to go back to their homes and get on with their life, and they donot understand the diaspora

  67. Tamil priyan on June 1st, 2009 at 8:48 pm

    Pongada Ettapa Naaikala unngala ponda tamil thuroka Naaikal irukum varaikum unmaja tamila nesikira tamilanuku Nimathi illa. Mokku Singalavan Kodukura adpa kasuku alayura naaikal neenkal ennga innatha alikurathuku singalvan thevai illa Unngala Ponda Pinam thinum naaikal pothum.

  68. துர்க்கா on June 1st, 2009 at 9:14 pm

    “மாற்றுக் கருத்தாளர்கள்
    மௌனிக்கின்ற பொழுதொன்றில் ..
    தோல்விப்பட்ட சொற்களால்
    பேச எழுகின்றேன்!

    தெரியும் – எந்தன்
    தோல்விப்பட்ட சொற்களுக்கு
    கேட்கவைக்கும் திறன் குறைவென்று
    எங்கும் ஒலிக்கும் முரசில்
    எடுபடப் போவதுமில்லை என்றும்
    என்ன செய்வது
    பேச இருக்கிறது – நீங்கள் மௌனிக்கும் பொழுதில் – உங்களுக்காய்
    ஏனெனில் எங்களுக்காய் பேசியவர்கள் நீங்கள்..!

    எரிந்தணைந்த தீயில்
    உங்களுக்கான பீடிக்கு நெருப்பெடுத்தீர்கள்
    அதுவே தீக்கு எதிரான தீப்பந்தம் என்றுரைத்தீர்கள்!
    தீயை விட அழகாயிருந்தது பீடித்தணல்

    ஏன் மௌனம் பேசுங்கள்
    எவருமில்லா மௌனம் சிரமமாயிருக்கிறது
    அதுவே அயலவனுக்கும் வசதியாய் இருக்கிறது
    எமக்கொரு குரலே இருக்கவில்லை என்றும்
    நாங்கள் பிறவி ஊமைகள் என்றும்
    குய்யிடுகிறார்கள் – நீங்களோ
    குனிந்து கொண்டே இருக்கிறீர்கள்

    உங்களுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை
    எனக்கொன்று தோன்றுகிறது
    அகிம்சையின் வெற்றியை விட
    கொலைகளினாலான தோல்வி வலிதென்று – அது தன்
    மாற்றுக் கருத்தாளர்களையும்
    மௌனிக்க வைத்திருக்கிறது!”

    – துர்க்கா

  69. கொண்டோடி on June 8th, 2009 at 4:14 am

    மயூரன்,

    நல்ல கவிதையொண்டு எழுதியிருக்கிறீர். இதை வாசிக்கேக்க முதலொருக்கா கொழுவியின்ர இடுகையொண்டில் நீர் எழுதின பின்னூட்டம் ஞாபகம் வருது. அதில பதிவு வலைத்தளத்தில வந்த ஆய்வாளர் திருநாவுக்கரசுவின்ர செவ்வியையும் பரிந்துரைத்திருந்தீர். அப்பவெல்லாம் இந்தியாவில ஆயுதம் வாங்கிறது அல்லது இந்தியாவின்ர உதவியை எதிர்பார்க்கிறது உமக்குக் கூசேல.

    வன்னியனின்ர ஈழப்பாடல்கள் வலைத்தளத்தில போய் ‘இதுதான்ரா கடைசி அடி’ எண்ட செல்லப்பாவின்ர பாட்டை ஆயத்தப்படுத்தி வைக்கச்சொல்லி துள்ளிக் குதிச்சீர். அப்பவெல்லாம், நீர் உம்மட அடையாளமாகப் போட்டிருந்த படத்திலயிருக்கிறதைப் போல போராட்டம் எண்டது தேத்தண்ணி குடிக்கிறதைப் போல இலகுவானதாக இருந்தது உமக்கு.

    கொழும்பில் இராணுவத் தளபதி மீதான தற்கொடைத் தாக்குதலை முன்வைத்து ‘அடியைப் போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்’ என்று அருள்வாக்கு மொழிந்தீர். இப்பவும் அந்த நிலைப்பாட்டில ஏதும் மாற்றமில்லைத்தானே?
    —————————————–
    ஒருவர் சொல்லும் கருத்தென்பது இன்றைய நிலையில் தாமே ஏற்படுத்திக்கொண்ட அல்லது மற்றவர்கள் தம்மேல் ஏற்படுத்திக்கொண்ட ஒரு விம்பத்தின் கருத்தாக ஒலிக்குமென்பது நடைமுறை. அது, அந்நபரின் பிரபலத்தன்மையைப் பொறுத்து மாறுபடும். நீர் வெளியிடும் கருத்துக்கள் சிலரால் இடதுசாரிகளின் கருத்தாகப் பார்க்கப்படுவதைச் சொல்லலாம்.

