இவனுக்குப் பகல் இரவு எனப்பாராது கண்ணைச் சுழட்டிக்கொண்டு வந்தது. மூன்று நாளாக ஒழுங்கான நித்திரையில்லை. நித்திரை மட்டுமில்லை. ஒழுங்கான குளிப்பு முழுக்கு கக்கூசு என்று ஒன்றுமில்லை. ரவியண்ணை வீட்டு விறாந்தையில் கிழங்கு அடுக்கின மாதிரி படுக்கிற இருபது இருகைத்தந்து பேர்களில் போன இரண்டு இரவும் இவன் தன்னையும் அடுக்கியிருந்தான். இந்தப்பக்கம் ஐயாத்துரை மாஸ்ரரும் அந்தப்பக்கம் தீபனும் இவணைக் கண்ணயரவே விடுவதில்லை என்று பிளான் …
“உவனொரு இந்தியாக்காரன். சிறிலங்கன் தமிழ் என்று பொய் சொல்லி அகதித் தஞ்சம் கேட்டிருக்கிறான். ” என்று பூலோகத்தார் காட்டிய பெடியன் எங்களைக் கடந்துபோய்க் கொண்டிருந்தான். அவனைப்பார்த்தால் புதுசு போலத்தான் இருந்தது. ஒன்றிரண்டு தடவைகள் எங்களைப் பார்க்கவும் செய்தான். அவன் பார்த்தபோதெல்லாம் பூலோகத்தார் உம் என்று முறைச்சுப்பார்த்தார். அவர் சொன்னால் சரியாகத்தானிருக்கும். பிபிசி என்றும் வீரகேசரி என்றும் விடுப்பு டொட் கொம் என்றும் முதுகுக்குப்பின்னால் …
எந்தக் காரணமும் சிறப்பாக இல்லைத்தான். இங்கேயிருந்து புறப்பட்டுப்போக.. மால்வெயர்த்தாக்குதல் ஏதோ இருக்கிறதென நண்பர்கள் சொல்கிறார்கள்தான். ஆனால் அது தீர்க்கமுடியாத சிக்கல் அல்ல. இருந்தும் போகிறேன். இணையம் ஆரம்பமான புதிதில் எட்டொன்பது வருடங்களுக்கு முன்னால் சயந்தன். கொம் இணையப் பெயர் இன்னொரு நபருக்கு …
உண்ணாவிரத மேடையோரம்
அமைக்கப் பட்டிருந்தது
ஓட்டுச் சாவடி
பசித்திருந்த மனிதர்களின்
அணைப்பிலிருந்தன
செத்துப் போன குழந்தைகள்.
பந்தல் அலங்காரச் சேலைகளில்
தெறித்திருந்தன
ரத்தங்களும் தசைகளும்..
நிவாரண நிதியில்
வாங்கிக் குவிக்கப்பட்ட
சவப் பெட்டிகளுக்கு
போதாதிருந்தன
பிணங்கள்.
ரத்தம் சொட்டும்
உடைந்த கையொன்றை
முடிவிடத்தில்
பற்றியிருந்தது மனிதச் சங்கிலி
புள்ளடியினிடத்தில்
இரு எலும்புகளைக் கண்டதாய்
மிரண்டவரின்
ஆட்காட்டி விரலில் தெளிக்கப்பட்டது
ரத்தம்.
முப்பத்தாறு மைல்களுக்கப்பால்
மூளை சிதிறித் தனித்திருந்த
தலையொன்றின்
கடைவாயில் வழிந்து கொண்டிருந்தது
ஒரு புன்னகை
March-11-2009
இதுவொரு விளையாட்டு. கூகுள் குரூப்பொன்றில் நான்கேட்க மு.மயூரன் தொடக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. மயூரன் சொன்னதுபோல தனியே விளையாட்டு அன்றி உள்ளே ஒரு அர்த்தம் பொதிந்திருக்கிறது. அவரவர் தனது வலைபதிய வந்த கதையைச்சொல்வதனூடாக அக்கால கட்டத்தைய இணையம்/ தமிழ்/ திரட்டிகள் குறித்த இன்னோரன்ன சங்கதிகளை …
திருமண நிகழ்வுக்காக பெண் பார்க்கப் போகும் ஒரு வழக்கம் தமிழகத்தில் ( இந்தியா.) உள்ளதென்பதை எனது பதின்மங்களில் தமிழக சமூக நாவல்களிலும், திரைப்படங்களிலும் நான் அறிந்து கொண்ட போது, அவை கதைக்கு சுவாரசியம் சேர்க்கச் சொல்லப்படுகின்றன எனத்தான் நம்பியிருந்தேன். கதைகளிலும், …
சுவிற்சர்லாந்தின் மத்தியிலிருந்து ஜெனிவா வழியூடாக பிரான்ஸைக் குறுக்கறுத்து அத்திலாந்திக் கடலோரத்தில் ஸ்பெயினின் சன் செபஸ்ரியான் நகருக்கு , சுமார் 1300 கிலோமீற்றர்கள் என்றும் சென்று சேர 13 மணித்தியாலங்களென்றும் நவி காட்டினாலும் வழிநெடுக சுச்சா சிச்சா முச்சா மற்றும் கபே கோலா …
மெழுகுதிரியை ஊதி அணைக்கிறதையும், கேக் வெட்டுறதையும், அடுத்தடுத்து பத்துப்பேர் வீடியோகமெராவை முறைச்சுக் கொண்டு நிற்கிறதையும் பாக்க எரிச்சல் எரிச்சலா வந்தது. பக்கத்தில மடியில ஒரு குழந்தையை வைச்சுக் கொண்டிருந்தவ, தான் சிங்கப்பூரில இருந்து எடுப்பிச்ச நெக்லஸைப் பத்தி வலு தீவிரமாக என்ர …
தமிழ்மணம் ஐந்தாவது ஆண்டு நிறைவையொட்டி அதன் நிறுவனர் காசி இந்தவாரம் நட்சத்திரமாகத்திகழ்கிறார். நட்சத்திரப்பதிவுக்கான தேவையாக அவர் சிலருக்கு ஐந்து கேள்விகளை அனுப்பிப் பதில்களைக் கோரியிருந்தார். எனக்குக் கிடைத்த கேள்விக்கொத்திற்கான பதில்களை அனுப்பியிருந்தேன். தற்போது திட்டம் மாற்றப்பட்டு அவரவர் தங்கள் தங்கள் தளங்களிலேயே …