    அதேபோல்தான், தமிழ்த் தேசியத்தின், புலிகளின், தமிழீழத் தனியரசின், தலைவர் பிரபாகரனின் விசுவாசிகளாக – ஆதரவாளர்களாகக் காட்டிக் கொண்டவர்கள், கட்டமைத்துக்கொண்டர்களின் கருத்துக்கள் இந்நேரத்தில் ஏற்படுத்தும் தாக்கமும் இருக்கும்.

    தமிழ்சசி ‘போதுமடா ஈழப்போராட்டம்’ எழுதியபோது நடந்தது அதுதான். கிளிநொச்சி விடுபட்டபின்புகூட வடிவேலுத்தனச் சண்டித்தனத்துடன் இடுகையிட்டார் அவர். ஸ்டாலின் கிராட்டை கிளிநொச்சியிலிருந்து முரசுமோட்டைக்கோ விசுவமடுவுக்கோ மாற்றினார். புலிகளின் சிறப்புப் படையணிகள் இன்னும் எங்கோ பதுங்கியிருப்பதாகக் கதைவிட்டார். அற்புதன் அதில் வந்து பல்லைக் காட்டிவிட்டுப் போனார்.

    திடீரென்று ‘போதுமடா ஈழப்போராட்டம்’ என்று ஒரே போடாகப் போட்டார். அந்த நேரத்தில் புலிகளின் ஆதரவாளர்கள் பலர் அந்த மனநிலைக்கு வந்துவிட்டது மறுக்கமுடியாத உண்மையே. அது தவறான நிலைப்பாடுமன்று. ஆனால் தமிழ்சசி அதை எழுதியதால் வந்த வினை வேறு.

    இன்று சயந்தனும் அதையே செய்கிறார். ஆனால் இது தமிழ்சசியின் கட்டுரையைவிட மிக ஆபத்தானது. தமிழ்சசி தனது கருத்தென்று ஒன்றை வைத்தார். சயந்தன் தனதென்று ஒன்றைச் சொல்லியது மட்டுமன்றி வன்னிச் சனத்தின் கருத்தென்று ஒன்றைச் சொன்னார் பாருங்கள்.

    உண்மையில் சயந்தன் எழுதியதில் தொனிப்படும் கருத்துத்தான் வன்னிச் சனத்தின் கருத்தென்பதை என்னால் அடியோடு மறுக்க முடியும். ‘உங்கள் தலைவர்’ என்று சொன்னதால் அவர் அவர்களது தலைவரில்லை என்று அவர்கள் சொன்னதாகக் கற்பிதம் கொடுப்பது அபத்தம். சயந்தனை மேற்கோளிட்டு, வன்னிச் சனம் பிரபாகரனைத் தமது தலைவனாக ஏற்றுக்கொள்ளவில்லை என சாசனம் எழுத பல கும்பல்கள் தயாராகவே இருக்கின்றன. அதற்குள் பிரபாகரனின் சாவுக்கு அவர்கள் சிலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கலாம் என்ற கணிப்பு வேறு. அதையும் ‘வன்னிச்சனம் பிரபாகரன் செத்ததையிட்டு மகிழ்ச்சி’ என ஆய்வு வரும். இப்படி வரப்போகும் சாசனத்தை சயந்தனே தனது மச்சாளிடம் சொல்லி மீள உறுதிப்படுத்திக் கொள்ளட்டும் பார்ப்போம்.
    சயந்தன் வேண்டுமானால் ஒரு தொலைபேசி உரையாடலோடு 180 பாகையில் தனது நிலையைத் திருப்பலாம். ஆனால் அங்கிருக்கும் மக்களுக்கு முடிவதில்லை. விடுதலைப் புலிகள் சரணடைய முடிவெடுத்தபின்பு அவர்களோடு சரணடைந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இறுதியாய் வந்தார்கள். தாம் சாகாமல் தப்பிச் சரணடைந்ததையிட்டு வருத்தங்கொள்ளும் நிலையை பொதுமக்களுக்கு சிங்களத் தரப்புக் கொடுக்கத்தான் போகிறது.

    அவர்களைப் பேச விடுங்கள் என்பதே முக்கிய தொனிப்பொருளாய் இருக்கிறது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேச்சுக்கள் மட்டும், அதுவும் அவர்களின் சொற்களை வைத்துப் பிழையான கற்பிதத்தைக் கொடுக்கும் வகையில் வெளிவருகின்றன.

  70. கொண்டோடி on June 8th, 2009 at 4:41 am

    சிவப்பு ஜட்டி பற்றிப் பின்னூட்டமிட்டவர் என்ன கருத்திற் சொன்னாரோ தெரியாது.
    நானும் அப்பின்னூட்டத்தைக் கண்டிக்கிறேன், சிவப்பை நக்கலடித்ததற்காக.

    மற்றும்படி தொடர்புபட்டவர்களை விட மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என ஒருவர் நினைத்து தனது கருத்தைப் பகிரங்கப்படுத்தாமலிருப்பது குறித்துச் சொல்ல சிலவுள்ளன.

    “சயந்தனுக்கு இவ்வளவு நாளும் வன்னியில் நடந்தது தெரியவில்லை; குடும்பம் குடும்பமாகக் கொலை செய்யப்பட்டது தெரியாது; தலையிலேயே எறிகணை விழுந்து கொல்லப்பட்டவர்களைப் பற்றிக் கேள்விப்படவில்லை. மச்சாள் சொல்லித்தான் எல்லாம் தெரியவந்தது; மச்சாள் சொல்லும்வரை இவை பற்றி அவருக்குச் சொல்லாமலிருந்த நண்பர்கள் மேல்தான் பிழை”
    என்று பின்னூட்டமிட்டால் மற்றவர்கள் சயந்தன் குறித்து என்ன நினைப்பார்கள் என்ற காரணத்தால் அதைச் சொல்லாமலிருந்த என் மெளனம் சரியென்றே நினைக்கிறேன்.

    அல்லது “எல்லாம் தெரிந்தும் தனக்குத் தெரிந்த நாலுபேர் செத்த செய்தியை மச்சாள் மூலம் கேள்விப்பட்டதும் தனது நிலைப்பாட்டைத் தலைகீழாக மாற்றி ஒர் இடுகை எழுதியிருக்கிறீரே, இது தகுமா? ‘தனக்குத் தனக்கெண்டால் சுளகு படக்குப் படக்கெண்டுமாம்’….”
    என்று பின்னூட்டமிட்டால் மற்றவர்கள் சயந்தன் குறித்து என்ன நினைப்பார்கள் என்ற காரணத்தால் அதைச் சொல்லாமலிருந்த என் மெளனம் சரியென்றே நினைக்கிறேன்.

    “இவற்றையெல்லாம் சரிசெய்ய ‘நானும் மரணம் என் காலடிக்கு வரும்வரை பரணிபாடினேன்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? துக்ளக் சோ முதல் சத்தியராஜ் வரை எல்லோரையும் கிண்டலடித்துவிட்டு ஒருவசனத்தில் தம்மையும் சேர்த்துக் கிண்டலடித்துத் தப்பிக்கும் நுட்பமல்லவா இது?”
    என்று பின்னூட்டமிட்டால் மற்றவர்கள் சயந்தன் குறித்து என்ன நினைப்பார்கள் என்ற காரணத்தால் அதைச் சொல்லாமலிருந்த என் மெளனம் சரியென்றே நினைக்கிறேன்.

    “இடுகையெழுதுவதற்குப் பன்னிரண்டு மணிநேரம் முன்புகூட இரயா, சிறிரங்கன் போன்றோர் குடித்துவிட்டு எழுதுபவர்களாகவும் மனநோயாளிகளாகவும் தெரிந்த நிலையில் மச்சாளின் தொலைபேசி உரையாடல் அவர்களையெல்லாம் புனிதர்களாக மாற்றிய மாயமென்ன? பிரபாகரனை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்துவதையே முழுநேர நோக்கமாகக் கொண்டு இயங்குபவர்களாகவும் மரணத்தில் மகிழும் பாசிசவாதிகளாகவும் உமக்குத் தெரிந்த இவர்கள் இருவரும் எப்படி ஒரு நொடியில் பிரபாகரனுக்கான மரியாதையைச் செலுத்தும் மகான்களானார்கள்? பத்மநாதனைத் துரோகியாக்குவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் (இதுவும் தலைமைப் போட்டியோ என்னவோ?) இராயகரன் போன்றோரின் கபடத்தனம் குறித்த கவலைகூடவா மச்சாளின் தொலைபேசியோடு அடிபட்டுப் போனது?”
    என்று பின்னூட்டமிட்டால் மற்றவர்கள் சயந்தன் குறித்து என்ன நினைப்பார்கள் என்ற காரணத்தால் அதைச் சொல்லாமலிருந்த என் மெளனம் சரியென்றே நினைக்கிறேன்.

    மற்றப்பாதியை சந்தர்ப்பம் வரும்போது நேரிலேயே சொல்கிறேன்.

  71. சயந்தன் on June 8th, 2009 at 6:45 am

    கொண்டோடி
    மச்சாளுடன் மட்டுமே பேசவில்லை. எங்கள் போராட்டம் தர்மத்தின் சக்கரத்தில் பின்னப்பட்டது என்றெனக்கு மட்டுமல்ல எழுத்துக்கள் இலக்கியங்கள் ஊடாக உலகிற்கு சொன்னவர்களுடனும் பேசியிருக்கிறேன். அவர்கள் நாளை எழுதும்போதும் பேசும்போதும் – தமிழ்சசியும் நானும் ஏற்படுத்திய அதிர்வு காற்தூசிக்கும் வராது. எனது எழுத்துக்களுக்கெதிரான நியாயங்களை கற்பிப்பதிலும் அவர்களது குரல்களுக்கெதிரான நியாயங்களைக் கற்பதிலும் தார்மீகரீதியான வேறுபாடு இருக்கிறது.

    மற்றும்படி புலம்பெயர்ந்த மக்களின் மனநிலைகள் – அங்கிருக்கின்ற அங்கீகரிக்கப்பட்ட முகவர்களது செயற்பாடுகள் பிக்கல் பிடுங்கல்கள் முட்டல்கள் முறுகல்கள் என அனைத்திலும் எரிச்சல் கொண்டிருக்கிறேன். அது இன்னும் இன்னும் அதிகமாகி வருகிறது. இதெல்லாம் சரிதான். ஆனா அதையெல்லாம் பப்ளிக்காக பேசப்படாது என்பது எனக்குச் சரிப்பட்டு வரவில்லை. உயர்ந்து மூடிய மதில்கள் – அல்லது கிடுகுவேலிகளுக்கு நடுவில் யாருக்கும் தெரியாமல் குசுகுசுக்கும் சமூக மனநிலையில் இருந்து எந்தவித முயற்சியும் இன்றி இயல்பாக நான் வெளியேறுகிறேனோ என்னவோ தெரியவில்லை!

  72. மு. மயூரன் on June 8th, 2009 at 10:34 am

    //இப்பவும் அந்த நிலைப்பாட்டில ஏதும் மாற்றமில்லைத்தானே?//

    ஏராளமான மாற்றங்கள் உண்டு.

    “மாறாத” “சனாதன” நிலைப்பாடுகளை நான் வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அதற்கு நானொன்றும் செய்ய முடியாது. நீண்டகாலமாக மாற்றத்துக்குள்ளாகாத நிலைப்பாடுகள் ஒரு சில என்னிடம் இருக்கக்கூடும். வெந்தயம் விழுங்கினால் வயிற்றுக்குழப்பம் உடனடியாக தீரும் என்று நான் 13 வயதிலிருந்து நம்பி வருகிறேன். இன்று வரைக்கும் அந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை.

    அனுபவப்பட்டுக்கொண்டு வரும்போது, அறிந்துகொண்டு வரும்போது அதனூடாக முன்னைய தவறான நிலைப்பாடுகள் மாறி புதிய நிலைப்பாடுகளுக்கு நாம் வந்து சேர்வதில் எந்த தயக்கமும் இருக்க முடியாதல்லவா?

    //அதில பதிவு வலைத்தளத்தில வந்த ஆய்வாளர் திருநாவுக்கரசுவின்ர செவ்வியையும் பரிந்துரைத்திருந்தீர்//

    திருநாவுக்கரசின் ஆய்வுகளில் எனக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. ஈழப்போரினை தமிழ் சிங்களப்பிரச்சினையாக்காமல் பன்னாட்டு நிகழ்வாகப்பார்க்கும் அவரது பார்வை நம்பிக்கை ஊட்டியது. நீங்கள் சொல்வது சரியே.

    //இந்தியாவில ஆயுதம் வாங்கிறது அல்லது இந்தியாவின்ர உதவியை எதிர்பார்க்கிறது உமக்குக் கூசேல.//

    உபகண்ட மேலாதிக்கம் என்றொரு பதிவை நான் வலைப்பதிவிலிருந்த ஆரம்பகாலங்களில் தமிழ்மண நட்சத்திரமாயிருந்தபோது எழுதியிருந்தேன்.

    இந்தியா குறித்து நான் சொன்னதாக நீங்கள் சொல்லும் கருத்தினை நேரமிருந்தால் எனக்கொருமுறை தொடுப்பாய்த்தரவும். எவ்வாறான சூழலில் என்ன கருத்தைச் சொல்லியிருந்தேன் என அறிய ஆவல்.

    //அடியைப் போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்’ என்று அருள்வாக்கு மொழிந்தீர். //

    இது என்னுடைய கருத்துக்க்ள் பற்றிய முக்கியமானதொரு அவதானம். இந்தப்பதிவு குறித்து சில நாட்களுக்கு முன்னர் கூட நண்பர்களோடு பேசியிருந்தேன்.

    போரை நிறுத்தட்டாம் என்ற என்னுடைய அந்தப்பதிவினை சிறு குறிப்பொன்றோடு தமிழரங்கம் அப்போது பிரசுரிதது. நான் நினைக்கிறேன் அதுதான் தமிழரங்கள் எடுத்துப்போட்ட என் முதலாவது பதிவாக இருக்க வேண்டும்.

    நீங்கள் சுட்டிக்காட்டிய அந்தக்கருத்தைக் கண்டித்து குறிப்பொன்றைப்போட்டே தமிழரங்கம் அதனை வெளியிட்டது.

    அப்போது மக்கள் சார்பில் போரடடத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பான அறிவாழம் என்னிடம் இப்போதிருப்பதை விட குறைவாக இருந்தது. அனுபவங்களும் குறைவாகவே இருந்தது. ஆயுத எதிர்ப்பை ஆதரிக்கும் நிலைப்பாட்டில், ஆயுத எதிர்ப்பை ஒரேயடியாக நிராகரிக்கும் என் ஜீ ஓ க்களின் கருத்துக்கு எதிர்வினையாக அது எழுதப்பட்டது. ஆயுத எதிர்ப்பு எவ்வாறெல்லாம் மக்களையும் சார்ந்திருக்க வேண்டும் என்பது பற்றிய அறிவும் பிரக்ஞையும் அதற்குப்பின்னரான காலங்களிலேயே எனக்கு படிப்படியாக ஏற்பட்டது.

    மாறாத நிலைப்பாடெதனையும் வைத்திருக்க எனக்கு விருப்பமில்லை. நான் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டிருப்பேன். நேற்றுச்சொன்னதை மறுத்து இன்று கருத்துச்சொல்வேன். ஒரு போதும் என்னுடைய தவறான பழைய கருத்துக்களுக்கு வக்காலத்து வாங்க வெளிக்கிட மாட்டேன்.

    கருத்துக்களை மாற்றுவது சுயநலத்துக்காகவோ காசு வாங்கியோ அல்லாமல் காலத்தால் அறிந்துகொண்டவற்றைக்கொண்டு பழைய கருத்துக்கள் பிழையென கருதுவதாலாக இருக்கும்.

    உங்களுக்கு இன்னும் சில குறிப்புக்களை நான் தருகிறேன்.
    எனது GNU/Linux குறிப்பேட்டில் புலிகள் வான்தாக்குதல் நடத்தியதைப் புரந்தேத்தி பாட்டெல்லாம் போட்டு பறக்கத்தெரியாதவன் தமிழனா என்று பதிவு போட்டேன். இன்று அதை சாகசவாதம், படம் காட்டல் என்று சாடுகிறேன். மக்கள் போர்ப்பயிற்சி பெறும் படங்கள் போட்டு பாலஸ்தீன கவிதை எல்லாம் போட்டு ஒரு பதிவு போட்டேன் (அக்காலத்தில் நிலவிய blogger வழு ஒன்றால் அந்தப்பதிவும் காணாமற்போய்விட்டது) இன்று அந்த ஆயுதப்பயிற்சி சரியான அடிப்படையில் செய்யப்படவில்லை என்கிறேன். இன்னும் எத்தனையோ ஜெயவேவா போட்டிருக்கிறேன். கூடவே இடையில் மாவீரர் தினம் குறித்த ஒரு திரைக்கதையும் உபகண்ட மேலாதிக்கம் பற்றிய சில பதிவுகளும் கூட போட்டுள்ளேன்.

    நான் இப்போது சொல்லிக்கொண்டிருப்பவையும் பிழையென சிலவேளை நாளையோ சில மணி நேரம் கழித்தோ சொல்லத்துணிவேன். அதற்கு என்ன இப்போ கொண்டோடி?

  73. கொண்டோடி on June 9th, 2009 at 12:36 pm

    மயூரன்,

    இந்தியாவிடம் ஆயுதப்பட்டியலொன்றைக் கோரலாக எழுதிய இடுகையிலோ, புலிகள் 2006 இல் பயன்படுத்திய புதிய ரக கவச எதிர்ப்பு ஆயுதம் சிலநாட்களின் முன்னாற்றான் சீனாவினால் சந்தைக்கு விடப்பட்டதென்ற இடுகையிலோ நீர் இட்ட பின்னூட்டத்தையே நான் குறிப்பிட்டிருந்தேன்.

    நீர் சிலமணி நேரங்களிலேயே நிலைப்பாட்டை மாற்றுவது இருக்கட்டும். ஆனால் புலிகளையும், புலி ஆதரவாளர்களையும் மட்டும் உமது நிலைப்பாட்டு மாற்றத்துக்கேற்ப நக்கலடித்துக் கொண்டிருப்பது தொடர்பாகவே நான் நான் பேச முற்பட்டேன். இரண்டு வருடங்களின் முன்புவரை இந்தியாவிடம் ஆயுத உதவி பெறுவது சரியென இருந்த உமக்கு (நீர் உபகண்ட மேலாதிக்கக் கட்டுரை எழுதியதன்பின்பு), இருபத்தைந்து வருடங்களின்முன்னால் இந்தியாவிடம் ஆயுத உதவிபெற்றுப் போராட்டத்தை வளர்த்தவர்களை நக்கலடிக்க முடியுமென்று நீர் நினைக்கிறீரா?

    இவ்வளவுக்கும் புலிகள் இந்தியாவுக்கு விலைபோகவில்லை என்பதற்கான ஆதாரங்கள் வரலாறு நெடுகிலுமுண்டு.
    சயந்தன் எழுதிய அளவுக்குக்கூட சுயவிமர்சனமாக நீர் எழுதியதில்லை.
    புலிமேல் பந்தயம் கட்டி, பரிவட்டம் கட்டி ஆடிவிட்டு அது தோற்றபோது, அது அப்பிடிச் செய்திருக்கக்கூடாது, இப்பிடிச் செய்திருக்கக்கூடாது என்று ஆலாபனை பாடுவது தான் தற்போது நடக்கிறது. ஒற்றை வரியிலே ‘ஓம், அப்ப அப்படிச் சொன்னேன், இப்ப இப்பிடிச் சொல்லுறேன்’ என்று வாக்குமூலம் கொடுத்துவிட்டால் தமக்கு எல்லா அருகதையும் வந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.

    //நான் இப்போது சொல்லிக்கொண்டிருப்பவையும் பிழையென சிலவேளை நாளையோ சில மணி நேரம் கழித்தோ சொல்லத்துணிவேன். அதற்கு என்ன இப்போ கொண்டோடி?//
    நீர் ஒரு துணிஞ்ச கட்டை எண்டது எனக்குத் தெரியும் மயூரன்.

  74. கொண்டோடி on June 9th, 2009 at 1:09 pm

    //எனது எழுத்துக்களுக்கெதிரான நியாயங்களை கற்பிப்பதிலும் அவர்களது குரல்களுக்கெதிரான நியாயங்களைக் கற்பதிலும் தார்மீகரீதியான வேறுபாடு இருக்கிறது.//

    நிச்சயமாக இருக்கிறது சயந்தன்.
    மயூரனின் கருத்தையும் உமது கருத்தையுமே நான் வித்தியாசப்படுத்தி அணுகும்போது அவர்களது கருத்துக்களின் நியாயத்தன்மையை ஏற்றுக்கொள்ள மாட்டேனா என்ன?

    இன்னும் நேரடியாகச் சொல்லப்போனால்,
    உமது மச்சாளுக்குத் தலைவனை வசைபாடும் உரிமையுண்டு, வீரச்சாவு வீட்டில் வித்துடல் சுமந்துசெல்லும் போராளிக்கு அடிவிழுவதைப் போல. அடித்தவர்களால் அவர்களை ஒதுக்கிவிட முடிவதில்லை என்பது தான் பேருண்மை.

Leave a Reply

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231